ஏழாவது ஊதிய குழு உறுப்பினர்கள் நியமனத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்தந்துள்ளார். 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 30லட்சம் ஓய்வூதியத்தாரர்களின் ஊதிய உயர்வு குறித்து முடிவெடுக்க உள்ள இந்தக் குழுவுக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைவராக இருப்பார்.பெட்ரோலியத் துறைச் செயலாளர் விவேக் ரே இதன் முழு நேர உறுப்பினராக இருப்பார்.ரத்தின் ராய், மீனா அகர்வால் ஆகிய இருவரும் இக்குழுவின் பகுதி நேர உறுப்பினர்களாக இருப்பர்.முன்னதாக 7-வது ஊதிய குழு அமைப்பதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் ஒப்புதல் தந்திருந்தார். ஊதிய உயர்வு குறித்த பரிந்துரைகளை தர இக்குழுவுக்கு 2ஆண்டு அவகாசம் தரப்பட்டுள்ளது.இது தரும் பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும். 6-வது ஊதிய குழுவின் பரிந்துரைகள் 2006-ம் ஆண்டு அமலுக்கு வந்தது
திருக்குறள்
04/02/2014
அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாதவர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு
அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 23.08.2010க்கு முன்பு ஆசிரியர் தகுதித் தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாதவர்களின் விவரம் உடனடியாக அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்காணும் விவரம் கோரி அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மாதிரி படிவம் அனுப்பப்பட்டுள்ளது. இப்படிவத்தில் ஆசிரியர் பணிபுரியும் ஒன்றியம் மற்றும் பள்ளியின் பெயர், ஆசிரியர் பெயர் மற்றும் பதவி, அரசு உதவிப் பெறும் பள்ளி வகை (சிறுப்பான்மை / சிறுப்பான்மை அல்லாதது) , பணியிடம் காலி ஏற்பட்ட நாள், நியமன நாள் மற்றும் ஒப்புதல் அளிக்கப்படாததற்கான காரணம் ஆகிய விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
03/02/2014
ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை: முதல்வர் அறிவிப்பு
சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார். அப்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதன்மூலம், எஸ்.சி.,எஸ்.டி, பி.சி., எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். 2013 ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதியவர்களுக்கும் இந்த சலுகை உண்டு என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்
02/02/2014
ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் (Teachers Profile) ஆன்லைனில் பதிவேற்றம்
தொடக்கக் கல்வித் துறையில் கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர் அங்கமான ஆசிரியர் தன்விவரங்களை (Teachers Profile) ஆன்லைனில் பதிவேற்று ஆசிரியர் விபரப் படிவம்
Pls Click Here
EMIS - Personnel Information Teaching and Non-Teaching Staff - Form
பான்கார்டு:பழைய நடைமுறையை தொடர முடிவு
பான் கார்டுக்காக விண்ணப்பிப்பவர்களிடம் பழைய நடைமுறையையேதொடர நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில் பான் கார்டுவிண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப பாரத்துடன் அதற்கானதொகை மற்றும் சான்றிதழ்களின் நகலை மட்டும் காட்டினால் போதுமானதாக இருந்தது.
ஆனால்தற்போது குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அதனுடன் ஒரிஜினல் சான்றிதழ்களையும் அனுப்பி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு தரப்பில் எழுந்த கண்டனத்திற்கு பி்னனர் இந்த புதிய உத்தரவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் , பழைய முறையையே நடைமுறைப் படுத்தப்படும் எனவும் நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் தொழில் வரி சட்டங்கள் பற்றி அறிய
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு 25% க்கு குறையாமல் 35% க்கு மிகாமல் தொழில் வரியை உயர்த்திக் கொள்ளலாம். விதி எண் 13 ஐ பார்க்கவும்.
