திருக்குறள்

27/04/2014

இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்

இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். 
அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :
1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்க
2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்
3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க..
4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.netக்குமெயில் பண்னுங்க!
5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்.
6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க.
7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம

ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம் ( பழையது )


மே 28 வரை அதிகாரிகளை சந்திக்க கூடாது: முதல்வர், அமைச்சர்களுக்கு பிரவீன்குமார் தடை

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது: ''தேர்தல் விதிமீறில்கள் குறித்த புகாரின் அடிப்படையில் இதுவரை 2,518 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். போட்டியிட முடியாது இந்த தேர்தல் விதிமீறல்கள் நிரூபிக்கப்பட்டால், குற்றச்சாட்டப்பட்டவர் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.செலவு கணக்கு ஏப்ரல் 24ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்குகளை ஜூன் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அந்த செலவு கணக்குகளை சரிபார்க்க ஜூன் 8ஆம் தேர்தல் பார்வையாளர்கள் தமிழகம் வருவார்கள். வாக்கு எண்ணிக்கை வாக்கு எண்ணிக்கையின்போது 42 மையங்களும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். முதல்வருக்கு தடை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அரசு அலுவலகங்களுக்கு வழக்கம் போல் செல்லலாம். ஆனால், அவர்கள் மே 28ஆம் தேதி வரை அதிகாரிகளை சந்தித்து பேசக்கூடாது. புதிய அறிவிப்புகளையும் அரசு வெளியிடக் கூடாது'' என்றும் அவர் கூறியுள்ளார்

திமுக ஆட்சியில் நடந்த பள்ளி ஆசிரியர் இடமாற்றம் குறித்து திடீர் கணக்கெடுப்பு

திமுக ஆட்சியின்போது அரசு பள்ளிகளில் நடந்த ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து தமிழகம் முழுவதும் கணக்கெடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 23,522 அரசு தொடக்கப் பள்ளிகள், 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகள், 2,844 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 2,488 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த அரசு பள்ளிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான
இடமாறுதல் மே அல்லது ஜூன் மாதம் நடைபெறுவது வழக்கம். இடமாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களில், பணிமூப்பு உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகள், முப்படையினரின் வாழ்க்கை துணை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், இதய நோயாளிகள், கணவன்-மனைவி இருவரும் பணியாற்றுபவர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆசிரியர் இடமாறுதல் பொது இடமாறுதலின்போது எந்தெந்த பள்ளிகளில் காலியிடங் கள் உள்ளன என்ற பட்டியல் வெளியிடப்பட்டு ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான இடங்களை தேர்வுசெய்வார்கள். வருடாந்திர பொது இடமாறுதல் நீங்கலாக, நிர்வாக நலன் கருதி அவ்வப்போது இடமாற்றங்கள் செய்யப்படும். சென்னை உள்பட முக்கிய இடங்களில் ஆசிரியர் காலியிடங் கள் மறைக்கப்பட்டு அரசியல், நிர்வாக சிபாரிசு அடிப்படையில் வேண்டியவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது என்றும், இதற்கு லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது என்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகி றார்கள். தென்மாவட்டங்களுக்கு இடம் மாறிச்செல்ல எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்க ஒரு சில ஆசிரியர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப் படுகிறது. ரகசிய கணக்கெடுப்பு இத்தகைய சூழலில், கடந்த திமுக ஆட்சியி்ல் (2006-2011) தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நடந்த ஆசிரியர், தலைமை ஆசிரியர் இடமாறுதல் குறித்து ரகசிய கணக்கெடுப்பு நடத்த அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திமுக ஆட்சிக்காலத் தில் நடந்த ஆசிரியர் இட மாறுதல் குறித்த விவரங்களை கணக்கெடுக்குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதா வும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திடீர் கணக்கெடுப்பு தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரிட மிருந்து அதிகாரப்பூர் வமாக உத்தரவு ஏதும் அனுப்பப்பட்டதா? என்பது தெரியவில்லை.

