14/12/2014

Now CPS online service working - Just enter your CPS number & Date Of Birth

With ur Name,CPS no,DDO code,financial year which is ur need

 CLICK HERE TO KNOW GET YOUR CPS ACCOUNT SLIP

In the above website you can download cps account slip upto February2013. If u need upto date slip mail to cps.gdc@gmail.com

13/12/2014

நாங்கதான் ஆளணும்... மத்தவங்க அதுக்குள்ள வாழணும்’ - மாணவர்களின் சாதிவெறி!





தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. ஆனால் வன்முறைகளுக்கு எப்போதும் பள்ளிக்கூடங்கள் விதிவிலக்காகத்தான் இருந்து வந்துள்ளன. அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் மாணவப் பருவம் என்பது வன்முறைகள் மேவும் பருவம் அல்ல.

விளையாட்டிலும் தங்களுக்கு விருப்பமான விஷயங்களிலும் மனநாட்டம் கொள்வதுதான் மாணவர் பருவத்தின் இயல்பு. அது சினிமா, கவிதை, ஓவியம், விளையாட்டு, காதல் என பலவாறாக அமையும். இதுதான் பதின் பருவத்தின் இயல்பு. ஆனால் இந்த இயல்பை மீறி கூட்டுக் கலவரங்களிலும், கொலைகளிலும் ஈடுபடுவது இப்போது தமிழக மாணவர்களிடம் அதிகரித்து வருகிறது.

மாணவச் சமூகத்தை ஆட்டிப்படைப்பது சாதி வெறி. குறிப்பாக தென் தமிழக பள்ளிகளில் ஒவ்வொரு சாதி மாணவர்களும் அவரவர் சாதித் தலைவர்களை சுமந்து திரிவதும், பள்ளி பாடப்புத்தகத்தில் பிற சாதி தலைவர்களின் படங்களை கிழித்தெறியும் அளவுக்கு இந்த சாதி வெறி ஊட்டப்பட்டிருக்கிறது. பெரியார், காமராஜர், அம்பேத்கர் போன்ற தலைவர்களைக் கூட சாதிக்கண் கொண்டு பார்க்கும் பார்வையை ஊட்டி விட்டார்கள் சாதித் தலைவர்கள். அதன் விளைவு குழு குழுவாக பிரிந்து நிற்கிறார்கள் மாணவர்கள்.

இன்னொரு பக்கம் சின்ன சின்ன மோதல்கள் கூட கொலையில் முடியும் சூழல். சென்னையில் ஆசிரியை உமாமகேஸ்வரி கொலைக்குப் பின்னர் அடுத்தடுத்து அதிர்ச்சி நிகழ்வுகள். கோவை சித்தா புதூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர், ஒரு மாணவரின் சாதிப் பெயரைச் சொல்லி திட்ட, திரண்ட மாணவர்கள் தலைமை ஆசிரியரின் அறையை அடித்து நொறுக்கி வகுப்பறைகளையும் துவம்சம் செய்து விட்டார்கள்.

சாதியைச் சொல்லி திட்டிய தலைமை ஆசிரியர், அதற்கு பதிலடியாக வகுப்பறைகளை நொறுக்கிய மாணாவர்கள்... இப்படி இரு தரப்பிலும் வெளிப்படும் சாதி உணர்வு, தமிழ் சமூகம் சாதியாக பிளவுபட்டிருப்பதன் அடையாளம். நாமெல்லாம் தமிழர்கள் என்று சொல்லலாம். ஆனால் கிராமங்களில் கேட்டால்,‘‘நாங்க வேற அவுக வேற’’ என்றுதான் சொல்வார்கள். இந்த சாதி முரண் இத்தோடு முடியாமல் ஒரு மாணவனின் நல்லொழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளை அவனது சாதியை வைத்து அளவிட தூண்டுகிறது. ஆக மொத்தம் அந்த தலைமை ஆசிரியர் சமூகத்தை வகுப்பறையில் பிரதிபலித்திருக்கிறார்.

