திருக்குறள்

13/09/2013

DISE - புள்ளி விவரத்தை சிறந்த முறையில் பூர்த்தி செய்ய 13.9.2013 இன்று EDUSAT வழிமூலம் தேசிய அளவில் கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உத்தரவு

17.09.2013. அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களின் கூட்டம்

அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றி 1.6.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் தேர்வுநிலை / சிறப்புநிலை எய்தி ஓய்வுபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தொ.ப.த.ஆ பணிநிலையில் தேர்வுநிலை / சிறப்புநிலை ஆணை வெளியிட்டதை இரத்து செய்து, தீர்ப்பாணை பெற்ற 1528 நபர்களுக்கு மட்டும் பொருந்தும் என உத்தரவு

தீர்ப்பாணை பெற்ற 1528 நபர்களுக்கு மட்டும் பொருந்தும் என உத்தரவு

அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றி 1.6.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் தேர்வுநிலை / சிறப்புநிலை எய்தி ஓய்வுபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தொ.ப.த.ஆ பணிநிலையில் தேர்வுநிலை / சிறப்புநிலை ஆணை வெளியிட்டதை இரத்து செய்து, தீர்ப்பாணை பெற்ற 1528 நபர்களுக்கு மட்டும் பொருந்தும் என உத்தரவு

GO.179 SCHOOL EDUCATION DEPT DATED.06.09.2013 - SELECTION / SPECIAL GRADE HM PAY INCLUDING SG TR SERVICE ON OR BEFORE 01.06.1988, SANCTIONED ORDER TEACHERS THOSE WHO ARE WORKING BETWEEN 01.06.1988 TO 31.12.1995 - 1528 TEACHERS LIST REVISED & 1528 TRS NAME LIST ORDER CLICK HERE...

ஆசிரியர் கல்வி - அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு பணிமுன் பயிற்சி வகுப்புகளுக்கான அறிவுரை வழங்கி SCERT உத்தரவு

நிதித்துறை அரசாணையில் "தமிழ் பண்டிட்" வார்த்தையால் தமிழாசிரியர்கள் பாதிப்பு

நிதித்துறை, 2013ல் வெளியிட்ட, அரசாணை எண், 263ல், "தமிழ் பண்டிட்" என்ற வார்த்தையால், தர ஊதியம் பெறுவதில், பட்டதாரி தமிழாசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதை மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக தமிழாசிரியர்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. 

கல்வித் துறையில், 1989, 2008ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண், 686, 161ல், தமிழ் பண்டிட் என்ற பணியிடம் நிலை மாற்றம் செய்யப்பட்டு, கணித, அறிவில் ஆசிரியர்கள் போல், பள்ளி உதவி ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) என்று அழைக்கப்பட்டு வருகின்றனர்; தமிழ் பண்டிட் என்ற பணியிடம் இல்லை.
ஆறாவது ஊதியக்குழுவில், தமிழாசிரியர்களுக்கு, 4,400 ரூபாய் என, தர ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு, பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கான, 4,600 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு, 2011 முதல் பணப்பலன்களை பெற்று வருகின்றனர். பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு இணையான, தொழில் கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு தர ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.
இவர்களது கோரிக்கையின் பலனாக, தர ஊதிய உயர்வு வழங்க, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன் படி, நிதித்துறை 2013ல் வெளியிடப்பட்ட அரசாணை, 263ல், தமிழ் பண்டிட் என்ற வார்தையும் இடம் பெற்றுள்ளது. தமிழ் பண்டிட் பணியிடம் இல்லாத நிலையில், இந்த வார்த்தை இடம் பெற்றுள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் தமிழாசிரியர்கள், தர ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு, பாதிக்கப்பட்டுள்ளனர். நிதித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ் பண்டிட் என்ற வார்த்தையை நீக்கி, திருத்தம் செய்ய வேண்டும் என, தமிழாசிரியர்கள் சார்பில், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநில கணக்காயரால் நிர்வாகிக்கப்படும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குதாட்கள் விவரம் கருவூலத்தில் பெற்றுக்கொள்ளலாம்

2011-12 ஆம் ஆண்டிற்கான அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்த சந்தா, அரசு பங்களிப்பு அடங்கிய கணக்குத்தாட்கள் விவரம் சம்பந்தப்பட்ட அரசு சார் கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
2012 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் ஆசிரியர்கள் பணிபுரிந்த இடத்தின் அடிப்படையில் கணக்குத்தாட்களின் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட கருவூலத்தை அணுகி 2011-12ஆம் ஆண்டிற்கான விவரங்கள் பெற்றுக்கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்வி அலுவலகங்களில் சிறப்புப் பதிவேடு தயார் செய்து பராமரிக்க உத்தரவு

சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தின்படி அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்கள், தொடக்க, பள்ளிக் கல்வி இயக்ககங்களில் பதிவேடுகள் தயார் செய்து பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பதிவேட்டில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளரது பெயர், பணிபுரியும் இடம், கோரிக்கை மனு வழங்கிய நாள், கோரிக்கை விவரம், தீர்வு செய்திருந்தால் அதன் விவரம் ஆகியவற்றை அட்டவணைப்படுத்தி பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவேடுகளை உயர் அலுவலர்களின் ஆய்வுக்குள்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

12/09/2013

தொடக்கக் கல்வி - AEEO / AAEEO மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு (ANNUAL INSPECTION) பள்ளிகள் பார்வை சார்பாக அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு

பணியிடத்தில் மாரடைப்பால் இறந்தால் தொழில்சார்ந்த மரணமாக கருதப்படும்: மும்பை உயர்நீதிமன்றம்

பணியிடத்தில் ஊழியர் எவரேனும் மாரடைப்பால் இறக்க நேரிட்டால், அதை தொழில்சார்ந்த மரணமாகவே கருதவேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பகுராம் மஹாதிக் என்பவரது மனைவி பாக்யஸ்ரீ தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கே. ஆர். ஸ்ரீராம் தலைமையிலான அமர்வு இத்தீர்ப்பை அளித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு தனியார் தொழிற்சாலையில் ஃபிட்டராக இருந்த பகுராம் மஹாதிக், கடந்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இ.எஸ்.ஐ. உறுப்பினராக இருந்த பகுராம் மஹாதிக்கின் மரணத்தையடுத்து, அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், பணியிடத்தில் மாரடைப்பால் உயிரிழந்ததை தொழில்சார்ந்த மரணமாகக் கருத முடியாது என்று கூறி இழப்பீடு தர இ.எஸ்.ஐ. அலுவலகம் மறுத்துவிட்டது.

அதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் பாக்யஸ்ரீ வழக்கு தொடர்ந்தார்.

இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "பணியிடத்தில் மாரடைப்பு ஏற்பட்டதாலேயே, அது பணியின் காரணமாகத்தான் ஏற்பட்டது என்று கூறமுடியாது' என்று வாதிட்டார்.

அவரது வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், ""பகுராமுக்கு, சம்பவ தினத்தன்றுதான் முதன்முதலாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, அவருக்கு மாரடைப்பு ஏறபட்டுள்ளதாக கூறப்படவில்லை.

பணிச் சுமை காரணமாகவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதை மறுக்கும் வகையில் இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷன் தரப்பில் ஆதாரம் ஏதும் சமர்ப்பிக்கபடவில்லை'' என்று குறிப்பிட்டது.

எனவே, உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நான்கு வாரங்களுக்குள் உரிய இழப்பீட்டை இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, ஓட்டுச்சாவடி மைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

அக்.,1ல் சட்டசபை தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.அன்று முதல் அக்.,31 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெறும்.

இந்த திருத்த பணிகள், அந்தந்த ஓட்டுச்சாவடி மையத்தில் நடக்கிறது. இதற்காக, ஓட்டுச்சாவடி மையம் அமைந்துள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு திருத்தபணிகள், விண்ணப்பங்கள், அடிக்கடி ஏற்படும் பிழைகள் குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள், இந்த பயிற்சியை அளிப்பர். அக்.,1ல் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலை, அக்.2, ல் காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும், சிறப்பு கிராம சபை கூட்டத்தில், அந்த கிராமத்தில் பதிவு செய்த வாக்காளர் பட்டியலை பெயர் வாரியாக பொதுமக்கள் முன்னிலையில் படித்து, திருத்தம் செய்யவும் கூறப்பட்டுள்ளது.

மூன்று நபர் குழுவின் அடிப்படையில் வழங்கப்பட்ட திருத்திய சிறப்பு ஊதியம் பெறுவது குறித்த அரசின் தெளிவுரை வழங்கி உத்தரவு

பள்ளிகளில் தேசிய பார்வையற்றோர் சங்கம் மூலம் பள்ளிகளில் நிதி திரட்ட அரசு அனுமதித்து ஆணை

தொடக்கக் கல்வி - சிறந்த பொது நிர்வாகத்திற்கான "பிரதமர் விருது" 2013 தகுதியுடையோர் விண்ணப்பங்கள் அனுப்ப கோரி இயக்குநர் உத்தரவு