திருக்குறள்

15/12/2013

மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு

மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், நிறைவுரை ஆற்றிய முதல்வர் ஜெயலலிதா 312 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் சில:

* மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படித்தொகை மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிப்பு.

* அரசு ஊழியர்களுக்கான குளிர்காலபடி மாதம் 500 ரூபாயாக உயர்த்தப்படும்.

பங்கு வர்த்தகத்தில் ஈடுபட அரசு அலுவலர்களுக்கு தடை?

அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட செபி தடைவிதிக்க இருப்பதாகத் தெரிகிறது.உள்ளார்ந்த தகவல்களை (Insider Trading) வைத்துக்கொண்டு வர்த்தகம் செய்பவர்களைத் தடுப்பதற்கான புதிய விதிமுறையை பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபி கொண்டுவர இருக்கிறது.
இதில் அரசு அலுவலர்கள் மற்றும் நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.இது குறித்து வரும் 31-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று செபி தெரிவித்திருக்கிறது. இதன் படி செபியின் அதிகாரிகள் கூட பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. செபியின் பணியாளர்கள் யாரும் தங்களின் பதவிக்காலம் முடியும் வரை பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடமுடியாது.மேலும் கார்ப்பரேட் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள், கொள்கைகளை உருவாக்கும் அதிகாரிகள் உள்ளிட்டோர் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. இந்தவிதிமுறைகளை கேரளம் மற்றும் கர்நாடகம் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி என்.கே.சோதி தலைமையிலான குழு உருவாக்கி இருக்கிறது.கடந்த மார்ச் மாதம் செபி இந்தக் குழுவை அமைத்தது. இந்த கமிட்டி கடந்த 20 வருட உள்ளார்ந்த முறைகேடு நடந்த தகவல்கள் அடிப்படையில் புதிய விதிமுறையை உருவாக்கி இருக்கிறது.

14.12.2013 டிட்டோஜாக் கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் ஒத்திவைப்பு, அடுத்த கூட்டம் 26ஆம் தேதிக்கு மீண்டும் கூடும்

சென்னையில் திரு.மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்ற டிட்டோஜாக் கூட்டம் மாலை 4.00மணி வரை நீடித்தது எனவும், அனால் இன்றைய கூட்டத்தில் பங்குபெற்ற சங்கங்களுக்கு இடையே முடிவுஎட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் ஒரு மாபெரும் பேரணி நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது, அந்த கருத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் முடிவு எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.அதற்கடுத்தப்படியாக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் மாவட்ட அளவில் போராட்டம் நடத்தி அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கலாம் எனவும், இதற்கு அரசு செவி சாய்க்கவில்லையெனில் உடனடியாக டிட்டோஜாக் கூடி வேலை நிறுத்தம் அல்லது அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கலாம் என்று பெரும்பாலான சங்கங்கள் கருத்து தெரிவித்தன. ஆனால் முன்னணி சங்கம் ஒன்று மட்டும் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக வேலை நிறுத்தம் செய்வோம் என்றும், நாங்கள் ஏற்கெனவே போராட்டம் நடத்திவிட்டோம் என்றும், இனி நடத்தமாட்டோம் என்றும் கருத்து தெரிவித்தது. இதையடுத்து இந்த கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் வருகிற 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் இனி வரும் கூட்டத்தில் சுழற்சி முறையில் அனைத்து சங்க கட்டடத்தில் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது.

8ம் வகுப்பு மாணவர்கள் படிப்புதவி பெற பிப்ரவரியில் தேர்வு...கல்வி உதவித்தொகை பெற திறன் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை அறிக்கை


8–ம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ்படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு என்.எம்.எம்.எஸ். தேர்வு அனைத்து வட்டார அளவில் நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 22–2–2014 இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை இத்துறையின் இணையதளம் வழியாக 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2013–2014 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ–மாணவியர் அவர்தம் பெற்றோரின் குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.1,50,000–க்கு மிகாமல் இருக்கவேண்டும். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

தலைமை ஆசிரியர்கள் வெற்று விண்ணப்பங்களை எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்தல் வேண்டும். புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50 உடன்25–12–2013–க்குள் ஒப்படைத்தல் வேண்டும்.

தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் www.tndge.in என்ற இணையதளம் மூலம்23–ந்தேதி முதல் 31–ந்தேதிக்குள் பதிவு செய்தல் வேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ளார்.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் நிதிப் பற்றாக்குறை

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் நிதிப் பற்றாக்குறையால் 385வட்டார வள மைய மேற்பார்வையாளர்களை பள்ளிக் கல்வித் துறைக்கு இடமாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.உயர்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், மாற்றுப்பணி அடிப்படையில் இந்தப் பணியிடங்களில் பணியாற்றி வந்தனர்.இவர்களுக்கு சம்பளம் வழங்க மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் இந்த முடிவை எடுத்துள்ளது.வட்டார வள மேற்பார்வையாளர்களை,உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக இடமாற்றம் செய்யும் அரசாணை ஓரிரு நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 1முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றல், புதிய கற்பித்தல் முறைகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல், பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் இடைநிற்கும் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தல், பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொருவட்டார அளவில் 10 முதல் 15 பட்டதாரி ஆசிரியர்கள் வட்டார வள மைய பயிற்றுநர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அனைவருக்கும் கல்வித் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக வட்டார வள மைய மேற்பார்வையாளர்களும் உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 385 வட்டார வள மைய மேற்பார்வையாளர்களும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான வட்டார வள மைய பயிற்றுநர்களும் உள்ளனர். இவர்களுக்கான சம்பளம் அனைவருக்கும் கல்வித் திட்ட நிதியிலிருந்து வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் இவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, வட்டார வள மைய மேற்பார்வையாளர்களை பள்ளிக் கல்வித் துறைக்கு இடமாற்றம் செய்ய அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் அரசுக்குப் பரிந்துரையை அனுப்பியுள்ளது.இந்த ஆண்டு 540தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான பட்டதாரி ஆசிரியர் பட்டியலுக்கு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய இடமாற்றத்தால் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படும். கன்னியாகுமரி, திருநெல்வேலி,காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் தலைமையாசிரியர் பணியிடங்களில் காலியிடங்கள் இல்லை. டிசம்பர் மாதத்தில் திடீரென இடமாற்றம் செய்வதால் மேற்பார்வையாளர்களும் பாதிக்கப்படுவர்.அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்கக அதிகாரிகள் இது தொடர்பாக கூறியது:இந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை காரணமாக அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் நிர்வாக அளவில் சிறிய மாற்றம் மட்டுமே செய்யப்படுகிறது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடங்கள் கைவிடப்படவில்லை.இந்தப் பணியிடங்களில் வட்டார வள மையத்தின் மூத்த பயிற்றுநர்கள் தாற்காலிகமாக நியமிக்கப்படுவர். அடுத்த ஆண்டு போதிய நிதி கிடைத்தால் இந்தப் பணியிடங்களுக்கு தலைமையாசிரியர்களே நியமனம் செய்யப்படுவர்.பள்ளிக் கல்வித் துறையில் இருந்து மாற்றுப்பணியில் வந்த தலைமையாசிரியர்கள் மீண்டும் அதே துறைக்கு அனுப்பப்படுகின்றனர். மேலும், அரசுப் பள்ளிகளில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களில் 500-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. எனவே,மாணவர்களுக்கும் இந்த மாற்றம் பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

IGNOU தேர்வு அட்டவணையால் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பமும், பயமும்.

2013 December B.Ed இரண்டாம் ஆண்டு தேர்வு அட்டவணையில் 23-ம் தேதி ஒரு தேர்வு நடைபெறுகிறது. பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான கடைசி வேளை நாளும் December 23 தான்.எனவே பள்ளயின் கடைசிவேளைநாள் அன்று தற்செயல் விடுப்பு எடுக்க முடியாதே..? என்ன செய்வது என்ற குழப்பம் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

விளக்கம்:
* இரண்டாம் பருவ விடுமுறை 9 நாட்கள் மட்டுமே
(24.12.13 to 01.01.14).

* பள்ளிக்கு வருகை தராமல் (விடுப்பு+விடுமுறை) அதிகபட்சம் 10நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

* 11வது நாள் பணிக்கு திரும்பாவிட்டால் மட்டுமே விடுப்பின் வகை மாற்றப்படும்(EL).

