திருக்குறள்

16/10/2013

இயலாக்குழந்தைகளுக்கு பால், பழம், பிஸ்கட் வழங்க "ஸ்பான்சர்" தேடும் அதிகாரிகள்

மதுரை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) நிதிக்குறைப்பால் அரசு பகல் நேர பராமரிப்பு மையங்களில், இயலாக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பால், பழம், பிஸ்கட்கள் ஆகிய ஊட்டச்சத்து உணவுகள் இந்தாண்டு நிறுத்தப்பட்டன.

மாவட்டத்தில் 15 கல்வி ஒன்றியங்களில் இம்மையங்கள் செயல்படுகின்றன. இங்கு 6 முதல் 18 வயது வரை 300 இயலாக்குழந்தைகள் பகல் நேரத்தில் தங்கி படிக்கின்றனர். இதற்கு, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படுகிறது.

இதில், மதிய உணவுடன் ஊட்டச்சத்துக்காக, குழந்தைகளுக்கு இருவேளை 150 மி., பால், ஹார்லிக்ஸ் அல்லது பூஸ்ட், பழங்கள், பிஸ்கட்கள் வழங்கப்பட்டன. மேலும், வீட்டில் இருந்து மையத்திற்கு குழந்தைகளை அழைத்துவர வாகன வாடகையாக, ஒரு மையத்திற்கு ரூ.4,300 வழங்கப்பட்டன.

மாநிலம் முழுவதும் இந்தாண்டு எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்கு, மத்திய அரசு வழங்கும் நிதி குறைக்கப்பட்டது. இதனால், சிக்கன நடவடிக்கையாக இம்மையங்களுக்கும் வழங்கப்பட்டு வந்த பால், பழம், பிஸ்கட்டுகள் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டன.

மேலும், இத்திட்டத்தில் வழங்கப்பட்ட சத்துணவு, சீருடைகளும் நிறுத்தப்பட்டு, மாநில அரசின் மதிய உணவும், சீருடையும் வழங்கப்படுகிறது. இதனால், இயலாக்குழந்தைகள் பரிதவிப்பில் உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மைய பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள், நிறுவனங்களில் இருந்து உதவி பெற்று, பால், பழங்கள், பிஸ்கட் வழங்குகின்றனர். நல்ல உள்ளம் படைத்தவர்கள் இக்குழந்தைகளுக்கு உதவி செய்ய முன் வரலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறந்த பள்ளிகள் தேர்வுப் பட்டியல் வெளியாவதில் தாமதம்: காத்திருக்கும் தலைமையாசிரியர்கள்

மாநிலம் முழுவதும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறந்த பள்ளிகளுக்கான தேர்வு பட்டியல் வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருவதாக பள்ளி தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என்ற பிரிவுகளில் மாவட்டம் வாரியாக நான்கு சிறந்த அரசு பள்ளிகளை தேர்வு செய்து ரொக்கப்பரிசாக ரூபாய் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நடப்பு கல்வியாண்டு முதல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ஒரு மாவட்டத்தில் தேர்வு செய்யப்படும் நான்கு பள்ளிகளுக்கு 25 ஆயிரம், 50 ஆயிரம், 75 ஆயிரம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும்.

மாநிலம் முழுவதும் 2.5லட்சம் வீதம் 32 மாவட்டங்களுக்கு 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட பள்ளிகளின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்திக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து மாவட்டத்திலும் பள்ளி வளாக தூய்மை, மாணவர்கள் சேர்க்கை, கட்டமைப்பு வசதிகள், பொதுத்தேர்வுகளில் பெற்ற தேர்ச்சி விகிதம், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகள், விளையாட்டு, பிற தனித்திறன் போட்டிகளில் பெற்ற வெற்றிகள் என அரசின் விதிமுறைகளின் படி அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கல்வி அதிகாரிகளை கொண்ட சிறப்புக் குழு பள்ளிகளை ஆராய்ந்து தேர்வு செய்தது.

