திருக்குறள்

27/10/2014


சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதியை, தேசிய ஒற்றுமை தினமாக ஆண்டுதோறும் கொண்டாட முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த தினத்தில், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை எடுப்பதற்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுதி மொழி எடுப்பதோடு, அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் ஒற்றுமையை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய மாநில அமைச்சர்கள், யூனியன் பிரதேச நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களும் இதில் பங்கேற்கும் வகையில், தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. காவல் துறை, தேசிய ஆயுதப் படை, தேசிய மாணவர் படை உள்ளிட்டவை மாலையில் அணிவகுப்புகளை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, அக்டோபர் 31ம் தேதி, நடத்தப்பட உள்ள மராத்தான் ஓட்டத்தை தொடங்கிவைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஓட்டத்திலும் பங்கேற்க உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் தெரிவித்துள்ளார். மேலும், அன்றைய தினத்தில், வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு, பிரதமர் மோடி உரையாற்றுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.


நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 67 பேர் கல்வி அதிகாரிகளாக (AEEO) உயர்வு

அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 67 பேர், நேற்று,
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர்.உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு,சென்னையில் உள்ள, தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில்,நேற்று காலை நடந்தது. காலியாக உள்ள, 67இடங்களை நிரப்ப,பணிமூப்பு அடிப்படையில், 160தலைமை ஆசிரியர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.இவர்களில், 67 பேர்,பதவி உயர்வு இடங்களை தேர்வு செய்தனர். இதையடுத்து, 67 பேருக்கும்,பதவி உயர்வுக்கான உத்தரவுகளை,தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் வழங்கினார்.பதவி உயர்வினால் ஏற்பட்ட தலைமை ஆசிரியர் காலி பணியிடம்,விரைவில் நிரப்பப்படும் என,இயக்குனர் தெரிவித்தார்.

DSE பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தணிக்கை செய்தல் -இயக்குனர் செயல்முறைகள்

IGNOU-Term-End Examination Form -2014 december

CPS ஒப்புகை சீட்டு (A/C SLIP) தங்கள் ஒன்றியத்தில் வழங்கப்பட்டுவிட்டதா?

தொடக்க கல்வி துறையில் இதுவரை வழங்கப்படாமல் இருந்த தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில்( CPS ) 01.04.2003 பின் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் (தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் 
)அலுவலர்களுக்கு ஒப்புகைசீட்டு (A/C SLIP) வழங்கப்படாமல் இருந்தது,இதனை மதிப்பிற்குரிய தொடக்க கல்வி இயக்குனர் கவனத்திற்கு மாநில பொறுப்பாளர்கள் கொண்டு சென்றனர்.இயக்குனர் அவர்கள் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு ஒப்புகை சீட்டு வழங்க 11.09.2014 உத்தரவிட்டார். .இதன் மூலம் அனைத்து கருவுலம் வழியாக உதவி தொடக்க கல்வி அலுலகங்களுக்கு ஒப்புகைசீட்டு குறுந்தகடு (CD) மூலம் அனுப்பப்பட்டது ,இது கிடைக்கப்பெற்று 3 மாதங்களுக்குள் விடுபட்ட பதிவுகள் ஏதேனும் இருப்பின் அல்லது சில நபர்கள் மொத்தமாக பதிவுகள் இல்லை என்றாலும் உடனே கருவூலம் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.அக்காலக்கெடு வரும் டிசம்பர் -10 ம் தேதி முடிவடைகிறது அதன் பின் இப்போது உள்ள பதிவுகள் சரியாக உள்ளது என்று அரசால் ஏற்றுக்கொள்ள படும் .தற்போது சில ஒன்றியங்களில் ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டுள்ளது,பல ஒன்றியங்களில் இதுகுறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்காமல் ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டாமல் உள்ளன, தங்களின் ஒன்றியத்தில் வழங்கப்படாமல் இருப்பின் உடனடியாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு A/C SLIP வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தாமதம் வேண்டாம்,இன்னும் ஒருமாதம் மட்டுமே உள்ளது.

