திருக்குறள்
05/10/2013
04/10/2013
நவீனமாகிறது கல்வித்துறை: மேகவழிக் கணினிக் கல்வி அரசு பள்ளியில் அறிமுகம்
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் 2 அரசுப் பள்ளிகளில் மேகவழிக்கல்வி முறை (கிளவுட் கம்ப்யூட்டிங்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேகவழிக் கல்வி முறை என்பது கணினிகளின் இணைப்புகள் மூலம் மாணவர்களின் அறிவுத்திறனை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு புதுமையான கல்விமுறை ஆகும். இதன்மூலம் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியிலிருந்தபடியே எந்த ஒரு பள்ளியோடும் அதன் மாணவர்களுடனும் பாடங்களை பகிர்ந்துக் கொள்ள முடியும்.
தங்களின் பாடங்கள் சம்மந்தமான தகவல்களை அவர்கள் பள்ளியில் உள்ள கணினி, மடிக்கணினி,செல்பேசி ஆகியவற்றின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக ஒரு குறிப்பிட்ட மென்பொருளை தங்களது கணினி மற்றும் செல்பேசிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் 2 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மேகவழிக் கல்வி முறை திட்டத்தை செயல்படுத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு அதற்காக லேர்னிங்லிங் பவுண்டேஷன் என்ற நிறுவனம் மற்றும் டெல் கணினி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
2 அரசு பள்ளிகளில் அறிமுகம்
இதைத்தொடர்ந்து, சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக மேற்கண்ட இரு நிறுவனங்களும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 11 மடிக்கணினிகள், 13 கையடக்க கணினிகள் ஆகியவற்றை இரு அரசு பள்ளிகளுக்கு வழங்க முன்வந்தன. அதுமட்டுமல்லாமல் இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு தொழில்நுட்ப உதவியாளரையும் பணியமர்த்தின.
இந்தியாவில் முதல்முறை
இந்த நிலையில், மேகவழிக்கல்வி முறையை சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். மடிக்கணினிகளையும், கையடக்க கணினிகளையும், சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.
பள்ளியில் மேகவழிக்கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி.சபீதா, பள்ளிக் கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
03/10/2013
வாக்காளரின் பாகம் எண் ,அடையாள அட்டை எண் மற்றும் தொடர் எண்ணை இணையதளம் மூலம் அறியலாம். சொடுக்கவும்
தேர்தல் ஆணையம் கேட்டுள்ள ஆசிரியர்களின் விபரப் படிவத்தில் வினா எண் 14ஆ இல் ஆசிரியரின் வாக்காளர் பாகம் எண் மற்றும் தொடர் எண் கேட்கப் பட்டுள்ளது. வாக்காளரின் பாகம் எண் மற்றும் தொடர் எண்ணை இணையதளம் மூலம் அறியலாம். சொடுக்கவும்
Search Your Name in Electoral Roll by EPIC Number
Search Your Name in Electoral Roll by EPIC Number
மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களை, நேரடியாக பள்ளிகளுக்கே அனுப்பி,வினியோகிக்க அரசு நடவடிக்கை
மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களை, நேரடியாக பள்ளிகளுக்கே அனுப்பி,வினியோகிக்க அரசு நடவடிக்கைஎடுத்து வருகிறது.
அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு, நோட்டு புத்தகம், சைக்கிள், பை, காலணி,அறிவியல் உபகரணம், லேப்-டாப் உட்பட 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. தற்போது, இப்பொருட்கள் சி.இ.ஓ.,- டி.இ.ஓ., க்களிடம் ஒப்படைக்கப்பட்டு,தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகின்றன. இதில், பல்வேறு சிரமங்கள் உள்ளன.
இலவச பொருட்களை பெற, ஒவ்வொரு முறையும் வாடகை வாகனங்களை எடுத்துக்கொண்டு,தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோர், மாவட்ட தலைநகருக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்களின் பணி, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில், அந்தந்த கல்வியாண்டிற்கு தேவையான, இலவச பொருட்களை, பள்ளிகளிலேயே நேரடியாக இறக்கி, தாமதமின்றி வினியோக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
"இப்பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்" எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு அலுவலரும் ஆண்டுக்கு 180 பள்ளிகளைப் பார்வையிட வேண்டும்; 46 பள்ளிகளில் ஆண்டாய்வை மேற்கொள்ள வேண்டும்.தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு
குறைந்தது 10 நாள்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து,அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்விஇயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆய்வுக்குச் செல்லும்போது மாணவர் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்து குறைந்தது 10 நாள்களுக்கு மேல் பள்ளிக்கு வராத குழந்தைகளைக் கண்டறிய வேண்டும்.
