திருக்குறள்
22/09/2013
21/09/2013
தமிழ்நாட்டில் 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு - தமிழக அரசு ஆணை வெளியிடு
சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்ததற்கேற்ப தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிக் கூடங்களாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு
பிறப்பித்துள்ள ஆணை வருமாறு:-தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சரால் 15-5-2013 அன்று, உயர்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஓர் உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படாத நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி, மாநில நிதியில் இருந்து 2013-2014-ம் கல்வி ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 300 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார்.
இரட்டைப்பட்ட வழக்கு, மீண்டும் வருகிற வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது
தொடரும் இரட்டைப்பட்ட வழக்கு இன்று நீதியரசர்கள் ராஜேஷ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதலாவது அமர்வில் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்ட வழக்கு, இரட்டைப்பட்ட வழக்கின் சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் அவர்கள் வாதிட்டார். அவரது வாதம் காலை 11.55க்கு தொடங்கி பிற்பகல் 1.15வரை தொடர்ந்தது.
அதன்பின் நீதியரசர்கள் இவ்வழக்கை 26.9.2013 அன்று ஒத்தி வைத்து தீர்ப்பளித்தனர். எனவே இவ்வழக்கு வருகிற 26.9.2013, வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது
50 சதவீத அகவிலைப் படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப் படும் வாய்ப்பு இல்லை.
5 ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி அகவிலைப் படி 50 சதவீதத்தை தாண்டும் போது, 50 சதவீத அகவிலைப் படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப் பட வேண்டும் என பரிந்துரைத்தது. ஆனால் 6 ஆவது ஊதியக் குழுவில் அகவிலைப் படி 100 சதவீதத்தை தாண்டும் போது 25 சதவீதப் படிகள் உயர்த்தப் பட வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆகவே 50 சதவீத அகவிலைப் படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப் படும் வாய்ப்பு இல்லை.
No need to merge the dearness allowance with basic Pay at any stage - 6CPC Recommendation
As per the 6CPC recommendation accepted by the government, the Dearness Allowance supposed to be enhanced from 1st January of every year has to be paid with salary of month of March.
The 6 CPC was very much clear about two things;
first one is the formula for calculating the quantum of DA to be paid to central government employees and its frequency.
Second one is on Merger of 50% Dearness allowance with Basic pay by converting it as dearness Pay
It has been clearly told in 6 CPC recommendations under the Heading of Dearness Allowance, Chapter no 4.1…
4.1.18 ……This conversion, however, is not necessary in the revised structure being recommended where increments are payable as a percentage of the pay in the pay band and grade pay thereon and provision has been made for all allowances/benefits to be revised periodically linked to the increase in the price index. The Commission is, therefore, not recommending merger of dearness allowance with basic pay at any stage.
4.1.19 No real justification exists for revising DA once in 3 months. Accordingly, DA may continue to be sanctioned twice a year as on 1st January and 1st July payable with the salary of March and September respectively for administrative convenience with inflation neutralization being maintained at 100% at all levels.
20/09/2013
"எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, பள்ளிக்கூடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் வாங்கவும், கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டுமான வசதியை ஏற்படுத்தவும் ஒதுக்கீடு செய்யலாம்' என, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது..
பார்லிமென்ட் உறுப்பினர்கள், தங்கள் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள, ஒவ்வொரு எம்.பி.,க்கும், ஆண்டுதோறும், 5 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு எம்.பி.,யும், தன் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். லோக்சபா எம்.பி.,க்களுக்கு, அவர்கள் சார்ந்துள்ள தொகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு மட்டுமே பரிந்துரை செய்ய முடியும்.
