திருக்குறள்

21/08/2013

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஜார்க்கண்ட் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு-

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 'ஓய்வூதியம் ' என்பது ஒருவரின் அடிப்படை உரிமை மற்றும் ஊழியர்களின் சொத்து அதை
மறுக்க கூடாது என ஜார்க்கண்ட் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு.இதனால் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது

இரட்டைப்பட்டம் வழக்கு 22.8.2013 நாளை முதல் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

அவசர தகவல். உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் விடுமுறையில் இருப்பதால் ஒத்தி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்டம் வழக்கு நாளை முதல் அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கு விசாரணைக்கு வருவதற்கு தீவிரமாக முயற்சி செய்தது திரு.கலியமூர்த்தி அவர்கள். வழக்கு ஏறத்தாழ நாளை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

EMIS-ஆன்-லைனில் பதிவு செய்யாத 9 மாவட்ட பள்ளிகளுக்கு ஆக., 23ம் தேதிக்குள், ஆன்-லைனில் பதிய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை, "கெடு' விதித்துள்ளது.

ஆன்-லைனில் பதிவு செய்யாத 9 மாவட்ட பள்ளிகளுக்கு கெடு

ஆன்-லைனில் விவரங்களை பதிவு செய்யாத, ஒன்பது மாவட்டபள்ளிகளுக்கு, கல்வித் துறை, "கெடு' விதித்துள்ளது. தமிழகத்தில்,36,505 அரசு பள்ளிகள், 8,266 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. புள்ளி விவர கணக்கீட்டிற்காக, இப்பள்ளிகளின் விவரங்களை, ஆன்-லைன் மூலம், கல்வி தகவல் மேலாண்மை தொகுப்பில் பதிவு செய்ய, அரசு உத்தரவிட்டிருந்தது. கடந்த கல்வியாண்டில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை, ஆசிரியர்கள்,மாணவர்கள், வகுப்பு, பாலினம், இனம் உள்ளிட்ட, 30 விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. ஏப்ரல் வரை, 4,000 பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை.

நடப்பு கல்வியாண்டில், புதிதாக சேர்ந்த முதல் வகுப்பு மாணவர்களையும் சேர்த்து, ஜூலை 31க்குள் பதிவு செய்ய, கல்வித் துறை, "கெடு' விதித்திருந்தது. இதுவரை, 23 மாவட்டங்கள் மட்டும்,முழுமையாக பதிவு செய்துள்ளன. தர்மபுரி, சேலம், சிவகங்கை,தேனி, திருவள்ளூர், வேலூர், பெரம்பலூர், தஞ்சை, திருச்சி மாவட்ட பள்ளி விவரங்கள், முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. விடுப்பட்ட மாவட்ட பள்ளிகளின் விவரங்களை, ஆக., 23ம் தேதிக்குள், ஆன்-லைனில் பதிய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை, "கெடு' விதித்துள்ளது.

School Education Learning Disability among the students-Issue of certificate to the Differently Abled student-Formation of committee Clarificatory -Orders issued

புவியியல் நினைவுச் சின்னமாகிறது அரியலூர்

தமிழகத்தில் உள்ள அரியலூர் கடல்படிம ஆய்வகத்தை தேசிய புவியியல் நினைவுச் சின்னமாக அறிவிக்க இந்திய புவியியல் ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக
உள்ளது. இது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அதன் இயக்குனர் ஜெனரல் ஏ.சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார். அதிகளவிலான கடல் படிமங்கள் அரியலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 16 முதல் 22 வரை சமஸ்கிருத வாரம் கொண்டாட அரசு கடிதம் வெளியீடு

பள்ளிக்கல்வி - SAVE PAPER - SAVE TREES - அறிவியல் செய்முறை பயிற்சி ஏடுகள் மற்றும் ஒப்படைப்புகளில் ONE SIDE பயன்படுத்துவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு

தொடக்கக் கல்வி - 01.06.1988 முதல் தேர்வுநிலை / சிறப்புநிலை வழங்க கோரி பெறப்பட்ட இறுதியாணை -களுக்கு, பொதுவான ஆணை பிறப்பிக்க வழக்கு தொடுத்த அனைவர்களின் விவரங்களையும் 20.08.2013க்குள் சமர்பிக்க உத்தரவு

அண்ணாமலை பல்கலை.,யில் பி.எட்: நுழைவு தேர்வுக்கு அழைப்பு

அண்ணாமலை பல்கலை.,யில் தபால் வழி பி.எட் படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,யில் நடப்பு ஆண்டில் தபால் வழி பி.எட் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ, எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.காம், எம்.பி.ஏ, மருத்துவ படிப்பு, பட்டய படிப்பு, முதுகலை பட்டய படிப்பு, சான்றிதழ் படிப்புகளுக்கான சேர்க்கையும் தற்போது நடந்து வருகிறது.

இந்த படிப்புகள் சம்பந்தமான விபரங்களை அண்ணாமலை பல்கலை., இணையதளம் (http://annamalaiuniversity.ac.in/distance_edu.htm) அல்லது கல்வி மையங்களை அணுகவும்.

தொடக்க கல்வித் துறையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வந்த, 51 பேர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொடக்கக்கல்வித் துறையில் காலியாக இருந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, நேற்று சென்னையில் நடந்தது. இதற்கு பணி மூப்பு அடிப்படையில், 100 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில், 51 பேருக்கு, பதவி உயர்வு உத்தரவுகளை, தொடக்கக்கல்வி இயக்குனர் இளங்கோவன் வழங்கினார்

தமிழ் தெரியாத பள்ளி மாணவர்கள்: சிறப்பு பயிற்சி அளிக்க அரசு திட்டம்

தமிழக பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில், தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.

மேல்நிலைக் கல்வி கற்க வரும் மாணவ, மாணவியரில் பலருக்கு, தமிழில் எழுத, படிக்கத் தெரியாத நிலை உள்ளது. தமிழில் எழுத, படிக்க சிரமப்படுவது குறித்து, பள்ளிக்கல்வித் துறை ஆய்வு செய்தது. இதையடுத்து, அந்த வகை மாணவ, மாணவியருக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டு, அதற்காக, செயல்முறை புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இந்த திட்டத்தில், ஒவ்வொரு மாவட்ட கல்வித் துறையில் இருந்தும், தமிழாசிரியர்கள் மூன்று பேருக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. பயிற்சி பெற்ற தமிழாசிரியர்கள், அந்தந்த மாவட்டங்களில், மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு, செயல்முறை புத்தக பாட அடிப்படையில், பயிற்சியளிக்க உள்ளனர். இந்த சிறப்பு திட்டம், விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக, கல்வித் துறை தெரிவித்து உள்ளது.

தற்போது 1.1.2011-க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர் -களுக்கு தனி ஊதியம் அனுமதியில்லை எனவும் அதனால் பெற்ற பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என வேலூர் பகுதி பள்ளிகளில் தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள -தாக நிலவி வரும் தகவல்களுக்கு விளக்கமளிக்க உங்களுக்கு முதலாவது சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்களின் 17.5.2011 நாளிட்ட கடிதத்தை உங்களுக்காக வெளியிட்டு எங்கள் கருத்தினையும் உங்கள் முன் பதிவு செய்ய விரும்புகிறோம்.

Special Allowance மற்றும் P.P பற்றிய தகவல்களை அரசாணைகளின்படி பார்ப்போம்.

தற்போது எழுந்துள்ள நிலைகளை விளக்குவதற்கு முன்னர் S.A.மற்றும் P.P பற்றிய தகவல்களை அரசாணைகளின்படி பார்ப்போம்.