மாணவர் பள்ளிக்கு வராத காரணங்களை அந்தந்த வகுப்பு மாணவர்களிடமே கேட்டறிந்து ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலமாக அந்த மாணவரை பள்ளிகளுக்கு மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளில் உள்ள கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்றவை சார்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பங்கள், பழுதடைந்த கட்டடங்கள் போன்றவை குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற வகையில் இருந்தால் அவற்றை உடனடியாக ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும்போது அனைத்து வகுப்புகளுக்கும் சென்று கற்றல்,கற்பித்தல் நிகழ்வுகளைப் பார்வையிட வேண்டும். கற்றல் அடைவுத் திறன், வாசிப்புத் திறன், எழுதும் திறன், பொது அறிவு ஆகியவற்றை மாணவர்களிடம் உரையாடியும்,எழுத, படிக்கச் சொல்லியும் அறியவேண்டும்.
பழமொழிகள் கூறுதல், பேசுதல், நடித்தல், படைப்பாற்றல் செயல்பாடுகள் போன்றவை பள்ளிகளில் தவறாமல் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ஒவ்வொரு மாதமும் முறையாக நடைபெறுவது குறித்தும், அந்தக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் பராமரிக்கப்படும் மாணவர் சேர்க்கைப் பதிவேடு, ஆசிரியர் வருகைப் பதிவு,அரசு நலத்திட்டப் பொருள்கள் வழங்கப்படும் பதிவேடு உள்ளிட்டவற்றை சரிபார்க்க வேண்டும். இலவச புத்தகங்கள், நோட்டுகள், பஸ் பாஸ் உள்ளிட்ட பொருள்கள் உரிய நேரத்தில் சென்றடைந்துள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
ஆண்டாய்வு மேற்கொள்ளும்போது ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் அவற்றை களைவதற்கு குறிப்பிட்ட பள்ளிக்கு அவகாசம் வழங்க வேண்டும். அதன்பிறகு, மீண்டும் அந்தப் பள்ளியை ஆய்வுசெய்து குறைபாடுகள் களையப்பட்டுள்ளனவா என பார்க்க வேண்டும்.
ஆண்டாய்வுக்குச் செல்லும்போது நாள் முழுவதும் பள்ளியிலேயே இருந்து ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளைப் பார்வையிடும்போது குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் பள்ளியில் இருந்து செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு அலுவலரும் ஆண்டுக்கு 180 பள்ளிகளைப் பார்வையிட வேண்டும்; 46 பள்ளிகளில் ஆண்டாய்வை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளை ஆய்வு செய்யும்போது இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
ஆன்-லைனின் அரசு ஊழியர், ஆசிரியர்கள் சம்பள அறிக்கை: அரசின் புது திட்டம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளம் குறித்த அறிக்கையை ஆன்-லைனில், கருவூலத்திற்கு அனுப்பும் புதிய திட்டம் பற்றிய ஒத்திகை நடக்கிறது. ஒவ்வொரு மாத இறுதியில், குறிப்பிட்ட தேதிக்குள் அரசு ஊழியர், ஆசிரியர்களின் வருகைப்பதிவை கணக்கிட்டு சம்பளம் குறித்த அறிக்கை கருவூலத்திற்கு பேப்பர் நகலாக வழங்கப்பட்டது.
கருவூலம் மூலம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி, அவரவர் வங்கி கணக்கில் இ.சி.எஸ்.,முறையில் சம்பளத்திற்குரிய தொகை செலுத்தப்பட்டது. இம்முறையில் சிறிது மாற்றம் செய்து, ஒவ்வொரு துறையிலும் இருந்து சம்பளம் பற்றிய தகவல்களை சி.டி., க்கள் வடிவில் வழங்கும் உத்தரவு தற்போது, நடைமுறையில் உள்ளது. இதை எளிமைப்படுத்தும் வகையில், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் இருந்து நேரடியாக ஆன்-லைன் மூலமே மாவட்ட கருவூலங்களுக்கு சம்பளம் உட்பட இதர பணப்பலன் கணக்குகளை அனுப்பும் புதிய திட்டம் அமலாகிறது.
முதல் கட்டமாக கருவூலம் மற்றும் ஒருசில அரசு துறைகளுக்கான சம்பள அறிக்கை குறித்த தகவல் ஆன்-லைனில் அனுப்பி ஒத்திகை பார்க்கப்பட்டது. இதன் செயலாக்கத்தை பொறுத்து படிப்படியாக அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கப்படும் என, கருவூலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முறைகேடுகளை தவிர்க்க அனைத்து பணிகளையும் தேர்வுத்துறையே நேரடியாக செய்ய முடிவு
அரசுப்பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்க, அனைத்து பணிகளையும் தேர்வுத்துறையே நேரடியாக செய்ய முடிவு செய்துள்ளது. அரசு பொதுத்தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதனையடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை தேர்வுத்துறை எடுக்க முன் வந்துள்ளது.
