23/02/2015

ஜாக்டோ பொறுப்பாளர்களை சந்திக்க முதலமைச்சர் வருகிற பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு ஒதுக்கீடு. ..


ஆசிரியர் சங்கங்கள் வரும் 25ம் தேதி முதல்வரை சந்திக்க ஏற்பாடு

ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று காலை பட்டதாரி ஆசிரியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் அவர்களிடம் முறையிட இன்று செல்வதென முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து விரிவாக விவாதிக்க இருப்பதால், முதலமைச்சர் பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கியதை அடுத்து பிப்ரவரி 25ம் தேதி மீண்டும் ஜாக்டோ கூட உள்ளது. இருப்பினும் திட்டமிட்டப்படி வருகிற 22 ந்தேதி ஆயத்த விளக்க கூட்டம் மார்ச் 8ந்தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவண் ஜாக்டோ மாநில அமைப்பு.

ஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, 'கோரிக்கை குறித்துப் பேச்சு நடத்த தயார்' என்று, தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஆசிரியர் சங்கங்கள் முதல்வரை சந்திக்க, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. ஆசிரியர் சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கை குறித்து, கடந்த பல ஆண்டுகளாக, அரசுக்கு தொடர்ந்து மனு அனுப்பப்பட்டது; ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

26 சங்கங்கள்: அதனால், 2003க்கு பின், ஆசிரியர் சங்கங்கள் மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளன. தொடக்கப் பள்ளி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், அனைத்து ஆசிரியர் நலச்சங்கம் உள்ளிட்ட, 28 சங்கங்கள், 'ஜாக்டோ' கூட்டு நடவடிக்கைக் குழுவில் இணைந்துள்ளன. இந்த, 'ஜாக்டோ' உயர்மட்டக்குழு கூட்டம், சென்னையில் இரு நாட்கள் நடந்தது. இதில், 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுப் போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்று முடிவாகி உள்ளது. ஆசிரியர்கள் போராட்டம் குறித்து, இந்த முடிவை அறிந்த பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், 'ஜாக்டோ' குழுவை சந்தித்து பேச ஒப்புக் கொண்டனர்.

'ஜாக்டோ' குழு தலைமைச் செயலகம் சென்று, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அரசு முதன்மை செயலர் சபிதாவை சந்தித்து பேசினர். அப்போது, 'தற்போது சட்டசபை நடப்பதால், முதல்வரால் சந்திக்க இயலாது; வரும் 25ம் தேதி, முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம்; அதுவரை பொறுத்திருங்கள்; பிளஸ் 2, 10ம் வகுப்பு உள்ளிட்ட வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு வருவதால், தற்போது போராட்ட முடிவுகள் எடுக்க வேண்டாம்' என்று, கல்வித் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, நிதித் துறைச் செயலர், பள்ளிக்கல்வித் துறைச் செயலர் மற்றும் முதல்வர் அலுவலகத்தில், மனு அளித்து விட்டு, ஆசிரியர் சங்கங்கள் நம்பிக்கையுடன் திரும்பி உள்ளனர். அவர்கள் கோரிக்கைகள்:

2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை - அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா ?

தொடக்கக் கல்வி - கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக 2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு

உண்மை நிலவரம்

2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா ???

நண்பர்களே.. இவர்கள் அனைவரும் நவம்பர் 2001ல் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் D.t.ed பதிவு செய்திருந்தவர்கள். ஜனவரி 2002ல் கரூர் மாவட்டத்தில் இவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு அரசியல்வாதிகளின் துணையுடன் பணிநியமனம் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் SC, mbc பிரிவினர். இவர்கள் அனைவருக்கும் பின்னடைவு பணியிடங்கள் இருந்தும் பணிநியமனம் மறுக்கப்பட்டது. மேலும் ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் 11.1.2002ல் நடத்தப்பட்ட பணிநியமணத்திலும் இவர்களுக்கு பணியிடங்கள் இருந்தும் சான்றிதழ்கள் மட்டும் சரிபார்க்கப்பட்டு பணிநியமனம் மறுக்கப்பட்டது. பெரம்பலூர் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் அன்றைய நாளில் பணிநியமனம் வழங்கப்பட்டது. அன்றைய தினம் பணி வழங்கப்பட்டு இருந்திருந்தால் காலமுறை ஊதியத்தில் பழைய ஓய்வூதியத்தில் நியமனம் செய்யப்பட்டிருப்பர். இதனை தொடர்ந்து 2004ல் தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்றனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை தொடர்ந்து நியமனம் பெற்ற நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க ஆணை வழங்கப்பட்டது. 2002ல் நியமனம் வழங்கப்பட்டிருந்தால் ஓய்வூதியம் கிடைத்திருக்கும்.