நகராட்சி பகுதியில் தொழில்வரி உயர்வு 25 சதவீதம் அதிகரிப்பு
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் தொழில்வரி உயர்த்தப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆணையாளர் சித்ரா வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 138, 13 உட்பிரிவு(2)ன் படியும் நகரமன்ற தீர்மானத்தின்படியும் நகராட்சி பகுதியில் உள்ளவர்களுக்கு 25 சதவீத தொழில்வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரையாண்டிற்கான மொத்த வருமானம்
ரூ21,001 வரை உள்ளவர்களுக்கு தொழில்வரி விதிப்பு இல்லை
ரூ21,001 முதல் ரூ30,000 வரை உள்ளவர்களுக்கு ரூ125ம்,
ரூ30,001 முதல் ரூ45,000 வரை உள்ளவர்களுக்கு ரூ313ம்,
ரூ45,001 முதல் ரூ 60,000 வரை உள்ளவர்களுக்கு ரூ625ம்,
ரூ60,001 முதல் ரூ75,000 வரை உள்ளவர்களுக்கு ரூ938ம்,
ரூ75,001 முதல் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ1250
வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய வரி விதிப்பின்படி நகராட்சி பகுதியில் உள்ளவர்கள் தொழில்வரி செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
பள்ளிகளில் பயிலாத 43 ஆயிரம் குழந்தைகள் மீண்டும் சேர்ப்பு: ஆளுநர் உரையில் தகவல்
பள்ளிகளுக்குச் செல்லாத 43 ஆயிரம் குழந்தைகள் முறையான பள்ளிக் கல்வித் திட்டத்தில் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா ஆற்றிய உரை: பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், கலர் பென்சில்கள், வண்ண சீருடைகள், மிதிவண்டிகள், மதிய உணவு, லேப்டாப், இடைநிற்றலைக் குறைப்பதற்கான ஊக்கத் தொகை போன்ற பல்வேறு திட்டங்களின் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. பள்ளிகளில் பயிலாதவர்கள் 51,447 குழந்தைகளில் இந்த ஆண்டு 43,838 குழந்தைகள் முறையான பள்ளிக் கல்வி முறை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொலைதூர கிராமங்கள் மற்றும் பழங்குடியின குடியிருப்புகளில் வசிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர சிறப்பு பயண வசதிகள் வழங்குதல், இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது போன்ற பதுமையான முயற்சிகளின் மூலமாகவே இதனை எட்ட முடிந்தது.
இந்தியக் கல்வித் திட்டத்தின் மீது யுனெஸ்கோ கடும் விமர்சனம்
இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் கல்வித்திட்டம் பற்றிய கூர்மையான விமர்சனத்தை யுனெஸ்கோ முன்வைத்துள்ளது
![]() |
clik here to view the report |
யுனெஸ்கோ தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியக் கல்வித் திட்டம் நடைமுறையிலிருந்து மாறுபட்டதாகவும், குழந்தைகளுக்கு சவாலானதாகவும் இருக்கிறது. வியட்நாம் நாட்டின் கல்வித் திட்டம், அடிப்படைத் திறன்களில் கவனம் செலுத்துவதாகவும், குழந்தைகளால் எளிதாக கற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் நிலைமை அதற்கு எதிராக இருக்கிறது.
ஆரம்பக் கல்வியை மேற்கொள்ளும் குழந்தைகள், அடிப்படை கணிதம் மற்றும் கல்வியறிவைப் பெறுவது முக்கியம். இதன்மூலம், பின்வரும் நிலைகளில் தங்களுக்கு கற்பிக்கப்படுவதை, அந்தக் குழந்தைகளால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
உலகிலேயே, வயதுவந்த கல்வியறிவுப் பெறாத நபர்கள், இந்தியாவில்தான் அதிகமாக உள்ளனர். குறைந்தபட்சம் 4 ஆண்டுகளை, பள்ளியில் செலவழித்து வெளிவருபவர்களில் 90% பேர் கல்வியறிவற்றவர்களாகவும், குறைந்தபட்சம் 5 முதல் 6 ஆண்டுகளை பள்ளியில் செலவழித்து வெளிவருபவர்களில் 30% பேர் கல்வியறிவற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்த சூழலில், பெண் குழந்தைகளின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தானில், மிகவும் எளிமையான கணித அறிவுக்கூட இல்லாமல், ஏழை மாணவிகள் இருக்கிறார்கள். உத்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில், ஐந்தில் ஒரு ஏழை மாணவிக்கு மட்டுமே, அடிப்படை கணித அறிவு இருக்கிறது.