சமீபத்தில் தென் மாவட்டம் ஒன்றுக்குச் சென்றபோது மீசை கூட முளைக்காத சிறுவர்கள், தங்களின் சாதியின் பெயரை போட்டு திருமண வாழ்த்து போஸ்டர் ஒட்டியிருப்பதைக் காண முடிந்தது. அது வெறும் வாழ்த்து போஸ்டராக மட்டும் இல்லை. ‘‘நாங்கதான் ஆளணும். மத்தவங்க அதுக்குள்ள வாழணும்’’ என்று தன் சாதி பெயரை போட்டு போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். 

இந்த பருவத்தில் இத்தனை சாதி உணர்வு ஏன்? என்று எண்ணும்போது, தமிழர்கள் அரசியல் ரீதியாக அழிந்து சாதி ரீதியாக பிளவுபட்டுக் கிடப்பது தெரிகிறது. முந்தைய தலைமுறையைக் காட்டிலும் அது பெரிய தீயாக கிராமப்புறங்களில் பரவி இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா நடவடிக்கையால் கல்வித்துறையில் வளர்ச்சி: ஜெயவர்த்தன் எம்.பி பேச்சு

மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி கல்வித்துறை வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அவை விலையில்லா புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள், பள்ளி புத்தக பைகள், சீருடை, மிதிவண்டி, மடிக்கணினி ஆகும். புரட்சித்தலைவியால் எடுக்கப்பட்ட இந்த முற்போக்கான நடவடிக்கை பெற்றோரின் நிதி சுமையைக் குறைத்துள்ளது. மேலும் பள்ளியிலிருந்து இடையில் படிப்பை நிறுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைத்துள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசு போதியளவு நிதி வழங்க வேண்டும். பிரதமரிடம் புரட்சித்தலைவியால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், ராஷ்டிரிய மத்திய மிக் சிஷ்கா அபிநயன் என்ற திட்டத்தின் படி இந்திய அரசு 2010–2011 மற்றும் 2011–2012 ஆண்டுகளுக்காக மொத்த கோரிக்கைகளில் நிலுவையில் உள்ள ரூ.599.62 கோடி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின்படி ரூ.25.13 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டியுள்ளது. பட்டியல் சாதி மாணவர்களுக்காக மெட்ரிக்குலேசன் படிப்பு உதவித்தொகைக்காக 2013–2014 ஆண்டிற்கான நிலுவை ரூ.451.41 கோடி உள்ளடங்கலாக ரூ.1104.20 கோடி ரூபாய் மத்திய அரசால் வழங்கப்பட வேண்டியுள்ளது.

செலவினத்தை காரணம் காட்டி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடியாது என தமிழக அரசு அறிவிப்பு

செலவினத்தை காரணம் காட்டி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடியாது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.2,800, தனி ஊதியம் ரூ.750 வழங்கப்படுகிறது.மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9,300, தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஆசிரியர்களின் ஊதியத்தை போல் தமிழகத்திலும் வழங்க வேண்டுமென அனைத்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 'இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து முடிவெடுக்குமாறு' ஐகோர்ட் உத்தரவிட்டது. 'நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1,017 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். ஆனால் தமிழகத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 129பேர் பணிபுரிகின்றனர். மத்திய அரசு ஆசிரியர்களை போல் அவர்களுக்கும் ஊதிய உயர்வு அளித்தால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.668 கோடி கூடுதல் செலவாகும். இதனால் ஊதிய உயர்வு அளிக்க முடியாது,' என நிதித்துறை செயலர் சண்முகம் அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்தக் கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் இல்லை: அரசு உத்தரவு

அரையாண்டுத் தேர்வு தொடங்கிவிட்ட நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இந்தக் கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கக் கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா இந்த அரசாணையைப் பிறப்பித்துள்ளார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் இந்த அரசாணை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

அலைமோதும் கூட்டம்: இடமாறுதல் கோரி பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கும், தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கும் ஏராளமானோர் தினந்தோறும் வருகிறார்கள்.

கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்களான பிறகும் பல்வேறு காரணங்களுக்காக ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மாணவர்கள் நலன் கருதி இந்தக் கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு இனி இடமாறுதல் இல்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 2011, 2012, 2013ம் ஆகிய ஆண்டுகளில் புதிப்பிக்க தவறிய வர்களுக்கு, தற்போது புதுப்பிக்க, மூன்று மாத காலம் சிறப்பு சலுகைஅளிக்கப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 2011, 2012, 2013ம் ஆகிய ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறியவர்களுக்கு, மீண்டும் புதுப்பிக்க ஏதுவாக, மூன்று மாதம் காலம் சிறப்பு சலுகையளிக்கப்பட்டுள்ளது. 07.03.2015 தேதி வரை, கடந்த காலத்தில் புதுப்பிக்க தவறியவர்கள், தற்போது, http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ சென்று புதிப்பிக்கலாம். இந்த அறிவிப்பை, தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை வெளியிட்டுள்ளது.

மூன்றாம் பருவத்துக்கு டிசம்பர் 22 முதல் புத்தகங்கள் விநியோகம்

முப்பருவ முறையின் கீழ், மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 22-ஆம் தேதி விநியோகிக்கப்பட உள்ளதாக தமிழ்நாட்டுப் பாடநூல்-கல்வியியல் பணிகள் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

முப்பருவ முறையின் கீழ் ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவமாகவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாவது பருவமாகவும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாவது பருவமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முப்பருவ முறை, தொடர் மதிப்பீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இந்த வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் அச்சிடும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இந்தப் பணிகள் தொடர்பாக தமிழ்நாட்டுப் பாடநூல்-கல்வியியல் பணிகள் நிறுவன வட்டாரங்கள் கூறியது:

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்துப் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஒன்பதாம் வகுப்பு புத்தகங்கள் மட்டும் இப்போது அச்சடிக்கப்பட்டு வருகின்றன.

மூன்றாம் பருவத்துக்கு சுமார் 2 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்கள் அந்தந்த வட்டார விற்பனைக் கிடங்குகளிலிருந்து டிசம்பர் 22-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

அரசுப் பள்ளிகளுக்கான புத்தகங்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகிக்கப்படும். மாணவர்களுக்கு பள்ளி தொடங்கும் முதல் நாளில் புத்தகங்கள் கிடைக்கும் வகையில் வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அரையாண்டுத் தேர்வுகள் தொடக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு மாநிலம் முழுவதும் புதன்கிழமை தொடங்கியது. இந்தத் தேர்வு டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தத் தேர்வும் டிசம்பர் 23-ஆம் தேதி நிறைவடைகிறது. பிற வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகளும் டிசம்பர் 12-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

CPS : பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைய மேலும் 3 மாத கால அவகாசம்: தமிழக அரசு உத்தரவு


CPS : பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைய மேலும் 3 மாத கால அவகாசம்: தமிழக அரசு உத்தரவு

CLICK HERE FOR ORDER

தமிழகத்தில் புதிதாகப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான காலக்கெடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை, அவர்கள் சம்பளம் பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏதும் இருக்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, நிதித் துறை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவு:

கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக அரசுத் துறைகளிலும், ஆசிரியர் பணியிலும் இணைந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சேரும் போது அதற்கான முகப்பு எண் வழங்கப்படுவது வழக்கம்.

இதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு தரவு மையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பங்களிப்பு ஓய்வூயத் திட்டத்தில் இணைந்து அதற்கான முகப்பு எண்ணை ஒவ்வொரு ஊழியர்களும் பெற்றுள்ளார்களா? என்பதை அவர்களுக்கு சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதுகுறித்து, கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரியிடம் தெரிவிப்பது அவசியம்.


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான விண்ணப்பங்களை ஒவ்வொரு துறையிடம் இருந்து பெற்று விண்ணப்பதாரர்களுக்கு உரிய முகப்பு எண்ணை (இன்டெக்ஸ் நம்பர்) அளிக்கும் பணியை மாநில தரவு மையம் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணியில் எந்தத் தாமதமும் ஏற்படாமல் உரிய நேரத்தில் முகப்பு எண்ணை வழங்க வேண்டும்.

