திருக்குறள்
02/10/2013
தொழில் வரி இன்று முதல் உயர்வு
தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில், இன்றுமுதல் (அக்.,1) தொழில் வரியை 35 சதவீதமாக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சீராய்வு செய்து, வரி நிர்ணயம் செய்யப்படும்
. இதற்குமுன் 1.10.2008ல் தொழில் வரி சீராய்வு செய்யப்பட்டது. தற்போது 25 சதவீதம் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி சீராய்வு அடிப்படையில், 1.10.2013 முதல் 25 சதவீதமாக இருந்த தொழில் வரி, 35 சதவீதமாக உயர்த்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி இயக்குனர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வரி உயர்வு தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றவும் உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் மாத டைரி
02-காந்தி ஜெயந்தி& "நேர்மை கடைகள்"44பள்ளிகளில் திறப்பு
02-08 -‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ (‘ஜாய் ஆப் கிவ்விங் வீக்’ )
14-விஜய தசமி
15-RLஅராபத்&உலக கைகழுவும் தினம்
16-பக்ரீத் பண்டிகை
31-ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்த கடைசி தேதி
02-08 -‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ (‘ஜாய் ஆப் கிவ்விங் வீக்’ )
05-உலக ஆசிரியர் தினம்
12-ஆசிரியர் குறைதீர் நாள்- DEEO
ஆசிரியர் குறைதீர் நாள்- AEEO
தொடக்கஆசிரியர்களுக்கு குறுவள மையம்
06, 20, 27-வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த சிறப்பு முகாம்கள்
உயர் தொடக்க வகுப்பு குறுவள மையம்
13-ஆயுத பூஜை&சரஸ்வதி பூஜை
14-விஜய தசமி
15-RLஅராபத்&உலக கைகழுவும் தினம்
16-பக்ரீத் பண்டிகை
31-ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்த கடைசி தேதி
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்
அனைத்து ஆசிரியர்களும், 2016 க்குள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டுமென, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டதால், தனியார்பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில், பள்ளிகளில் 10 ம் வகுப்பு வரை,தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், 2010 ஆக., 23 க்கு பிறகு, நியமனம் பெற்ற ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியதால், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், 2016 க்குள் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்களும்,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென, இயக்குனரகமும் உத்தரவிட்டது. இதனால், பல தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஏற்கனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சில ஆசிரியர்கள், அரசு பள்ளிக்கு சென்று விட்டனர். வருங்காலங்களிலும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் அரசு பணிக்கு தான் செல்வர் , தனியார் பள்ளியை விரும்ப மாட்டார்கள். இதனால், தனியார் பள்ளிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும்" என்றார்.
முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவு.-டி.ஆர்.பி., அவசர ஆலோசனை
முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் பிழையான தமிழ்க் கேள்வித் தாளில் மறு தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த 21.7.2013ல் நடந்தஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் தேர்வை மாநிலம் முழுதும் 32 ஆயிரம் பேர் எழுதினர். இதில் சுமார் 8 ஆயிரம் பேர் வரை குரூப் பி-யில் பிழையான கேள்வித் தாள் இருந்ததாகவும், அதில் 40 மதிப்பெண்கள் வரை இருந்த பிழையான கேள்வித் தாளால் தங்கள் வாய்ப்பு பறிபோனதாகவும் கூறி, இதற்காக மறு தேர்வு நடத்த வேண்டும், அல்லது முழு மதிப்பெண் இதற்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை கோ.புதூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.,இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் நடைபெற்று வந்தது.இதில், மறு தேர்வு நடத்த செவ்வாய்க் கிழமை இன்று நீதிபதி உத்தரவிட்டார்.அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் சோமையாஜி,மறு தேர்வு நடத்த கால அவகாசத்துடன் நேரம் அதிகமாகும் என்பதால், 40 மதிப்பெண்களை நீக்கி விட்டு மீதத்துக்கு கணக்கில் கொள்ளலாம் என்றும், அல்லது40 மதிப்பெண்களை போனஸ் மதிப்பெண்ணாகக் கொடுக்கலாம் என்றும் ஆலோசனை கூறினார். ஆனால் இந்த ஆலோசனைகளை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.4 மாதிரி பிரிவு வினாத்தாள் தயாரிக்கப்பட்டது, இதில்1 பிரிவில் மட்டுமே பிழையான வினாத்தாள் இருந்துள்ளது. இந்த வினாத்தாள் அனைத்துமே பிழை என்றால் அரசின் பரிந்துரைகளை ஏற்கலாம் ஆனால் ஒருபிரிவு மாணவர்களுக்கு மட்டுமே என்பதால் பாதிப்புகணக்கிடப் படும்.எனவே, இந்த உத்தரவு கிடைத்த 6 வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்த வேண்டும்.இதற்காக, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய நுழைவுச் சீட்டையே பயன்படுத்திக் கொள்ளலாம்; அல்லது அதனை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய விண்ணப்பமும் பெறத் தேவையில்லை என்றார் நீதிபதி.
