திருக்குறள்

20/08/2013

ஆசிரியர்கள் மற்ற பணிகளுக்கு அனுமதிப்பதில்லை- RTE சட்டப்படி அறிவிப்பு


Union Minister of State for Human Resource 
Development Mr. Shashi Tharoor அவர்களுக்கும் 
National Knowledge Commission உயர் அதிகாரிகள் 
அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.

Non teaching duties, such as that of manning poll booths and collecting data for surveys, cuts into the available teaching time and also undermines the professional status of teachers. என்று தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

August 18 Business standard பத்திரிக்கை செய்தியில் கீழ்காணும் செய்தி வெளிவந்துள்ளது.

"...No teacher shall be deployed for non-educational purposes other than the population census, disaster relief duties or duties relating to elections to the local authority or the state legislatures or Parliament, as per the Right to Education Act (RTE), 2009," an official release said today quoting Tharoor. 

The minister also said the National Knowledge Commission has noted that the imposition of a wide range of non-teaching duties, such as that of manning poll booths and collecting data for surveys, cuts into the available teaching time and also undermines the professional status of teachers. 

He said these activities should be shared among a wider range of public employees or even those hired specifically for the purpose, and the burden of such work on teachers must be reduced, the release said.
_________________________________________________________________

கல்வி சாராத பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்துவதால் எழக்கூடிய நிலைபற்றி தேசிய அறிவுசார் ஆணையம் குறிப்பிட்டதை அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் ஏற்படும் விளைவு பற்றி குறிப்பிடுகையில் " and also undermines the professional status of teachers" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Undermines என்ற வார்த்தையின் அர்த்தம் பார்க்க அகராதியை பார்த்தேன். Destroy secretly the foundation - அஸ்திபாரத்தை அழி , என்று இருந்தது. 

Non teaching duties, such as that of manning poll booths and collecting data for surveys, cuts into the available teaching time and also undermines the professional status of teachers. என்று தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

மேலும் இது போன்ற ஆசிரியர்களுக்கான சுமைகள் குறைக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார். நன்றி சொல்கிறோம். 


தற்போது தேர்தல்பணி என்ற பெயரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் என்ற பணி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் பணி , 10 ஆண்டுக்கு ஒருமுறை எடுக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு, பேரிடர் சூழல்கள் தவிர பிற பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்தகூடாது என RTE சட்டம் கூறுகிறது. கல்விபணியை முழுமையாக ஆசிரியர்களை செய்ய அனுமதிக்கவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். ஆனால் தேர்தல் பணி என்ற பெயரில் ஆண்டு முழுவதும் ஆசிரியர்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர் என்ற பெயரில் வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல், தொலைபேசி எண் சேகரித்தல் என்ற பணியை கொடுத்து ஆசிரியர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகிவருகின்றனர். இது தேர்தல் பணி என்ற ஒரே வார்த்தையில் யாரும் எதுவும் பேச முடியாத ஒரு நிலையே உள்ளது. 

விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம். National Knowledge commission பணி நினைவில் நிறுத்தி நன்றி சொல்லவைக்கும் ஒன்றாக உள்ளது. நன்றி நன்றி நன்றி.

இலவச பொருட்களை பள்ளியிலேயே வழங்க கோரிக்கை

பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பொருட்கள் பற்றி RTI தகவல்

சாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு PP 750/- வழங்கியது தவறு. பணத்தை அரசு கணக்கில் செலுத்த தணிக்கை குழு அறிக்கை

இறந்தவரின் வாரிசுக்கு கருணை வேலை கொடுக்கலாமா?

