திருக்குறள்

27/11/2014

அரசு பணியில் பணிபுரிபவர்கள் TNPSC தேர்வு எழுத துறை முன்அனுமதி அவசியம்

TNPSC DEPARTMENTAL TEST BULLETIN – 2014

DOWNLOAD

DEPARTMENTAL TEST BULLETIN – 2014

Departmental Test Bulletin


Bulletin No.View/Download
Bulletin No. 18 dated 16th August 2014(contains results of Departmental Examinations, May 2014)View
Bulletin No. 17 dated 7th August 2014 - Extraordinary(contains results of Departmental Examinations, May 2014)View

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள இணை இயக்குனர்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக திரு. எம். பழனிசாமி அவர்களையும்,இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக திரு.கார்மேகம் அவர்களையும்,ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குனராக திரு.பாலமுருகன் அவர்களையும்,மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக திருமதி.ஸ்ரீதேவி அவர்களையும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 27.12.2014 அன்று தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் 04.12.2014 வரை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

தொடக்கக் கல்வி - அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக சென்னை / விழுப்புரம் மண்டல் அலுவலர்களுக்கு முறையே 02 & 03ம், 04 & 05.12.2014 அன்றும் வழங்கப்படவுள்ளது.

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் துறை முன் அனுமதி பெற்று / பெறாமல் உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் கோரும் நேர்வுகள் குறித்து அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

அகஇ - 2015-16ம் ஆண்டுக்கான புதிய தொடக்க / உயர் தொடக்கப் பள்ளிகள் தொடங்க கருத்துருக்கள் பெறுதல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்

அகஇ - பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ரூ.2000/- ஊதிய உயர்வு நவம்பர் 2014 மட்டும் வழங்கவும், நிலுவைத் தொகையை நிதி நிலைமை கருத்தில் கொண்டு வருகின்ற மாதங்களில் வழங்கப்படும் என உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள் பங்குபெற்ற ஆய்வுக் கூட்டம் இன்று 24/11/2014 அன்று அண்ணா பல்கலைகழக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வாய்வுக் கூட்டத்தில், உயர்திரு பள்ளிக்கல்வி துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்கள், அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் உயர்திரு.பூஜா குல்கர்னி உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஆய்வு கூட்டத்தில் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக நடைபெற்றதா என்பதை ஆய்வு செய்தனர்.காலாண்டுத் தேர்வில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த ஆண்டு 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் 95% தேர்ச்சி இலக்கை அடையவேண்டும் அதற்கான முழு முயற்சிகளை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
6,7,8 ஆகிய வகுப்புகளில் வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதத் திறன்கள் மாணவர்களுக்கு அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியம் தொகை திரும்ப வழங்குவது குறித்து அரசாணை மற்றும் தெளிவுரைகள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை என பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்

தொடக்கக் கல்வி - உதவிபெறும் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டு பணியாளர் நிர்ணயம் சார்பாக தொடக்கக் கல்வி இயக்குனரின் அறிவுரைகள்

தொடக்கக் கல்வி - ஆசிரியர்கள் எம்.பில்., பி.எச்.டி., ஆகிய மேற்படிப்புகளை அஞ்சல் வழிக் கல்வி மூலமாகவோ / பகுதி நேரமாகவோ / மாலை நேர வகுப்பு மூலமாகவோ பயின்றிட சார்ந்த உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே அனுமதி வழங்கிட இயக்குனர் உத்தரவு

TNOU - ADMISSION TO Ph.D., PROGRAMMES


ஆசிரியர் டிரான்ஸ்பர் நிறுத்தம் கல்வித்துறை செயலர் உத்தரவு


23/11/2014

INCOME TAX - மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் உயரக்கூடும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்தார்.

மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் உயரக்கூடும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்தார். டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: மாதச்சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள்நேரடியாக அதிக வருமான வரி செலுத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து வருமான வரி வசூலிப்பதை குறைத்தால், சம்பளப் பணம் அவர் களுக்கு முழுமையாகச் செல்லும். அவர்கள் அதிகம் செலவும் செய்வார்கள். இதன் மூலம் மறைமுகமாக வரியை பெற்றுக்கொள்ளலாம். அதே நேரம், வரி ஏய்ப்பு செய்பவர்களை தப்பவிடக்கூடாது. அரசுக்கு கிடைக்கும் வரி வருமானத்தில் பாதி அளவுக்கு மறைமுக வரிதான். அதாவது உற்பத்தி வரி, இறக்குமதி வரி, சேவை வரி என பல வரிகள் செலுத்தி வருகிறார்கள். என் உதவியாளர் எந்த அளவுக்கு மறைமுக வரி செலுத்துகிறாரோ, அதே அளவுக்கு நானும் மறைமுக வரி செலுத்துகிறேன். செலுத்தும் அளவுகளில் மாற்றம் இருக்குமே தவிர, நாம் அனைவரும் மறைமுக வரி செலுத்துகிறோம். கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொகை 2 லட்ச ரூபாயிலிருந்து 2.5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது. இப்போதைக்கு 2.5 லட்ச ரூபாய் வரை வரி செலுத்த தேவை இல்லை. மற்ற இதர விலக்குகளை சேர்த்துக்கொண்டால் 3.5 லட்சம் முதல் 4 லட்ச ரூபாய் வரை வரி இல்லாமல் சமாளிக்கலாம். 35,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நபர், சரியான சேமிப்பை செய்தால் அவர் வரி கட்டத் தேவை இல்லை. ஆனால், வாடகை, குழந்தைகளின் செலவு ஆகிய காரணங்களால் இந்த எல்லைக்குள் இருப்பவர்கள் பலரால் சேமிக்க முடியவில்லை. மேலும் வரி மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்க, தற்போது இருக்கும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பை குறைக்கும் திட்டம் இல்லை. அது சரியான வழியும் அல்ல. இந்த நிலையில், அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த விலக்கினை இன்னும் அதிகரிக்கலாம். நானும் அதைத்தான் விரும்புகிறேன். ஆனால் தற்போதைய அரசின் வருமான சூழ்நிலையில் இது சவாலான விஷயம். கடந்த முறை என்னுடைய எல்லைகளை தாண்டியும் பல சலுகைகளை வழங்கினேன். நேரடியாக வருமான வரியாக வசூல் செய்வதை விட, அவர்கள் செலவழிக்கும் பட்சத்தில் பொருளாதார பரிவர்த்தனைகள் அதிகரித்து, மறைமுக வரி வருவாய் உயரும். கிசான் விகாஸ் பத்திரம் கிசான் விகாஸ் பத்திரங்களை மீண்டும் அறிமுகம் செய்திருப்பது கருப்புப் பணத்தை ஊக்குவிப்பதுபோல் அமைந்துள்ளது என்று சில கட்சிகள் அச்சம் தெரிவித்திருப்பது தேவையற்றது. அந்தப் பத்திரத்தை வாங்கும் முதலீட்டாளர்கள் தங்களின் பெயர், விலாசம், பான் அட்டை எண்ணை கண்டிப்பாக அளிக்க வேண்டும். எனவே இந்தப் பத்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியாது. தீவிரவாத அமைப்புகள் கிசான் விகாஸ் பத்திரங்களை வாங்கக்கூடும் என்று எழுப்பப்படும் அச்சங்களும் தேவையற்றது. அப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.