21/04/2014

2013-14ம் ஆண்டுத் தேர்வு தேர்ச்சி சுருக்கம், தரநிலை தேர்ச்சி அறிக்கை, மதிப்பெண் அறிக்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஆசிரியர்கள் விடுப்பு விவரம், பள்ளி வேலை நாட்கள் விவரம் படிவங்கள்

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான முக்கிய குறிப்புகள்

தொடக்கக் கல்வி - அரசு அனுமதி / அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 723 மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளில் 2014-15ம் ஆண்டுக்கான சேர்க்கை இரத்து செய்து இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு : பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெறுகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர்.

தேர்தல் பணி தொடர்பான சில விவரங்கள்!

ஒருவரே இரண்டு முறை ஓட்டுபோடலாம்!

PROXY VOTE:
ராணுவத்தில் பணியாற்றுபவர்கள், தங்களது பெயர் உள்ள வாக்குச்சாவடி பகுதியில் அவரது வாக்கைப் மற்றொருவர் மூலம் பதிவு செய்யலாம். வாக்குரிமை வீரர் ஏற்கெனவே இதுகுறித்த விதிமுறையை கடைபிடித்து உரிய மனு செய்திருந்தால் தொடர்புடைய வாக்குச்சாவடிக்கு வாக்குப் பதிவு செய்யும் உரிமை வழங்கப்படுகிறது.

யார் மூலம் (மனைவி அல்லது குடும்பத்தினர்) தனது வாக்கைப் பதிவு செய்ய விண்ணப்பித்தாரா அவர் முதலில் அவருடையை வாக்கைப் பதிவு செய்து விட்டு மீண்டும் வந்து ராணு வவீரரின் வாக்கைப் பதிவு செய்யலாம்.

49M RULE:
ஓட்டுச்சாவடிக்குள் தகராறு செய்பவரையும், யாருக்கு ஓட்டுப்போகிறேன் என வெளிப்படையாக அறிவித்தவரையும், 'ஓட்டளிக்க மறுக்கப்படுகிறது' என, பதிவு செய்து (17A) வெளியேற்ற வேண்டும்.

சேலஞ்ச்' ஓட்டு:
ஓட்டுப்போட வாக்காளர் வரும்போது, பூத் ஏஜன்ட் ஆட்சேபனை தெரிவித்தால், 'சேலஞ்ச்' ஓட்டு பதிவு செய்யலாம்.
அதற்கு 'பூத் ஏஜன்டிடம்' 2 ரூபாய் பணம் பெற்று, ஓட்டுப்போடுபவரின் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
ஆவணம் சரியாக இருந்தால் ஓட்டளிக்க அனுமதிக்கலாம்.
சேலஞ்ச் ஓட்டு பதிவு செய்யப்பட்டால், 2 ரூபாய் அரசுக்கு சொந்தம்;
சரியான ஆவணங்கள் இல்லாவிட்டால், 2 ரூபாயை பூத் ஏஜன்ட்டிடம் திரும்ப கொடுத்து, ஓட்டு போட
முயன்றவரை போலீசில் ஒப்படைக்க வேண்டும்.

TENDER VOTE:
சரியான ஆவணங்களுடன் ஓட்டுப்போட வரும்போது, அவரது ஓட்டு ஏற்கனவே பதிவு செய்திருந்தால், ஓட்டுப்போட வந்தவருக்கு 'டெண்டேடு' ஓட்டளிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
இதற்காக ஓட்டுச்சாவடிக்கு 20 'பேலட் பேப்பர்கள்' வழங்கப்பட்டிருக்கும். 'பேலட் பேப்பரில்' முத்திரை வைத்து ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும்.
இவர்களை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிக்க கூடாது.

BLINDER's VOTE:
கண் பார்வையற்றவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
மின்னணு இயந்திரத்தை தடவிப் பார்த்து, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.

