திருக்குறள்

20/10/2013

FULBRIGHT விருது: விண்ணப்பிக்க நவ.,20 கடைசி.



தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியர்களிடமிர ுந்து புல்பிரைட் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமெரிக்க ஜக்கிய நாடுகள் மற்றும் இந்திய கல்வி பவுண்டேஷன் என்ற அமைப்பு இந்த விருதினை வழங்குகின்றது. தகுதியுள்ளவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். ஆசிரியர்கள் மட்டுமின்றி, தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் நூலக சிறப்பாளர்கள், வழிகாட்டு கவுன்சிலர்கள், பாடத்திட்ட சிறப்பாளர்கள், சிறப்பு கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்சியாளர்கள் ஆகியோரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நவம்பர் 20 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்கு http://www.usief.org.in/Fellowships/ Distinguished-Fulbright-Awards-Teaching-Program.aspx என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

ஆசிரியர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வருகிறார்களா என்பதைக் கண்டறிய மாவட்டத்தில் 300-க்கும் அதிகமான அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் தினமும் காலை 9.10 மணிக்கு தொடங்கி மாலை 4.10 மணிக்கு முடிவடைகிறது. ஆனால் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர், காலையில் வகுப்புகள் தொடங்கிய பின்னர் பணிக்கு வந்துவிட்டு, மாலையில் வகுப்புகள் முடிவதற்கு முன்னதாகவே சென்று விடுவதாகவும் அதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் அரசுக்குப் புகார்கள் சென்றன.

இந்த புகார்களைத் தொடர்ந்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வருகையைக் கண்காணிக்க மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தலைமையில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், வட்டார வளமைய ஆசிரியர்கள் அடங்கிய ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்தக் குழுவினர் எந்தெந்த நாளில் எந்தெந்தப் பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பது பற்றி குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு முந்தைய நாளில் செல்போன் எஸ்எம்எஸ் மூலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிடுகிறார். 

அதன்படி அந்தக் குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளுக்கு காலையில் 9 மணிக்கு முன்னதாகவே செல்கிறார்கள், அப்போது விடுமுறைக் கடிதம் கொடுக்காத, காலை 9.10 மணிக்குள் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கு வந்துவிட்டு மாலை 4.10 மணிக்கு முன்னதாகவே பள்ளியை விட்டுச் சென்ற ஆசிரியர்களுக்கும் வருகைப் பதிவேட்டில் பணிக்கு வரவில்லை என குறிப்பிடுகின்றனர். இந்த ஆய்வின் போது ஒரே ஆசிரியர் தொடர்ந்து 3 முறை பணிக்கு வராமல் இருந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறுமிகள் திருமணத்தை தடுக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள்

13 முதல் 18 வயது வரையான மாணவிகள், பள்ளியில் திடீரென மாற்று சான்றிதழ் கேட்டால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தகவல் தரவேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

திருச்சி மாவட்டத்தில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து ஆலோசிக்க, மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ தலைமையில் நடந்த கூட்டத்தில் இவ்வாறு முடிவு செய்யப்பட்டது.

13 முதல் 18 வயது வரையிலான மாணவிகள், திடீரென தகுந்த காரணமின்றி மாற்று சான்றிதழ் கேட்டால், தலைமையாசிரியர்கள் உடனடியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலர், முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 3 நாட்களுக்கு மேல் தகுந்த காரணங்களின்றி அந்த வயதுடைய மாணவிகள் விடுப்பு எடுத்தாலும், தலைமையாசிரியர்கள் தகுந்த இடங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், பெண்ணின் வயதில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில், திருமணத்தை எக்காரணம் கொண்டும் பதிவாளர் அலுவலகங்கள் பதிவுசெய்தல் கூடாது என்றும், திருமணத்திற்கான பத்திரிக்கையை அச்சடிக்கும் அச்சகங்கள், மணப் பெண்ணிற்கான தகுந்த வயது சான்றிதழ் காட்டப்படாமல், அச்சடிக்கக் கூடாது என்றும் மாவட்ட அளவில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவைதவிர, மாணவிகள் எளிதாக தங்களின் புகார்களை தெரிவிக்கும் வகையில், பள்ளிகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும் எனவும், பள்ளி மாணவிகள் மத்தியில் சிறார் திருமணம் தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டிய இலவச உதவி தொலைபேசி எண் 1098 பிரபலப்படுத்தப்பட வேண்டும் என்றும் முடிவுசெய்யப்பட்டது.

ஆசிரியருக்கு வழங்கிய தேர்வு நிலை அந்தஸ்தை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்தை ரத்து செய்த உதவி தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 

சுரேஷ்பாபு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: பொள்ளாச்சி அருகே உள்ள நல்லம்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 1989-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன்.