கேரளா போன்ற மாநிலத்தில், ஒரு மாணவருக்கு, கல்விக்கு செலவழிக்கப்படும் தொகை ரூ.42,470 என்ற அளவிற்கு உள்ளது. ஆனால், பீகார் போன்ற மாநிலங்களில் அந்த தொகை வெறும் ரூ.6,200 மட்டுமே. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று (31.01.2014) வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயருகிறது. தற்போது 90% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100% அகவிலைப்படி பெறுவார்கள்
Dearness Allowance from January 01.01.2014 will be 100%
The rate of Dearness Allowance from January 2014 has been now confirmed by just released AICPIN for the month of December 2013. Labour bureau has released the All India Consumer Price Index Number for Industrial workers for the month of December 2013 in its website www.Labour bureau.nic.in to day. The AICPIN for the month of December is very much required to finalize the percentage of DA to be increased for central government employees from January 2014.
The CPI for Industrial workers is the only factor to determine the additional installment of DA to be released with effect from 01.01.2014, so we need to know the 12 months average of AICPIN from January 2013 to December 2013 to calculate the percentage of Dearness Allowance to be paid from January 2014. Gservants, in its article published on 30th August 2013, told that the Percentage of DA to be paid from January 2014 will be from 100% to 102% . With 7 months CPI points it was estimated that there would be 10% to 12% Hike from existing rate of 90%. The AICPIN for the month of November 2013 has almost confirmed the above estimate that it will not be less than 100%. Now the December months AICPIN confirmed that the rate of DA to be released from January 2014 will be exactly 100%. Even though there is a decrease in 4 points the rate of DA is 100%. The following table shows how the dearness allowance has reached 100% level.
இரட்டைப்பட்டம் தீர்ப்பு வருகிற 5.2.2013 - புதன்கிழமை வரும் என எதிபார்க்கப்படுகிறது
தமிழகத்தில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இரட்டைப்பட்டம் வழக்கின் இறுதி தீர்ப்பு வருகிற 5.2.2013 - புதன்கிழமை சென்னை உயர்நீதி மன்றம் முதல் அமர்வில் வரும் என எதிபார்க்கப்படுகிறது. இச்செய்தி நம்பகமான நபர்களால் நம்மிடம் தெரிவிக்கப்பட்டது. இத்தேதியில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. நல்ல செய்தி வெளியாக நாம் வாழ்த்துகிறோம்.
ஏட்டுச்சுரைக்காய்க்கு இங்கே வேலை இல்லை... கல்வி முறை
இலக்கில்லாமல் பறக்கும் பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரிய வேண்டிய குழந்தைகளின் சிறகை ஒடித்து... வகுப்பறைக்குள் அடைத்து வைத்து பாடங்களைச் சுமத்தி மழலை குணத்தை மரணிக்கச் செய்து விடுகிறது, நமது கல்விமுறை. வாத்தியார் சொல்லிக் கொடுப்பதை வாந்தி எடுக்கும் சமகாலக் கல்வி முறைகளுக்கு மத்தியில், குழந்தைகளின் இயல்புக்கு ஏற்ப விளையாட்டாக பாடம் கற்றுக் கொடுக்கும் வாழ்வியல் பள்ளிகளும் ஆங்காங்கு இருக்கத்தான் செய்கின்றன. குழந்தைகள் குஷியோடு கல்வி கற்கும் அப்படிப்பட்ட பள்ளிகளில் ஒன்றுதான் திருவண்ணாமலை அருகில் கணத்தம்பூண்டி கிராமத்தில் அமைந்திருக்கும் 'மருதம் பண்ணைப் பள்ளி’.
வழக்கமான பாடங்களுடன், விவசாயம், கைவினைத்தொழில், விதவிதமான விளையாட்டுகள்... என சொல்லிக்கொடுப்பதன் மூலமாக, 'பாடம் கற்கிறோம்’ என்கிற எண்ணமே இல்லாமல் விளையாட்டுப் போக்கில் படித்துக் கொண்டிருக்கிறார்கள், குழந்தைகள். பசுமையான நெல் வயல்கள், மண்ணால் கட்டப்பட்ட பசுமைக் கட்டடங்கள், மாணவர்கள் செய்த கைவினைப் பொருட்கள், விளையாடி மகிழும் குழந்தைகள்... என சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த பள்ளியில் ஆஜரானோம்.