ஓட்டுப்பதிவு அலுவலர்கள், அந்தந்த சட்டசபை தொகுதிக்குள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால், அவர்களுக்கு வழங்கியுள்ள 'யுனிகோடு' எண்களை பயன்படுத்தி, பணியாற்றும் ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போட்டுக்கொள்ளலாம்.
வேறு தொகுதியில் தேர்தல் பணியமர்த்தப்பட்டால், தபால் ஓட்டு போட வேண்டும்.

தேர்தல் அலுவலர்களுக்கு தேவையான காலை, மதிய, இரவு உணவை சொந்த பொறுப்பில் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
கட்சியினரிடம் இருந்து உணவு, குடிநீர், குளிர்பானங்கள், நொறுக்குத்தீனி பெறுவது சட்டப்படி குற்றம்.

சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது: தமிழகத்தில் இருந்து 22 பேர் தேர்வு

சிறந்த ஆசிரியருக்கான, தேசிய விருதுக்கு, தமிழகத்தில் இருந்து, 22 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5, தேசிய அளவில், ஆசிரியர் தின நாளாக கொண்டாடப்படுகிறது. அந்நாளை ஒட்டி, ஆசிரியர் பணியை சிறப்பாக செய்பவர்கள், தேசிய மற்றும் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு, செப்., 5ல், விருது வழங்கப்படுகிறது. தேசிய விருதுக்கு உரிய ஆசிரியரை தேர்வு செய்ய, மத்திய அரசு சார்பில், மாநிலத்திற்கு ஒரு கல்வியாளர் நியமிக்கப்படுகிறார். இவர், மாநில குழுவுடன் சேர்ந்து, சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்புவார். பட்டியல் இறுதியானதும் பெயர் அறிவிக்கப்படும். கடந்த 2013ம் ஆண்டுக்கான விருது, வரும், செப்., 5ல் வழங்கப்பட உள்ளது. உத்தரகண்ட், ராஜஸ்தான், டில்லி உள்ளிட்ட, பல மாநிலங்களில், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் பட்டியலை, மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்திற்கான பட்டியல், இன்னும் வெளியாகவில்லை. கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'தமிழகத்திற்கு, 22 விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த ஆசிரியர் பட்டியலை இறுதி செய்து, மத்திய அரசுக்கு அனுப்பி விட்டோம். மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும், விரைவில், பட்டியல் வெளியாகும். தமிழக அரசு வழங்கும் விருதுக்கான தேர்வுப் பணி, ஜூனில் துவங்கும்' என, தெரிவித்தது.

18/04/2014

மறக்க முடியாத மாணவர்கள்: திருமதி.சித்ரா குமரேசன் அவர்கள் உரை, இன்றைய சுட்டி விகடனின் தொலைபேசியில்! மறக்காம கேளுங்க ஆசிரிய நண்பர்களே!


அன்பு மிக்க ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்!

சுட்டி விகடன் இதழ் வழங்கும் மறக்க முடியாத மாணவர்கள் என்னும் தலைப்பிலான தொலைபேசி வழி பகிர்வில் இன்று (18.04.2014) 17,அஸ்தினாபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியை திருமதி.சித்ரா குமரேசன் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.

ஆசிரியை திருமதி.சித்ரா குமரேசன் பற்றி...

1.மாணவர்களுக்கு கற்பித்தலுடன் தனது பணி முடிந்தது என கருதுபவர் அல்ல. மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுபவர்.மாணவர்களிடம் தன்னம்பிக்கை விதையை விதைப்பவர்.

2.இவரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி இவரின் மாணவர்கள், கணினிவழிக் கற்பித்தலுக்கேற்ற வகையில் பாடப் பொருளை வடிவமைத்ததுடன், ஆசிரியர்களுக்கு கருத்தாளர்களாக செயல்பட்டுள்ளனர். இவரின் இந்த சாதனைக்காக இந்திய குடியரசு தலைவர் மேதகு.பிரணாப் முகர்ஜி இவருக்கு ஐ.சி.டி. ICT தேசிய விருது வழங்கி பெருமை படுத்தியுள்ளார்.