கோவை மாவட்டத்தில் ஜூலை மாதம் இதற்கான ஆய்வுப்பணிகள் ஒவ்வொரு பள்ளியிலும் நடத்தப்பட்டு சிறந்த நான்கு பள்ளிகள் தேர்வு செய்து மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பின், ஆய்வு முடிவில் தேர்வு பெற்ற பள்ளிகளின் பெயர்கள், விபரங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டன. இதே போன்று அனைத்து மாவட்டத்திலும் சிறந்த பள்ளிகளின் பெயர்கள் தலைமை அலுவலக்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது: "ஜூலை இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிறந்த பள்ளிகள் பெயர்கள் வெளியிட்டு அதற்கான ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது, பள்ளிகள் தேர்வு செய்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் பெயர் பட்டியல் வெளியிடாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

ஒவ்வொரு முறையும் நல்ல திட்டங்களை அரசு அறிவித்தாலும் அதை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் பயனில்லாமல் போகிறது. மேலும், சிறந்த பள்ளியில் எங்கள் பள்ளியின் பெயர் இடம் பெறாதா என்ற ஏக்கத்தில் அனைத்து தலைமையாசிரியர்களும் காத்திருக்கிறோம்.

உடனடியாக பெயர் பட்டியலை வெளியிட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்." இவ்வாறு, தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

8ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் திட்டத்தை மறுபரிசீலிக்க கோரிக்கை

கட்டாய கல்வி சட்டத்தின்கீழ், 8ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி "அனைவரும் பாஸ்" என்ற திடத்திற்கு, பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், அது பரிசீலனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

ஹரியானா மாநில கல்வி அமைச்சர் கீதா புக்கலின் தலைமையிலான கல்விக்கான தேசிய ஆலோசனை வாரியத்தின் துணை கமிட்டி, இதுதொடர்பான சிக்கலை ஆராய்ந்து வருகிறது மற்றும் இந்த கமிட்டி, அக்டோபர் 23ம் தேதி தனது அறிக்கையை மனிதவள அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது. மேலும், இந்தக் கமிட்டியானது, அனைவரும் பாஸ் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நாடாளுமன்ற பேனலையும் சந்திக்கவுள்ளது.

பல மாநிலங்கள் இந்த "அனைவரும் பாஸ்" திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏனெனில், 9ம் வகுப்புவரை எந்த சிக்கலுமின்றியும், கடின உழைப்பின்றியும் கடந்துவரும் மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை முதன்முதலாக எதிர்கொள்ளும்போது கடும் நெருக்கடியை சந்திக்கின்றனர். இதனால், அவர்களின் நிலை மட்டுமின்றி, ஆசிரியர்களின் நிலைமையும் சிக்கலுக்கு உள்ளாகிறது என்று இந்த அம்சத்தை எதிர்ப்பவர்கள் வாதிடுகிறார்கள்.

மத்திய மனிதவள இணையமைச்சர், இந்த கமிட்டியின் அறிக்கையை, அடுத்த கூட்டத்திற்கு முன்னதாகவே சமர்ப்பித்து விடுமாறு, ஹரியானா அமைச்சர் புக்கலிடம் கூறியுள்ளார். ஏனெனில், இதன்மூலம் அடுத்து நடைபெறும் கூட்டத்தில் இதைப்பற்றி தெளிவாக விவாதிக்க முடியும் என்பதால் இவ்வாறு அறிவுறுத்தப்படுவதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்வே இல்லாத இந்த "அனைவரும் பாஸ்" திட்டம், மாணவர்களின் சுய திருப்தியை பாதிப்பதோடல்லாமல், ஆசிரியர்களின் திறனையும் பாதிக்கிறது என்பதால், இத்திட்டத்தை மறுஆய்வு செய்யுமாறு, மத்திய மனிதவள அமைச்சகத்தை இந்தக் கமிட்டி கேட்டுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

14/10/2013

பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்

தொழில்நுட்பம் வளர்ந்து பல்வேறு சாதனங்களை படைத்து வருகிறது. கல்வித்துறையிலும் பல்வேறு வழிமுறைகளில் கணினியும், அதுசார்ந்தசாதனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கணினிக்கு அடுத்த தற்பொழுது பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் டேப்ளட் பி.சி கள், கையடக்கத் தொலைபேசியான ஆண்ட்ராய்ட் மொபைல்கள் போன்றவற்றிற்கும் கல்வித் தொடர்பான புதிய அப்ளிகேஷன்கள் வரத்துவங்கியுள்ளன.