அதன் பிறகு, 1997-ஆம் ஆண்டு கோவை, சிங்காநல்லூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் அரசு வேலை கிடைத்ததும் அங்கு பணியில் சேர்ந்தேன். பிறகு, 10 ஆண்டுகள் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு வழங்கக்கூடிய தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்து 1999-ஆம் ஆண்டு எனக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அரசு தணிக்கை துறை ஆட்சேபனை தெரிவித்ததாகக் கூறி, எனக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை அந்தஸ்தை, பொள்ளாச்சி உதவி தொடக்க கல்வி அதிகாரி 2006-ஆம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டார். அதனால், எனக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தை ரத்து செய்த தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. 

இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் அரசுப் பணியில் சேர்ந்த பிறகு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்ததை ரத்து செய்யவில்லை. அதனால் அரசை ஏமாற்றி உள்ளார் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் போது, அரசுப் பணியில் சேர்வதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளன என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், 1979-ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் பணியாற்றிய காலத்தை, தேர்வு நிலை ஆசிரியராக அந்தஸ்து வழங்கும் போது கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் கூறப்பட்டுள்ளது.

இது தவிர, தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்து வழங்கி 7 ஆண்டுகள் கழித்து அதை ரத்து செய்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அதனால், தொடக்கக் கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், மனுதாரரிடம் இருந்து பணம் திரும்பப் பெற்றிருந்தால் அதை அவரிடம் வழங்கவும் உத்தரவிடப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - ஆசிரியர்கள் முன் அனுமதி பெற வேண்டிய நிலையில், முன் அனுமதி பெறாமல் பட்டப்படிப்பு மேற்கொண்டால் அதற்கு விதிகளின்ப்படி தக்க ஒழுங்கு நடவடிக்கை தான் எடுக்க வேண்டுமே தவிர ஊக்க ஊதிய உயர்வினை இரத்து செய்ய கூடாது என இயக்குநர் உத்தரவு

16/10/2013

குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது? தொலைந்து போனால் எப்படிப் பெறுவது போன்ற கேள்விகளுக்கான விளக்கங்கள் இங்கே...

குடும்ப அட்டையின் அவசியம்:

பொதுவிநியோகத் திட்டத்தில் பொருட்கள் பெற மட்டுமல்லாது சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிக்கும் போதுசமர்ப்பிக்கக்கூடிய ஆவணமாகவும், இருப்பிடச் சான்றுக்கான மிக முக்கிய ஆவணமாகவும் பயன்படுகிறது. 


குடும்ப அட்டை பெறுவதற்கான தகுதிகள்:


1.தனிக்குடும்பமாக வசிக்கும் தமிழக மக்கள் எவருமே குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

2.விண்ணப்பதாரர் தனது குடும்பத்துடன் தனி சமையலறையைப் பயன்படுத்துபவராக, தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

3.விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர் தமிழகத்தில் வேறு எந்தக் குடும்ப அட்டையிலும் இருக்கக்கூடாது.


விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?

அனைத்து தாலுகா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் விண்ணப்பப் படிவங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் கிடைக்கின்றன. தமிழக அரசின் இணையதளத்தில்http://www.consumer.tn.gov.in/pdf/ration.pdfஆங்கிலத்திலும்http://www.consumer.tn.gov.in/pdf/rationt.pdfதமிழிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


எங்கே / யாரிடம் விண்ணப்பிப்பது?

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட உணவுப் பொருள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பதிவுத் தபாலிலும் அனுப்பலாம். நேரில் கொடுப்பவர்கள் கண்டிப்பாகக் கொடுத்ததற்கான அத்தாட்சி சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.


கட்டணம்:

புதிய குடும்ப அட்டை பெறும்போது ரூ10 கட்டணமாகப் பெறப்படும்.


தேவையான ஆவணங்கள்:

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கீழ்கண்ட ஆவணங்களின் நகல் ஒன்றை இணைக்க வேண்டும்.

1. தமிழ்நாட்டில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்றாக தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை, மூன்று மாதங்களுக்குள்ளான வீட்டு வரி / மின்சாரக் கட்டணம் / தொலைபேசிக் கட்டணம் செலுத்திய ரசீதுகளில் ஏதாவது ஒன்று அல்லது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் / பாஸ்போர்ட் நகல்/ வாடகை ஒப்பந்தம் இவற்றில் ஏதாவது ஒன்று மட்டும் போதுமானது. ஒரு வேளை இந்தச் சான்றுகள் ஏதும் இல்லையென்றால், நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடவிட் பெற்றுக் கொடுக்கலாம்.

2. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கப்பட்டிருப்பின் குடும்ப அட்டை வழங்கும் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஒப்பளிப்புச் சான்று.

3. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கும் அதிகாரியிடம் (TSO) பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.

4.முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் குடும்ப அட்டை இல்லை என்ற சான்று.

5.எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர் போன்றவை அடங்கிய விவரங்கள் கொடுக்க வேண்டும்.

6.விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தை வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகைச் சீட்டை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும். பதிவுத் தபாலில் அனுப்புவர்கள் சுயமுகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

குடும்ப அட்டை தொலைந்து போனால்:

தொலைந்து போன குடும்ப அட்டையின் நகலுடன் ஏதாவது ஓர் அடையாள அட்டையின் நகலையும் சேர்த்து கிராமப்புறங்களில் வட்டார உணவுப்பொருள் வழங்கு அலுவலரையும்,நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையரையும் அணுக வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலரிடம் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புதுக் குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை கிடைத்துவிடும். இதற்கு ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும்.

குடும்ப அட்டை குறித்து எங்கே புகாரளிப்பது?

வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள அதாவது அதிகாரிகள் மனுதாரரின் வீட்டுக்கு நேரில் சென்று தனியாக சமையல் செய்யப்படுகின்றதா விண்ணப்பதாரர் சொன்னது உண்மையா என ஆய்வு செய்வார்கள்.

விண்ணப்பித்த 30 நாட்களில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து60 நாட்களுக்குள் குடும்ப அட்டை கொடுக்கப்படவேண்டும் அல்லது குடும்ப அட்டை கொடுக்கப்படாததற்கு காரணம் சொல்லவேண்டும். அதையும் மனுதாரருக்கு 60 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

வேண்டுமென்றே கொடுக்க மறுத்தாலோ, காலதாமதம் செய்தாலோ சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆணையாளருக்கும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாவட்ட வழங்கல் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ய வேண்டும் அல்லது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி எளிதில் வாங்க முடியும் அல்லது மாநில நுகர்வோர் மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.

மாநில நுகர்வோர் மையத்தை 044 2859 2858 என்ற எண்ணில் தொலைபேசியிலோ, consumertn.gov.in, schtamilnadugmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, மாநில நுகர்வோர் உதவி மையம்,உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, 4ஆவது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரியில் தபால் மூலமும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மேலதிக விவரங்களுக்கு:

தங்கள் பகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரியை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

உங்கள் பகுதியின் பொது விநியோகக் கடைக்கான பொருட்களின் ஒதுக்க்கீடு குறித்து அறியhttp://cscp.tn.nic.in/allotmentver2/repallotmentshopwise.jspஇத்தளத்திற்குச் செல்லவும்.

http://egov-civilmis.pon.nic.in/SearchCardPondyAppNo.aspxபுதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் இத்தளத்திற்குச் சென்று விண்ணப்பத்தின் நிலையறியலாம்.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ளhttp://www.consumer.tn.gov.in/fairprice.htm

இத்தளத்திற்குச் செல்லவும்.

237 G.O 6% Calculation xl sheet & PAY FIATION 6% FOR SELECTION GRADE AND SPECIAL GRADE

அனைத்து பாடங்களும் கற்பிக்க உதவும் இணையதளம் :


இந்த இணைய தளத்தில் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக 

அறிவியல் பாடக்கருத்துக்கள் அனிமேஷன் வடிவிலும் விளையாட்டு 

வடிவிலும் தரப் பட்டுள்ளன.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு தேவையில்லை