இவர்கள் அனைவரும் கரூர் மாவட்ட பதிவுதாரர்கள். மற்ற மாவட்டங்களுக்கு மாறுதல்கள் பெற்று சென்றதால் அம்மாவட்டத்தின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

14/02/2015

Primary & Upper Pri CRC on 28.02.15 .Topic- Training Impact

SPD.1002/A11/Trg/SSA/2014 Dt.12.02.15 Both Primary & Upper Pri CRC on 28.02.15 
>Topic- Training Impact 
>Note-Feb Month 2 CRC for Upper Primary



சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பிடித்த இந்திய ஆசிரியை


சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பிடித்த இந்திய ஆசிரியை சர்வதேச அளவில் வர்கி அறக்கட்டளையால் வழங்கப்படும் சிறந்த ஆசிரியருக்கான விருதுப்பட்டியலில் அகமதாபாத்தின் ரிவர் சைட் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் ‘கிரண் பிர் சேத்தி’ இடம் பெற்றுள்ளார். 

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனை கவுரவ தலைவராகக் கொண்ட வர்கி அறக்கட்டளை உலக அளவில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆசிரியருக்கான 1 மில்லியன் டாலர் (6 கோடியே 22 லட்ச ரூபாய்) பரிசுத் தொகையும் வழங்குகிறது.

ஆசிரியர் தொழிலில் ஈடுபடுவோர்க்கான நோபல் பரிசாகக் கருதப்படும் இந்த சிறப்புக்குரிய சர்வதேச ஆசிரியர் பரிசு தங்களது தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, மிக சிறப்பாக சேவையாற்றிய ஆசிரியருக்கே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கென்யா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா உட்பட 127 நாடுகளைச் சேர்ந்த 5000 பேர் இந்த பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டனர். இதில் 1300 பரிந்துரைகள் தேர்வு செய்யப்பட்டு, அதில் சிறப்பாக பணியாற்றிய 50 பேர் இறுதி செய்யப்பட்டனர். அதிலும் ஆசிரியர் தொழிலுக்கு பெருமை தேடித்தந்த 10 பேர் இறுதி செய்யப்பட்டு அதில் ஒருவருக்கே இந்த விருது வழங்கப்படுகிறது. 

இந்த பட்டியலில் இடம்பெற்ற சேத்தி தனது கற்பித்தல் அனுபவங்கள் பற்றிக் கூறுகையில், பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கும் கலையில் நான் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளை கையாணடு வருகிறேன். முதல் நாள் ஒரு ஆராய்ச்சியாளரின் பார்வையில் பாடம் சொல்லித் தரும் நான் மறுநாள் ஒரு கலைஞராகவும், அடுத்த நாள் ஒரு கதை சொல்லியாகவும் மாறி பாடம் நடத்துகிறேன்” எனக் குறிப்பிட்டார்.

இந்த 10 பேர் கொண்ட இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சேத்திக்கு இந்த பரிசை வெல்லும் வாய்ப்பு கிடைத்தால் துபாயில் மார்ச் 15-ம் தேதி நடைபெறும் விழாவில் 6 கோடியே 22 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசையும் உலகின் சிறந்த ஆசிரியர் என்ற பெருமைக்குரிய விருதையும் பெறுவார்.

டிட்டோஜாக் மற்றும் ஜாக்டோ இணைந்து செயல்பட முடிவு; இனி தனித்த போராட்டம் இல்லை




கூட்டத்தில் தொடக்கக் கல்வித்துறையை சார்ந்த டிட்டோஜாக்கில் உள்ள 7 சங்கங்களும் பங்கு பெற்றன. இக்கூட்டத்தில் தலைமை செயலக ஊழியர்கள் உடபட அனைத்து அரசு ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் ஆகியவைவிடுக்கப்பட்ட ஒருங்கிணைந்து போராட அழைப்பு விடுத்துள்ளதை சார்பாக விவாதிக்கப்பட்டது. 

டிட்டோஜாக் மற்றும் ஜாக்டோ இணைந்து செயல்பட முடிவு; இனி தனித்த போராட்டம் இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. டிட்டோஜாக்கின் பிரதான கோரிக்கையான இடைநிலை ஆசிரியர் உட்பட ஏனைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து 22.02.2015ல் மாவட்ட அளவில் ஆயுத்தக்கூட்டம் நடத்தவும், 08.03.2015ல் மாவட்ட அளவில் கண்டன பேரணி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.