திருக்குறள்

04/09/2013

ஆசிரியர் தினம்: கோ-ஆப்டெக்ஸில் 30% சிறப்புத் தள்ளுபடி


ஆசிரியர் தினத்தையொட்டி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் திங்கள்கிழமை தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரை 30 சதவீதசிறப்புத் தள்ளுபடி விற்பனையை அறிமுகம் செய்துள்ளது.

கோ-ஆப்டெக்ûஸ பொருத்தவரை ஆசிரியர்கள்தான் முக்கிய நுகர்வோராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளனர்.அவர்களின் அடிப்படை ஊதியம் அளவுக்கு வட்டியில்லா கடனாக கோ-ஆப்டெக்ஸ் துணிகளை வாங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

ஆசிரியர்கள் இத்திட்டத்தில் துணிகளை வாங்குவதற்கான அனுமதியை, முறைப்படி அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரின் அனுமதிக் கடிதத்தை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தினர் பெற்ற பிறகு வழங்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

அதேபோல், அந்தந்தப் பள்ளிகளில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தினர் இடைவேளை நேரத்தின்போது துணிகளை வளாக விற்பனை செய்வதற்கும் அனுமதிக்கப்படவுள்ளனர் 

ஆசிரியர்கள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் முதுகெலும்பு.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனையில் 50 சதவீதம் ஆசிரியர்களின் பங்களிப்பு உண்டு.

இவ்வாண்டு ரூ.3,400 விலையில் எல்லோருக்கும் பட்டு என்ற புதிய பட்டுச் சேலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மென்பட்டு ரூ.2,500 முதல் ரூ.40 ஆயிரம் வரையில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையில் கிடைக்கிறது 

03/09/2013

தொடக்க கல்வித்துறையில் 115 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

தொடக்க கல்வித்துறையில், 115 ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, 61 பேரும், அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, 54 பேரும், பதவி உயர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கான பதவி உயர்வு உத்தரவுகளை, சம்பந்தபட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் வழங்கினர்.

நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல் அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது

விருதுகள் பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்தமிழக அரசால் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ல் சென்னையில் விழா நடத்தி கல்விப்பணியில் சிறப்பாக பணியாற்றி பெருமை சேர்த்தவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கி அரசால் கெளரவிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் நல்லாசிரியர் விருதுக்கு தகுதிவாய்ந்தோர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பட்டியல் மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வி இயக்ககத்தால் அனுப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளன. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகவல் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியல் சார்பாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள அலுவலர்களை தொடர்பு கொண்டால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் அறியலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தினமும் பள்ளிக்கு வருகிறார்களா என்பதை கண்காணிக்க புதிய குழு ஒன்றை ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

'தமிழகத்தில், தொலை தூரக் கிராமங்களிலும், மலைப்பகுதியிலும் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வருவதில்லை'. மேலும், 'விடுமுறை எடுத்தால் விடுமுறை விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதில்லை' என்று நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது. இதையடுத்து இந்த பிரச்னை தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் 
விவாதித்தனர். இதைத் தொடர்ந்து, பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் 
மீது நடவடிக்கை எடுக்க வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக, நேற்று (30ஆம் தேதி) தொடக்ககல்வி இயக்குனர் இளங்கோவன், அனைத்து மாவட்ட தொடக்ககல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ''கிராமப்புறம் மற்றும் மலைக்கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தினமும் பணிக்கு வராமல் இருக்கும் ஆசிரியர்கள், விடுமுறை எடுத்து விட்டு விடுமுறை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்காத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.
எனவே ஒவ்வொரு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் இணைந்து பள்ளிகளில் ஆசிரியர்கள் தினமும் பணிக்கு வருகிறார்களா?, விடுமுறை கடிதம் கொடுக்காமல் விடுப்பு எடுக்கிறார்களா? என்பதை கண்காணிக்க வட்டார அளவில் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தி தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தொலை தூரத்தில் உள்ள பள்ளி மற்றும் பஸ் வசதி இல்லாத பள்ளிகளின் பட்டியலை தயாரித்து, வாரத்தில் இரு நாட்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் இணைந்து அந்த பள்ளியில் அதிரடி சோதனை நடத்தி ஆசிரியர்கள் பணிக்கு வந்திருக்கிறார்களா?, விடுமுறை எடுத்திருந்தால் விடுப்பு கடிதம் கொடுத்திருக்கிறார்களா? என்பதை கண்காணித்து மாதம் தோறும் தொடக்கக்கல்வி இயக்குனருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

