திருக்குறள்

25/08/2013

தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து செல்லும் போது பெற்றோர்கள் லுங்கி, நைட்டி அணிந்து வர தடை விதிப்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 55,900 பள்ளிகளில் 1 கோடியே 36 லட்சம் மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். 6 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை சில பெற்றோர்கள் வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனர். சில பெற்றோர்கள் தாங்களாகவே அழைத்து சென்று விடுகின்றனர். அப்போது சில நேரங்களில் அவசரத்தில் பெற்றோர்கள் லுங்கி, நைட்டிகள் அணிந்து கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால், இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒழுக்கத்தை வளர்க்கும் பள்ளிக் கூடத்தில் பெற்றோர் லுங்கி, அரை டவுசர் ஆகியவை அணிந்து பள்ளிக்கூடங்களுக்கு செல்லக் கூடாது. அவ்வாறு செல்வதாக புகார்கள் வந்துள்ளது. எனவே, பெற்றோர்கள் மனம் புண்படாத வகையில் மாணவர்களின் தாயாக இருந்தால் நைட்டி அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்லக் கூடாது. தந்தையாக இருந்தால் லுங்கி அணிந்து செல்லக் கூடாது. இதை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு அறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது" என்றார்.

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவேடு ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவு


ஆசிரியர் கல்விக்கான இரண்டாண்டு டிப்ளமோ கல்வி, பிளஸ்–2–க்கு இணையானது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக்கல்வி இயக்குனர்

சென்னை ஐகோர்ட்டில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஏ.முனியம்மாள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– நான் கடந்த 1980–ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று, 1985–ம் ஆண்டில் ஆசிரியர் கல்விக்கான டிப்ளமோ (டி.டி.எட்.) முடித்தேன். பின்னர் பி.லிட். (தமிழ்) பட்டம் பெற்றேன்.

ரத்து செய்ய வேண்டும்

பணி மூப்பு அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு அளித்திருக்க வேண்டும். ஆனால் பிளஸ்–2 படிக்காதவர்களுக்கு இந்தப் பதவி உயர்வு பெறத் தகுதி இல்லை என்று கூறப்பட்டது. இதற்கு தொடக்கக் கல்வி இயக்குனரின் 13.9.2011 தேதியிட்ட வழிகாட்டி உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி உயர்வு உண்டு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:– தொடக்கக் கல்வி இயக்குனரின் அந்த உத்தரவை மற்றொரு வழக்கில் கடந்த 2.7.12 அன்று ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனடிப்படையில் மற்றொரு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இரண்டு ஆண்டு ஆசிரியர் கல்வி டிப்ளமோ கல்வி, பிளஸ்–2 படிப்புக்கு இணையானது என்று கூறப்பட்டுள்ளது.

அந்த உத்தரவு இந்த வழக்குக்கும் பொருந்தும். எனவே மனுதாரருக்கு பதவி உயர்வு பெறும் உரிமை உள்ளது. அதன்படி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அதற்கேற்ற பணப் பலன்களையும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், கோப்பிலியாங்குடிகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுவர்கள் மிகவும் சேதம டைந்துள்ளதை கலெக்டர் சரவணவேல்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பள்ளியின் கட்டிட சுவர்களை உடனடியாக சீரமைக்க எவ்வளவு காலம், எவ்வளவு செலவு ஆகு மென்றும் ஒன்றிய பொறி யாளரிடம் கேட்டறிந்தார். அதேபோன்று பள்ளி தலை மையாசிரியரிடம் மாணவர்களின் படிப்பு எந்த விதத்திலும் பாதிப்பு அடையாத வண்ணம் பள்ளியின் சீரமைப்பு பணிகள் முடியும் வரை பள்ளி தற்காலிகமாக வேறு ஒரு இடத்தில் செயல்படுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க தலைமையாசிரியருக்கு உத்தரவிட்டார். 
மேலும், பள்ளியின் சீரமைப்பு பணிகள் முடியும் வரை மாணவர்கள் கட்டிடங்களுக்குள் செல்ல அனுமதிக்க கூடாது என பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தர விட்டார். மேலும், இப்பள்ளிக்கு தற்காலிக இடமாக மண்ணூழியில் உள்ள ஒரு இடத்தினை கலெக்டர் பார்வையிட்டு அவ்விடமானது தற்போது இயங்கி வரும் பள்ளியிலிருந்து வெகு தொலைவில் உள்ளதால் அந்த இடத்திற்கு பதிலாக அப்பள்ளி தற்போது இயங்கி வரும் இடத்திற்கு அருகாமையில் பள்ளிக்கு இடம் தேர்வு செய்யுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மழை காலங்களுக்குள் பள்ளியின் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை விரைவில் முடித்து மாணவர்களின் படிப்பு எந்தவிதத்திலும் பாதிக்காத வண்ணம் முடித்து தருமாறு பொறியாளருக்கு கலெக்டர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டார்.