அரசு ஊழியர் ஒருவர் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், கருணை அடிப்படையில் குடும்பத்தினருக்கு வேலை அளிக்க வேண்டும் என்றகட்டாயம் கிடையாது.அதேநேரத்தில் பணி நியமனம் கோரும் அந்தக் குடும்பத்தின் நபர், அந்தப் பணிக்குரிய கல்வித் தகுதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் பி.எஸ்.சௌகான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு மேலும் கூறியதாவது: பணியில் இருக்கும்போது உயிரிழந்த ஊழியரின் குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதார நிலையை, சம்பந்தப்பட்ட துறையின் தகுதிவாய்ந்த அதிகாரி ஆராய வேண்டும்.வேலை வழங்கவில்லை எனில், அந்த குடும்பத்தால் நெருக்கடியை சமாளிக்க முடியாது என்பதை உறுதிசெய்து கொண்ட பின்னால்தான், அந்தக் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். ஆனால் அந்த வேலைக்கு நியமிக்கப்படுபவர், அதற்கான கல்வித் தகுதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ராஜஸ்தான் மாநில உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, எம்ஜிபி கிராம வங்கி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையின் போதுதான் நீதிபதிகள் மேற்கண்டவாறு தீர்ப்பு அளித்தனர்.இந்த வங்கியில் மூன்றாம் நிலை ஊழியராக பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் கடந்த 2006, ஏப்ரல் 19-ஆம் தேதி மரணமடைந்து விட்டார்.இதையடுத்து அவரது மகன் சக்ரவர்த்தி சிங், தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று, அந்த வங்கிக்கு 2006, மே மாதம் 12-ஆம் தேதி விண்ணப்பம் அனுப்பினார். அதை அந்த வங்கி நிராகரித்து விட்டது.இதையடுத்து, ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். சக்ரவர்த்தி சிங்குக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குமாறு வங்கி நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து வங்கி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்தது. கருணை அடிப்படையில் பணி வழங்க, உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி மற்றும் டிவிஷன் பெஞ்ச் கூறிய காரணங்கள், சட்டத்தின் பார்வையில் வலுவூட்டுவதாக இல்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறி, அந்த தீர்ப்பை நிராகரித்தனர்.

As on July - 2013 , Information on Secondary Grade Teacher/ B.T Assistant/ Special Teacher Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu

Bharathiyar University Distance B.Ed Result may 2013

GENERAL ELECTION LOKSABA - 2013 ANNEXURE - I FORMS-----வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் பணிக்காக ஆசிரியர்களின் விவரங்களை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்புமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு.




CLICK HERE TO DOWNLOAD - GENERAL ELECTION LOKSABA - 2013 ANNEXURE - I FORMS...


தேர்தல் ஆணையம் கேட்டுள்ள ஆசிரியர்களின் விபரப் படிவத்தில் வினா எண் 14ஆ இல் ஆசிரியரின் வாக்காளர் பாகம் எண் மற்றும் தொடர் எண் கேட்கப் பட்டுள்ளது. வாக்காளரின் பாகம் எண் மற்றும் தொடர் எண்ணை இணையதளம் மூலம் அறியலாம். 


மறைந்த பாரத பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வருடந்தோறும் ஆகஸ்ட் 20 அன்று நல்லிணக்க நாள் உறுதி மொழியை அரசு அலுவலகங்களில் எடுக்க அரசு கடிதம் வெளியீடு

அரசு முதன்மை செயலர், (பொதுத்துறை ) சென்னை அவர்களின் கடிதம் 22608/ பொது-I / 2013-9 நாள் : 13.08.2013.இல் 20.8.2013 அன்று மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் (69–வது ) பிறந்த நாளை முன்னிட்டு 20.8.2013 முதல் 03.9.2013 


வரையுள்ள காலத்தை நல்லிணக்க நாட்களாக அனுசரிக்க வேண்டும் என்றும், 20.8.2013 அன்று காலை 11.00 மணிக்கு நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.


நல்லிணக்க நாள் உறுதிமொழி 

நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன். மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்.