அக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியீடு & கலந்தாய்வை நடத்த அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி -பள்ளிக்கல்வி இயக்குநர்.

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 பள்ளிகளின் பட்டியலை வெளியிடுவது, தரம் உயர்ந்த மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குசிறப்பு கலந்தாய்வு நடத்துவது,காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாகவும் உறுதி அளித்தார்.

மழை காலத்தில் மாணவர் பாதுகாப்பு நடவடிக்கை: தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவு

மழை காலத்தில், பள்ளி வளாகங்களில், மாணவர்கள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, பள்ளி தலைமை ஆசிரியர் எடுக்க வேண்டும் என, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில், பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. மழைக் காலங்களில் பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்கக் கூடாது. தேங்கும் நீரை, மின் மோட்டார் மூலம், உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆறு, ஏரி, குளம், குட்டை, வாய்க்கால் உள்ளிட்ட, நீர் பிடிப்பு பகுதிகளுக்கு அருகில் மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். உணவு இடைவேளை, காலை, மாலை இடைவேளை நேரங்களில், மாணவர் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

பள்ளி வளாகத்தில், மின் கசிவு ஏற்படாத வகையில், மின் சாதனங்களையும், மின் கம்பிகளையும் கவனமாக பராமரிக்க வேண்டும். இந்த மின் சாதனங்களை, மாணவர்கள் தொடாதவாறு, ஆசிரியர் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மழைக் கால பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநர் அறிவுரை

24/10/2014



CPS ஓய்வூதிய நிதி யாருக்காக ?

புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசூழியர்களுக்கு ஓய்வூதியம் எவ்வளவு ? எத்தகைய ஓய்வூதியம் ? என வரையறுக்கப்படாத நிலையில் PFRDA -ன் தலைவருக்கு ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்குவது தொடர்பான அறிவிப்பு மத்திய நிதி அமைச்சகம் 20.08.2014-ல் Government Gazette-ல் வெளியிடப்பட்டது .அதன்படி


ஒரு மாதம் ஊதியம் -4.5 லட்சம்- ரூபாய்
T.A-வாக மாதம் -80,000 ரூபாய்
L.T.C-80,000 ரூபாய்
ஈட்டிய விடுப்பு வருடத்திற்கு -30 நாட்கள்
தொலைபேசிக்கு -80,000 ரூபாய்
அதே போல் PFRDA முழு நேர உறுப்பினர்களுக்கு 3.75 லட்சம் ரூபாய் மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .

இவர்கள் பதவியேற்ற 5 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவு வரை பெறுவார்கள் .இவர்களுக்கு வழங்க ப்படும் ஊதியம் மற்றும் படிகள் PFRDA நிர்வகிக்கும் நிதியிலிருந்து (ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை )வழங்கப்படுகிறது .
நண்பர்களே சிந்தியுங்கள் !

ONLINE SALARY - e PAY ROLL SYSTEM

G.O No.12930 DT 29.04.98 : ஓர் ஆசிரியர் வாரத்திற்கு குறைந்த பட்சம் 24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்

அடுத்த ஆண்டு நடக்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தகுதியான தனித்தேர்வர்கள், அக்., 29 முதல் நவ., 7ம் தேதி வரை, கல்வி மாவட்ட, தேர்வுத்துறை சேவை மையங்களில், ஆன்- -- லைனில் பதிவு செய்யவேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: செப்டம்பர், அக்டோபரில் நடந்த, 10ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், மதிப்பெண் சான்றுகளை, நாளை 25ம் தேதி, அவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்; முடிவுகள், இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது.

மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில், அக்., 27 முதல் 29ம் தேதி வரை நேரில் சென்று, ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். மறு கூட்டலுக்கு, இரு தாள் கொண்ட பாடத்திற்கு, 305 ரூபாய், ஒரு தாள் பாடத்திற்கு, 205 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் நடக்கும், 10வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், அக்., 29 முதல் நவ., 7ம் தேதி வரை, கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று, விண்ணப்பங்களை ஆன் - லைனில் பதிவு செய்ய வேண்டும். இந்த தேர்வு சார்ந்த மேலும் விவரங்களை, www.tndge.in என்ற இணையதளத்தில் காணலாம்.

பொது பணிகள் - இணை கல்வித் துகுதி நிர்ணயம் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பட்டய சான்று (DIPLOMA IN TEACHER TRAINING), மேல்நிலைக் கல்விக்கு(+2) இணையாக கருதி தமிழக உத்தரவு

23/10/2014

ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க

பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு பரிசு : பரிந்துரை அறிக்கை வழங்க உத்தரவு

கல்வி மாவட்ட வாரியாக சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளின் தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளதால், அதற்கான பரிந்துரை அறிக்கையை நவ.,15க்குள் வழங்க, சுற்றுச்சூழல்துறை இயக்குனர் மல்லேசப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளிகளின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு, அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:

கல்வி மாவட்ட வாரியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தும் பள்ளிகளில் உள்ள தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு, 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை பரிசு வழங்கப்படும், என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி கல்வி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 10 முதல் 15 தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்களை கண்டறிந்து, அதுகுறித்து அப்பள்ளிகளின் செயல்பாட்டு அறிக்கையை, அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளின் பரிந்துரைகளுடன் தலைமையாசிரியர்கள், நவ.,15க்குள் சென்னையில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேர்வு பெற்ற பள்ளிகளுக்கு, பின்னர் பரிசு வழங்கப்பட உள்ளது.

23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவுற்ற பணி நாடுநர்களுக்கு, 23.08.2010க்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என்று அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் சார்பில் தகுதிகாண் பருவத்தினை முடித்து ஆணை வழங்குவதில் காலதாமதம் ஏதும் இன்றி செயல்படவும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்ப்பட்டுள்ளனர்.


அ.தே.இ - இனி வருங்காலங்களில் எக்காரணத்தைக் கொண்டும், உண்மைத்தன்மை அறிதல், மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம், இரண்டாம்படி மதிப்பெண் சான்றிதழ் கோருதல் சார்பான கடிதங்கள் அஞ்சல் வழியே அனுப்ப கூடாததென இயக்குனர் உத்தரவு...

ஒரு சகாப்தம் சரித்திரம் படைக்கிறது






20/10/2014

தொடக்கக் கல்விப் பணி - தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வில் 25.10.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண்.31 முதல் 160 வரை உள்ளவர்கள் கல்ந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.சு.ஈஸ்வரன் இயற்கை எய்தினார்

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திரு.சு.ஈஸ்வரன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று மாலை இராமேஸ்வரம் மாவட்டம், உச்சிபுலி என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். 
அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும் எங்களின் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

19/10/2014

Central Teachers Eligibility Test (CTET) -September 2014 Results Published

10,+2,Any Degree உண்மைத்தன்மை சான்றிதழ் பெற அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படவேண்‌டிய மாதிரிப்படிவம்

Income Tax Slabs & Rates for Assessment Year 2015-16

Income Slabs Tax Rates


i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL

ii. Where the total income exceeds Rs. 2,50,000/- but does not exceed Rs. 5,00,000/-. 10% of amount by which the total income exceeds Rs. 2,50,000/-.Less ( in case of Resident Individuals only ) : Tax Credit u/s 87A - 10% of taxable income upto a maximum of Rs. 2000/-.

iii. Where the total income exceeds Rs. 5,00,000/- but does not exceed Rs. 10,00,000/-. Rs. 25,000/- + 20% of the amount by which the total income exceeds Rs. 5,00,000/-.

iv. Where the total income exceeds Rs. 10,00,000/-. Rs. 125,000/- + 30% of the amount by which the total income exceeds Rs. 10,00,000/-.

