திருக்குறள்

05/02/2014

பி.எட்., எம்.எட். தேர்வு முடிவுகள் வெளியீடு.TNTEU

2013-14ம் நிதியாண்டுக்கான வருமான வரி பிடித்தம் செய்வதற்கான மத்திய நிதித்துறையின் கையேடு


NOTE : REBATE OF RS.2000 FOR INDIVIDUALS HAVING TOTAL INCOME UP TO 5LAKHS (SECTION 87A) REFER PAGE NO.39




குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள்: 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.

மாநிலம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி தரப்படுகிறது.குழந்தைகளைப் பாதிக்கும் முக்கியப் பிரச்னைகள், அவர்களை எப்படிக் கையாள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
யுனிசெஃப் மற்றும் துளிர் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து இந்தப் பயிற்சியின் போது ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கான கையேடும் தயாரிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பாலியல் கொடுமைக்குள்ளானது குறித்து தெரியவந்தால் அவற்றை எவ்வாறு அணுக வேண்டும், புகார் அளிப்பதற்கான வழிமுறைகள், குழந்தைகளின் மன நிலையைப் புரிந்துகொள்ளுதல், அவர்களுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொள்ளுதல், எது பாலியல் கொடுமை என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
பிப்ரவரி 6,7-ல் பயிற்சி: மாநில அளவிலான கருத்தாளர்களுக்கு வியாழன் (பிப்.6), வெள்ளிக்கிழமைகளில் (பிப்.7) சென்னையில் பயிற்சி வழங்கப்படுகிறது.

அதன்பிறகு, மாவட்ட மற்றும் வட்டார அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். இந்த மாதத்துக்குள் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும் என கண்ணப்பன் தெரிவித்தார்

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு தள்ளுபடியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல முடிவு.

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் திரு.ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் திரு.சத்தியநாரயணன் அடங்கிய முதன்மை அமர்வில் முதல் வழக்காக வந்த இரட்டைப்பட்டம் வழக்கு நீதியரசர்களின் தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கின் ரிட் அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த ஒருங்கிணைப்பாளர்கள், அரசின் எதிர் மனு தாக்கலால் இந்த முடிவு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என சமாதானம் அடைந்தனர்.எனினும் வழக்கில் வெற்றியடைவதே நோக்கம் என்ற குறிக்கோளுடன் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வரும் வாரத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரட்டைப்பட்ட வழக்கு இறுதி தீர்ப்பு: இரட்டைப்பட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவு

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை சற்று முன் வெளியாகியுள்ளது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் மாண்புமிகு தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் இரட்டைப்பட்டம் செல்லாது எனவும், பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி மூன்று வருட பட்டப்படிப்பு மட்டுமே தகுதியானது எனவும் இதை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதியரசர்கள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.ஒரு வருட பட்டம் சார்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. தீர்ப்பு நகல் நாளை மறுநாள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்தீர்ப்பு சார்பான முழு விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

04/02/2014

ஒரு நாள் வேலை நிறுத்தம், டிட்டோஜாக் கூட்டத்தில் முடிவு

இன்று (4.2.2014) சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் கூட்டத்தில் வருகிற 6.3.2014 -வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என முடிவாற்றப்பட்டுள்ளது. 2.2.2013 மாவட்ட பேரணி முடிந்துள்ள நிலையில் அரசு எவ்வித முடிவும் எட்டாத நிலையில் டிட்டோஜாக் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.தமிழக அரசு மேலும் மௌனம் சாதித்தால் போராட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது. எனவே அனைத்து ஆசிரியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என டிட்டோஜாக் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடக்கக்கல்வித் துறையில் உள்ள இயக்கங்கள் உள்ளடக்கிய டிட்டோஜாக் சென்னையில் இன்று கூடி இம்முடிவை அறிவித்துள்ளது.

வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்படமாட்டாது நிதி மந்திரி ப.சிதம்பரம்

வருமான வரி சட்டத்திலோ அல்லது சுங்கவரி சட்டத்திலோ அல்லது கலால் வரி சட்டத்திலோ திருத்தம் செய்யும் யோசனை எதுவும் இல்லை என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

ஏழாவது ஊதியக்குழுவுக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைவராக இருப்பார்

ஏழாவது ஊதிய குழு உறுப்பினர்கள் நியமனத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்தந்துள்ளார். 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 30லட்சம் ஓய்வூதியத்தாரர்களின் ஊதிய உயர்வு குறித்து முடிவெடுக்க உள்ள இந்தக் குழுவுக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைவராக இருப்பார்.பெட்ரோலியத் துறைச் செயலாளர் விவேக் ரே இதன் முழு நேர உறுப்பினராக இருப்பார்.ரத்தின் ராய், மீனா அகர்வால் ஆகிய இருவரும் இக்குழுவின் பகுதி நேர உறுப்பினர்களாக இருப்பர்.முன்னதாக 7-வது ஊதிய குழு அமைப்பதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் ஒப்புதல் தந்திருந்தார். ஊதிய உயர்வு குறித்த பரிந்துரைகளை தர இக்குழுவுக்கு 2ஆண்டு அவகாசம் தரப்பட்டுள்ளது.இது தரும் பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும். 6-வது ஊதிய குழுவின் பரிந்துரைகள் 2006-ம் ஆண்டு அமலுக்கு வந்தது

மா.க.ஆ.ப.நி - 6 முதல் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புவியியல் வரைப்பட திறன் சார்பான நிலவரைப்பட நூல் (ATLAS) பயன்பாடு குறித்து CEO / DEO / DEEO / AEEO பள்ளிக்கு சென்று பார்வையிட்டு மாதந்தோறும் அறிக்கை அனுப்ப இயக்குனர் உத்தரவு

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாதவர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 23.08.2010க்கு முன்பு ஆசிரியர் தகுதித் தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாதவர்களின் விவரம் உடனடியாக அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்காணும் விவரம் கோரி அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மாதிரி படிவம் அனுப்பப்பட்டுள்ளது. இப்படிவத்தில் ஆசிரியர் பணிபுரியும் ஒன்றியம் மற்றும் பள்ளியின் பெயர், ஆசிரியர் பெயர் மற்றும் பதவி, அரசு உதவிப் பெறும் பள்ளி வகை (சிறுப்பான்மை / சிறுப்பான்மை அல்லாதது) , பணியிடம் காலி ஏற்பட்ட நாள், நியமன நாள் மற்றும் ஒப்புதல் அளிக்கப்படாததற்கான காரணம் ஆகிய விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

03/02/2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை: முதல்வர் அறிவிப்பு



சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார். அப்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று அறிவித்தார். 

இதன்மூலம், எஸ்.சி.,எஸ்.டி, பி.சி., எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். 2013 ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதியவர்களுக்கும் இந்த சலுகை உண்டு என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்

02/02/2014

ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் (Teachers Profile) ஆன்லைனில் பதிவேற்றம்

தொடக்கக் கல்வித் துறையில் கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர் அங்கமான ஆசிரியர் தன்விவரங்களை (Teachers Profile) ஆன்லைனில் பதிவேற்று ஆசிரியர் விபரப் படிவம்


Pls Click Here

EMIS - Personnel Information Teaching and Non-Teaching Staff - Form