ராஜ்ய சபா எம்.பி.,யாக இருந்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரிந்துரைக்கலாம். இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளில், எந்தெந்த பணிகளுக்கு, பரிந்துரை செய்யலாம் என்பது ஏற்கனவே வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், புதிதாக, பள்ளிக்கூடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலி போன்ற மரச்சாமான்களை வாங்க பரிந்துரை செய்யலாம். ஆரம்பப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளி வரை, மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில், மேஜை, நாற்காலிகள் வாங்க பரிந்துரை செய்யலாம். இந்த வகையில், ஆண்டொன்றுக்கு, 50 லட்சம் ரூபாய் அனுமதிக்கலாம். அதிலும் ஒரு பள்ளிக்கு, ஆயுட்கால அதிகபட்ச அளவு, 10 லட்சம் ரூபாய் வரை மட்டுமே அனுமதிக்க முடியும். அதே போல், கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டடம் போன்ற கட்டுமான வசதிகளை ஏற்படுத்த பரிந்துரை செய்யலாம். ஆனால், எம்.பி.,யோ, அவரது குடும்ப உறுப்பினர்களோ, அந்த சங்கத்தில் உறுப்பினர்களாகவோ, நிர்வாகிகளாகவோ இருக்கக் கூடாது என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், கேழ்வரகு-உளுந்து பர்பி-முதல்வர் அறிவிப்பு
பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில், சத்துணவு சாப்பிட்டும் எடை குறைவாக உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், கேழ்வரகு பர்பி, உளுந்து பர்பி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். குழந்தைகளுக்கு சத்துணவு தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 67 லட்சத்திற்கும் மேலான குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தினமும் சூடாக சமைத்த அரிசி சாதத்துடன், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டையுடன் சத்துணவு கொடுக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமைகளில், வேகவைத்த கறுப்பு கொண்டைக் கடலை, பச்சை பயறும், வெள்ளிக்கிழமைகளில் வேகவைத்த உருளைக்கிழங்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. வாரத்தில் 5 வேலை நாட்களிலும், முட்டை, முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கப்படுகிறது. கலவை சாதங்கள்கடந்த 30 ஆண்டுகளாக ஒரே வகையான உணவு வழங்கப்படுவதால், குழந்தைகள் சலிப்படைந்துள்ளனர். எனவே, அவர்களுக்கு புதிய வகையிலான, விதவிதமான கலவை சாதம், மசாலா முட்டை தினமும் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பரீட்சார்த்தமாக, அனைத்து மாவட்டங்களிலும், ஒரு வட்டாரத்தில் உள்ள சில பள்ளிக்கூடங்களில் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பரிசீலனை செய்து வருகிறார். குழந்தைகள் எடை குறைவுஏற்கனவே, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எடையை அவ்வப்போது சரி பார்க்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவின் பேரில், சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அதன்படி, தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் உள்ள குழந்தைகள் எடை பார்க்கப்பட்டனர். அப்போது, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி பள்ளிகளில் படிக்கும் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள், எடை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. கடலை மிட்டாய்முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இதுபோன்ற எடை குறைவான குழந்தைகளுக்கு புரதச்சத்து அதிகம் உள்ள உணவு வழங்க வேண்டும் என்றும், குறைந்த பட்சம் 250 கலோரி அளவு சத்து நிறைந்ததாக அது இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதன்பாடி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், கேழ்வரகு பர்பி, உளுந்து பர்பி ஆகியவை ஒவ்வொரு நாளும் வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டம் அடுத்த சில நாட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அங்கன்வாடி மையங்களில் இந்த பர்பி வழங்கப்படும். இதுகுறித்து அங்கன்வாடி அமைப்பாளர் ஒருவர் கூறியதாவது:- முதல்-அமைச்சருக்கு பாராட்டுமுதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், அமைச்சர் பா.வளர்மதி, அதிகாரிகளுடன் அங்கன்வாடி மையங்களுக்கு வந்து அடிக்கடி ஆய்வு நடத்துகிறார். அதை முதல்-அமைச்சரின் கவனத்திற்கும் எடுத்து செல்கிறார். அந்த வகையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிந்தையில் உதித்த திட்டம்தான் குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், கேழ்வரகு பர்பி, உளுந்து பர்பி வழங்கும் திட்டமாகும். இது குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாகும். இவ்வாறு அவர் கூறினார்
போலீஸ் கண்காணிப்பில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போலீஸ் கண்காணிப்பையும் மீறி,செப்., 25ல், சென்னையில் மறியலில் பங்கேற்போம்
அனைத்து மாவட்டங்களிலும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை, போலீசார் கண்காணிக்கின்றனர். மத்திய அரசு இடைநிலை ஆசிரியர் களுக்கு இணையாக மாநில இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து மாவட்ட அளவில் பல போராட்டங்களை நடத்தினர்.