முதுகலை தமிழ் தேர்வு ரத்து -டி.ஆர்.பி., அவசர ஆலோசனை
முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து,உயர்நீதிமன்றம்,மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து,டி.ஆர்.பி., அதிகாரிகள்,இன்று (அக் 2)
காலை ஆலோசனை நடத்துகின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல்,போட்டித்தேர்வை நடத்தியது. 1.67 லட்சம் பேர், தேர்வை எழுதினர்.
விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியலை வெளியிட,டி.ஆர்.பி., தயாரான நிலையில்,தமிழ்பாடகேள்வித்தாளில, 47 கேள்விகள், பிழையுடன் இருந்ததாககூறி, மதுரையைச் சேர்ந்த தேர்வர், உயர் நீதிமன்றம்,மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்,நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சர்ச்சைக்குரிய தமிழ் பாட தேர்வை, ரத்து செய்து, புதிதாக, வேறு தேர்வை நடத்தகோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து, கோர்ட் தீர்ப்பின்படி, தமிழ் பாடதேர்வர்களுக்கு, புதிய தேர்வை நடத்துவதா, அல்லது,மேல் முறையீடு செய்வதா என்பது குறித்து விவாதிக்க,டி.ஆர்.பி., அதிகாரிகள், ஆலோசனை இன்று ( அக் 2)காலை நடத்துகின்றனர். இந்த விவகாரம் குறித்து, தமிழக அரசின் ஆலோசனையை பெற்று, அதனடிப்படையில், முடிவு எடுக்கப்படும் என,துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.ஆர்.பி., எந்தமுடிவை எடுத்தாலும், முதுகலை தமிழ் ஆசிரியர்பணி நியமனம், தள்ளிப்போகும். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பாதிக்காத வகையில்,காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும்,தற்போதையசூழல் காரணமாக, தமிழ் ஆசிரியர் நியமனம்,தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது
பள்ளிகளுக்கான கழிப்பறை பராமரிப்பு நிதி: ஊராட்சியில் தொடக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
"பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்கும் பணியை, ஊராட்சி நிதியில் இருந்து மேற்கொள்ள வேண்டும்" என தொடக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் இளங்கோவன், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள கழிப்பறை பழுதடைந்திருந்தால், அனைவருக்கும் கல்வி இயக்கக திட்ட நிதியை பயன்படுத்தி, சீர் செய்ய வேண்டும். கழிப்பறைகளை பயன்படுத்துவதன் அவசியத்தை, மாணவர்களிடையே வலியுறுத்தி கூற வேண்டும். கழிப்பறைகளை, தினமும் சுத்தம் செய்து, பராமரிக்கும் பணிக்கான செலவை, ஊராட்சி நிதியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
தலைமை ஆசிரியர்கள், ஊராட்சித் தலைவரை அணுகி, உரிய நிதியை பெற்று, செலவழிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் உள்ள கழிப்பறைகள், முழுமையான அளவில் பயன்பாட்டில் இருப்பதை, வரும், 15ம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, இயக்குனர் கூறியுள்ளார்.
குக்கிராம பள்ளிகளுக்கு செல்லாத ஆசிரியரை கண்காணிக்க குழு அமைக்க உத்தரவ
தமிழகத்தில் குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் முறையாக செல்கிறார்களா என்பதை வட்டார அளவில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிகளில் விடுப்பு விண்ணப்பம் அளிக்காமல் பணிக்கு வராமல் இருப்பதை கண்டறிந்து தடுப்பதற்காக வட்டார அளவில் குழுக்களை ஏற்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தி மேற்பார்வையிட வேண்டும். ஒவ்வொரு மாவட்ட தொடக்க கல்வி அலுவலரும், அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலரும் இணைந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் வட்டார அளவில் பஸ் வசதி இல்லாத கிராம பகுதிகளில் உள்ள பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து ஒரே நாளில் உதவி தொடக்க கல்வி அலுவலர், மேற்பார்வையாளர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் ஆகியோர் பார்வையிட்டு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பணிக்கு வருகிறார்களா என்பதை கண்காணித்து அதன் அடிப்படையில் உடனடியாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலையில் ஒரு பள்ளி, மாலையில் ஒரு பள்ளியை ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் இதுபோன்று திடீர் பார்வைகளை திட்டமிட்டு மேற்கொண்டு வாராந்திர அறிக்கையை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவற்றை தொகுத்து மாதாந்திர அறிக்கையாக தொடக்க கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு போர்டு எக்சாம் பீவர் ஒன்பதாம் வகுப்பிலேயே துவங்கிவிடும். கண்ணில் விளக்கெண்ணை யை ஊற்றிக் கொண்டு 24 மணி நேரமும் படிக்க வேண்டும் என பார்ப்பவரெல்லாம் வெறுப்பேற்றும் அளவுக்கு அட்வைஸ் சொல்வார்கள். இனி அந்த மாதிரியாக மாணவர்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவக் கல்வி முறை நடப்பில் உள்ளது. அடுத்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை ஆய்வுகள் மூலம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் வகுத்து வருகிறது.