3.கணினியை திறம்பட கற்பித்தலுக்கு பயன் படுத்தியதற்காக மைக்ரோ சாப்ட் நிறுவனம் சிறந்த ஆசிரியர் என்ற விருதை அளித்து,இவருக்கு வாஷிங்டனில் நடைபெற்ற அகில உலக கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள அழைத்து இவரது திறமையை பாராட்டியுள்ளது.

4.சூரிய ஒளி ஆற்றலை எந்தெந்த வழிகளில் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தலாம் என்ற தலைப்பின் கீழ் இவரது வழிகாட்டுதலின் படி செயல் பட்ட இவரது மாணவர்கள் தேசிய அளவிலான விருதை Design for Change – காக அகமதாபாத்தில் பெற்றனர்.

5.தமிழக அரசின் 3,4, 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தக ஒருங்கிணைப்பாளராக சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்.

6.மாணவர்களை மட்டுமல்லாமல் ஆசிரியர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பவர். ஆசிரியர்களின் படைப்பு திறனை வெளிக்கொணர வழிகாட்டுவதுடன், அவர்களின் சிறந்த படைப்புகளை தனது இணைய தளத்தில்http://teachmicroinnovative.wikispaces.com/ வெளியிட்டு ஊக்கப்படுத்தி வருகிறார். ஆசிரியர்கள் தங்கள் படைப்புகளை இவரின் மின்னஞ்சலுக்கு chitra71pums@rediffmail.com அனுப்பினால் அவற்றை தனது இணையதளத்தில் வெளியிட ஆர்வமாக உள்ளார்.

7.இவரிடம் பயின்ற மாணவர்கள், இன்று அரசின் பொறுப்பான பதவிகளில் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது .

இவரின் உரையை கேளுங்கள்! பயன் பெறுங்கள்!!

இவரின் உரையை கேட்க 044-66802905 என்ற எண்ணிற்கு டயல் செய்யுங்கள்.

உரையின் கால அளவு: 3 நிமிடங்கள்.(Depression – என்பது நோயல்ல )

இவரின் முகநூல் பக்கம் https://www.facebook.com/apraveen89

புதிய இணையதளம் தொடங்கியது தேர்தல் ஆணையம


17/04/2014

ஏப்ரல் 17: பாரத ரத்னா சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நினைவு தின சிறப்பு பகிர்வு


சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் செப்டம்பர் ஐந்து 1888 இல் திருத்தணியில் பிறந்தார்.அப்பா வீராசாமி அவர்கள் ஜமீன்தாரிடம் தாசில்தாராக இருந்தார்.பள்ளிக்காலம் திருத்தணியிலும்,திருப்பதியிலும் கழிந்தது.
குடும்பம் வறுமையில் இருந்ததால் அப்பா இவரை கோயில் குருக்களாக போக சொன்னார்.ஆனால் ,கல்வி கற்க வேண்டும் என்கிற ஆர்வம் உந்தித்தள்ளியது இவரை.புத்தகம் வாங்க காசில்லாமல் இவரின் உறவுக்காரர் தத்துவம் படித்து வைத்து இருந்த பழைய புத்தகங்கள் மட்டுமே இருந்ததால் வேலூர் வுர்கிஸ்(VOORHEESE )கல்லூரியில்,பின் சென்னை கிறித்துவ கல்லூரியில் தத்துவம் பயின்றார்.
சென்னை கிறித்துவ கல்லூரியில் பயில்கிற பொழுது ஹாக் எனும் புகழ் பெற்ற பேராசிரியரின் கீழ் "வேதாந்தத்தின் ஒழுக்கவியல் மற்றும் அதன் கருத்தியல் நம்பிக்கைகள் "என்கிற தலைப்பில் ஆழ்ந்த ஒரு கட்டுரையை சமர்ப்பித்தார். மேற்கத்திய தத்துவங்களில் நம்பிக்கை கொண்ட ஹாக் அதை நிராகரிப்பார் என இவர் எதிர் பார்த்தார்.ஆனால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு பிரமாதம் என்றார் ;முதுகலை பட்டம் இவ்வாறு வந்து சேர்ந்தது.
வறுமை வாட்டி எடுத்ததால் கல்லூரியில் பெற்ற பதக்கங்களை அடமானம் வைத்து செலவுகளை சமாளித்து இருக்கிறார் ; தத்துவம் படித்து முடித்த பின் சென்னை மாநில கல்லூரியில்  உதவி பேராசிரியராக சேர்ந்ததும் தட்டு வாங்க காசு இல்லாமல் வாழை இலையில் தான் தினமும் உண்டு இருக்கிறார்.வெகு விரைவிலேயே அவரின் இந்தியா தத்துவங்கள் சார்ந்த கட்டுரைகள் உலகம் முழுக்க கவனம் பெற்றன.ஒன்பதே ஆண்டுகளில் மைசூர் பல்கலைகழகம் பேராசிரியராக இவரை பணியமர்த்தியது.மாணவர்களிடம் தலைசிறந்த ஆசிரியர் என பெயர் பெற்றார்
பின் கொல்கத்தாவில் பெருமை மிகுந்த ஐந்தாம் ஜார்ஜ் இருக்கை பேராசிரியர் பதவியில் அமர கிளம்பும் பொழுது குதிரை வண்டியின் குதிரைகளை அவிழ்த்துவிட்டு பிள்ளைகளே வண்டியை இழுத்து சென்றது இவர் எத்தகு ஆசிரியர் என்பதற்கு சான்று..அங்கிருந்து ஹார்வர்ட் ,ஆக்ஸ்போர்ட் முதலிய பல்கலைகழக கூட்டங்களில் இவர் பேசியதை பார்த்து உலகம் வியந்தது.பெர்ட்ரண்டு ரசல் முதலிய உலக மேதைகள் இவரின் மேற்கத்திய மற்றும் கிழக்கின் தத்துவ அறிவை பற்றிய ஆளுமையை கண்டு சொக்கிபோனார்கள்
ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் பேராசிரியர் பதவியில் நாற்பது வயதிற்குள் அமர்த்தப்பட்டார்.ஆந்திராவின் துணை வேந்தாரகவும் பணியாற்றினார்.பின்பு பனராஸ் ஹிந்து பல்கலைகழக துணை வேந்தர் ஆன பொழுது தான் இவரின் விடுதலை பற்று பலர்க்கு தெரிந்தது.மாரிஸ் ஹல்லேட் எனும் கவர்னர் பனராஸ் ஹிந்து பல்கலைகழக மாணவர்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டதால் அதை போர் மருத்துவமனையாக மாற்ற முயற்சித்த பொழுது அப்பொழுதைய வைஸ்ராயை சந்தித்து அதை தடுத்தார் ;ஆனால் அரசு நிதியுதவி தராது என அறிவித்ததும் தெருத்தெருவாக சென்று நிதி திரட்டி பல்கலைகழகத்தை நடத்தினார்