Ntional Council of Educational Research and Training என்ற அமைப்பின் கீழ் வரும் பள்ளிப் பாடப் புத்தகங்கள் (ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை) அனைத்தும் புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனில் வெளியிடப்பட்டுள்ளது.

NCERT-android-App-for-school-students-1to-12

என்.சி.ஆர்.டி அமைப்பின் கீழ் வரும் அனைத்து புத்தகங்களையும் இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் மூலம் மாணவர்கள் படிக்கலாம்.


பயன்மிக்க இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய:

Download NCERT App for school students
android apps for school students, ncert android apps, apps for ncert school students, smartphone apps for students, ncert apps for tablet pc, ncert apk for smartphone, ncert apps for computer, ncert app for mini laptop.

அரசு துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 15/10/2013 கடைசி நாள்.துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் & CODE

அரசு துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 15/10/2013 கடைசி நாள்.



துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் & CODE


இடைநிலை ஆசிரியர்கள்
1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without books)
2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
(Relating to Elementary Schools) (Without Books)
3. 119 - Deputy Inspector’s Test
Educational Statistics (With Books).
4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).


பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).


முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).


மாவட்டக்கல்வி அலுவலர்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).

புதிய மருத்துவ காப்பீடு சம்பந்தமான புகார்களை தெரிவிப்பது தொடர்பான அலுவலர்களை மாற்றி அரசாணை வெளியீடு

ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதி! ! ! !

ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ரேஷன் கார்டுக ள் ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாற்றப்பட உள்ளன. 
பொதுமக்கள் நலன் கருதி ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், சிவில் சப்ளைஸ் துறை சார்பில் http://www.consumer.tn.gov.in/என்ற பெயரில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் ‘கார்டு புதுப்பித்தல் 2012’ என்ற பகுதிக்கு சென்று ரேஷன் கார்டின் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு அட்டையின் நிறம், குடும்பத்தில் சேர்க்கப்ப ட வேண்டியவர், நீக்கப்பட வேண்டியவர், சிலிண்டர்கள் விவரம் போன்ற தகவல்களோடு, தொலைபேசி எண் போன்ற விவரங்களையும் இணைய தளத்தில் பூர்த்தி பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின்னர், ‘கமெண்ட்ஸ் என்ன?’ என்ற கேள்வி வரும். விருப்பம் இருந்தால் கமெண்ட்ஸ் எழுதலால். இல்லாவிட்டால், ‘இல்லை’ என்று எழுதி, ‘சப்மிட்’ செய்தால் சில நொடிகளிலேயே நமது ரேஷன் கார்டு புதுப்பிக்கப்பட்டு, துணை ஆணையர் கையெழுத்துடன் இணையதளத்தில் ரசீது வருகிறது. இந்த ரசீதை கார்டின் பின்பக்கத்தில் ஒட்டிக் கொள்ள வேண்டும். அவரவர் பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைக்கு சென்று, ஆன்லைன் பதிவு விவரங்களை எடுத்துச் சொல்லி கார்டில் கையெழுத்து மற்றும் சீல் பெற்றுக் கொள்ள வேண்டும். வேலைப் பளு, குடும்ப சூழ்நிலை காரணமாக பலர் தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ள நேரம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முறை மூலம் ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்கப்பட்டு ரசீதும் கிடைத்துவிடுவதால் மக்கள் இந்த முறையை பெரிதும் வரவேற்கின்றனர்.
ONLINE RENEWAL OF RATION CARDS IN TAMILNADU  http://www.consumer.tn.gov.in/

