திருக்குறள்

06/01/2014



NMMS விண்ணப்பங்கள் பதிவேற்ற தொடர்பான குறிப்புகள்

NMMS விண்ணப்பங்கள் பதிவேற்ற தொடக்கக் கல்வித்துறைக்கு மாவட்டத்திற்கு ஒன்று என யூசர் நேம் மற்றும் பாஸ் வேர்டு அந்தந்த உ.தொ.க அலுவலரின் மெயில் க்குஅனுப்பப்பட்டுள்ளது,,,அதை பயன்படுத்தி அந்தந்த ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து புகைப்படத்தை பதிவேற்றி அதனை2 செட் ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள்.அதனை உ.தொ.க அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்

மாணவர்களுக்கு அரசு வழங்கும் பொருட்களை வாங்க அலையும் ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளாகும் கல்விப் பணி

மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் பொருட்களை வாங்க ஆசிரியர்கள் அடிக்கடி அலைந்து வருவதால் பள்ளியில் மாணவர்களின் அடிப்படை கல்வி கேள்விகுறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரத்து 184 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுய நிதி தொடக்கப்பள்ளிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் புத்தகங்கள், இலவச யூனிபார்ம், கலர்பென்சில் மற்றும் புத்தகப்பை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஆனால் இப் பொருட்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வழங்கப்படாமல் தவணை முறையில் வழங்கப்பட்டு வருகிறது. 
இவை அனைத்தையும் எடுத்து செல்ல சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் அல்லது ஆசிரியர்கள் சாக்குப் பை எடுத்து வந்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. உதவி தொடக்கல்வி அலுவலகத்துக்கு அருகே உள்ள பள்ளிகளுக்கு இவற்றை ஆட்டோக்களில் எடுத்து செல்கின்றனர். ஆனால் தொலைதூரத்தில் உள்ள பள்ளிகளுக்கு எடுத்து செல்ல ரூ 500க்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத போது கற்பித்தல் முறையும் பாதிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாது, மாணவர்களின் கல்வித் தரம் சீர்குலையவும் வாய்ப்புள்ளது. தவிர புத்தகங்கள் பெற அடிக்கடி ஆசிரியர்கள் கல்வி துறை அலுவலகத்திற்கு அலைந்து வருவதால் மாணவர்களின் அடிப்படை கல்வி பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. 

இது குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில். வருடத்துக்கு 13 முறை மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்கள் வாங்க அலைய வேண்டியது உள்ளது. அது மட்டுமல்லாது, விட்டுப் போன பொருட்களை வாங்கவும் திரும்ப திரும்ப செல்ல வேண்டியதுள்ளது. இத்தகைய பொருட்களை வாகனங்கள் மூலம் ஏற்றி செல்லும் செலவுகளை பள்ளி தலைமை ஆசிரியர்களே ஏற்க வேண்டியதுள்ளது. மேலும் இதனால் ஏற்படும் கால விரயத்தால் பள்ளியில் பாடம் கற்பிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. பொருட்களை வாங்க வரிசையில் கால்கடுக்க நின்று காத்திருந்து வாங்க வேண்டியது உள்ளது. மேலும் இந்த பொருட்களை பஸ்சில் ஏற்றுவதும் இல்லை. பஸ் இல்லாத பகுதிகளுக்கு ஆசிரியர்கள் தலைசுமையாக பொருட்களை எடுத்துச் செல்லவேண்டிய நிலையும் உள்ளது. ஒரு மாணவருக்கு தொடக்க கல்வியில் கற்பிக்கப்படும் அடிப்படை கல்வி தான் மிக முக்கியம். ஒவ்வொரு பள்ளிக்கும் எவ்வளவு பொருட்கள் தேவை என கணக்கிட்டு கல்வி ஆண்டு துவக்கத்திலேயே அரசு வழங்க வேண்டும் என்றனர்.

ஆசிரியர் பயிற்றுனர் எண்ணிக்கை குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை திட்டம்

அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்களை குறைக்க, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், அனைவருக்கும் (எஸ்.எஸ்.ஏ.,) கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றிய, வட்டார மேற்பார்வையாளர்கள், அரசு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, முதுநிலையில் உள்ள ஆசிரியர் பயிற்றுனர்கள் 115 பேரும், அரசுப் பள்ளி ஆசிரியராக மாறுதல் செய்யப்பட்டனர். இதில், எஞ்சிய ஆசிரியர் பயிற்றுனர்கள் 500 பேரை விரைவில், அரசு பள்ளி ஆசிரியராக மாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தற்போதுள்ள ஆசிரியர் பயிற்றுனர்களை கொண்டே, இத்திட்டத்தை செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: 10 ஆண்டுகளை கடந்த, இத்திட்டம், இடைநிலைக் கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்துடன் இணைக்கப்பட உள்ளது; இதற்கான, நிதி ஒதுக்கீடும் குறைந்துவிட்டது. மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நான்காயிரம் பயிற்றுனர்களை, 10 பள்ளிகளுக்கு ஒரு பயிற்றுனர், மேற்பார்வையாளர் என, நியமித்து, திட்டம் நிறைவு செய்யப்படும். இவ்வாறு கூறினார்

ஆன் - லைனிலேயே இனி மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்க்கலாம்

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் களின் உண்மைத் தன்மையை (Genuinity) ஆன்-லைனிலேயே உடனுக்குடன் சரிபார்க்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது அரசுத் தேர்வுத் துறை. படித்த இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும்போதோ அல்லது மேல் படிப்புக்காக கல்லூரிகளில் சேரும்போதோ அவர்களின் அடிப் படை கல்வித் தகுதியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை பரிசோதிக்கப்படும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது துறைகள் மூலமாக பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அவை அரசுத் தேர்வுத் துறைக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது துறைகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படும். சான்றிதழ்களை சரிபார்க்கலாம் கம்ப்யூட்டர் வாயிலாக இல்லாமல் ஆட்கள் மூலமாகவே இதுவரை சான்றிதழ்கள் சரிபார்க் கப்பட்டு வருகின்றன.

இதனால், தேவையற்ற கால விரயம் ஏற் படுவதுடன் பணிச் சுமையும் கூடு கிறது. இதனால், சான்றிதழ் சரி பார்க்கக் கேட்டு அனுப்பப்படும் கடிதங்கள் மாதக் கணக்கில் கூட தேங்கிவிடுகிறது. இத்தகைய தேக்க நிலையை மாற்றுவதற்காக, ஆன்-லைன் மூலமாக சம்பந்தப் பட்டவர்களே சான்றிதழ்களை உட னுக்குடன் சரிபார்த்துக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துகிறது அரசுத் தேர்வுத் துறை இயக்கு நரகம். முழுவீச்சில் பதிவேற்றப் பணிகள் இதுகுறித்து அரசுத் தேர்வுத் துறையினர் ‘

’’1980-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை வழங்கப்பட்ட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்கள் அனைத்தையும் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் இப்போது முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. அரசுத் தேர்வுத் துறை வளாகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதற்கான பணிகளை செய்து வருகிறார்கள். இதுவரை 5 கோடி சான்றிதழ்கள் பதிவேற்றம் இதுவரை சுமார் 5 கோடி சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டன. எஞ்சியவையும் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு விரைவில் இந்தத் திட்டத்தை முதல்வர் துவக்கி வைப்பார். அனைத்து சான்றிதழ்களும் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு, அதை திறந்து பார்ப்பதற்கான பாஸ்வேர்டை அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் அரசுத் துறைகளுக்கும் நாங்களே அனுப்பி விடுவோம். அவர்கள், வேறு யாருடைய மதிப்பெண் சான்றி தழையாவது சரிபார்க்க நினைத்தால் பாஸ்வேர்டை பயன் படுத்தி உடனுக்குடன் சான்றி தழின் உண்மைத் தன்மையை சோதித்து விடலாம்’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் அறிவிப்பு - நிதித்துறை - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கருணைத் தொகை குறித்த அரசாணை வெளியீடு


05/01/2014

அரியலூர் மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர் க.க‌‌‌ண‌ே‌சன் ‌அவர்களிடம் புத்தாண்டு வா‌‌ழ்த்து கூறி வா‌‌ழ்த்து பெற்றனர் அரியலூர் மாவட்டப் மற்றும் வட்டாரப் பொறுப்பாளர்கள்

ஏப்ரல் 16 முதல் மே 13 வரை லோக்சபா தேர்தல் ஐந்து கட்டம்?