SPECIAL ALLOWANCE பற்றிய விளக்கம் :

இது ஒரு நபர் குழுவைத் தொடர்ந்து அரசாணை 270 நாள்.26.8.2010 இன் மூலம் இ.நி.ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதாவது அரசாணையில் "Government direct that the Special Allowance of Rs.500/- per month be granted to the Secondary Grade Teachers and Headmaster High Schools" என்று உள்ளது. மேலும் இறுதியில் " The Special Allowance sanctioned in Para - I above shall take effect from 1.8.2010.

இதில் Secondary Grade Teachers என்று குறிப்பிடப்பட்டதால் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் S.A. பெற தகுதியாகி 1.8.2010 முதல் பெற்றனர்.

பின்னர் 12.01.2011 இல் அரசாணை 23 இன் படி தனி ஊதியம்.

இதில் பத்தி 4 - இல் " இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தத்திற்கு மாற்றாக ஒரு நபர் குழுவின் அடிப்படையில் தற்போது சாதாரண நிலையில் 5200 - 20200 + தர ஊதியம் 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பத்தி 4 - இன் இறுதியில் " மேலும், தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது." என்றும் உள்ளது.

சிறுவிளக்கம் உங்களுக்காக:

இதில் குறிப்பிடப்பட்டுள்ள "சாதாரண நிலையில்" என்ற வாசகத்தை வைத்துக்கொண்டு தணிக்கை தடை என்று பணத்தை திருப்பிகட்ட கூறுவதாக தற்போது தகவல்கள் பரவி வருகிறது.

அதாவது 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் 5200-20200 +2800 இல் ஊதிய நிர்ணயம் செய்துகொண்ட இடைநிலை ஆசிரியர்கள் 1.1.2011 இல் தேர்வுநிலையை அடைந்திருந்தால் தனி ஊதியம் 750 பெற இயலாது என்பதாகவும், ஏனெனில் தனி ஊதிய அரசாணையில் சாதாரண நிலையில் என்று உள்ளது என தணிக்கையர்கள் கூறுகின்றனராம்.

இங்கு கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்.

S.A. வழங்கும்போது GRANTED TO SECONDARY GRADE TEACHERS என இருந்தததால் இதனை பெற்றவர்களை பட்டியலிட்டால்

1. 5200 - 20200 + தனி ஊதியம் 2800 பெற்று தேர்வுநிலை முடிக்காதோர்.(சாதாரண நிலை என்று வைத்துகொள்ளுங்களேன் )

2. 1.6.2009 -க்கு பின்னர் தேர்வுநிலை பெற்று 5200 - 20200 + தனி ஊதியம் 2800 பெற்றுகொண்டிருப்போர்.

3. இடைநிலை ஆசிரியர் தேர்வுநிலையினர் 9300-34800 + 4300 நிலையினர்.

4. இடைநிலை ஆசிரியர் சிறப்பு நிலையினர் 9300-34800 + 4500 நிலையினர்
(அதாவது அனைத்து நிலை இடைநிலை ஆசிரியர்களும் சிறப்பு படி பெற தகுதிடையவ்ர்கள் )

இதில் நாம் குறிப்பிட்டுள்ள வரிசை எண் 3 மற்றும் 4 இல் உள்ளவர்கள் அரசாணை 23 இன் பத்தி 4 - இன் இறுதியில்உள்ள " மேலும், தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் (தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு) தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது." வரிகளின்படி சிறப்புபடி தொடர்ந்து பெற தகுதி பெறுகின்றனர்.

இவர்களுக்கு தொடர்ந்துபெற தகுதி பெறுகின்றனர் என்றால், இவர்களைத்தவிர மேலும் சிறப்புபடி பெற்று வந்தவர்களுக்கு என்ன நிலை?