பள்ளியைப் பற்றி விளக்கினார், தாளாளர்களில் ஒருவரான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஃபேட்ரிக் என்கிற கோவிந்தா.
பாகுபாடு பார்ப்பதில்லை!
''அருண், லீலா, பூர்ணிமா, ஆலீஸ் இவங்களோட நானும்னு ஐந்து பேர் சேர்ந்து, 2009-ம் வருஷம் இந்தப் பள்ளியைத் தொடங்கினோம். முதல் கட்டமாக வேடியப்பனூர் கிராமத்தில் 20 மாணவர்களோடு வாடகைக் கட்டடத்தில் பள்ளியை ஆரம்பித்தோம். பிறகு நண்பர்கள், தன்னார்வலர்களின் உதவியோடு 'தி ஃபாரஸ்ட் வே’ என்னும் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி... கணத்தம்பூண்டியில் ஆறு ஏக்கர் நிலம் வாங்கி, பள்ளிக்குத் தேவையான நிரந்தரக் கட்டடங்களைக் கட்டினோம். சிமெண்ட் பயன்படுத்தாமல், சுட்ட செங்கல், சுண்ணாம்பு, பாறைகள் மற்றும் மாட்டுச்சாணம் ஆகியவற்றை வைத்தே கட்டி, 2011-ம் ஆண்டு இங்கே வந்தோம்.
எங்களின் நோக்கம்... எல்லாவிதமான மக்களுக்கும் கல்வி கொடுப்பதுதான். வெள்ளைக்காரர், பணக்காரர், ஏழை என்ற பாகுபாடுகள் பார்ப்பதில்லை. ஏழைக் குழந்தைகளிடம் பள்ளிக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. மற்றவர்களிடம் பள்ளிச் செலவுக்காக குறைவான கட்டணத்தை மட்டும் வாங்கிக் கொள்கிறோம். தற்சமயம் 44 மாணவர்கள் படிக்கின்றனர். 10 ஆசிரியர்கள் இருக்கிறோம்'' என்று முன்னுரை கொடுத்த கோவிந்தா, தொடர்ந்தார்.
விளையாட்டு மூலம் கல்வி!
'பெரும்பாலான பள்ளிகள் வழக்கமான பாடத்தோடு, வாழ்க்கைக்குத் தேவையான கல்வியை ஊறுகாய் போலத்தான் கற்றுக் கொடுக்கிறார்கள். நாங்கள் இயற்கை விவசாயம், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, ஓவியம்... என அனைத்தையும் பாடமாகவே இணைத்திருக்கிறோம். மேலும், மாணவர்களுக்கு ஏட்டுக்கல்வியாக இல்லாமல் களப்பயிற்சியாகவே கற்றுக் கொடுக்கிறோம். அதனால், மாணவர்கள் பாடத்தைப் புரிந்து கொள்வதுடன், உணரவும் முடிகிறது. 12 வயது வரையுள்ள குழந்தைகளைச் சுதந்திரமாக, இயற்கையோடு இயங்க விடுவதால், வருங்கால வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பார்கள்.
நாங்கள் மாணவர்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பாடம் சொல்லிக் கொடுக்கிறோம். மூன்றரை வயது முதல், ஐந்தரை வயது வரை; 6 வயது முதல் 8 வயது வரை (யங்கர் குரூப்); 8 வயதுக்கு மேல் (மிடிலேஜ் குரூப்) என்று பிரித்து வைத்திருக்கிறோம். முதல் பிரிவிலிருக்கும் குழந்தைகள... எழுத்துகளை எழுதச் சொல்லி கட்டாயப்படுத்துவதில்லை. விளையாட்டு மூலமாகவே வார்த்தைகளைச் சொல்லிக் கொடுக்கும் முறையை வைத்திருக்கிறோம். தினமும் காலையில் 'நேச்சர் வாக்’ என்ற பெயரில் செடிகள், மரங்கள், காய்கறிகள், பறவைகள் என எல்லாவற்றையும் காட்டி, தொட்டு உணரச் செய்கிறோம். அவர்கள் எண்ணம்போல இங்கு விளையாடலாம், தூங்கலாம், மற்றவர்களுக்கு கதை சொல்லலாம், படம் வரையலாம்'' என்று ஆச்சர்யப்படுத்திய கோவிந்தா, தொடர்ந்தார்.