லோக்சபா தேர்தலை, வரும், ஏப்ரல், 16லிருந்து, மே மாதம், 13ம் தேதி வரை, ஐந்து கட்டங்களாக நடத்தவும், ஓட்டு எண்ணிக்கையை, மே மாதம், 16ம் தேதி நடத்தவும், தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை 
தயாரிக்கப்பட்டுள்ளது.அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதும், ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற பின், இறுதியான அறிவிப்பு குறித்த பட்டியல், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.ஜூன் 2ல் புதிய அரசு:தற்போதைய லோக்சபாவின் பதவிக் காலம், வரும், ஜூன், 1ம் தேதியுடன் முடிவடைகிறது.எனவே, புதிதாக தேர்வு செய்யப்படும் லோக்சபா, ஜூன், 2ம் தேதிக்குள் பதவியேற்க வேண்டும்.இதனால், அரசியல் கட்சிகள், இப்போதே, தேர்தல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. பா.ஜ., சார்பில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.காங்., சார்பில், ராகுலை, பிரதமர் வேட்பாளராகஅறிவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே, வெளியிடப்பட வேண்டும்.

வரைவு அறிக்கை:

இதையடுத்து, தேர்தல் கமிஷனும், தன் பங்கிற்கு, வேலைகளை, சுறுசுறுப்பாக துவங்கியுள்ளது. எந்தெந்த தேதிகளில் தேர்தலை நடத்தலாம், எத்தனை கட்டமாக நடத்தலாம், எப்போது ஓட்டு எண்ணிக்கை நடத்தலாம் என்பதற்கான, வரைவு அறிக்கையை, தேர்தல் கமிஷன் தயாரித்துள்ளது.இதில், ஐந்து கட்டங்களாக தேர்தலை நடத்தலாம் என, குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 124 தொகுதிகளுக்கு, ஏப்ரல், 16ம்தேதியும், இரண்டாம் கட்டமாக, ஏப்ரல், 23 அல்லது 24ம் தேதிகளில், 141 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்டமாக, ஏப்ரல், 30ம் தேதி, 107 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த, திட்டமிடப்பட்டுள்ளது.நான்காம் கட்டமாக, 85 தொகுதிகளுக்கு, மே மாதம், 7ம் தேதியும், ஐந்தாம் கட்டமாக, 86 தொகுதிகளுக்கு, மே மாதம், 13ம் தேதியும், தேர்தலை நடத்தலாம் என, திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், மே, 16ம் தேதி ஓட்டு எண்ணிக்கையை மேற்கொள்வது என்றும், அந்த வரைவு திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதிகாரிகளுடன் ஆலோசனை:இந்த தேதிகளை இறுதி செய்வதற்கு முன், தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள், அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், மாநில தலைமை தேர்தல்அதிகாரிகள், துணை ராணுவப் படை தலைவர்கள் ஆகியோருடன், இதுகுறித்து, ஆலோசனை நடத்தவும், தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, அடுத்த மாதம், 3ம் தேதி, அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

அனைத்து அம்சங்களும்:

தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது:தேர்தல் பாதுகாப்புக்காக, பாதுகாப்பு படையினரை, ஒரு மாநிலத்திலிருந்து, மற்றொரு மாநிலத்துக்கு அழைத்துச் செல்வது, மாநிலங்களின் பண்டிகை காலங்கள், திருவிழாக்கள், பள்ளி, கல்லூரி தேர்வுகள், வானிலை ஆகிய விஷயங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசிக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதில், மாநில அரசு அதிகாரிகள் கூறும், ஒரு சில மாற்றங்களை ஏற்று, தேர்தல் தேதிகளில், மாற்றம் செய்யப்படலாம். ஆனாலும், ஓட்டு எண்ணிக்கை தேதியில், எந்தவித மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.இறுதி செய்யப்பட்ட வரைவு அறிக்கை, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அவரின் ஒப்புதல் பெற்ற பின், முறையான அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

பணிக்கால விடுப்புகளும்,ஊதியமும்...

பணிக்கால விடுப்புகளும்,ஊதியமும்:

1.தற்செயல் விடுப்பு-முழுஊதியம் & படிகள்

2.சிறப்பு தற்செயல் விடுப்பு-முழுஊதியம் & படிகள்

3.கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு-முழுஊதியம் & படிகள்

4.மகப்பேறு விடுப்பு-முழுஊதியம் & படிகள்

5.கருச்சிதைவு விடுப்பு-முழுஊதியம் & படிகள்

6.தத்தெடுப்பு விடுப்பு-முழுஊதியம் & படிகள்

7.ஈட்டிய விடுப்பு-முழுஊதியம் & படிகள்

8.மருத்துவவிடுப்பு-முழுஊதியம் & படிகள்

9.சொந்தக்காரண விடுப்பு-ஊதியத்தில்50% & படிகள்

10.அசாதாரண விடுப்பு-ஊதியம் ஏதுமில்லை

11.ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு-முழுஊதியம் & படிகள்(MAதவிர)

மருத்துவ விடுப்பின் பொழுது தேர்வு எழுதினால் அதற்கு பணப்பயனோ, பதவி உயர்வோ வழங்கப்பட மாட்டாது.