அவர்களுக்கு "தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது." என்ற வரிகளையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பத்தி 4 இன் வரிகளை திரும்ப படியுங்கள்:

பத்தி 4 - இல் " இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தத்திற்கு மாற்றாக ஒரு நபர் குழுவின் அடிப்படையில் தற்போது சாதாரண நிலையில் 5200 - 20200 + தர ஊதியம் 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் சாதாரண நிலையில் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் 1.6.2009 -க்கு பிறகு தேர்வு நிலை பெற்று 5200 - 20200 + 2800 இல் உள்ளவர்களுக்கு தனி ஊதியம் இல்லை என்கின்றனர்.

இவர்களை தேர்வுநிலை பெற்றவர்கள் பட்டியலில் வைத்தால்,சிறப்புபடியை தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்ட தேர்வு/சிறப்பு நிலை பெற்றவர்களுடன் இவர்களையும் இணைத்திருப்பார்கள் அல்லவா? அப்படி சிறப்பு படியை தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் 5200-20200+2800 பெறும் தேர்வுநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் இடம் பெறாததால் இவர்கள் தனி ஊதியம் பெறவே தகுதி பெற்றவர்கள்.

இதுசார்ந்து நாமக்கல் கருவூல அலுவலர் கோரிய தெளிவுரைக்கு சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்கள் அளித்த பதிலை மீண்டும் படியுங்கள்.

20/08/2013

ஓவிய போட்டி SAVE WATER SECURE FUTURE . 6,7,8 th students

உங்களது PF-பிராவிடண்ட் பண்ட்டில் எவ்வளவு பணம் இருக


வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பணம் செலுத்தும் அனைத்து அரசு, தனியார் நிறுவன ஊழியர்களின் கணக்கு விவரங்களை இணையதளத்திலேயே பார்க்க முடியும். இதற்கு முன்னால் உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் தற்போது அது எவ்வளவு என்பதை அவ்வபோதே தெரிந்து கொள்ளலாம்.இந்த விவரத்தை தற்போது பார்போம்.


இணைய சுட்டி...இதனை கிளிக் செய்து அந்த இணைய தளத்தில் சென்று படத்தில் காட்டியுள்ளது போல் செய்தால் உங்களது விவரங்கள் தெரியும்..



அதில் know your EPF balance என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ளதுபோல் விண்டோ ஓபன் ஆகும்.


அதில் Click Here என்பதை கிளிக் செய்து பின்பு வரும் விண்டோவில் படத்தில் சுட்டி காட்டிய இடத்தில் தங்களது மாநிலத்தை தேர்வு செய்தால் படத்தில் காட்டியுள்ளதுபோல் தோன்றும் அதில் உங்களது EPFO OFFICE-யை தேர்வு செய்தால்




மேலே உள்ளது போல் தோன்றும் அதில் சுட்டி காட்டப்பட்ட இடத்தில் தங்களது விவரங்களையும் (முக்கியமாக தொலைபேசி எண்ணை தர வேண்டும்) கொடுத்து submit செய்தால் இணையத்தில் காட்டாது உங்கள் பணத்தின் விவரம் உங்களது தொலைபேசிக்கு ஒரு செய்தி(SMS)ஆக வரும். அதில் உங்களது தொகையின் விவரம் தெரிந்துவிடும்...அவ்வளவுதான் நண்பர்களே..


கொசுறு: பணியிலிருந்து ஓய்வு பெறுவோர் தங்களது PF பிராவிடண்ட் பண்ட் பணத்தை வாங்குவதற்கு பல விதிமுறைகளைச் சொல்லி அலையோ அலை என்று அலைய விட்டு உயிரை எடுப்பார்கள்.. ஆனால், சில வருடங்களாக நிலைமை மாறிவிட்டது. பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் தனது PFபிராவிடண்ட் பண்ட் பணத்தைக் தர கோரி விண்ணப்பம் தாக்கல் செய்தால், விண்ணப்பம் தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் அவருக்கு பணம் போய் சேர வேண்டும் என்பது கட்டாயமாகி விட்டது.