 தூத்துக்குடி மாவட் டம், கோவில்பட்டியை சேர்ந்த ஜெயபாரதி, சகுந்தலா, தமயந்தி, செந்தாமரை உள்ளிட்ட 12 பேர் மதுரை ஐகோர்ட் கிளை யில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில்,‘‘நாங்கள் ஆசிரியர் பயிற்சி (டி.டி.எட்) முடித்துள்ளோம். கடந்த2009ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப அரசு உத்தரவிட்டது. அதன்படி எங்களுக்கு கடந்த 3.6.2009அன்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது. அதன் பின், எங்களுக்கு நியமன ஆணை எதுவும் வரவில்லை.இதுகுறித்து, விளக்கம் கேட்டபோது, 23.8. 2010க்கு பின்னர் பணியில் சேரும் ஆசிரியர்கள் கண்டிப்பாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் எங்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே எங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து விட்டது. எனவே,எங்களை தேர்வு எழுதுமாறு நிர்பந்திக்காமல் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து, ‘‘ஆசிரியர் பணியில் சேர தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி கொண்டு வரப்படுவதற்கு முன்னரே மனுதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்டது. எனவே மனுதாரர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று நிர்பந்திக்கக்கூடாது என உத்தரவிட்டார்.இந்த உத்தரவின் நகலை கல்வித்துறை செயலாளர், இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் உள்ளிட்ட கல்வித்துறை மற்றும் வேலை வாய்ப்புத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தேர்தல் பணியை புறக்கணிக்காதீர்: ஆசிரியர்களுக்கு "அட்வைஸ்'பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அடுத்தாண்டு மே மாதம் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கான பணிகளை, தேர்தல் கமிஷன் துவங்கி உள்ளது. மாவட்ட வாரியாக தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்தவிபரம், கலெக்டர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பம், அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஊழியரின் பெயர், வயது, இனம்,மொபைல் எண், துறை, என்ன பதவியில், எந்த ஊரில் உள்ளார்,சம்பள விகிதம், வீட்டு முகவரி, தாலுகா, அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை நிரப்பி, புகைப்படம் ஒட்டி, துறைத்தலைவரிடம் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு அட்வைஸ்: "எந்த தேர்தல் என்றாலும், அதில் ஆசிரியர்களின் பணி மிக முக்கியமானதாகும். எனவே, தேவையற்ற காரணங்களைக்கூறி, லோக்சபா தேர்தல் பணியை புறக்கணிக்கக் கூடாது,' என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது. "ஜனநாயக கடமையான தேர்தல் பணியை செய்ய, அதற்கான விண்ணப்பத்தை நிரப்பி , பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகத்தில், விரைந்து அளித்திடவும்' குறிப்பிடப்பட்டுள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் இரட்டைப் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ள முடியாது!

Double degree(Dual degree) is not eligible for appointment என்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கான instruction பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரட்டைப்பட்டம் என்பது மூன்று வருடம் ஒரு பட்டம் படித்துவிட்டு அதன் அடிப்படையில் ஒரே வருடத்தில் மற்றொரு பட்டம் பயின்றால் அது தான் இரட்டைப்பட்டமாகும். வெவ்வேறு பட்டங்களை மூன்று மூன்று வருடங்கள் தனித்தனியே முடித்திருந்தால் அது இரட்டைப் பட்டம் அல்ல. அத்தகைய பட்டம் தகுதியுடையது தான்.

* இரட்டைப் பட்ட வழக்கு இன்னும் முடிவடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

CCE 2nd TERM WEEKLY SYLLABUS for std 1 to 8

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் 2014 ம் ஆண்டிற்கான பி.எட் சேர்க்கை அறிவிப்பு

2014 ம் ஆண்டிற்கான பி.எட் சேர்க்கை


*10+2+3 முறையில் இளங்கலை முடித்திருக்க வேண்டும்

*நுழைவுத்தேர்வு இல்லை

*க்ராஸ் மேஜருக்கு தகுதி இல்லை

*நேரடியாக விண்ணப்ப கட்டணம் ரூ600, அஞ்சல் வழி கட்டணம் ரூ650

*கடைசி நாள் 30-11-2013 மாலை 5 மணி வரை


அரசு பாடப்புத்தகத்தில் மாணவனுக்கு "கவுரவம்"

தமிழக அரசு, சமச்சீர் பாடத்திட்டத்தில், மூன்றாம் வகுப்பு, தமிழ் இரண்டாம் பருவ பாடப்புத்தகத்தில், திருக்குறள் தெளிவுரைக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவம், போட்டோவுடன் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இளம் வயதில் நுண்ணறிவை பயன்படுத்திய மாணவனுக்கு, "கவுரவம்" கிடைத்துள்ளது.

அரசு பாடப்புத்தகத்தில், தமிழ்பாடத்தில், திருக்குறளுக்கு, சிறுகதைகளுடன் தெளிவுரை கொடுக்கப்படுகிறது. சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்ட பின், தமிழ் பாடங்களுக்கு, கார்ட்டூன் படங்களுடன் விளக்கம் கொடுக்கப்படுகிறது. இந்தாண்டு, சமச்சீர் பாடத்திட்டத்தில், மூன்றாம் வகுப்பு, இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதில், தமிழ் பாடப்புத்தகத்தில், திருக்குறள் ஐந்து அதிகாரங்களில் இருந்து, ஐந்து திருக்குறளுக்கு தெளிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.அன்புடைமை, அறிவுடைமை, மக்கட்பேறு, இனியவை கூறல், இன்னா செய்யாமை என்ற அதிகாரங்களில் இருந்து, தலா, ஒரு திருக்குறள் இடம் பெற்றுள்ளது.