24/08/2013

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க முடிவு

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு புதுமையான முறைகளில் ஆங்கிலத்தைக் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 5 புதிய ஆங்கில வார்த்தைகளாவது கற்றுத்தர வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

அரசுத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என இந்த ஆண்டு 3,500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். அதோடு, ஏற்கெனவே ஆங்கில வழி வகுப்புகள் உள்ள 320 பள்ளிகளில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த மாணவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்றுத்தர பல்வேறு புதிய திட்டங்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வகுத்துள்ளது.

முதல் கட்டமாக, இந்த மாணவர்களுக்கு ஆங்கில வழி வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் சனிக்கிழமை (ஆக.24) பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் சுமார் 4 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கற்பிக்கும் ஆசிரியர்களிடத்தில் தன்னம்பிக்கை வளர்க்கும் விதத்தில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர்களின் ஆங்கிலப் பேச்சுத் திறனை வளர்ப்பதற்கான எளிய முறைகள் இந்தப் பயிற்சியின்போது கற்றுத்தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆங்கில வழி வகுப்புகளைப் பொருத்தவரை ஆங்கில எழுத்துகள், வார்த்தைகளோடு வார்த்தை உச்சரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெறும் கரும்பலகையின் மூலம் மட்டுமே ஆங்கிலத்தைக் கற்பிக்காமல், விடியோ, ஆடியோ சி.டி.க்கள் மூலமும் மாணவர்களின் உச்சரிப்புத் திறன் மேம்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

EMIS இல் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிகள் வாரியாக சீராய்வு செய்து உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் 100%உறுதிபடுத்தும் பொருட்டும் ஒன்றிய அளவில் குழு ஏற்படுத்துதல் &பணிகள்.

*2013~2014மாணவர் விபரம் ( தற்போதைக்கு) உள்ளீடு செய்ய வேண்டாம்.
*2013~2014முதல் வகுப்பு (மட்டும்) மாணவர் விபரம் படிவங்களில் நிரப்பி வைக்கவும்.
*2012~2013 கல்வியாண்டில் உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் 2013 ஏப்ரல் 30 அன்று பள்ளியில் இருந்த மாணவர் எண்ணிக்கை விவரங்களோடு ஒத்து போக வேண்டும்.
*விடுபட்டவர் விபரம் சேர்க்கவும், கூடுதலாக உள்ள தவறான விபரம் நீக்கிடவும் வேண்டும்.
*மாணவர் பெயர்,பிறந்த தேதி,இனம் ,தகப்பனார் பெயர் சரியாக உள்ளதா என சரி பார்க்கவும்.
*ரத்த வகை ,கைபேசி எண், சகோதரர்களின் பிறந்த நாள் விவரம் வேண்டி மாணவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.
*வருங் காலங்களில் பள்ளி மாற்றுச்சான்றிதல்களிலேயே மாணவருடைய
யுனிக்க்யூ கோட் குறிப்பிட்டு விடவும்.
*தங்களது பள்ளி UDISE எண்ணை கரும் பலகையில் குறிப்பிடவும்.
*அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளி எண்ணை தெரியப் படுத்திடவும்.(3309040****)
*பள்ளிகளில் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு EMIS இணைய தளத்தின் முதல் பக்கம் பதிவிறக்கம் செய்து குழுவினரிடம் அளிக்கவும்.
*அனைத்து விவரங்களும் சரி பார்க்கப்பட்டு..."அனைத்து விவரங்களும் சரி பார்க்கப்பட்டதென" சான்று தங்களுக்கு அளிக்கப்படும்.

