திருக்குறள்
23/05/2014
பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
பல்வேறு துறைகளில் பகுதி நேர, தாற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில ஊழியர்களாக நியமிக்கப்பட்ட 50 பேரை நிரந்தரம் செய்து தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து, அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.
உத்தரவு விவரம்:
தமிழக அரசு துறைகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் முழு நேர தினசரிக்கூலிகளாக 2006 ஜன.1-க்கு முன்பு 10 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களை நிரந்தரம் செய்து தமிழக அரசு 2006-ல் உத்தரவிட்டது. இந்த சலுகையை தங்களுக்கும் வழங்குமாறு பகுதி நேர ஊழியர்கள் 50 பேர் உயர்நீதிமன்றத்தை அணுகினர். அவர்களுக்கு சாதகமாக தனிநீதிபதிகள் உத்தரவுகளை பிறப்பித்து உள்ளனர். அரசு உத்தரவு பகுதி நேர ஊழியர்களுக்கும் பொருந்தும் என உத்தரவுகளை பிறப்பித்தது தவறானது.
பள்ளிக்கல்வித்துறையில் பகுதிநேர துப்புறவு ஊழியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பணி நிரந்தரம் கோரிய வழக்கில்,
கடந்த பிப்.21-ல் உச்சநீதிமன்றம் சட்ட விதியை தெளிவு படுத்தியது.
பணி நிரந்தர உரிமை கோரும் ஊழியர்கள் பணிநியமன விதிகளின் படி நியமிக்கப்படவில்லை. காலியாக உள்ள பணிகளில், இவ்வாறு பகுதி நேர ஊழியர்களை நியமிப்பது, அப்பணிகளைச் செய்யும் தகுதியுடையவர்களுக்கு அநீதி இழைப்பதாகும்.
அதே சமயம், பகுதி நேர ஊழியர்களுக்கு நிரந்தரம் செய்ய சட்டபூர்வ உரிமை இல்லாததால், இரக்க உணர்வு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய முடியாது.
எனவே, பணி நிரந்தரம் கோர பகுதிநேர ஊழியர்களுக்கு சட்டபூர்வ உரிமை கிடையாது என உச்சநீதிமன்றம் குறிóப்பிட்டு உள்ளது.
உத்தரவு வெளியாகும் முன்பு, 2013 ஜூன் 27-ல் தமிழகஅரசு மேலும் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதிóல், 2006 ஜன.1-க்கு பிறகு நியமிக்கப்பட்டு 10 ஆண்டுகள் பணியாற்றிய முழுநேர ஊழியர்களாக இருந்தாலும் பணி நிரந்தரம் பெற தகுதி கிடையாது என கூறப்பட்டுள்ளது.
எனவே, பகுதி நேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன என உத்தரவில் குறிப்பிடப்பட்டது.
இவ்வழக்கில், தனிநீதிபதிகளின் உத்தரவுகள் அடிப்படைõயில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களை அரசு தொந்தரவு செய்யாது என்ற அரசு கூடுதல் வழக்குரைஞரின் உறுதிமொழியை நீதிபதிகள் பதிவு செய்தனர்.
ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், குறிப்பிட்ட நாளில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியதாவது:கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை மாணவர் சேர்க்கை நடக்க வேண்டியுள்ளது.
பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வேண்டிய புத்தகங்கள் வந்து சேரவில்லை, கோடை வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டது போல இந்த ஆண்டும் ஒத்தி வைக்குமாறு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் பிச்சையிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். அரசு பரிசீலனை செய்து 9ம் தேதிக்கு பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு நந்தகுமார் தெரிவித்தார். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா கூறுகையில், ஏற்கெனவே அறிவித்தபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
பி.எட்., எம்.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்கிறது
இளநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பான பி.எட்., மற்றும் முதுநிலை படிப்பான எம்.எட். ஆகிய படிப்புகளின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார். சென்னையில் திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர் அளித்த பேட்டி: பள்ளி ஆசிரியர் ஆக வேண்டுமானால், ஓராண்டு படித்தால் போதும் என்ற நிலை உள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கவும், சிறப்பாக பயிற்றுவிக்கவும் இந்த ஓராண்டு படிப்பு நிச்சயம் போதாது
. எனவே, பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் படிப்பு காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு என்.சி.டி.இ. சார்பில் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, வருகின்ற 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டாண்டு பி.எட்., இரண்டாண்டு எம்.எட். படிப்புகளைக் தொடங்க கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்படும் அதே நேரம், இந்த புதிய மாற்றத்தை பின்பற்ற மாநில கல்வி நிறுவங்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்கப்படும் என்றார் அவர்.