இதன்தொடர்ச்சியாக செப்., 25ல், சென்னையில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, பலமாவட்டங்களில் இருந்து வாகனங்களில், சென்னை செல்ல ஆசிரியர்கள் முடிவு செய்திருந்தனர். அதே நேரம், மறியலில் பங்கேற்க தயாராகும் ஆசிரியர்களை, சென்னைக்குள் நுழைய விடாமல், அந்தந்த மாவட்டங்களில் முதல்நாள் தடுத்து நிறுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், சங்க நிர்வாகிகளை கண்காணிக்கும் பணியில் தற்போது போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சென்னையில் செப்.,25 மறியல் போராட்டத்திற்கு செல்ல பஸ்களில் மொத்தமாக "டிக்கெட்'கள் முன்பதிவு செய்திருந்தோம். ஏதோ காரணத்திற்காக அனைத்து முன்பதிவையும் பஸ் கம்பெனிகள் திடீரென ரத்து செய்து விட்டன. போலீஸ் கண்காணிப்பையும் மீறி, மறியலில் பங்கேற்போம், என்றார்.
தொடரும் இரட்டைப்பட்ட வழக்கு- மீண்டும் வருகிற 26.9.2013, வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது
தொடரும் இரட்டைப்பட்ட வழக்கு இன்று(20.9.2013) முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த வழக்கு இரட்டைப்பட்டம் சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் அவர்கள்வாதிட்டார். அவரது வாதம் காலை 11.55க்கு தொடங்கி பிற்பகல் 1.15வரை தொடர்ந்தது. அதன்பின்நீதியரசர்கள் இவ்வழக்கை 26.9.2013 அன்று ஒத்தி வைத்து தீர்ப்பளித்தனர். எனவே இவ்வழக்கு வருகிற 26.9.2013, வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது
லஞ்சம் வாங்கினால் மட்டுமல்ல… கொடுத்தாலும் தண்டனை உறுதி மத்திய அரசு பரிசீலனை
லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல லஞ்சம் கொடுப்பது கூட சட்ட விரோதமானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய சட்டத்திருத்தத்தின் படி லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமின்றி லஞ்சம் கொடுப்பவர்களையும் தண்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது சட்ட விரோதமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. லஞ்சம் வாங்குபவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் அதிகபட்சம் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. லஞ்சத்தை ஒழிக்க மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அன்னா ஹசாரே தலைமையிலான சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினார்கள். இதையடுத்து லஞ்ச தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்தார். அதன்படி அந்த சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த சட்ட திருத்தம் கடந்த மாதம் பாராளுமன்ற மேல் சபையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சட்டத்திருத்தத்தின் படி லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமின்றி லஞ்சம் கொடுப்பவர்களையும் தண்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. லஞ்சம் கொடுக்க முன் வருபவர்கள் தங்கள் சுய நலத்துக்காகவே பணம் கொடுக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கும் ஜெயில் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. சட்ட திருத்தம் மேலும் லஞ்சம் கொடுப்பவர்களும், வாங்குபவர்களுக்கான குறைந்த பட்ச தண்டனையை 6 மாதத்தில் இருந்து 3 ஆண்டுகளாக உயர்த்த பரிந்து ரைக்கப்பட்டுள்ளது. அது போல அதிகபட்ச தண்டனை காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகள் வரையிலான ஜெயில் தண்டனையாக மாற்ற திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்துக்கு நாடாளுமன்றமும், மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் கொடுத்துவிட்டால், இனி லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமல்ல கொடுப்பவர்களும் சிறை கம்பியை எண்ண வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)