* தற்பொழுது இரண்டாம் பருவ விடுமுறை 9 நாட்கள் மட்டுமே.23-ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்தாலும் மொத்தம் 10 நாட்கள் தான் ஆகிறது.
ஐனவரி 2-ம் தேதி பள்ளி திறந்ததும் பணியில் சேர்ந்துவிட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

*எனவே தாராளமாக பள்ளி கடைசி வேளை நாளான 23.12.13அன்று தற்செயல்விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.

*விடுப்பிற்கான காரணத்தினை மறக்காமல் தேர்விற்கு செல்வற்காக என்றே குறிப்பிடவும்.

IGNOU - M. Ed. Entrance Test, 2013 Results

14/12/2013

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு(உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும்) அரசு பள்ளிக்கு மாறுதல் ஆணை மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2013 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலிலிருந்து நீதிமன்ற தீர்ப்பின் படி 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் ஆணை வழங்கப்படவுள்ளது

வட்டார மேற்பார்வையாளர் பதவியிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி மாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு எண்ணிக்கை முழு விவரம்

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை : 416
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு மாறுதல் நிரப்படவுள்ளவை மொத்தம் : 196

வட்டார மேற்பார்வையாளர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு பணி மாறுதல் எண்ணிக்கை : 196

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நிரப்படவுள்ளவை மொத்தம் : 220

பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு எண்ணிக்கை : 214

முன்னுரிமைப்பட்டியல் 1 முதல் 248 வரை உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு எண்ணிக்கை : 6

13/12/2013

அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் தொடங்க ஒத்துழைப்பு நல்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT)

1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600 
2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250 
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500 
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -100 
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000 
6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500. 
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000 
8. சென்னைப் பல்கலைக் கழகம்- துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. 
9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 1500 
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500 
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500 
12. பெரியார் பல்கலைக் கழகம்- 250 
13. Tamilnau Teacher Education University -350. 
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. 
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.
மேலும் விடுப்பட்ட அல்லது அந்தந்த பல்கழைக்கழகத்தில் உண்மை தன்மை சான்று பெற்றவர்கள் தற்பொழுது நடைமுறையில் உள்ள DD தொகையினைக் குறிப்பிடவும்.

இரட்டைப் பட்ட வழக்கு ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று பிற்பகல் 1.00மணியளவில் முதன்மை அமர்வில் தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்திய நாராயணன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு தரப்பு வழக்கறிஞ்சர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இதையடுத்து வருகிற ஜனவரி 2ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனால் மேலும் நியமனம் மற்றும் பதவி உயர்வு காலதாமதம் ஏற்படுவதால் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைசலுக்கு ஆளாகியுள்ளனர்.

தேர்வு பணியில் நடுநிலை பள்ளி ஆசிரியர்களையும் சேர்க்க திட்டம்

பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுப் பணியில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி, முதுகலை ஆசிரியர் மட்டும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர் சேர்க்கப்படுவதில்லை.இந்த நிலையை மாற்றி, இரு துறைகளிலும் உள்ள பட்டதாரி ஆசிரியருக்கும், தேர்வுப்பணி வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், வரும் பொது தேர்வில், நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரையும், தேர்வுப் பணியில் ஈடுபடுத்த, தேர்வுத் துறை முடிவு செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க டிச.31 கடைசி நாள்

 முதலமைச்சரின் கணினித் தமிழ் விருதுக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது: ''முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், 'வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெல்லாம் கணினி வழித் தமிழ்மொழி பரவிட வகைசெய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் 'முதலமைச்சர் கணினித் தமிழ் விருது' என்ற பெயரில் விருது வழங்கப்படும்' என ஏற்கனவே அறிவித்திருந்தார். இவ்விருது தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படுகிறது. விருது பெறுபவர்களுக்கு விருதுத் தொகை ரூ.1 லட்சத்துடன் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். இதன்படி, 2013 ஆம் ஆண்டிற்கான விருது எதிர்வரும் சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு அன்று (14.4.2014) வழங்கப்படவுள்ளது. போட்டிக்குரிய மென்பொருள்கள் 2010, 2011, 2012-ம் ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். 'முதலமைச்சர் கணினித் தமிழ் விருது'-2013ஆம் ஆண்டுக்கான விண்ணப்பம், விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.org) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விருதுக்கான விண்ணப்பத்தை, தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை -600008 என்ற முகவரிக்கு 31.12.2013க்குள் அனுப்ப வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.