முகப்பு எண் வழங்கப்படாமல் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்குவதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. ஆனாலும், உரிய முறையில் விண்ணப்பித்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான முகப்பு எண்ணைப் பெறுவதற்கு வரும் பிப்ரவரி மாதம் வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை முகப்பு எண்ணை பெற்றுக் கொள்ளாத, அதற்கு விண்ணப்பிக்காத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான சம்பளப் பட்டியல்கள் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால், அந்த காலத்துக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே, மூன்று மாத காலத்துக்குள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேருவதற்கு விண்ணப்பித்து அதற்கான முகப்பு எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தனது உத்தரவில் நிதித் துறை செயலாளர் க.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த உத்தரவு அனைத்துத் துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், சட்டப் பேரவைச் செயலகம், துறை ஆணையாளர்கள், முதன்மை கணக்காயர், கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் அனைத்து மண்டல அலுவலகங்கள், உயர் நீதிமன்ற பதிவாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட நீதிபதிகள், அரசு சார்பிலான வாரியங்கள், கழகங்கள், மாநகராட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

63 உதவிதொடக்கக் கல்வி அலுவலகங்கள், தணிக்கை விவரங்களை சமர்பிக்கவில்லை. இதனால், தமிழக தொடக்கக் கல்வி இயக்குனரகம், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், அந்த அலுவலக பணியாளர்கள் மீது, நன்னடத்தை விதிமீறல் படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

ஏ.இ.இ.ஓ.,க்கள் 63 பேருக்கு தொடக்க கல்வித்துறை 'மெமோ'

ஆசிரியர் சேமநலநிதி கணக்கு தணிக்கை விவரங்களை சமர்பிக்காததால், தமிழகம் முழுவதும், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, 'மெமோ' வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தொடக்க மற்றும் நகராட்சி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின், வருங்கால சேம நலநிதி கணக்கு மற்றும் ஐந்தாவது ஊதியக்குழு முடிவு இருப்பு தொகை தணிக்கை ஆகியவை, ஆண்டு தோறும், தமிழக தகவல் தொகுப்பு விவர மைய கமிஷனரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த ஆண்டு, 63 உதவிதொடக்கக் கல்வி அலுவலகங்கள், தணிக்கை விவரங்களை சமர்பிக்கவில்லை. இதனால், தமிழக தொடக்கக் கல்வி இயக்குனரகம், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், அந்த அலுவலக பணியாளர்கள் மீது, நன்னடத்தை விதிமீறல் படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

கடிதம் எழுதும் போட்டிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 22 கடைசி நாள்

இந்திய அஞ்சல் துறை சார்பில் நடைபெறும் கடிதம் எழுதும் போட்டிக்கு, டிசம்பர் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய அஞ்சல் துறை சார்பில்,

44-ஆவது உலக அஞ்சல் ஒன்றியத்தின் கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது.

ரொக்கப் பரிசுகள் தவிர்த்து, தேசியளவில் சிறந்த கடிதமாக தேர்வு பெறும் முதல் மூன்று தேர்வாளர்களுக்கு உலக அஞ்சல் ஒன்றியம் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுடன் அஞ்சல் தலைகள் அடங்கிய ஆல்பம், சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்படும்.

சென்னையில் மேற்கு மாம்பலம், ஜூப்ளி சாலையில் உள்ள அஞ்சுகம் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 4-ஆம் தேதி, காலை 10-11 மணி வரை போட்டி நடைபெறும்.

போதுமான எண்ணிக்கையில் போட்டியாளர்கள் இருப்பின் பள்ளிகள் தங்கள் சொந்த வளாகத்தில், திட்டமிட்ட தேதி, நேரத்தில் கடிதம் எழுதும் போட்டியை நடத்தலாம்.