மக்கட்பேறு என்ற அதிகாரத்தில்,"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" என்ற குறளுக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த, உண்மை சம்பவம், போட்டோவுடன் மேற்கொள் காட்டப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே, அரையம்பாக்கம் கிராமத்திலுள்ள, ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதைப் பார்த்த, அக்கிராமத்தைச் சேர்ந்த, சந்தோஷ் என்ற, 11வயது சிறுவன், உடனடியாக, ஊர் மக்களிடம் அந்த செய்தியை தெரிவித்தான். அந்த வழியாக வந்த, "விழுப்புரம் பயணிகள் ரயிலை" ஊர் மக்கள் நிறுத்தினர்.

ரயிலில் பயணம் செய்த பலரின் உயிரை காப்பாற்றிய சந்தோஷ், அரைம்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். சந்தோஷுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினர்.

இதற்கு, "மகனை பெற்றபோது தாய் மகிழ்ச்சி அடைகிறார். அதைவிட, அறிவும் ஒழுக்கமும் நிறைந்தவன், என, தன் மகனைப் பிறர் புகழக் கேட்கும் போது, மேலும் மகிழ்ச்சி அடைகிறார்" என பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த பாடத்தில், சந்தோஷ்க்கு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், பொன்னாடை போர்த்தி, பரிசு வழங்கிய போட்டோவும் இடம் பெற்றுள்ளது.

"வழக்கமாக, குட்டிக்கதை ஒன்றைக் கூறி, திருக்குறளுக்கு விளக்கும் கொடுத்த நிலை மாறி, உண்மை சம்பவத்தை போட்டோவுடன் பொருள்பட விளக்கும் போது, பாடம் படிக்கும் மாணவர்களுக்கு நல்லொழுக்கம் ஏற்படும். திருக்குறள் பொருள் மாணவர்களுக்கு எளிதில் புரியும், மனதில் பதியும். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், சமச்சீர் பாடத்திட்டத்தில், இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது" என அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவனை தொடர்பு கொள்ள, அரையம்பாக்கத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியை தொடர்பு கொண்டபோது, தொடர் விடுமுறை காரணமாக யாரிடமும் பேச முடியவில்லை.

இறுதியில், அரையம்பாக்கம் ஊராட்சி துணைத்தலைவர் வெங்கடேசனை தொடர்பு கொண்ட போது, "2008ல் அந்த சம்பவம் நடந்தது. சந்தோஷை ஊரே தூக்கி வைத்து கொண்டாடியது. சந்தோஷ் தற்போது, மதுராந்தகம் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறான். அவனது புத்திசாலி தனத்தால், ஊருக்கே கவுரவம் கிடைத்துள்ளது. அவனது அப்பா வேலு, அம்மா சரசு இருவரும் கட்டட தொழிலாளர்கள். அவர்களிடம் மொபைல்போன் வசதியில்லை" என்றார்.

வருமான வரி சோதனையை தவிர்க்க...

* ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்புத் தொகை இருந்தால் வங்கியானது வருமான வரித்துறைக்கு அந்த வாடிக்கையாளர் வரி கட்ட தகுதியுடையவர் என்பதை தெரிவித்து விடும்.

* கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில், கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருடத்திற்கு இரண்ட ரூபாய் செலவு செய்திருந்தால் அவர்களும் வரி செலுத்த தகுதியுடையவராவார்கள். அவர்களின் விவரமும் வங்கியின் மூலமாக வருமான வரித் துறையினருக்கு தெரிவிக்கப்படும். 

* ஒரு வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் அந்த நபரின் விவரங்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தாரால் வருமான வரித்துறைக்கு போய்ச் சேரும். * பாண்டுகளிலோ அல்லது ஃபிக்ஸட் டெபாஸிட்களிலோ வருடத்திற்கு ஐந்து ல ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் அவர்களின் விவரங்களும் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்படும். 

* வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பங்குகளில் அல்லது இ.டி.எஃப்.களில் முதலீடு செய்தால் அவர்களின் விவரம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும். 

* 30 லட்ச ரூபாய் மதிப்பிலான வீடோ, நிலமோ வாங்கினால், அதன் விவரம் பத்திரப் பதிவு துறை மூலமாக வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும். அந்த வகையில் மேலே கண்ட முறையில் ஏதாவது பரிவர்த்தனை செய்திருந்தால் அதை குறிப்பிட்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்துவிடுங்கள். இல்லை என்றால் வருமான வரித் துறையின் அதிரடி ரெய்டை சந்திக்க வேண்டி வரும்.