மருத்துவ விடுப்பின் பொழுது தேர்வு எழுதினால் அதற்கு பணப்பயனோ, பதவி உயர்வோ வழங்கப்பட மாட்டாது.ஆனால்மகப்பேறு விடுப்பின் பொழுது 
தேர்வு எழுதலாம்.பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்.. 

பணிப்பதிவேட்டில் அதை பதிவு செய்யும் பொழுது காரணம் தெரிவித்தால் போதுமானது.

(தேர்வுகால அட்டவணையை வழங்கும் பொழுது)

15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தமிழக அரசு சுறுசுறுப்பு

லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழாவை, முதல்வர் தலைமையில், விரைவில் பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை, அதிரடி முடிவு செய்துள்ளது.குறைவான எண்ணிக்கையிலான பணி நியமனம், அமைதியாக, கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது. ஆனால், அதிக எண்ணிக்கையிலான பணி நியமனம் என்றால், முதல்வர் பங்கேற்கும் வகையில், பிரமாண்டமாக விழா நடத்தப்படுகிறது.

பணி நியமன உத்தரவு:கடந்த, 2012, டிசம்பரில், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா, சென்னை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், விமரிசையாக நடந்தது. இதில், முதல்வர் பங்கேற்று, பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.அதன்பின், மீண்டும் பெரிய அளவிலான பணி நியமனம், விரைவில் நடக்க உள்ளது. அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், 12 ஆயிரம், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியரும், தேர்வு செய்யப்பட உள்ளனர். விரைவில், 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதால், இந்நிகழ்ச்சியை, சாதாரண முறையில் நடத்தாமல், முதல்வர் தலைமையில், 2012ஐ போல், பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.லோக்சபா தேர்தலை மனதில்கொண்டு, புதிய ஆசிரியர் நியமனத்தை, விரைந்து நடத்த,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால், தேர்தல் விதிமுறைகள், அமலுக்கு வந்துவிடும்.அதன்பின், பணி நியமன உத்தரவு வழங்கும் விழாவை நடத்த முடியாத நிலை ஏற்படலாம். பிப்ரவரி முதல் வாரத்தில், தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம். எனவே, அதற்கு முன்னதாக, ஆசிரியர் நியமன விழாவை நடத்தி முடிக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

வழக்கு:ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாகவும், முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பாகவும், சென்னை, உயர்நீதிமன்றத்தில், வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை, விரைந்து முடித்து, இறுதி தேர்வு பட்டியலை வெளியிடவும், ஏற் பாடுகள் நடந்து வருகின்றன.டி.இ.டி., தேர்வு முடிவு வெளியான நிலையில், இன்னும், சான்றிதழ் சரி பார்ப்பு நடக்கவில்லை. அதேபோல், முதுகலைதமிழ் பாடத்திற்கு மட்டும், இறுதி தேர்வு பட்டியல், வெளியானது. மற்ற பாடங்களுக்கு, வழக்கு காரணமாக, இறுதி பட்டியல் வெளியாகவில்லை.இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் கூறுகையில், 'அனைத்து வழக்குகளும், ஒன்றாக விசாரிக்கப்படுவதால், விரைவில், தீர்ப்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. முடிவு வந்துவிட்டால், ஒரே வாரத்தில், டி.இ.டி., தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, அடுத்த ஒரு வாரத்தில், இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு விடுவோம்' என, தெரிவித்தன

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

சி& டி-பிரிவு ஊழியர்களுக்கு-ரூ-3000/-
ஏ & பி -பிரிவு ஊழியர்களுக்கு-ரூ-1000/-
ஓய்வூதிய தாரர்களுக்கு-ரூ-500/-

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதன்படி, சி, டி பிரிவி ஊழியர்களுக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 3 ஆயிரத்திற்கு உட்பட்டு ஒரு மாத ஊதியம் போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ, பி ஊழியர்களுக்கு ரூபாய் 1000 போனஸ் வழங்கப்படும் எனவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், முன்னாள் விஏஒ-க்களுக்கு ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் இறுதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதி மேம்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை, கரூர், திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் கோவை ஜி.டி., அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா; பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வரமுருகன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை, எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில், 347 பள்ளிகளில் குடிநீர் வசதிகளும், 27 பள்ளிகளில் முழுமையான கழிப்பறை வசதி, திருப்பூர் மாவட்டத்தில் 235 பள்ளிகளில் குடிநீர் வசதிகளும், 113 பள்ளிகளில் போதுமான கழிவறை வசதிகளும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் உச்சநீதிமன்ற உத்தரவின் படி வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களையே இதன் முழு பொறுப்பும் சேரும்.