2014-15 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வருமான வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக (ரூ.50,000) உயர்த்தப்பட்டது.
வருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
சொந்த வீட்டில் குடியிருப்பவர் பெறும் வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு அளிக்கப்படும் விலக்கு வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டது.

சென்னை முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் - சி.இ.ஓ., ராஜேந்திரன், நேற்று திடீரென, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ராஜேந்திரன், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். சென்னைக்கு வருவதற்கு முன், கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றினார்.அப்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய, 135 டன் இலவச பாட புத்தகங்கள், 'கரையான் அரித்துவிட்டது' என, பழைய பேப்பர் கடைக்கு போட்டதாக கூறப்படுகிறது.

இதில், தமிழக அரசுக்கு, பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதற்கு, அப்போது, முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த, ராஜேந்திரன் தான் பொறுப்பு என்றும் கூறி, நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

கல்வித்துறை செயலர் சபிதா, ராஜேந்திரனை, 'சஸ்பெண்ட்' செய்து, உத்தரவு பிறப்பித்ததை, அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தினார். ஓரிரு நாளில், பக்கத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஒருவரிடம், சென்னை மாவட்ட பொறுப்பு, கூடுதலாக ஒப்படைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

16/10/2014

தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை

பத்து ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை

பத்து ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை

பெயர்K.R.RAMESH
கோரிக்கை எண்2014/802851/AIகோரிக்கைத் தேதி15/09/2014
முகவரி32 A3, SITHAVEERAPPA CHETTI STREET, DHARMAPURI, VIRUPAKSHIPURAM, DHARMAPURI TALUK,
DHARMAPURI - 636701.
TAMILNADU . 
கோரிக்கைபள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும்  ஆசிரியர்கள் பலரது தேர்வுநிலை வழங்கக்கோரும் கருத்துருக்கள் கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை பெறப்படவில்லை  எனும் காரணத்தால் தேர்வுநிலை வழங்கப்படாமல்  சில மாவட்டங்களில் முதன்மைக்கல்வி  அலுவலர்களால்திருப்பி அனுப்பப்படுகின்றன .      தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி துணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண் 37489/டபிள்யு 2/இ1/ 2014  நாள் 18.07.2014 கடிதத்தின் வாயிலாக    பத்தாண்டு பணிமுடித்த முதுகலையாசிரியர்  தேர்வுநிலை பெறுவதற்கு  கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை அறியவேண்டியது அவசியமில்லை. மேலும் அக்காரணத்தால் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதை தள்ளிப்போடுவது அவசியமில்லை எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது   ஆனால் தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகத்தின் பொதுத் தகவல் வழங்கும் அலுவலரால்  செயல்முறைகள் ஒ.மு எண் 4773/ஆ1/ 2014  நாள் 02.09.2014 ன் படி தற்போதும்சான்றிதழ்களின் உண்மைத்தன்மை இல்லாத கருத்துருக்கள்  தேர்வு நிலை வழங்கப்படாமல்  திருப்பியனுப்பப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே  மேற்காண்    தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தநா.பள்ளிக் கல்வி துணை இயக்குநரின்  கடிதத்தில் தெரிவித்துள்ளபடி  பத்தாண்டு பணிமுடித்த ஒருவர் தேர்வுநிலை பெறுவதற்கு கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை அறியவேண்டியது அவசியமில்லை. மேலும் அக்காரணத்தால் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதை தள்ளிப்போடுவது அவசியமில்லை என்பதை  அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் உரிய தெளிவுரைகள் வழங்கி பத்தாண்டு பணிமுடித்த  ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டுகிறேன்
கோரிக்கை வகைSERVICE MATTERS - PROMOTION, TRANSFERS,NON-PAYMEகோரிக்கை நிலவரம்Accepted
தொடர்புடைய அலுவலர்SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN
பதில்ஏற்கப்பட்டது - பத்து ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கான அறிவுரைகள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு ப.க.இ ந.க.எண்.076506/W2/S1/2014 dt.13.10.2014 அன்று E.mail மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ஆகையால் மனுதாரர் தேர்வுநிலை பெறுவதற்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரை அனுக தெரிவிக்கலாகிறது - ப.க.இ. ந.க.எண்.74214/டபிள்யு2/14 நாள் 13.10.2014 