"நீங்கள் வளர விரும்பும் உலகம் பற்றி சொல்லுங்கள்" என்ற தலைப்பில் ஆங்கிலம் அல்லது இந்திய அரசியல் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் பட்டியலிடப்பட்ட மொழியில் விவரித்து ஒரு கடிதம் எழுத வேண்டும்.

இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 22-ஆம் தேதி கடைசி நாளாகும். மதுரை, கோவை, திருச்சி ஆகிய மையங்களிலும் போட்டி நடைபெறும்.

ஜி.க.பொன்னுரங்கம், உதவி இயக்குநர் (அஞ்சல்,அமைப்பு), அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், சென்னை நகர மண்டலம், சென்னை-600002 என்ற முகவரியிலும், pmgccrtca@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி, 044-28580048,28520430, 28551774 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அந்தந்த நகரங்களில் உள்ள அஞ்சல் துறைத் தலைவர்களையும் அணுகலாம் என சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.

குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு வருகைச்சான்று அனைவருக்கும் வழங்க இயக்குநர் வாய்மொழி உத்தரவு

அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு ஈடுசெய்யும் விடுப்புகளாக சிறப்பு தற்செயல் விடுப்பு அளிப்பது போலவே தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசாணை வர உள்ளதால் குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு வருகைச்சான்று அனைவருக்கும் வழங்க இயக்குநர் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

09/12/2014

வங்கியில் ஆவணங்களை சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்களுக்கு பி.எப். ஆணையர் வேண்டுகோள்

ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் வங்கிகளில் உரிய ஆவணங்களை செலுத்த வேண்டும் என பிஎப் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை:வருங்கால வைப்பு நிதி நிறுவன சென்னை மற்றும் அம்பத்தூர் மண்டல அலுவலகங்களின் மூலம் தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் 1995ன் கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியத்தை தொடர்ந்து தடையில்லாமல் பெறுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதம் தங்கள் உயிர்வாழ் சான்றிதழையும், குடும்ப ஓய்வூதியதாரர்கள் கூடுதலாக மறுமணம் புரியாமை சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். 

அவ்வாறு இந்த ஆண்டும் நவம்பர் மாதத்தில் மேற்கூறிய சான்றிதழ்களை ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிகளில் தவறாமல் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி சான்றிதழ்களை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சமர்ப்பிப்பதன் மூலம் அவர்கள் பெற்றுவரும் மாதாந்திர ஓய்வூதியம் அடுத்த ஆண்டும் ஜனவரி முதல் நிறுத்தப்படுவதை தவிர்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

08/12/2014

VIII STD NMMS EXAM APPLICATION REGISTRATION DATE EXTENDED

NMMS EXAM APPLICATION REGISTRATION DATE EXTENDED VIII STD STUDENTS NMMS EXAM REGISTRATION DATE EXTENDED UPTO 09/12/14.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் : தனித்தேர்வராக எழுத கட்டாயப்படுத்தப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை - கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

பொதுத்தேர்வு தேதி அறிவித்துள்ள நிலையில், தனித்தேர்வராக எழுத கட்டாயப்படுத்தக் கூடாது!
'தேர்ச்சி விகிதத்தை மட்டும், நோக்கமாக கொண்டு செயல்படும் சில பள்ளிகள், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பின்தங்கிய மாணவர்களை, தனித்தேர்வர்களாக எழுத கட்டாயப்படுத்துவதாக புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பள்ளிகள் மீது பெற்றோர், மாணவர்கள், நேரடியாக மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் முதன்மை கல்வி அலுவலகத்தை அணுகி, புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு, பெறப்படும் புகார்கள் உண்மை என்று உறுதி செய்யப்பட்டால், துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பாரதியாரின் பாடல்களை வரும் 11ம் தேதியில் இருந்து, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில், மொழி பெயர்த்து வினியோகிக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பாரதியாரின் பாடல்களை வரும் 11ம் தேதியில் இருந்து, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில், மொழி பெயர்த்து வினியோகிக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று கூறியதாவது:

பாரதியாரின் பாடல்களை, நாடு முழுவதும் இருக்கிற, அனைத்து பள்ளிகளிலும் கொண்டு செல்ல வேண்டும் என்று, நான் கோரிக்கை வைத்தேன். அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை சந்தித்து, இதுகுறித்து, பேசினேன். உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

நேற்று, மீண்டும் அவரை சந்தித்து பேசியபோது, மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்தார். வரும் 11ம் தேதியில் இருந்து, நாடு முழுவதும் உள்ள, அனைத்து பள்ளி, கல்லூரிகளில், பாரதியார் பாடல்கள் எடுத்துச் செல்லப்படும். அதுமட்டுமல்ல; பாரதியார் பாடல் ஒப்பித்தல் போட்டிகள், கட்டுரை போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இவ்வாறு, பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை பொதுச்செயலாளர் திரு.ரெங்கராஜன் அவர்கள் தொடக்கப்பள்ளி இயக்குநர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து குறுவளமைய(CRC)அளவில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்க இருதினங்களில் ஆணை பிறப்பிப்பதாக இயக்குநர் கூறியுள்ளார்.அடுத்தவார இறுதிக்குள் தரம் உயர்த்தப்படும் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளியின் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தொடக்க,நடுநிலை&பட்டதாரி காலிப்பணியிடம் பதவிஉயர்வு மூலம் இம்மாத இறுதிக்குள் மீண்டும் நிரப்பப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

அகஇ - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு ஈடுசெய்யும் விடுப்புகளாக அனுமதித்து அரசு ஆணை 


பொருள் வாங்காத குடும்ப அட்டை: இணையதளம் மூலம் புதுப்பிக்கலாம் Government Of Tamilnadu : Civil Supplies and Consumer Protection Department - Online Renewal Of "N" Family Ration Card


எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டை வைத்திருப்போர், தங்களது அட்டையை இணைய தளம் மூலம் புதுப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
www.consumer.tn.gov.in என்ற உணவுப் பொருள் வழங்கல் துறை- நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணையதளத்துக்குச் சென்று அதன் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ள

குடும்ப அட்டை ("என் கார்டு') புதுப்பித்தல் அறிவிப்பை "கிளிக்' செய்து 2015-ஆம் ஆண்டுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை உள்தாள் ஒட்டி புதுப்பிக்கும் பணிகள் ஓரிரு வாரங்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், எந்தப் பொருளும் வேண்டாதவர்களும் தங்களது குடும்ப அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அட்டையை சுமார் 10 லட்சம் பேர் வைத்துள்ளனர்.

அவர்கள் இணையதளம் மூலமாக பதிவு செய்த பிறகு, கிடைக்கும் பதிவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து அட்டையில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான முறையில் அலுவலக நடவடிக்கைகள் அமைய தொடக்கக்கல்வித்துறை உத்தரவு

அனைத்து அலுவல்களுக்கும் மாதிரி படிவங்கள் மற்றும் அலுவலக குறிப்புறைகள் வழங்கி கடைபிடிக்க உத்திரவு தொடக்கக்கல்வித்துறையில் உள்ள லட்சக்கணக்காண ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு, உயர்கல்வி,