இரட்டைப்பட்டம் வழக்கு சார்பான 24.10.2013 அன்றைய தினத்திற்கு ஒத்தி வைப்பு

இன்று (11.10.2013) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் 38வது வழக்காக பட்டியலிடப்பட்ட இந்த வழக்கு தலைமை நீதியரசர் இராஜேஷ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சுந்தரேஷ் முன்னிலையில் முற்பகல் 11.45க்கு விசாரணைக்கு வந்தது. இதில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் திரு.பிரகாஷ் அவர்கள் இதுவரை இவ்வழக்கை விசாரித்த நீதியரசர் சத்தியநாரயணன் அவர்கள் இல்லாத நிலையில் இந்த வழக்கில் வாதாட இயலாது எனவும், எனவே மறு தேதி வேண்டும் எனவும் கோரினார்.எனவே நீதியரசர்கள் வருகிற 24.10.2013 வியாழக்கிழமை ஒத்தி வைத்தனர். இது பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. விரைவில் இவ்வழக்கு நிறைவு பெற வேண்டுகிறோம்.

"சைபர் கிரைம்" குறித்து 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

"சைபர் கிரைம்" எனப்படும், இணையவழி குற்றங்களில் இருந்து, மாணவர்களை பாதுகாப்பது குறித்து, 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்ககமும், மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனமும் ஏற்பாடு செய்துள்ளது.

ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சமுதாய விழிப்புணர்வு குறித்தும், "சைபர் கிரைம்" நடவடிக்கைகளில் இருந்து, மாணவர்களை பாதுகாப்பது குறித்தும், 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கு, படிப்படியாக பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளது. முதல் கட்டமாக, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான, 120 ஆசிரியர்களுக்கு, சென்னையில், நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

நாளை, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான, 120 ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர் கல்வி நிறுவன பேராசிரியர்கள், பல்வேறு துறைகள் சார்ந்த நிபுணர்களைக்கொண்டு, இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியைப் பெறும் ஆசிரியர், மாவட்டங்களுக்கு சென்று, பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர். இப்படியே, 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கும், பயிற்சி அளிக்கப்படும்.

பின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்துவர். "சைபர் கிரைம்" குறித்து, டி.எஸ்.பி., வெங்கடாசலபதி, நேற்று, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குனர், கண்ணப்பன் கூறுகையில், "இணையதளத்தை, ஆக்கப்பூர்வமான முறையில், எப்படி பயன்படுத்துவது, மொபைல் போன்களை, எந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டும், இணையதள ஆபத்துகளில் இருந்து, சிக்கிக்கொள்ளாமல் இருப்பது எப்படி என்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து, பயிற்சி அளிக்கப்படுகிறது" என்றார்.

தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தேர்வுநிலை / சிறப்புநிலை பணிக்கு 3% கூடுதல் ஊதியம் வழங்கிய உத்தரவிற்கு தெளிவுரை வழங்கி தமிழக அரசு உத்தரவு

த.அ.உ.ச - D.T.ED + B.A(TAMIL ) & B.LIT + தமிழ் பண்டிட் & D.T.ED + B.LIT என அனைத்திற்கும் B.Ed படிப்பு கட்டாயம் படித்திருக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

05/10/2013

SSA-2013-2014 ஆம் ஆண்டிற்கான எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலுக்கான அறிவுரைகள்

இரட்டைப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை வருகிற திங்கட்கிழமை வருகிறது

07.10.2013 அன்று இரட்டைப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலாவது அமர்வில் விசாரணை வரிசை பட்டியல் எண் 28வதாக வழக்கு விசாரணைக்கு வருகிறது. சென்ற முறை இரட்டைப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது போதிய நேரமின்மை காரணமாக அனைத்து
தரப்பும் ஒப்புக்கொண்டதால், நீதிபதிகள் 07.10.2013 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. வருகிற 07.10.2013 அன்று இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு முடிவு பெரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசியாவைப் போல் தமிழகத்திலும் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் வழங்க வேண்டும்

"மலேசியாவைப் போல் தமிழகத்திலும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தங்களுடன் திருக்குறளை வழங்க வேண்டும்" என, திருக்குறள் பேரவை பழனியப்பன் கூறினார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: "மலேசியா நாட்டில் மலாய் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை அந்த நாட்டின் அரசு மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு விலையில்லா பொருள்களையும், பாடநூல்களையும் அரசு வழங்குகிறது.