இதன்படி, ஓரிரு ஆண்டுகளில் பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயரப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர் விடுமுறை நாட்களை குறைக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு
அரசு ஊழியர்கள் விடுமுறை நாட்களை குறைக்க கோரிய வழக்கில் உத்தரவை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.திருச்சி, வயலு£ரை சேர்ந்தவர் இளமுகில். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:அரசு ஊழியர்களுக்கு குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதோடு சனி மற்றும்
ஞாயிற்று கிழமைகளில் வார விடுமுறையாக 104 நாட்களும், மத்திய, மாநில அரசு விடுமுறை, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட 164 நாட்கள் விடுமுறையாக கிடைக்கிறது. ஆண்டில் 196 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கின்றனர். பள்ளிகளில் 230 நாட்கள் வரை வேலைபார்க்கிறார்கள்.இதோடு தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.
இதனால் பொதுமக்களின் மனுக்கள் அரசு அலுவலகங்களில் ஆண்டுகணக்கில் தேங்குகின்றன. அரசு ஊழியர்களால் மக்கள் பணியாற்ற முடியாமல் போகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பது மேற்கத்திய நாடுகளின் வழக்கம். அங்கு மக்களும் குறைவு, மக்கள் பிரச்னையும் குறைவு. இதனால் உடனுக்குடன் பிரச்னைகள் தீர்க்கப்படும்.பட்டா மனுக்கள் லட்சக்கணக்கில் நிலுவையில் உள்ளன. ஓட்டுநர் உரிமம், கட்டிட வரைபட அனுமதி, மின்சார இணைப்புகள், ஓய்வூதியம், கருணை வேலை மனுக்கள் உள்ளிட்டவை ஆண்டு கணக்கில் நிலுவையில் உள்ளன. மத்திய ஊதிய குழு கடந்த 24.3.2008ல் ஓர் அறிக்கையை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதில், தேசிய விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் அரசு அலுவலகங்கள் திறந்திருக்க வேண்டும். அரசிதழில் வெளியிடப்பட்ட விடுமுறை நாட்களை குறைக்க வேண்டும். விழாக்காலங்களில் மற்ற மதத்தினரும், விருப்பமுள்ளவர்களும் பணிக்கு வரலாம் என்று கூறியுள்ளனர்.
இந்த பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை.சனிக்கிழமையை வேலை நாளாக அறிவிக்க வேண்டும். அப்படி செய்தால் மக்கள் குறைகளை விரைவாக தீர்க்க முடியும். இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களை குறைந்தது 2 நாளாகவும், அதிகபட்சம் 8 நாளாகவும் மாற்ற வேண்டும். அரசிதழில் வெளியிட்ட 18 நாள் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும். ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் அரசு அலுவலகங்கள் திறந்திருக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு வழங்கிய பஸ் பாஸ் ஆகஸ்ட் வரை செல்லுபடியாகும்
நடப்பு கல்வியாண்டு தொடங்கி 3 மாத காலத்திற்கு கடந்தாண்டு பயன்படுத்தப்பட்ட பழைய பஸ் பாஸ் செல்லுபடியாகும் என போக்குவரத்து கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பஸ் பாஸ்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு 2 மாதங்கள் கழித்துதான் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலை யை தவிர்க்கும் வகை யில், நடப்பு கல்வியாண்டிற்கான இலவச பஸ் பாஸ் முன்கூட்டியே வழங்கிட பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.
இதற்காக பஸ் பாஸ் தேவை பட்டியலை ஒவ்வொரு பள்ளியும் முன்கூட்டியே தயாரித்து போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தேவை பட்டியல் தயாரித்து பஸ் பாஸ்கள் அச்சடித்து மீண்டும் மாணவர்களுக்கு வழங்க காலதாமதம் ஏற்படும் என்பதால் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பஸ் பாஸ் 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளி மாணவர்களுக்கு கடந்த கல்வியா ண்டில் வழங்கப்பட்ட இலவச பஸ் பாஸ் நடப்பு கல்வியாண்டில் ஆகஸ்ட் வரை 3 மாத காலத்திற்கு பயன்படுத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது.கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பழைய பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்களை அரசு பஸ்கள் ஏற்றி செல்ல வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பழைய பஸ் பாஸ் காணாமல் போயிருந்தால், பள்ளி சீருடையில் மாணவர்கள் இருந்தால் அந்த மாணவர்களை அரசு பஸ்கள் கட்டாயம் ஏற்றி செல்ல வேண்டும். பஸ் பாஸ் இல்லை என்பதற்காக எக்காரணம் கொண்டும் மாணவர்களை ஏற்றாமல் பஸ்கள் செல்லக்கூடாது என்று போக்குவரத்து கழகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது என்றனர்.
Subscribe to:
Posts (Atom)

