திருக்குறள்

02/06/2014

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்-12.06.2014-உறுதிமொழி-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை.


2011-2012 ஆம் கல்வியாண்டில்RMSA மூலம் தரம் உயர்த்த சமர்பிக்கப்பட்ட தமிழக நடுநிலைப்பள்ளிகள்பட்டியல் ரத்துசெய்வதாக மத்திய HRDஅறிவிப்பு

TNPSC - DEPARTMENTAL EXAM - தேர்வில் குளறுபடி .....28.5.2014 FN,THE ACCOUNTS TEST FOR EXECUTIVE OFFICERS - 117 - தாளில் கொடுக்கப்பட்ட VI கணக்கு கேள்வியில் குளறு படி.25 மதிப்பெண் வழங்க கோரிக்கை.

VI வது கேள்வியில் கேட்கப்பட்ட கேள்வியில் தமிழ் வழியில் SPECIAL ALLOWANCE - Rs 1000 ஆனது கொடுக்கப்படவில்லை ஆனால் ஆங்கிலத்தில் SPECIAL ALLOWANCE - Rs 1000 என்று
கொடுக்கபட்டிருந்தது.

இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு ......அந்த SUPERVISORS களுக்கு எதுவும் தெரியவில்லை
பிறகு அவர்களில் சிலர் ஆங்கிலத்தில் கொடுத்த வினாத்தாள் தான் சரியானது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது படி போடவும் என்று அவர்களில் சிலர் கூறினர் ஒரு சில தேர்வு மையங்களில் தமிழ் வழியில் எழுதுபவர்கள் அந்த கேள்வியில் குறிப்பிட்டுள்ளது படி விடை அளிக்குமாறு அவர்களை அறிவுறுத்தியதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது ..............
இது குறித்து TNPSC - முறையான அறிவிப்பு வெளியிட்டு அந்த தேர்வில் தமிழ் வழியில் எழுதிய அரசு ஊழியர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்பதே எல்லோரது கோரிக்கையாக உள்ளது.

புத்தகங்கள் படிக்கும் சிறுவர்களை பாராட்டுங்கள்: தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த,அதிக புத்தகங்கள் படிக்கும் சிறுவர்களை,பள்ளியிலே பாராட்டுங்கள், என, தலைமை ஆசிரியர்களை, தொடக்க கல்வி இயக்குனர் கேட்டு உள்ளார். ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் சிறுவர், சிறுமியர்கள் பலரும், கம்ப்யூட்டர், மொபைல் போன்களில் கேம்ஸ் விளையாடுவது, "டிவி' யில் சிறுவர்களுக்கான சேனல்களை பார்த்தே, நாள் முழுவதும் முழ்கி போவது போன்ற காரணங்களால், வாசிப்பு திறன் குறைவாக காணப்படுகிறது. இதுபோன்ற குறைபாடுகளால், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட, தாய்மொழியை சரளமாக வாசிக்க முடியாமல், திணறுகின்றனர். இந்நிலையில், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்,உதவி கல்வி அலுவலகம் மூலம், தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், தொடக்க பள்ளிகளில், மாணவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்திட, அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ள புத்தகங்களை, மாணவர்கள் படிக்கும் வகையில் சூழ்நிலைகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

பள்ளிகளில் மாணவனின் பெயர் / பிறந்த தேதி / தந்தை பெயர் /சாதி மற்றும் முகப்பெழுத்து திருத்தம் குறித்து இயக்குநரின் அறிவுரைகள்

பள்ளிகல்வி இயக்குநரின் செயல்முறைகள் -ந .க .எண் 28192/எம்/இ3/2014.நாள்-09.05.2014-திருத்தம் குறித்து இயக்குநரின் அறிவுரைகள் -

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 6 முதன்மை கல்வி அலுவலர், 11 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்கள் 31.05.2014 அன்று ஒய்வுபெறுவதையொட்டி பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து இயக்குநர் உத்தரவு





புதிதாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால் மட்டுமே ஊதியம்

தமிழக அரசு 1.4.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய பென்ஷன் திட்டத்தை (சிபிஎஸ்) தமிழ அரசு ஊழியர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அவ்வாறு புதிதாக நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஏராளமானோர் புதிய பென்ஷன் திட்டத்தில் சேரவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் 1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து சிபிஎஸ் பதிவு எண் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய அரசு ஊழியர்கள் சிபிஎஸ் எண் பெறுவதற்கு அந்தந்த துறை தலைவர்கள், அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அதனை துறை தலைவர் வாயிலாக அரசின் டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கிருந்து சிபிஎஸ் எண் பெற்றுக்கொள்ள வேண்டும். 1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இனி ஊதியம் கோரப்பட வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான எண் பெறுவதற்காக மேலும் 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறை தலைவர்களும், தலைமை அதிகாரிகளும், சம்பள பிரிவில் உள்ள அதிகாரிகளும் புதிய ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து அதற்கான எண் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் குடிநீர்,கழிப்பறை வசதி: ஆய்வு நடத்த கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளில், மாணவர்களுக்கு செய்துதரப்பட்டுள்ள குடிநீர்,கழிப்பறை வசதி குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. துவக்க முதல் மேல்நிலை வரை, அனைத்துப்பள்ளிகளிலும், மாணவர்களுக்கு, கண்டிப்பாக சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதி செய்துதரப்பட வேண்டுமென, சமீபத்தில், சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி தலைமையில், கடந்த கல்வியாண்டில், பள்ளி வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், அரசு பள்ளிகளில், குடிநீர், கழிப்பறை வசதியின்றி, மாணவர்கள் அவதிப்படுவது தெரியவந்தது. அப்பள்ளிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டது. அதன்படி, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம், அனைவருக்கும் கல்வி திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்டவை மூலமாக, போதிய நிதி ஒதுக்கி, கட்டுமானப்பணிகள் நடந்தன. இந்நிலையில், அடுத்தமாதம் பள்ளிகள் துவங்க உள்ள நிலையில், அங்கு செய்துதரப்பட்டுள்ள குடிநீர்,கழிப்பறை வசதிகள் குறித்து மீண்டும் ஆய்வு செய்ய, முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறை உயர் அதிகாரி கூறுகையில்,"பள்ளிகள் துவங்கிய பின், இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அதில் குறைபாடு இருப்பின், உடனடியாக சரி செய்ய, சம்பந்தப்பட்ட தலைமையாசிரியருக்கு அறிவுரை வழங்கப்படும்.

அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில்மழை நீர் சேகரிப்பு அமைப்பு

அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில்மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஜூன் 30 குள் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

தமிழகத்தில் துவக்கக்கல்வி தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு வரும் கல்வியாண்டில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முழு அடிப்படை வசதிகள் உள்ள துவக்கப்பள்ளிகளில், புத்தகங்கள் வாசிப்பு, ஆங்கில உச்சரிப்பு, கணித உபகரணங்களை பயன்படுத்துவதில் மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த, ஆசிரியர்களுக்கு கூடுதல் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களில் எப்பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டாலும், விடை எழுதுதல் தொடர்பாக, தேர்வுகளுக்கு தயார்படுத்துதல், எளிதாக ஆங்கிலம், கணிதம் கற்பித்தல் குறித்து, ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடப்புத்தகங்கள், நோட்டுகள், கணித கருவிகள் வழங்கியதும், பயிற்சி அளிக்கப்பட உள்ளது என, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி ஒருவர் கூறினார்.

பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டி: அரசு உத்தரவு

பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை கண்டறிய, அனைத்து பள்ளிகளிலும், புகார் பெட்டி வைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், பொது இடங்கள், வீடுகளில் தனியாக இருக்கும், 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு தரப்படுகிறது. இக்குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை இல்லை. இதன் காரணமாக இக்குற்றங்கள் அதிகரிக்கின்றன. குறிப்பாக, பள்ளிகளில் படிக்கும் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகள் மீது, பாலியல் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என, குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புகளுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, தனியார், அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்தி, அறிக்கை வழங்கவேண்டும். பள்ளி சிறுமிகள் தைரியமாக, புகார் தெரிவிக்க ஏதுவாக, அனைத்து பள்ளிகளிலும், புகார் பெட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை இப்புகார் பெட்டியில் உள்ள மனுக்களை தலைமை ஆசிரியர்கள் எடுக்கவேண்டும். மாவட்ட கல்வி அதிகாரிகள், நன்னடத்தை அலுவலர், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட குழுவினர் விசாரித்து தீர்வு காணவேண்டும். புகார்களின் தன்மையை பொறுத்தே, சம்பந்தப்பட்ட குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும், என, சமூகநலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சலுகை: ஐகோர்ட் உத்தரவு

ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட சம்பளம், ஓய்வூதியப் பலன்கள் வழங்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கன்னியாகுமரி ராஜாதங்கம் உட்பட, நான்கு பேர், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:

அரசு துவக்கப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றோம். துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, மாற்றியமைக்கப்பட்ட சம்பள விகிதம், 1988 ஜூன் முதல் அமல்படுத்தப்பட்டது. எங்கள் பணிக்காலத்தில் இடைநிலை ஆசிரியர்களிலிருந்து, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்ட, 174 பேருக்கு, சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, சம்பள விகிதத்தை மாற்றியமைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. எங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சம்பள விகிதம், ஓய்வூதியப் பலன்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்களின் மனுவை, பள்ளிக் கல்வித்துறை செயலர் மற்றும் இயக்குனர் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது

கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமைச்சட்ட கையேடு...

பள்ளி ஜூன் 2 ல் திறக்கும் அன்றைய தினம் மாவட்டம் வாரியாக பள்ளியை இயக்குனர்கள் சிறப்பு பார்வை செய்திட உள்ளனர்