இங்கு வகுப்புகள் இல்லை!
''எங்கள் பள்ளியில் தற்போது மாநில அரசின் சமச்சீர்க்கல்வி ஆங்கிலப் பாடத்திட்டத்தில் ஐந்தாம் வகுப்பு வரை நடத்துகிறோம். வகுப்பறை, மரத்தடி என மாணவர்கள் விரும்பிய இடத்தில்தான் பாடம் நடத்துவோம். எல்லா மாணவர்களுக்கும் வாரத்தில் இரண்டு நாட்கள் தோட்ட வேலைக்கான வகுப்புகள் உண்டு. அதில் பாத்தி அமைப்பது, நடவு செய்வது, நெல் நடவு, ஜீவாமிர்தம் தயாரிப்பது... என பலவிதமான வேலைகளைச் செய்கின்றனர். 'மிடிலேஜ் குரூப்’ மாணவர்களுக்கு எனத் தனித்தனியாக இடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறோம். அதில் ஒவ்வொருவரும், முள்ளங்கி, வெண்டைக்காய், வெங்காயம், மிளகாய்... என பலவிதமான காய்கறிகளை சாகுபடி செய்கிறார்கள். மூன்று ஏக்கர் நிலத்தில் மாப்பிள்ளைச் சம்பா, பொன்னி நெல் ரகங்களை சாகுபடி செய்கிறோம். நெல் நடவு சமயத்தில் மாணவர்களுக்காக கொஞ்சம் இடத்தை ஒதுக்கி, அவர்களை நடவு செய்யச் சொல்கிறோம். அந்தப் பயிர் வளர வளர மாணவர்கள் அதிகமாக உற்சாகமடைகின்றனர்.
அனைத்தையும் கற்றுத்தரும் கள ஆய்வு!
விரும்பும்போது மாட்டுவண்டிப் பயணம், மாடுகள் மூலம் உழவு... என மாணவர்களே செய்து பார்க்கிறார்கள். வெள்ளிக்கிழமைதோறும், காடுகள் மற்றும் மலைப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறோம். அங்கு விதம்விதமானப் பறவைகளைப் பார்த்து உணர்கிறார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் குறைந்தபட்சம் 25 பறவைகளின் பெயர்களாவது தெரியும். மேலும், மாணவர்களை நேரடியாக ஏரிப்பாசன முறை, கோயில்கள், அவற்றைச் சுற்றியுள்ள கடைகள், காய்கறிச் சந்தைகள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளும்படியாக கள ஆய்வுக்கும் உட்படுத்துகிறோம். தண்ணீர், நெல், சோழர்கள், பாண்டியர், பல்லவர் எனப் பல தலைப்புகளில் ஆய்வு செய்யவும் கற்றுக் கொடுத்திருக்கிறோம்'' என்ற கோவிந்தா,
''இந்த அத்தனை முயற்சிக்கும் உறுதுணையாக இருந்து மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது இவர்கள்தான்'' என பள்ளி தாளாளர்களில் ஒருவரான அருண் மற்றும் அவருடைய மனைவி பூர்ணிமா ஆகியோரைக் காட்டினார்.
இயற்கையை நேசி..! உலகம் அழியுமா யோசி!
''இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, மூணு வருஷம் மும்பையில வேலை பார்த்தேன். அந்த வாழ்க்கைப் பிடிக்காம, சென்னைக்கே திரும்பிட்டேன். என்னோட தாத்தா, ரமண மகரிஷி கூடவே இருந்தவர். அதனால நான் அடிக்கடி திருவண்ணாமலைக்கு வந்து போவேன். அந்த சமயங்கள்ல மலையில் இருக்கும் மரங்கள், பறவைகளைப் பார்த்து, ஆசிரமத்திலேயே சேவை செய்ய அனுமதி கேட்டேன். 'சின்ன வயசு... இப்ப வேண்டாம்’னு சொல்லி, கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன் சார்புல நடத்தப்படுற 'தி ஸ்கூல்’ல தோட்டக்கலை டீச்சரா சேர்த்து விட்டாங்க. இயற்கை விவசாயத்தைக் கத்துக்கிட்டு, மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன்.