விடுதலை பெறுவதற்கு முன்னேயே யுனெஸ்கோவுக்கான இந்திய பிரதிநிதி ஆனார் ;இந்திய விடுதலை பெற்றதும் கல்வி கமிஷன் தலைவர் ஆனார் ;கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு யோசனைகளை இவரின் குழு வழங்கியது.விடுதலைக்கு பின் அரசாங்கம் வழங்கிய சர் பட்டத்தை துறந்தார் ;தன்னை முனைவர் என்றே அழைத்தால் போதும் என ஆசிரியர் என்கிற பெருமிதத்தோடு சொன்னார்
ஸ்ரீனிவாச ராமனுஜம் இங்கிலாந்து கிளம்பும்முன் கப்பலில் இவரை சந்தித்து ஆசி பெற்று இருக்கிறார்;மீண்டும் இருவரும் சந்திக்கவே இல்லை.சர்ச்சில்லின் வெள்ளையின திமிருக்கு குட்டு வைத்து இருக்கிறார் ;"நாங்கள் ஒரே நிறம் ;நீங்கள் பல நிறம் என சர்ச்சில் சொன்ன பொழுது "கழுதைகள் ஒரே நிறம் ,குதிரைகள் பல நிறம் !"என்றார் ;:ஸ்பூனில் சாப்பிடுவதே நாகரீகம் என சொன்ன பொழுது ,"உங்கள் ஸ்பூனில் யார் வேண்டுமானலும் சாப்பிடலாம் ,என் கையில் நான் மட்டுமே சாப்பிட முடியும் "என்றாரே பார்க்கலாம்
சோவியத் ரஷ்யவின் இந்திய தூதர் ஆனார் ;அப்பொழுது ஸ்டாலினை நேருக்கு நேர் பார்த்து ,"ரத்தம் வழியும் போர் புரிந்து பின் துறவறம் பூண்ட இந்திய அரசர் உண்டு ;நீங்களும் அவ்வாறே ஆவீர்கள் !"என்றார் சிலவருடம் கழித்து கூப்பிட்ட ஸ்டாலின் ,"என்னை மனிதராக நடத்திய முதல் ஆத்மா நீங்கள் தான் !நீங்கள் பல காலம் வாழவேண்டும் !"என வாழ்த்தினார்
கற்பிப்பதில் தீராத ஆர்வம் கொண்டவர் -ரஷ்யாவின் தூதராக இருந்த காலத்திலும் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் ஆறுமாதம் போய் பாடம் நடத்தி வந்தார்.இந்தியாவின் முதல் குடியரசு துணை தலைவர் ஆனார்.அப்போது அவர் விவாதங்களின் நடுவே தலையிட்டு இந்து புராணங்களில் இருந்தும் ,பைபிளில் இருந்தும் வாசகங்கள் சொல்வார் ,"குடும்ப  நிகழ்வு போல சிறப்பாக நடத்துகிறார் என நேரு புகழாரம் சூட்டினார்
ஜனாதிபதியாக ராஜேந்திர பிரசாத்திற்கு பின் ஆனார் ;தன் சம்பளமான பத்தாயிரத்தில் 2,500 மட்டும் பெற்றுக்கொண்டு மீதத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு கொடுத்து விடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
இவரின் பிறந்தநாளை அரசு கொண்டாட ஆசைப்பட்ட பொழுது அதை ஆசிரியர் தினமாக கொண்டாடலாம் என சொன்னார் .அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் உயிருடன் இருக்கும் பொழுதே அரசு அதை செய்தது தன்னை ஒரு ஆசிரியர் என்பதிலேயே பெருமை கொண்டு இருந்தார்.இந்தியாவின் முதல் பாரத ரத்னாவை சி.வி.ராமன், ராஜாஜி ஆகியோருடன் இவரும் பெற்றுக்கொண்டார்
இவரை நேரு சொன்ன வரிகளில் ஓரளவிற்கு அடக்கலாம் ;"இந்தியாவிற்கு பல்வேறு பதவிகளில் சேவை புரிந்து இருக்கிறார் ;எனினும் ,அவர் ஒரு மாபெரும் ஆசிரியர் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டோம் ,இனியும் கற்றவண்ணம் இருப்போம் ஒரு தத்துவஞானி ,மனிதாபிமானி,கல்வியாளரை இந்த நாடு ஜனாதிபதியாக பெற்றதற்கு பெருமை கொள்கிறது.அதுவே பெரிய மதிப்பு மற்றும் கவுரவம் !"
சமூக சேவை செய்வதில் ஆர்வம் கொண்டு இருந்தார்.ஜி.டி.பிர்லாவுடன் கிருஷ்ணார்பன் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.இன்றுவரை அது சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.இறுதி ஆறு வருடங்களை அமைதியாக தன் சென்னை வீடான கிரிஜாவில் கழித்தார்.ஏப்ரல் பதினேழு 1975 அன்று மறைந்தார்