மத்திய பாடத் திட்டத்தில் உள்ளது போல் மாணவர்களின் கற்றல் திறனுடன் அவர்களது தனித்திறன்களையும் வளர்க்கும் விதமாக பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறைகள் முப்பருவக் கல்வி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடங்களை மூன்று பருவங்களாக பிரித்து தேர்வு நடத்துவதால் மாணவர்கள் ஆழமாக கற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பாடம் சார்ந்த விஷயங்களை செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்தும்போது தனித்திறன் மேம்பாட்டுக்கும் வழிவகை செய்யப்படுகிறது.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், ‘மாணவர்களின் பாடச்சுமை குறைகிறது. இதுவரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை காரணம் காட்டி வணிகம் செய்து வந்த தனியார் பள்ளிகளின் நிலை மாறும். டியூஷன்களுக்கு என தனியாக செலவளிக்க வேண்டியதில்லை. பத்தாம் வகுப்பு என்றாலே சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கூட தொலைத்து விட்டு சிறை படுத்தப்பட்ட குழந்தைகள் அனுபவித்த கொடுமைகள் மாறும்.
பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டாலும் இதன் மதிப்பீட்டு முறை சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தில் உள்ளபடி மூன்று பருவத் தேர்வுகளின் ‘குமுலேட்டிவ்’ மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பிடல் இருக்குமா? மதிப்பீட்டின் போது ஒன்பதாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்படுமா? பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி முறை நடைமுறைக்கு வரும் போது அதன் மதிப்பிடல் முறை குறித்து நிறைய கேள்விகள் இருக்கிறது. முப்பருவ கல்வித் திட்டத்தில் பார்மேட்டிவ் அசஸ்மெண்ட்டுக்கு வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே மாணவனின் புரிதல் திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டும்.
கற்றல் முடித்த பின்னர் பாடங்களை முழுமையாக அவர்கள் புரிந்து கொண்டதை வெளிப்படுத்தும் வகையில் சம்மேட்டிவ் அசஸ்மெண்ட்டில் 60 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வை எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுமா? மத்திய பாடத்திட்டத்தில் மாணவர்களின் பிராப்ளம் சால்விங் திறனை மேம்படுத்த தனிப்பட்ட முறையில் கேள்விகள் கொடுக்கப்பட்டு தீர்வு காண முயல்கின்றனர். பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் அடுத்ததாக 11ம் வகுப்பில் படிப்பை தொடருகின்றனர்.
அந்த வகுப்பிலும் இம்முறை அமல்படுத்தப்படுமா? ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் முதல் பருவத் தேர்வுகளை முடித்து விட்டு அடுத்த பருவத் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் அடுத்த ஆண்டு கற்றல் மற்றும் மதிப்பீடு இரண்டும் எப்படி இருக்கும் என்ற கேள்விகள் ஆசிரியர் மாணவர், இருவருக்குள்ளும் உள்ளது. விரைவில் பள்ளிக் கல்வித் துறை இது போன்ற சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.
மாணவர்களுக்கு சுதந்திரமாக சிந்திக்க நேரம் கிடைக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள். மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘கல்வியாண்டில் 210 வேலை நாட்கள் மூன்று செமஸ்டருக்கு 70+70+70 நாட்களாகப் பிரிக்கப்படும். படிக்க வேண்டிய பாடங்கள் குறைவாக இருக்கும். பாடம் தொடர்பான தகவல்களை சேகரித்தல், அவற்றை புரிதல், புரிந்து கொண்ட அறிவை செயல்படுத்திப் பார்த்தல், சரியா, தவறா என சோதித்து அறிதல், அவ்வாறு புரிந்து கொண்ட விஷயத்தில் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி புதுமை செய்தல், அந்த விஷயத்தை மெருகேற்றுதல் என கற்றல் எனும் நிகழ்வில் ஆறு படிநிலைகளில் மாணவர்களின் அறிவு திறனாக மாற்றப்படுகிறது.