விரைவில் "கற்க கசடற'என்ற புதிய மாத இதழ் பள்ளிக்கல்வித்துறை திட்டம்

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் "கற்க கசடற' என்ற புதிய மாத இதழ் விரைவில் வெளியிடபோவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நடப்பு கல்வியாண்டின், கடந்த ஜூன் மாதத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாத இதழ் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த ஜூன் மாதம் இதற்கான பணிகள் துவக்கப்பட்டது.கற்க கசடற என்ற தலைப்பில் வெளிவர உள்ள இந்த மாத இதழில் துறை சார்ந்த சிறப்பு நிகழ்வுகள், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், சிறப்பு செய்திகள், முப்பருவ கல்வி முறை விளக்கங்கள், தேர்ச்சி சதவீதம், மாணவர்களின் சேர்க்கை, ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் இடம்பெற்று இருக்கும்.பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. ஒரு மாத காலத்தில் இந்த மாத இதழ் வெளியிடப்படும்' என்றார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பி.எட்., படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய கல்விக் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, பி.எட்., பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள், உடனடி சேர்க்கைக்காக வரவேற்கப்படுகின்றன. 

அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், இரண்டு ஆண்டுகள் கற்பித்தல் அனுபவமும், பட்டமும் பெற்றிருக்க வேண்டும். தமிழகஅரசு இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். 

விண்ணப்பங்கள், ஆக.,19 முதல் செப்.,6 வரை, சேர்க்கை மையம், பல்கலை நகர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை -21, என்ற முகவரியில் வழங்கப்படும். 

இத்தகவலை, தொலைநிலைக்கல்வி இயக்கக கூடுதல் இயக்குனர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

18/08/2013

டிவி ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள்

கிராமங்கள் தொடங்கி பெரிய நகரங்கள் வரை டிவி இல்லாத வீடுகளே இல்லை என கூறினால் அது மிகையாகாது.

டிவி சேனல்களில் ஒளிபரப்பப்படும் நெடுந்தொடர்கள் வீட்டு பெண்களை வசியப்படுத்தி வைக்கின்றன. இளைஞர்களிடம் டிவி பார்க்கும் பழக்கம் அதிக அளவில் உள்ளது.

ஆனால் அளவுக்கு அதிகமாக டிவியை பார்க்கும் குழந்தைகளிடம் இது பயங்கரமான எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. நியூசிலாந்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. 

ஓடாகோ பல்கலையில் 5 முதல் 15 வயது வரையிலான 1000 குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொண்டு வந்தது. அவர்கள் அனைவரும் 26 வயதுடையவரைப் போன்று செயல்படுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பருவத்தில் டிவி-க்கு அடிமையானவர்களுக்கும், சமூக குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளின் மனத்தில் ஆழமாக பதிவதால், தானும் அவ்வித செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கிறது.

அளவுக்கு அதிகமாக டிவியை பார்பவர்களின் மனநிலை, நடவடிக்கைகள் வித்தியசமாக இருக்கின்றன. குறிப்பாக புத்திகூர்மை, சமூக பார்வை மற்றும் பெற்றோருக்கு கட்டுப்படுதல் உள்ளிட்டவைகள் எதிர்மறையாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

அதிகபடியாக டிவி பார்க்கும் பழக்கமே, சமூக குற்றங்களை அதிகரிக்கவும், இளம் குற்றவாளிகளை உருவாவதற்கும் காரணமாக அமைகிறது. எனவே டிவி பார்க்கும் பழக்கத்தை குறைத்தாலே சமூக குற்றங்கள் பாதி குறையும் என ஆய்வு தெரிவிக்கிறது.

குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒன்று முதல் 2 மணி நேரம் டிவி பார்ப்பதே உகந்தது என அமெரிக்க கழகத்திற்கு குழந்தைநல மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர்.

