திருக்குறள்
05/07/2015
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு தயாராகிறது புது படிவம்
வருமான வரி தாக்கல் செய்ய, புது படிவம் தயாராகி வருகிறது. பாஸ்போர்ட் உள்ளவர்கள், அது தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும். ஆண்டுதோறும், மார்ச், 31ம் தேதிக்குள் வருமான வரியை செலுத்த வேண்டும். ஜூலை, 31ம் தேதிக்குள், அதற்குரிய விரிவான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த நிதி ஆண்டான, 2014 - 15 க்கான, விரிவான கணக்கை தாக்கல் செய்யும் காலம், ஆகஸ்ட், 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏற்கனவே இருந்த படிவம், தற்போது எளிமையாக்கப்பட்டு உள்ளது. தேவையற்ற தகவல்கள் என, சில நீக்கப்பட்டு, படிவத்தின் அளவு சுருக்கப்பட்டு உள்ளது. புதிய தகவல்கள் சில சேர்க்கப்பட்டும், படிவம் தயார் செய்யப்பட்டது. ஆனால், புதிய தகவல்கள் சிலவற்றுக்கு, கணக்கு கொடுப்பது கடினம் என, கருத்து பெறப்பட்டது. இதனால், புதிய படிவத்தில் மாற்றங்கள்செய்து, மீண்டும் படிவம் தயார் செய்யப்படுகிறது.
படிவம் முழுமையாகத் தயார் செய்து வருவதற்கு, இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதனால், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, ஆகஸ்ட் வரை, நீட்டிப்பு அளிக்கப்பட்டுஉள்ளது. ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள், 'ஆன் - லைன்' மூலம் கணக்கை தாக்கல் செய்யவது கட்டாயம். அதற்கு கீழ் உள்ளவர்களே, படிவம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, புதிய படிவம் உருவாக்குவதன் மூலம், கணக்கை தாக்கல் செய்வதில் சிக்கல் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆகஸ்டு வரை கால நீட்டிப்பு
மத்திய அரசின் புதிய கொள்கைப்படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் படிவங்களை எளிமைப்படுத்தியும், புதிய தகவல்களை சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.
புதிய தகவல் சேர்ப்பின் கீழ், வருமான வரி செலுத்துவோர், ஆண்டுதோறும், அவர்கள் சென்ற வெளிநாட்டு விவரம், அதற்கான செலவுகளை, வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் தெரிவிக்க வேண்டும். 'இப்புதிய அணுகுமுறை தேவையற்றது. வெளிநாட்டில் எவ்வளவு செலவு செய்தோம்; எதற்கு செலவு செய்தோம் என்ற விவரங்களை தெரிவிப்பது கடினம்' என, பொதுமக்கள் தரப்பில் கருத்து கூறப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்டு, 'பாஸ்போர்ட் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும்' என, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதனால், புதிய படிவம் உருவாக்குவதற்கும், அதை வினியோகித்து, கணக்குகளைப் பெறவும், ஆகஸ்ட் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் 10 நாள் பயிற்சி
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இதுவரை ஆண்டுக்கு 5 நாள்களாக இருந்த பணியிடைப் பயிற்சி இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 10 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பணியிடைப் பயிற்சி ஆசிரியர்களுக்கு எந்த வகையில் உதவியாக இருந்தது என அவர்களிடம் ஆய்வும் நடத்தப்பட உள்ளது. அதோடு, இந்தப் பயிற்சியில் அவர்கள் என்ன தெரிந்துகொண்டார்கள் என்பதைப் பதிவு செய்வதற்காக பயிற்சி அட்டைகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு பயிற்சியின்போது, கடந்த சில ஆண்டுகளில் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு பொதுத் தேர்வுகளுக்காக தயாரிக்கப்பட்ட சி.டி.க்களின் பிரதிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அதோடு, அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களது அனுபவத்தை ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . மேலும், பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களில் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதில்லை. எனவே, இந்தப் பாடங்களில் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்காக ஆசிரியர்களுக்கு தனியான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
ஆங்கில உச்சரிப்பை கற்பிக்க 'சிடி' பள்ளிகளில் ஆய்வு செய்ய உத்தரவு.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் நோக்கில் வினியோகிக்கப்பட்ட பிரத்யேக 'சிடி' கற்பித்தலில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்களை கொண்டு ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்த பிரத்யேக 'சிடி'க்கள் தயாரிக்கப்பட்டன. மொத்தம், 43 வகையான 'சிடி'க்கள் தயாரித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்டது. இந்த, 'சிடி'க்களை எல்.சி.டி., புரஜக்டர் மற்றும் லேப்டாப், கம்ப்யூட்டர் பயன்படுத்தி ஆங்கில ஆசிரியர்கள் கற்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதற்கான, கையேடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளிகள் திறந்து ஒரு மாத காலம் முடிவடைந்துள்ள நிலையில், மாணவர்களின் உச்சரிப்பில் உள்ள மாற்றம், 'சிடி' முறையாக ஆசிரியர்களால் பயன்படுத்தபடுகிறதா என்பதை ஆய்வு செய்யவும். அதற்கான, பதிவுகளை அனுப்பிவைக்கவும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்களால் ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இம்முறையை செயல்படுத்தாத பள்ளிகள், ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தரப்பபில் கூறப்பட்டுள்ளது.

Subscribe to:
Posts (Atom)