'டைம் வித் நேச்சர்’னு ஒரு திட்டத்தை உருவாக்கி, மரங்கள், பறவைகள் பத்தி சொல்லிக் கொடுத்து இயற்கையை நேசிக்க வெச்சேன். சென்னையில ஸ்பென்ஸர், மால்கள், ஏ.சி.னு பழக்கப்பட்ட பணக்காரக் குழந்தைகளுக்கு இது உற்சாகத்தைக் கொடுத் துச்சு. ஒருமுறை ஆரோவில் போகும்போது, கோவிந்தாவை சந்திச்சேன். அவர், திருவண்ணாமலை மலையில மரம் நட்டு 'சூழல் பூங்கா’ உருவாக்கினதைப் பத்திச் சொன்னார். 'வாங்களேன்... ஒரு ஸ்கூல் நடத்தலாம்’னு கூப்பிட்டார். உடனே நானும் என் மனைவியும் திருவண்ணாமலைக்கு வந்துட்டோம்'' என்றார், அருண்.
இதுதான் வாழ்க்கைக் கல்வி!
அவரைத் தொடர்ந்த பூர்ணிமா, ''எங்க மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க, ரூடால்ஃப் ஸ்டெய்னர் (Rudolf steiner) மற்றும் மாண்டிஸோரி (Montessori)ஆகிய இரண்டு முறைகளைப் பயன்படுத்துகிறோம். சில மாணவர்களுக்குப் படிக்கும் குறைபாடுகள் இருக்கும். அதைத் தகுந்த முறைகளோடு சொல்லிக் கொடுக்கும்போது, எல்லா மாணவர்களைப் போலவே அவர்களும் போட்டி போடுகின்றனர். பொதுவாவே, மாணவர்கள் ஆசிரியரைப் பார்த்து பயப்படக்கூடாது. இங்கு இருக்கும் எந்த மாணவனும் ஆசிரியரைப் பார்த்து பயப்படுவதில்லை. எல்லோரிடமும் சகஜமாக பேச கற்றுக் கொடுத்திருக்கிறோம்.
ஆண்டுக்கு ஒரு முறை, வெளியில் இருந்து பானை செய்யும் கலைஞர், சிலை செய்யும் சிற்பி, பனை ஓலையில் பொருட்கள் செய்ய கற்றுக்கொடுப்பவர், வாழை நார் பொருட்கள் தயாரிக்க கற்றுக் கொடுப்பவர்களை அழைத்து வந்து, கை வேலைகளைக் கற்றுக் கொடுக்கிறோம். இதன்மூலமாக, மாணவர்களே பலவிதமான பொருட்களை உருவாக்குகிறார்கள். அந்தப் பொருட்களை 'மருதம் மேளா’ நடத்தி விற்பனை செய்கிறோம். மேலும், ஓவியம் வரைவது, நாடகம் நடிப்பதிலும் மாணவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
மாலை நேரத்தில், பள்ளிக் கட்டடத்தின் சுவற்றில் பதிக்கப்பட்டுள்ள பாறைகளைப் பயன்படுத்தி, உச்சிக்கு ஏறும் 'ராக் கிளைம்பிங்’ மலையேறும் பயிற்சியை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 'போல்கர்-உத்தலார்’ தம்பதி கற்றுக் கொடுக்கிறார்கள்'' என்று உற்சாகம் பொங்கச் சொன்னார்.
'ஏட்டுச்சுரைக்காய்'களை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கும் பள்ளிகளுக்கு நடுவில், நிஜ சுரைக்காய்களை உற்பத்தி செய்யவே கற்றுத் தரும் இந்தப் பள்ளியைப் பற்றி பெருமிதத்தோடு யோசித்தபடி திரும்பி நடந்தோம்!
Subscribe to:
Posts (Atom)