அகஇ - 2013-14 "SAVE WATER SECURE FUTURE" என்ற தலைப்பில் பள்ளி அளவில் ஓவிய போட்டி நடத்த உத்தரவு




தொடக்கக் கல்வி - ஆசிரியர்களின் பணி மற்றும் பணப் -பலன் சார்பான குறைத்தீர் முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று AEEO அலுவலகத்திலும், 2வது சனிக்கிழமையன்று DEEO அலுவலகத்திலும் நடத்தி ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இயக்குநர் உத்தரவு

தொடக்கக் கல்வி - அரசுப் பள்ளிகளில் குக்கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் பள்ளிக்கு வருகைப் புரியாமல் இருப்பவர்களை கண்டறிந்து தடுப்பதற்காக, வட்டார அளவில் குழுக்களை ஏற்படுத்தி மேற்பார்வையிட உத்தரவு

தொடக்கக் கல்வி - தேசிய ஆசிரியர்கள் நல நிதி - 2011-12 மற்றும் 2012-13 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர்களுக்கான மகன் / மகள்களுக்கான நிதி உதவி பெறுதல் சார்பான விண்ணபங்களை உரிய காலகெடுவிற்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, ஓய்வூதியத்துக்கான பரிந்துரை கடிதம் கொடுக்காமல், அலைக்கழித்த திருவெறும்பூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலரை, திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, "சஸ்பெண்ட்' செய்ய உத்தரவு

திருச்சி மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், திருச்சி கலெக்டர் மக்கள் குறைதீர்க்கும் மன்றத்தில் நேற்று நடந்தது. ஓய்வூதிய நலத்துறை சென்னை இணை இயக்குனர் தேவராஜன் தலைமை வகித்தார். கலெக்டர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார்.

ஓய்வூதியர்களிடம் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், ஒவ்வொருவரையும் கலெக்டர் ஜெயஸ்ரீ அழைத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் அழைத்து நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். சில மனுதாரர்கள் வராததால், "என்னப்பா இது மனு போடுறாங்க. ஆள் வரமாட்டீங்கராங்களே?' என்றார்.

அதேபோல், கூட்டத்துக்கு வராத அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறையினருக்கு கலெக்டர், "டோஸ்' விட்டார். தொடக்கக்கல்வி துறையில் தான் அதிகளவு மனுக்கள் நிலுவையில் இருந்தன. இதனால், வெறுப்படைந்த கலெக்டர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் (டி.இ.இ.ஓ.,) பொன்னம்பலத்தையும், திருவெறும்பூர் ஏ.இ.இ.ஓ., சண்முகத்தையும் கடிந்து கொண்டார்.

திருச்சி, "பெல்' காமராஜபுரம், எழில்நகரைச் சேர்ந்த காளியம்மாள், அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் சாரதா நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி, 2006ல் ஓய்வு பெற்றார். இவருக்கு, 28 ஆயிரத்து, 494 ரூபாய், "அரியர்ஸ்' தொகை வரவேண்டி உள்ளது.

இதுதொடர்பாக, திருவெறும்பூர் ஏ.இ.இ.ஓ., அலுவலகத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன் விண்ணப்பித்திருந்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, காளியம்மாள் சென்னை ஓய்வூதிய துணை இயக்குனர் அலுவலகத்துக்கு மனு அனுப்பினார்.

இந்த மனு குறித்து, ஏ.இ.இ.ஓ., சண்முகத்திடம், கலெக்டர் ஜெயஸ்ரீ விளக்கம் கேட்டார். "காளியம்மாளுக்கு, "அரியர்ஸ்' பெற தகுதியில்லை' என்று கூறினார். ஆனால், அனைத்து தகுதியும் இருப்பதாகவும், அதுதொடர்பான ஆவணங்கள், ஆதாரங்களை சமர்பித்துள்ளதாகவும் கூறிய காளியம்மாள், அதற்கான ஆவணங்களை கலெக்டரிடம் ஒப்படைத்தார்.