முன்அனுமதி, மருத்துவவிடுப்பு, ஈட்டியவிடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, வைப்புநிதி முன்பணம் கோரல், பகுதி இறுதிப்பணம் கோரல்,சேமநலநிதி கணக்கீடு,ஊக்கஊதியம் அனுமதித்தல், பதவிஉயர்வுக்குண்டான ஊதிய நிர்ணயம்,பண்டிகை முன்பணம்,மருத்துவ விடுப்பு அனுமதித்தல்,ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்தல்,பொன்ற நடைமுறைகள் அந்தந்த உதவித்தொடக்கக்கல்வி அலுவலகப் பணியாளர்களால் அவர்கள் ஏற்கனவே கையாண்ட நடைமுறைகளின்படி அலுவலககுறிப்புகளும்,ஆணைகளும் வழங்கப்பட்டு வந்தன ஆனால் தமிழகம் முழுவதும் உள்ளஅனைத்து உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களிலும் ஒரே மாதிரியான வழிமுறையிணை பின்பற்ற தொடக்கக்கல்வித்துறை இயக்குனரகம் மூலம் ”மாதிரிப்படிவங்கள்,அலுவலகநடைமுறைக்கடிதம்,அலுவலகசெயல்முறை ஆணைகள் மற்றும்,பணிப்பதிவேட்டில் பதிய மாதிரி சீல்கள்” ஆகியன நிர்வாகப்பயிற்சியின் போது வழங்கப்ப்ட்டுள்ளது. .அதனை கடைபிடிக்க கோரப்பட்டு அனைத்து உதவிதொடக்கக்கல்விஅலுவலகங்களுக்கும் உரிய மாவட்டக்கல்வி அதிகரிகள் வாயிலாக அனுப்பப்படுள்ளதாக அறியப்படுகிறது.

அகஇ - 06.12.2014 அன்று நடைபெறவுள்ள குறுவள மைய பயிற்சியில் எவ்வித மாற்றமில்லை; பயிற்சி வழக்கம் போல் நடைபெறும்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 06.12.2014 அன்று "குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கார்த்திகை தீப திருவிழா வருவதால், அன்றைய தினத்தில் நடைபெறவுள்ள குறுவளமைய பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.ஆனால் பயிற்சி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்தந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு மட்டும் ஒத்திபோக வாய்ப்புள்ளது.

ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா

தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசு உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பில் இருந்து தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித் துறை செயலாளர் சபீதா கூறினார்.தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சியும், அதற்கான கையேடு வெளியிடுதல், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில் ஆங்கில உச்சரிப்பு குறுந்தகடு வெளியிடுதல் நிகழ்ச்சி டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்தது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:பள்ளியின் தரம், கற்பிக்கும் தரம் உயர வேண்டும் என்பதற்காக தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் கட்டாயம் என்று கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அரசுப் பள்ளிகளுடன் மற்ற பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பில் தமிழ் கட்டாயமாகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில் ‘பொனிடிக்ஸ்‘ உடன் கூடிய ஆங்கில உச்சரிப்புக்கான குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த குறுந்தகடு அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலம் திரையிடப்பட்டு ஒவ்வொரு ஆங்கில சொல்லையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான குறுந்தகடுகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும். ஆசிரியர்களை பொருத்தவரை பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்தார்.

சமையல் காஸ் சிலிண்டருக்கு புதிய வெப்சைட்

நுகர்வோரின் சிரமத்தை குறைக்க நடவடிக்கை 
மானியத்திற்கும் விண்ணப்பிக்கலாம் 
திருப்தி இல்லாத ஏஜென்சியை மாற்றும் வசதி

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்த மறுசீராய்வு மனுவை ஏற்று 8 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வேலூர் மாவட்டம், திமிரி ஒன்றியத்தை சேர்ந்த தொடக்கக்கல்வித்துறையின் கீழுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 34 இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசின் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய கோரி வழக்கு(W.P.2470/2013) தொடர்ந்தனர்.
அவ்வழக்கு நீதியரசர் சந்துரு அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து 34 ஆசிரியர்கள் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மறுசீராய்வு மனுவை தாக்கல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அவ்வழக்கு (REV.APPLW.300/2014) இன்று நீதிமன்ற எண்.10 நீதியரசர்.சுந்தரேஷ் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்று கொண்ட நீதிமன்றம் 8 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