மாணவர்கள் தங்களது பிரச்னை மற்றும் சமூகம் சார்ந்து சிந்திப்பதற்கான வாய்ப்பு அதிகம். வளர் இளம் பருவத்தில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது உடல் சார்ந்த மாற்றங்கள், உள்ளம் சார்ந்த மாற்றங்களையும் புரிந்து கொள்ள முடியும். அதிகபட்ச டென்சனால் மன அழுத்தத்துக்கு ஆளாவது மற்றும் மதிப்பெண் குறைந்ததற்காக தற்கொலை செய்து கொள்ளும் போக்கும் தடுக்கப்படும். கற்றலில் சிரமப்படும் குழந்தைகள், தனித்திறனில் அதிக ஆர்வம் உள்ள மாணவர்கள் இம்முறையில் ஆர்வத்துடன் படிக்க வாய்ப்பு கிடைக்கும். பள்ளிக்கே வர பிடிக்காத குழந்தைகள் கூட பாடத்தை விரும்பும் நிலை உருவாகும்” என்றனர்.
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது
தமிழகம் முழுவதும் 2014-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், மாநகராட்சி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தியாக கூடியவர்கள் பெயரை சேர்க்கலாம். பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்க படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8, இடம் பெயர்ந்தவர்கள் படிவம் 8ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து தகுந்த ஆவணத்துடன் அந்தந்த மண்டல அலுவலகங்கள் மற்றும் வாக்குசாவடி மையங்களில் வரும் 31ம் தேதி வரை வழங்கலாம். மேலும், சென்னையில் 45 இண்டர்நெட் மையங்களுடன் மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. அங்கு சென்று திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். இண்டர்நெட் மையத்துக்கு செல்லும் போது பாஸ்போர்ட் புகைப்படம், வயது சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவை கொண்டு செல்ல வேண்டும். வீடுகளுக்கு அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது பதிவு செய்துள்ள சான்றிதழ்களை காண்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 6, 20, 27 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இதற்காக பகுதி வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி வெளியிடப்படும். வாக்காளர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 29,511 அதிகரித்துள்ளது.
சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவி பெறுவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் வாழும் மதவழி சிறுபான்மையின மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்புக்கு உதவித் தொகை பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, இதுவரை கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்காத தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு www.momascholarship.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து கல்வி நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சேலம் மாம்பழம், திண்டுக்கல் பூட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உட்பட 7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு
சேலம் மாம்பழம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திண்டுக்கல் பூட்டு உட்பட தமிழகதத்தில் மேலும் 7 பொருட்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கவுள்ளது.தஞ்சையில் அறிவுசார் சொத்துரிமை வக்கீல் சங்க தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற அரசு கூடுதல் வக்கீலுமான சஞ்சய் காந்தி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புவிசார் குறியீட்டு பொருள்கள் சட்டம் 2003ல் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கைவினை கலைஞர்களை பாதுகாக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நம் நாட்டில் உள்ள தனிச் சிறப்பு, தனி வரலாறு, தயாரிப்பு முறை, தனி அடை யாளம் காண்பதற்கான இடம் ஆகியவற்றை கொண் டுள்ள பொருட்கள் புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டால் அப்பெயரை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது.உதாரணமாக இந்த சட்டத்தின்கீழ் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தஞ்சாவூரில் பாரம்பரியமாக தயாரித்து வரும் கைவினை கலைஞர்கள் பதிவு செய்தனர். இந்த பெயரை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது. தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், மதுரை சுங்கடி சேலை, சேலம் பட்டு சேலை, ஆரணி பட்டு சேலை, கோவை கோரா காட்டன் சேலை, தஞ்சாவூர் ஓவியம், தலை யாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, பத்தமடை பாய், தோடா மக்களின் பூ வேலைப்பாடு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் மேலும் பல பொருட்களை பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 7 பொருட்கள் என்னென்ன? *சேலம் மாம்பழம் *ஓசூர் ரோஜா *ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா *திண்டுக்கல் பூட்டு *ராஜபாளையம் நாய் *காரைக்குடி கண்டாங்கி சேலை *கோடாலிகருப்பூர் சேலை இந்த 7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவு கிடைத்துவிடும்.
பத்து ஆண்டுகளில் தமிழ் விக்கிப்பீடியா கண்ட வளர்ச்சி
விக்கிபீடியாவின் தமிழ் மொழிப் பிரிவு தொடங்கப்பட்டு தற்போது பத்து ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சென்னையின் அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்று ஞாயிறன்று நடந்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)