இதைப்பார்த்து கோபத்தின் உச்சிக்குச் சென்ற கலெக்டர் ஜெயஸ்ரீ, ""உங்களுக்கெல்லாம் மனிதாபிமானமே கிடையாதா? இன்றைக்கு பணியில் இருக்கும் நாம், நாளை, அவர்கள் (ஓய்வூதியர்) சீட்டுக்குச் செல்வோம் என்ற எண்ணத்தில் வேலை பாருங்கள். மூன்று ஆண்டுக்கும் மேலாக இழுத்தடித்துள்ளீர்கள். உங்கள் அலுவலகத்தில் தான் ஏராளமான மனுக்கள் நிலுவையில் உள்ளன. இன்று மாலைக்குள் இந்த பணியை முடித்துக்கொடுக்க வேண்டும்,'' என்றார்.

அருகே நின்ற, டி.இ.இ.ஓ., பொன்னம்பலத்திடம், ""ஏ.இ.இ.ஓ., சண்முகம் மீது ஏராளமான புகார்கள் உள்ளது. ஏன் இப்படி இழுத்தடிக்கிறார்? இதுவரை மூன்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளது. எதன்மீதும் உரிய நடவடிக்கை இல்லை. இவரை இரண்டு நாள் உடனடியாக, "சஸ்பெண்ட்' செய்யவும்,'' என்று உத்தரவிட்டார்.

இதைக்கேட்ட டி.இ.இ.ஓ.,வும், ஏ.இ.இ.ஓ.,வும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, கலெக்டரிடம், ஏ.இ.இ.ஓ., கெஞ்சியபடி, பரிதாபமாக நின்றார். அவரை டி.இ.இ.ஓ., பொன்னம்பலம், அழைத்துச்சென்றார். இதனால், ஓய்வூதிய குறைதீர் கூட்டத்துக்கு வந்த மற்ற அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

23 ஆண்டுகளாக உயராத கல்வி ஊக்கத்தொகை

பள்ளி கல்வித் துறையில், 1991 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு மாவட்டத்திற்கு 3 ஆயிரம் வரை தேர்வு எழுதும் மாணவர்களில், 50 மாணவர், 50 மாணவியர் என, 100 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர் களுக்கு 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு, ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது.

இத்திட்டம் துவங்கப்பட்டு 23 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது, 8ம் வகுப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை 14 லட்சமாக அதிகரித்துள்ளது. மாணவர்களின் பொருளாதார நிலையும் பல மடங்கு உயர்ந்து உள்ளது. பல ஆண்டுகள் கோரிக்கை விடுத்தும், இந்த ஊக்கத் தொகை மட்டும் இதுவரை உயர்த்தப்படவில்லை. கடந்த 1991ல், இத்தொகை பெற மாணவரின் பெற்றோர் வருவாய் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரமாக இருந்தது. தற்போது, ரூ.ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஊக்கத் தொகை மட்டும் மாற்றம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என, மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட தலைவர் முருகன் கூறியதாவது: தற்போது, 8ம் வகுப்பு படிப்போரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்த நிலையில் ஒரு மாவட்டத்திற்கு, குறைந்த பட்சம் 500 மாணவர்களை தேர்வு செய்து, உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி, வழங்க வேண்டும், என்றார்.

அகஇ - வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது TLM (BRC/CRC ஒன்றுக்கு) ரூ.200 வீதம், கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம், ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

அகஇ கணக்கு தலைப்பின் கீழ் சம்பளம் பெரும் ஆசிரியர்களுக்கு ஓர் நற்செய்தி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்கச் சொல்லிக் கருவூலத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையை" இரத்து செய்ததோடு முடக்கி வைக்கப்பட்ட நிலுவைச் சம்பளங்களையும் இன்றே வழங்க உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொறுப்பாளர்களும் ஈரோடு மாவட்டப் பொறுப்பாளர்களும் கொடுமுடி வட்டாரப் பொறுப்பாளர்களும் தொடர்ச்சியாக மாவட்டக் கருவூல அலுவலர், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், இயக்குநர், கருவூல ஆணையர் ஆகியோரை அணுகியும் முறையிட்டும் "பிச்சை எடுக்கும் போராட்டத்தை" அறிவித்தும், தொடர் முயற்சிகள் செய்தும் "பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பாணை வெளியிடப்படாத காரணத்தால் இம்மாதம் (ஆகஸ்ட் 2013) முதல் தமிழகம் முழுவதும் SSA கணக்குத் தலைப்பின் கீழ் (AD-101) ஊதியம் பெறும் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்கச் சொல்லிக் கருவூலத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையை" இரத்து செய்ததோடு முடக்கி வைக்கப்பட்ட நிலுவைச் சம்பளங்களையும் இன்றே (29.8.13) வழங்கவும் இனிமேல் எந்த ஒரு அரசாணையையும் எதிர்பாராமல் ஆசிரியர்களின் ஜீவாதாரமான, ஊதியப் பட்டியல்களுக்கு மறுப்புரையின்றி கடவாணை வழங்கவும் கருவூலத்துறை ஆணையாளர் அவர்களால் சார்நிலைக் கருவூலங்களுக்கு உத்தரவு பெறப்பட்டுள்ளது.