23/08/2013

364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது: 27-ந் தேதி தேர்வுசெய்யப்படுகிறார்கள்

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர்5-ந் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தையட்டி தமிழக அரசு சார்பில் 364ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும். நல்லாசிரியர் விருது ரூ.5ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். 2013-ம்ஆண்டுக்கான தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு கல்வித்துறை அதிகாரிகள்மூலமாக ஆசிரியர்களின் பரிந்துரை பட்டியல் பெறப்பட்டு உள்ளது. அரசு பள்ளிஆசிரியர்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆகியஅனைத்து வகையான ஆசிரியர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களின் பட்டியல் 27-ந் தேதிஇறுதிசெய்யப்படுகிறது. தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5-ந்தேதிசென்னை சேத்துப்பட்டு சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில்நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் விருதுகளை வழங்கிஆசிரியர்களை கவுரவிக்கிறார்.

TIME TABLE FOR COMMUNICATIVE ENGLISH TRAINING(Primary) on 24.08.2013

22/08/2013

தமிழக த்தில் பயன்பாட்டில் உள்ள இனவாரியான (ஜாதி கள்) பட்டியல்.

பாரதியார் தின,கு‌டியரசு தின சதுரங்கப்போட்டிகள் நடத்துவதற்கான செயல் திட்டம்

100% EMIS பதிவை உறுதி செய்யவும், மாவட்ட / வட்டார அளவிளான குழுக்கள் அமைத்து 2012-13 கல்வியாண்டு மாணவர் விவரங்களை பள்ளி வாரியாக ஒப்பிட்டு உறுதி செய்யவும் அறிவுரை வழங்கி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

பள்ளிகளில் கல்வித்த்ரத்தை மேம்படுத்த, தரக் கண்காணிப்பு முறைகள் (Quality Management Tool) செயல்படுத்துதல் சார்ந்த வழிக்காட்டு நெறிமுறைகள்

மீண்டும் ஏமாற்றம்!... இரட்டை பட்ட வழக்கு இன்று (22.08.2013) விசாரணைக்கு வரவில்லை செவ்வாயன்று (27.08.2013) வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

இரட்டை பட்ட வழக்கு இன்று 152 வது வழக்காக விசாரணைக்கு வர இருந்தது. இன்று ஒரு நீதிபதி ஓய்வுபெறுவதால் அமர்வு மதியம் 3-30 மணிக்கு மேல் நடைபெறவில்லை. மேலும் வரும் செவ்வாயன்று (27.08.2013) முதல் 10 விசாரணை வழக்கிற்கான இடத்திற்குள் வரும் என்று வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர். மேலும் அன்றைய தினமே வழக்கை கொண்டு வருவதற்கும் மற்றும் வழக்கை முடிப்பதற்கும் முழு முயற்சி செய்து வருகிறோம் என்று வழக்கை நடத்தி வருபவர்கள் தெரிவித்தனர்

21/08/2013

RTI தகவல் -பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை





ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?


TNTET 2013 பணிநியமனத்திற்கான பகுக்கப்பட்ட மதிப்பெண் நிறையளவு விவரம்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்நியமனத்தைப் பொருத்தவரையில்,ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.


பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு,

தகுதி தேர்வு மதிப்பெண்,
பிளஸ்–2 மதிப்பெண்,
பட்டப் படிப்பு மற்றும் 
பி.எட். மதிப்பெண் 
ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும்.
தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும்,
பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும்,
பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும்,
பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும்.

பிளஸ்–2,டிகிரி,பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:–

12–ம் வகுப்பில்...

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால்–10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள்–8 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள்–6 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள்–5 மதிப்பெண்
50 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள்–2 மதிப்பெண்

பட்டப் படிப்பில்...

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல்–15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள்–12 மதிப்பெண்
50 சதவீதத்திற்கு கீழ்–10 மதிப்பெண்

பி.எட். படிப்பில்....

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல்–15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள்–12 மதிப்பெண்

தகுதித்தேர்வு

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல்–60 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள்–54 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள்–48 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள்–42 மதிப்பெண்