இதுபோல வரும் கல்வியாண்டில் நல்ல உரையாசிரியர்களுடன் கூடிய திருக்குறளை முதல் கட்டமாக, ஐந்து மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க வேண்டும்." இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஒரே நொடியில் அறிய ஆன்லைன் வசதி அரசு தேர்வுகள் இயக்குனர் கே.தேவராஜன் தெரிவித்தார்.

கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஒரே நொடியில் அறிந்திட ஆன்லைன் வசதியை அரசு தேர்வுத்துறை செயல்படுத்த இருக்கிறது. இதுவரை 2 கோடி பழைய சான்றிதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன.

சான்றிதழ் உண்மையானதுதானா?

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் உண்மையானவையா (ஜென் யூனஸ்) என்பதை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்க ளிடமிருந்து அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பப்படும்.

அந்த சான்றிதழ் நகலை தன்வசம் உள்ள ஆவணங்களுடன் ஒப்பிட்டு தேர்வுத்துறை ஆராய்ந்து அறிக்கை அனுப்பும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சில மாணவர்கள் போலி பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து என்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தது இத்தகைய ஆய்வின் மூலம்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

காலதாமதம்

ஒருவர் அரசு பணியிலோ அல்லது ஆசிரியர் பணியிலோ சேரும்போது கல்வித்தகுதிக்கேற்ப அவரது எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, இடைநிலை ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்கள் தேர்வுத் துறைக்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும். இதைப்போல, பட்டப் படிப்பு சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்படும்.

ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 20 லட்சம் பேர் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, சிறப்பாசிரியர் பயிற்சி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடிக்கிறார்கள். அவர்களின் சான்றிதழ்களை ஆவணங்களுடன் சரிபார்த்து உண்மைத்தன்மையை உறுதி செய்ய தேர்வுத் துறைக்கு அதிக காலம் பிடிக்கிறது.

நொடியில் சரிபார்க்க ஆன்லைன் வசதி

சான்றிதழ் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ஆய்வு செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. இதனால் அதிக காலதாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.

இதற்கிடையே, அரசு மற்றும் ஆசிரியர் பணியில் சேருவோரின் சான்றிதழ்களையும் சரிபார்த்து அனுப்ப வேண்டும்.இதையெல் லாம் கருத்தில் கொண்டு கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன் மையை மிக விரைவாக சரிபார்க்கும் வகையில் ஆன்லைன் வசதி திட்டத்தை தேர்வுத் துறை கொண்டுவர உள்ளது.

இதன்படி, அனைத்து கல்விச்சான்றிதழ்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஒரே நொடியில் சான்றிதழின் உண்மைத்தன்மையை அறிந்துவிட முடியும்.

டிஜிட்டல்மயம்

ஆன்லைன் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் 1955-ம் ஆண்டு முதல் 1978-ம் ஆண்டு வரையிலான கிட்டத்தட்ட 2 கோடி பழைய சான்றிதழ்கள் கம்ப்யூட்டர் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல்மயமாக்கப்பட்டு இருப்பதாகவும், தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான சான்றிதழ்கள் முழு வீச்சில் ஸ்கேன் செய்யப்பட்டு வருவதாகவும் அரசு தேர்வுகள் இயக்குனர் கே.தேவராஜன் தெரிவித்தார்.

அனைத்து ஆண்டுகளுக்குரிய சான்றிதழ்களும் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப் பட்டுவிட்டால் சான்றிதழின் உண்மைத்தன்மையை ஒரு நொடியில் சரிபார்த்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தேவையற்ற கால தாமதம் தவிர்க்கப்பட்டு மேற்படிப்பு படிக்கும் மாணவர்களும், அரசு பணியில் சேருவோரும் பெரிதும் பயன்பெறுவார்கள்.