அதிக உணர்ச்சி வசப்பட வைப்பது, காழ்ப்பு உணர்ச்சி போன்ற பழக்கங்கள் டிவி மூலமாகவே குழந்தைகள் கற்றுக்கொள்வதாக ஆய்வு தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயல்களால் கீழ்படிதல் இல்லாமை, கல்வி தரம் குறைவது, சமூக ஒழுக்கம் பாதிப்பு உள்ளிட்ட விளைவுகள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை பட்டம் பெற்றவர்கள் வாதம் இதோ ! நாங்கள் என்ன தவறு செய்தோம் .......எங்கள் மீது தவறு எந்த தவறும் இல்லை ....மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப் பட்ட தகவல் தொகுப்பு இதோ மற்றும் நாளிதழ் மூலம் பெறப் பட்ட செய்திகளின் தொகுப்பு இதோ உங்களின் பார்வைக்கு.




மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் அடுத்த மாதம் 25ஆம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டம் நடைபெற இருப்பதாக அதன் அகில இந்தியப் பொதுச் செயலாளர் க.ஈசுவரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாவட்டக் கிளைக் கூட்டம் தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது. 

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அகில இந்தியப் பொதுச் செயலாளர் க.ஈசுவரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மத்திய அரசு ஆறாவது ஊதியத்தைத் குழுவில் அறிவித்த ஊதியம் தர தமிழக அரசு மறுத்து வருவதால், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஒரு லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை 20 ஆண்டுகளாகப் பெற்று வந்த நிலையில், ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தாததால் ஆசிரியர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

இதன்மூலம் தமிழக ஆசிரியர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.8,550 குறைவாக ஊதியம் பெறுகின்றனர். இந்தப் பாதிப்பு ஓய்வூதியம் பெறும் வரை இருக்கும்.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ஊதியத்தை வழங்குவதோடு, ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்து வேலைவாய்ப்பக முன்னுரிமைப்படி நியமனம்

செய்ய வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அடுத்த மாதம் 25ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும். இதற்கான ஆயத்தக் கூட்டங்கள் இதுவரை 22 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது.

முதல் நாள் மறியலில் பங்கேற்க இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர். ஆசிரியைகளுக்காக ஓதுக்கப்பட்டுள்ள இரண்டாம் நாள் மறியலில் 3,500 பேர் பங்கேற்கின்றனர் என்றார் அவர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர், சம்பளத்துடன் ஒப்பிடுகையில், மாநில அரசின் இடை நிலை ஆசிரியருக்கு, மாதந்தோறும், ரூ.8,550 இழப்பு ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மூன்று நபர் கமிஷன் பரிந்துரைப்படி, மாநில அரசின் கீழ் செயல்படும், இடை நிலை ஆசிரியருக்கு, அடிப்படை, தர ஊதியத்தில் அதிக அளவில் வேறுபாடு உள்ளது. 
தற்போது நியமிக்கப்படும், மத்திய அரசு பணியாளருக்கு, அடிப்படை ஊதியம் ரூ.9,300, தர ஊதியம் 4200, அகவிலைப்படி (80%) ரூ.10,800 என மொத்தம் ரூ.24,300 கிடைக்கிறது.

மாநில அரசின் இடைநிலை ஆசிரியருக்கு, அடிப்படை ஊதியம் 5200, தர ஊதியம் 2800, தனி சம்பளம் ரூ.750, அகவிலைப்படி (80%) ரூ.7,000 என மொத்தம் ரூ.15,750 வழங்கப்படுகிறது. இதன்படி மத்திய அரசு பணியாளருடன் ஒப்பிடுகையில், மாநில அரசின் இடை நிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,550 மாதந்தோறும் இழப்பீடு ஏற்படுகிறது.
ஒருநபர் கமிஷன் அறிக்கையில், இடை நிலை ஆசிரியர்கள், கிராமத்தில் இருப்பதால் சம்பளம் போதும், என,பொருத்தமில்லாத காரணத்தை கூறினர். 
இதனால், அரசிடம் முறையிட்டதன்பேரில், மூன்றுநபர் கமிஷன் அமைக்கப்பட்டது. 

மாநில அரசின் கீழ் பணியாற்றும், பாராமெடிக்கல் பிரிவில், டிப்ளமோ முடித்தவருக்கு, அடிப்படை சம்பளம், ரூ.9300 வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதே தகுதி உள்ள, இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்படவில்லை.