வரும் கல்வியாண்டில், கரூர், கோவை, திண்டுக்கல், திருப்பூர், ஊட்டி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மட்டும் 70 நர்சரி பிரைமரி பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட உள்ளது. இப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தவிர்க்க, முன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். நடக்கவுள்ள பொதுத் தேர்வுகளில் 95 சதவீத இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது அவசியம். இவ்வாறு, சபிதா பேசினார்.

இக்கூட்டத்தில் 100 சதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், ஆசிரியர்களுக்கு கேடயங்களும், பாராட்டு சான்றிதழ்களையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி வழங்கினார்.

ஜனவரி 3: இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு

சாவித்திரிபாய் புலே மகாராஷ்ட்ராவில் பிறந்த இவர் கல்வி வாய்ப்பில்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே பிறந்தார் . ஜோதிபாய் புலே எனும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தீரர் இவரின் கணவர் ஆனார் . அவர் இவருக்கு கல்வி பயிற்றுவித்தார் .


இவர் கற்றுத்தேர்ந்ததும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை தாங்களே பிள்ளைகளுக்குதருவோம் என்று ஒரு பள்ளியை தொடங்கினார் ஜோதிபாய். அதில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்திரி ஆனார். நடந்து போகிற பொழுது ஆதிக்கசாதியினர் கற்களையும் சாணத்தையும் வீசினர் ,ஜோதிபாயிடம் இவர் அதைச்சொல்லி புலம்பியதும் "அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ ! பின் அங்கே போய் நல்ல சேலையை அணிந்து கொள் !"என்றார் அவ்வாறே செய்தார் இவர் .

தவித்த வாய்க்கு தீண்டத்தகாதவர் என சொல்லி தண்ணீர் மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது ; அந்த மழிக்கும் பணியை செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்க செய்தார் .விதவை மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார் சாவித்ரிபாய் புலே. சாவித்திரிபாய் நல்ல கவிஞரும் கூட. மராத்தியத்தின் நவீன கவிதைப்போக்கு இவரில் இருந்தே துவங்குகிறது. இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி என்று பல்வேறு தளங்களில் அவரின் கவிதைகள் பயணித்தன

1852ல் இவர் தொடங்கி வைத்த 'மஹிளா சேவா மண்டல்' (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது. 1876-1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு கடுமையாக உழைத்ததோடு மக்களின் துயரங்கள் தீர்வதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் முன்வைத்தார் அவர். பல மையங்களில் ஜாதி வேற்றுமை பாராட்டி ஒடுக்கப்பட்ட என்று மறுக்கப்பட்ட நிலையில் இருவரும் இலவச உணவு பரிமாறினர்.

மகாராஷ்ட்ராவை ப்ளேக் நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று பரவாமல் இருக்க கடுமையான ப்ளேக் சட்டங்களை போட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களை பிரித்து வைத்தது. மருத்துவம் படித்து ராணுவத்தில் வேலைபார்த்து கொண்டிருந்த இவரின் மகன் யஸ்வந்த் தென் ஆப்பிரிகாவில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரை ஹடாஸ்பூரில் ஊருக்கு வெளியே மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்திரி பாய்.

தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து அறுபத்தி ஆறு வயதில் உயிர் காக்கப்போராடினார். அப்படி பத்து வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜியை காக்க தூக்கிக்கொண்டு வந்த பொழுது நோய் தொற்று ஏற்பட்டு இவர் மரணமடைந்தார். அந்த சிறுவன் பிழைத்துக்கொண்டான். வாழ்வே சேவையாகிப்போன அவரின் பிறந்த நாள் இன்று.

அவரின் கவிதை கீழே :

போ கல்வி கல்
சொந்தக்காலில் நில், சோராமல் உலை
உழை-ஞானத்தை,செல்வதை சேர்
அறிவில்லாமல் போனால் அனைத்தும் அழியும்
ஞானமில்லாமல் விலங்காகி போவோம் நாம்
இன்னமும் சோம்பலுற்று அமர்ந்திருக்காதே, போ, போய் கல்வி பெறுக !
ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட நம்மவர்களின் துயரங்கள் துடைத்திடுக
கற்க ஒரு பொன்னான வாய்ப்பு இது
கற்று, ஜாதியின் சங்கிலிகளை அறுத்திடுக