பென்ஷனுக்கு வசூலித்த பணம் கருவூலத்தில் கணக்கு இல்லை ..அதிகாரிகள் அதிர்ச்சி


தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 22 மட்டுமே விடுமுறை-விடுமுறைப்பட்டியலில் மாற்றம் இல்லை-தேவைப்படின் உள்ளூர் விடுமுறை அல்லது ஈடுசெய் விடுமுறை விடமட்டுமே வாய்ப்பு-

ஆசிரியர் சங்க கோரிக்கை

முக்கியமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 23 தேதி மாணவர் மற்றும் ஆசிரியர் வருகை குறைவாக இருக்கும் என்பதாலும் அனேக ஆசிரியர்கள் R.L எடுக்க வாய்ப்பு உள்ளதால் நிர்வாக சிக்கலின்றி பொதுவான விடுமுறை அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது 

இயக்குனர் தங்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிககை நியாமானது என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் (கால அளவினை கருத்தில் கொண்டு)விடுப்பு அறிவிப்பது சாத்தியமில்லை எனவும் தேவைப்படுவோர் உதவிதொடக்கக்கல்வி அலுவலர் மூலம் உள்ளூர் விடுமுறை அல்லது ஈடுசெய் விடுமுறை விண்ணப்பம் அளித்துஒப்புதல் பெற்றுவிடுப்பு அறிவிக்கவும், கோரிக்கைகள் வரும் பள்ளிக்கு விடுப்பு அளிக்கதேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட தொடக்கக்க்கல்வி அலுவலர்களுக்கும் தகவல் கூறப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார் .எனவே 21 மற்றும் 23 ஆகிய தேதிகள்.விடுப்புவேண்டுவோர் அவரவர் உதவி தொடக்கக்கல்வி அலுவலரை சந்தித்து விடுப்பு பெற அனுமதி பெற்றுகொள்ளுமாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Observance of Vigilance Awareness Week-27th October to 1st November 2014

ஆன்லைன் மூலம் சம்பள பில் அரசு ஆசிரியர்களுக்கு உத்தரவு

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியருக்கு, அடுத்த மாதம் முதல், இ-பே ரோல் எனும், ஆன்லைன் மூலம் பில் சமர்பிக்கும் முறையை கருவூல அலுவலர்கள் அமல்படுத்தியுள்ளனர். 

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு, கருவூலம் மூலம் சம்பளம் மற்றும் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு மாதமும், சம்பந்தப்பட்ட தலைமை அலுவலர், தமக்கு கீழ் உள்ள அரசு ஊழியருக்கான சம்பள பில் தயாரித்து, கருவூலத்தில் சமர்பிக்க வேண்டியிருந்தது. கடந்த சில ஆண்டுகளாக, சம்பள பில் பெறுவதை, காகித கோப்புகளாகவும், சிடி வடிவிலும், பெறப்பட்டு வந்தது. இதன்மூலம், அரசு ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்கள் சம்பளம் பெறும் தலைப்பு, மொத்த செலவு உள்ளிட்டவற்றை துல்லியமாக கணக்கிட முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது கருவூலத்துறை கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. இதனால், அக்டோபர் மாத சம்பளம் முதல், ஆன்லைனில் பில் சமர்பிக்கும் முறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது ஒவ்வொரு பள்ளிக்கும், அலுவலகத்துக்கும் தனித்தனியே, "யூசர் ஐடி', "பாஸ்வேர்டு' வழங்கப்படும். கருவூலத்துறை இணையதளத்தில் இ-பே ரோல் எனும் பகுதியில், இதை பயன்படுத்தி, அலுவலர்களின் பில்களை, ஆன்லைனில் சமர்பிக்கலாம்.