03/12/2014

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்புக்கான சி.டி. வெளியீடு

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆங்கில வார்த்தைகளைச் சரியாக உச்சரிப்பதற்காக தயாரிக்கப்பட்ட குறுந்தகட்டை (சி.டி.) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான நிர்வாகப் பயிற்சி தொடக்க விழாவில் இந்த குறுந்தகட்டை அவர் வெளியிட்டார். ஆங்கில உச்சரிப்பு தொடர்பாக 42 யூனிட்டுகளில் மாணவர்களுக்கு விரிவாக விளக்கும் வகையில் குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் 836 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பயிற்சி வழங்க அரசு ஆணையிட்டது. முதல்கட்டமாக, சென்னை மண்டலத்துக்குட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 73 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் விண்ணப்பிக்க தேதி நீடிப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் 2014-15 கல்வி ஆண்டில் சேர்ந்து பயில மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்க டிச.15-ம் தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேவையை கருதி 1979-ல் தொலைதூரக்கல்வி இயக்ககம் தொடங்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக்கல்வி மையத்தில் புதுதில்லி தொலைதூரக்கல்வி கவுன்சில் (Distance Education Council, New Delhi) அனுமதி பெற்ற மொத்தம் 259 படிப்புகள் நடத்தப்படுகின்றன. மருத்துவம் படிப்புகள் 12-ம், மருந்தியல் படிப்புகள் 2-ம். வேளாண் படிப்புகள்- 9-ம், பொறியியல் படிப்புகள் 53-ம் மற்றும் கலை, அறிவியல், தமிழ், இசை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த பல்வேறு இளங்கலை, முதுகலை, டிப்ளமா, முதுநிலை டிப்ளமா படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயில டிச.15-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தின் தமிழகத்தில் 88 படிப்பு மையங்களும், 79 தகவல் மையங்களும் செயல்படுகின்றன. மேற்கண்ட மையங்களில் விண்ணப்பம் பெற்று, அங்கேயே அனுமதி சேர்க்கை செய்யலாம் என தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் ஆர்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் - அரசானை






மாற்றுத்திறனாளிகள் தினம்: ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசின் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள் முதல்–அமைச்சர் வாழ்த்து

ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் அரசின் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று இன்று (புதன்கிழமை) மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

மாற்றுத்திறனாளிகள் தினம்
உலகம் முழுவதும் டிசம்பர் மாதம் 3–ந் தேதி மாற்றுத்திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் சமவாய்ப்புகள் பெற்று வாழ்வில் ஏற்றம் பெற்றிட, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை 1,000 ரூபாயாக உயர்த்தியது; ஆரம்ப நிலை பயிற்சி மையத்திற்கு வரும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சத்துணவு; சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, வாசிப்பாளர் உதவித்தொகை ஆகியவை இரு மடங்காக உயர்வு;

அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை; மாற்றுத்திறனாளிகளின் சுயவேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தேசிய திரைப்படக் கழகத்தின் மூலம் பல்லூடக பயிற்சி மற்றும் இலக்கமுறை புகைப்படப் பயிற்சி என பல்வேறு நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


அரசின் திட்டங்கள்
மேலும், இந்தியாவிலேயே முதன் முறையாக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் வழங்கப்படுவது; சென்னையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் குறைபாட்டினை கண்டறிந்து தேவையான உபகரணங்கள், சான்றிதழ்கள், உதவித்தொகை, சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்குதல்; பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத வீடுகள் ஒதுக்கீடு; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தேர்வு; ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு; ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச வயது வரம்பு 45–லிருந்து 18 ஆக குறைப்பு;

இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள்; செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கு நவீன காதொலிக் கருவிகள்; பார்வைத்திறன் குறையுடைய மாணவ, மாணவிகளுக்கு எழுத்துகளைப் பெரிதாக்கி படிப்பதற்கான ‘மேக்னிபயர்’ கருவிகள்; பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்குச் குச்சிகள்; மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்துப் பயணச் சலுகை; குடும்பத்தில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அக்குடும்பத்திலுள்ள அனைவருக்கும் வருமான உச்சவரம்பின்றி முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் பயன் போன்ற எண்ணற்ற சீர்மிகு திட்டங்களை ஜெயலலிதா தொடங்கினார். ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு அவற்றை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

வாழ்த்து
மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடவும், அவர்கள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக வாழ்ந்திடவும், ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டு, மீண்டும் அனைவருக்கும் மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துகளை