அரசுப் பொதுத்தேர்வுகளில் அனைத்துப்பணிகளையும் தேர்வுத்துறை நேரடியாக செயல்படுத்தவுள்ளது. பொதுத்தேர்வு விடைத்தாளில், விடைகளை எழுதும் மாணவர்களின் படமும், ரகசிய கோடு எண் பதிவு செய்யும் முறையை தேர்வுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேர்வு அறை குறித்து (ஹால் பிளானிங்) மாவட்ட கல்வி அலுவலகங்களில் முடிவு செய்து, மாணவர்கள் எந்த அறையில் தேர்வு எழுதுவார்கள், என்பது கணிக்கப்பட்டு வந்தது. தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை ஆகியோரையும், மாவட்ட கல்வி அலுவலகம் தான் நியமனம் செய்து வந்தது.
இனி வரும் காலங்களில் தேர்வுத்துறை நேரடியாக தேர்வு அறை குறித்தும், அதில் எந்த மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்பது குறித்தும் திட்டமிட்டு பள்ளிகளுக்கு நேரடியாக அனுப்பவுள்ளது.
வரும் பொதுத்தேர்வுகளில் அறைக்கண்காணிப்பாளர்கள், மற்றும் பறக்கும் படையினரையும் தேர்வுத்துறையே முடிவு செய்து, பணி மூப்பு அடிப்படையில் நியமிக்க உள்ளது. தேர்வு குறித்த அனைத்து பணிகளிலும் நேரடியாக தேர்வுத்துறை முடிவு செய்யவிருப்பதால், விருப்பு, வெறுப்புகளுக்கு தகுந்தாற்போல், இனி தேர்வுப்பணிகளில் அதிகாரிகள் நியமிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகளை முற்றிலும் தவிர்க்க இந்த அதிரடி நடவடிக்கையை தேர்வுத்துறை செயல்படுத்தவுள்ளது. முதல்கட்டமாக இதற்கான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில், புதிய முறையில் தேர்வுப்பணிகள் கண்காணிக்கப்படவுள்ளது.
02/10/2013
ஆர்ப்பாட்டம், போராட்டத்தை வீடியோ மூலம் கண்காணிக்க புதிய திட்டம் தொடக்கம்
சென்னை யில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக் கூட்டம், பேரணி உள்ளிட்டவைகளை வீடியோவில் படம் பிடித்து நேரடியாக கமிஷனர் அலுவலகத்தில் இருந்து பார்க்கும் வசதி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. தலைமையிட துணை கமிஷனர் சரவணன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இதை அறிமுகம் செய்து வைத்து கூறியதாவது:
சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெறும் இடங்களில் நடைபெறும் காட்சிகளை போலீஸ் கேமராமேன் பதிவு செய்வார். அந்த காட்சிகளை கமிஷனர் ஜார்ஜ் நேரடியாக பார்வையிட்டு அதற்கேற்ப உத்தரவுகளை பிறப்பிப்பார். முதல்கட்டமாக போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு மூன்று கேமராக்களும், சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு மூன்று கேமராக்களும் வழங்கப்பட்டுள்ளது. கமிஷனர் உத்தரவுப்படி 200 ரோந்து வாகனங்களில் கேமரா பொருத்தப்பட உள்ளது.
இதன் மூலம் சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிகளை கமிஷனர் நேரடியாக பார்க்கலாம். கமிஷனர் உத்தரவின்பேரில் மற்ற அதிகாரிகளும் இதை பார்த்து உத்தரவு பிறப்பிக்கலாம்.
போலீசாருக்கு 2700 கேமராக்கள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் கூடுதல் கேமராக்கள் விரைவில் வாங்கப்பட உள்ளது என்றார்.
முன்னதாக விமான நிலையம், ஸ்பென்சர் பிளாசா, போர் நினைவு சின்னம், சென்ட்ரல் ரயில் நிலையம், அமெரிக்க தூதரகம், அண்ணா சதுக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து போலீசார் எடுத்த வீடியோ காட்சிகளை நேரடியாக காட்டி பத்திரிகையாளர்களுக்கு துணை கமிஷனர் சரவணன் விளக்கம் அளித்தார். சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே, 54 கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை கமிஷனர் நேரடியாக பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகளிடம் கண்டிப்பு
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் தங்களுக்குள் கூடி நின்று பேசிக் கொண்டு இருந்தனர். பணி செய்யாமல் அவர்கள் பேசிக் கொண்டு இருந்த காட்சியை கமிஷனர் ஜார்ஜ் பார்த்து கோபம் அடைந்தார். உடனடியாக வாக்கி டாக்கியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கூப்பிட்டு கண்டித்தார்.
அதன்பிறகுதான் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு, நிகழ்ச்சியை கமிஷனர் நேரடியாக( பரீட்சார்த்த முறையில் ஏற்படுத்தப்பட்ட வசதி) பார்த்து கொண்டு இருக்கிறார் என்பது தெரிய வந்தது. இதேபோல் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு டோஸ் விழுந்தது.
Subscribe to:
Posts (Atom)