பின் வழக்கம் போல, வங்கிக்கணக்குகளில், "இ.சி.எஸ்' முறையில் சம்பளம் வழங்கப்பட்டுவிடும். ஆவணங்களாக தயாரித்து வழங்கி வந்த முறையை, ஒழித்துள்ள நிலை, தலைமை அலுவலர்களின் பணி பளுவை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு அக்டோபர் மாதத்துக்கான சம்பள பில்களை, "ரிகர்சல்' போல், ஆன்லைனிலும், பதிவு செய்துவிட்டு, ஆவணமாகவும் தரலாம் எனவும், அடுத்த மாதம் கண்டிப்பாக, ஆன்லைன் முறையில் மட்டுமே, பில் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏ.டி.எம்., பயன்பாட்டில் சலுகை: எஸ்.பி.ஐ., அறிவிப்பு.

தங்கள் கணக்கில், குறைந்தபட்சம் ஒரு லட்சம்ரூபாய் இருப்பு (மினிமம் பேலன்ஸ்) இருக்கும் வகையில், பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஏ.டி.எம்., பயன்பாடு இலவசம், என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும், 1.66 லட்சம் ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. அவற்றில், எஸ்.பி.ஐ., வங்கிக்கு 45 ஆயிரம் மையங்கள் உள்ளன. அனைத்து ஏ.டி.எம்., மைய பணப் பரிவர்த்தனைகளில், 41 சதவீதம் எஸ்.பி.ஐ., கார்டுதாரர்கள் இடம்
பெற்றுள்ளனர்.இந்நிலையில், எஸ்.பி.ஐ., வங்கியின் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க, ஏ.டி.எம்., பயன்பாடுகளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. 

இதுகுறித்து, ஒரு நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்ப்தாவது: எஸ்.பி.ஐ., வங்கிக் கிளைகளில் கணக்குவைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கில் மாதத்திற்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கு கீழ்வைத்திருப்பவர்கள், எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,களில், ஐந்து முறையும், பிறவங்கிகளின் ஏ.டி.எம்.,களில் மூன்று முறையும், இலவசமாக பணம் எடுக்கலாம். அதற்குமேல் ஏ.டி.எம்.,களை பயன்படுத்த வேண்டுமானால், ஒவ்வொரு முறைக்கும் ஐந்து முதல் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 
ஆனால், தங்கள் கணக்கில் குறைந்தபட்சம், 25 ஆயிரம் ரூபாய் வைத்திருப்பவர்களுக்கு, மாதத்திற்கு 9 முறை ஏ.டி.எம்.,களிலும், நான்கு முறை வங்கியிலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு லட்சம் ரூபாய் இருப்பு வைத்திருந்தால், நாடு முழுவதிலும் உள்ள ஏ.டி.எம்.,களில்கட்டணமின்றி, எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்த புதிய நடைமுறை, நவ., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.இவ்வாறு, அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

"டெட்" தேர்வுகள் இல்லை; ஆசிரியர் தேர்வு வாரியம் திடீர் முடிவு!

Department of Treasuries and Accounts - CPS - Index No. allotted to Government and Aided Institution Employees

2014-2015 கல்வியாண்டின் ஆசிரியர் மாணவர்கள் விவ‌ரப்படிவம்

இ.சி.எஸ். ஆன்லைனில் சம்பள பட்டியலை சமர்பிக்க தேவையான ஆசிரியர்களின் அடிப்படை விவரங்கள் உள்ள படிவம்

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின் தீர்ப்பு நகல்

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின் தீர்ப்பின் உண்மை ஆணை 33399/13



8 வாரம் என்பது 09-10-2014 ல் இருந்து என்பதாகும் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்து அல்ல ! அல்ல !