பள்ளி மூடப்பட்டாலும் ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் : ஐகோர்ட் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டம் கீழ் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர் சூசைமகேஷ். இவர் அங்கிருந்த செயிண்ட் மேரீஸ்தொடக்கப்பள்ளியில் (அரசு உதவி பெறும் பள்ளி) ஆசிரியராக 2005–ம் ஆண்டில் வேலையில் சேர்ந்தார்.

இந்த நிலையில் 2012–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்தப் பள்ளி மூடப்பட்டது. எனவே சூசைமகேஷை செண்பகராமன்பட்டத்துறையில் உள்ள பள்ளியில் சேர்க்கும்படி மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டார். ஆனால் அந்தப்பள்ளியில் காலியிடம் இல்லை என்பதால், அங்கு அவரை அந்தப்பள்ளி நிர்வாகம் சேர்க்க மறுத்துவிட்டது.

எனவே அவரை காலியிடம் உள்ள பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிக்கு, கன்னியாகுமரி மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அதிகாரி கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் ஐகோர்ட்டில் சூசைமகேஷ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பள்ளிக்கூடம் மூடப்பட் டதில் இருந்து இதுவரை எனக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் தரப்படவில்லை. அவற்றை தருவதற்கு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி டி.அரிபரந்தாமன் விசாரித்தார். ஆசிரியர் சூசைமகேசுக்கு இன்னும் 4 வாரங்களுக்குள் பாக்கிச்சம்பளம் மற்றும் சலுகை ஆகியவற்றை வழங்க வேண்டும். அவர் அடுத்த பள்ளியில் வேலைக்கு சேரும்வரை மாதாமாதம் அவருக்குள்ள சம்பளத்தை பள்ளிக்கல்வித்துறை வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்

நாடு முழுவதிலும் உள்ள 80 வயதை கடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதிய தொகை வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

அனைத்திந்திய சேவை விதிகளின் இறப்பு மற்றம் ஓய்வு பலன்கள் தொடர்பான பிரிவில் திருத்தங்களை கொண்டு வர அரசு பணியாளர் நலவாரியத்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி அனைத்திந்திய சேவை துறைகளைச் சேர்ந்த 80 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் அடிப்படை ஓய்வூதிய தொகையை விட கூடுதலாக 20 சதவீதம் ஓய்வூதிய தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூடுதல் ஓய்வூதிய தொகை ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை அதிகரிக்கப்பட உள்ளது. ஓய்வூதியதாரர் 85 வயதை கடக்கும் போது அவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதிய தொகை 30 சதவீதமாக அதிகரிக்கும். இதே போல் 90 வயதை கடக்கும் போது 40 சதவீதமும், 95 வயதை கடக்கும் போது 50 சதவீதமும் கூடுதல் ஓய்வூதிய தொகை வழங்கப்படும். ஓய்வூதியதாரர் 100 வயதை எட்டும் போது அவருக்கு வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதிய தொகை, அடிப்படை ஓய்வூதிய தொகையின்படி 100 சதவீதமாக்கப்படும்.

குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்த கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான மருத்துவ சலுகை தொகையும் கூடுதலாக்கப்படும் என அரசு ஊழியர்களுக்கான துறை தெரிவித்துள்ளது.

தொடக்கக் கல்வி - ஊதிய நிர்ணயம் - பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர், தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் - தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 4(3)ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு.