திருக்குறள்

02/09/2014

வழக்கு தொடுத்த 260 ஆசிரியர்களுக்கு மட்டும் பலன்கள் வழங்க அரசாணை

அரசாணை (நிலை)எண் ;146-19.06.2012 01.06.88 முன் இடைநிலை /தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் /நடுநிலை தலைமை ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தேர்வு நிலை ,சிறப்பு நிலை கோரி வழக்கு தொடரப்பட்டது .அதில் அரசின் நிதிபற்றாகுறையினால் வழக்கு தொடுத்தது தீர்ப்பாணை பெற்ற 260 ஆசிரியர்களுக்கு மட்டும் பணபலனை பெற வெளியிட்ட அரசாணை






கல்விக்கொள்கையில் மாற்றம் செய்ய அரசு முடிவு

தேசிய கல்விக்கொள்கையில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தொழில்நுட்பம் மற்றும் கணிதத்துறையில் எதிர்காலத்தில் திறமையான மாணவர்கள் உருவாகும் வகையில் திட்டங்கள் தீட்டுவது தொடர்பாக ஐ.ஐ.டி., நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் இந்த புதிய கொள்கையில், மாணவர்களின் வருகைப்பதிவேடு மற்றும் ஆசிரியர்கள் வருகை குறித்து அறிய முடியும் எனவும், மாணவர்களின் வீட்டுப்பாடம் குறித்து குறுஞ்செய்தி அனுப்பும் வகையில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் ஆசிரியர்கள் தற்கொலை முயற்சி : 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிர்ப்பு


ஆசிரியர் பணி நியமனத்திற்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி, விஷம் குடித்த, நான்கு ஆசிரியர்கள், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 'முதல்வரை சந்திக்க அனுமதிக்கும் வரை, போராட்டம் தொடரும்' என, ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: நாங்கள், 15 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தியும், முதல்வரை சந்திக்க, போலீசார் அனுமதிக்கவில்லை. இயக்குனரக அதிகாரிகளும், தொடர் போராட்டத்தைக் கண்டு கொள்ளாமல், எங்களை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர். முதல்வரை சந்திக்க அனுமதிக்கும் வரை, எங்களின் போராட்டம் தொடரும். அடுத்த கட்டமாக, எந்த மாதிரியான போராட்டம் நடத்தலாம் என, கூடி முடிவு செய்வோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்

Locate your school details under MHRD

ஆசிரியர் தின விழா பெயரில் மாற்றம் இல்லை : கல்வித்துறை திட்டவட்டம் 377 ஆசிரியர்களுக்கு, 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கப்பட உள்ளது.

'தமிழகத்தில் நடக்கும் ஆசிரியர் தின விழா பெயரில், எவ்வித மாற்றமும் கிடையாது; வழக்கம்போல், இந்த ஆண்டும், ஆசிரியர் தின விழா, வரும் 5ம் தேதி, சிறப்பாக கொண்டாடப்படும்' என, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, தேசிய அளவில், ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக பணிபுரியும் ஆசிரியருக்கு, மத்திய, மாநில அரசுகள், விருதுகளை வழங்குகின்றன. இந்நிலையில், ஆசிரியர் தின விழா பெயரை, சமீபத்தில், 'குரு உத்சவ்' என, மாற்றி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டதாக, தகவல் வெளியானது. மாநில அரசுகளும், புதிய பெயரில், விழாவை கொண்டாட வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. வரும், 5ம் தேதி மாநில அரசுகளும், மத்திய அரசும், சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்க உள்ளது. தமிழகத்திலும், விழாவுக்கான ஏற்பாடுகள், மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், 'பெயர் மாற்றம், தமிழகத்தில் அமலுக்கு வருமா?' என்பது குறித்து, கல்வித்துறை வட்டாரம், நேற்று தெரிவித்ததாவது: பெயர் மாற்றம் குறித்து, தமிழக அரசு, கல்வித்துறைக்கு, எவ்வித உத்தரவை யும் பிறப்பிக்கவில்லை. எனவே, வழக்கம் போல் தான், விழா நடக்கும்.
வரும், 5ம் தேதி சென்னை, சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் விழாவில், 377 ஆசிரியர்களுக்கு, 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கப்பட உள்ளது. பள்ளிகல்வி அமைச்சர், வீரமணி, விருதுகளை வழங்குகிறார். இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

Secondary Grade Teachers - No of Selecters list - Appointment Counselling as on 01.09.14 & 02.09.14


31/08/2014

செப்டம்பர் மாத நாட்காட்டி

சென்னை, திண்டுக்கல்,கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய, ஒன்பது மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலியிடம் இல்லை, புதிய ஆசிரியர் செல்ல வேண்டாம்' என, தொடக்க கல்வி இயக்குனர்,இளங்கோவன் அறிவித்துள்ளார்.




'ஒன்பது மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலியிடம் இல்லை'

'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடம் இல்லாததால், செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், குறிப்பிட்ட, ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்ல வேண்டாம்' என, தொடக்க கல்வி இயக்குனர்,இளங்கோவன் அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பு: தொடக்க கல்வித்துறையில், 1,649 இடைநிலை ஆசிரியர், 167 அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு, செப்., 1ம் தேதி முதல் நடக்கிறது. 'செல்ல வேண்டாம்' அன்று, மாவட்டத்திற்குள் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, பணி நியமன கலந்தாய்வு நடக்கிறது. ஒரு மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெற, செப்., 2ம் தேதியும், மாவட்டத்திற்குள் உள்ள பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கு, செப்., 3ம் தேதியும், வெளி மாவட்டங்களுக்கு பெறுவதற்கான கலந்தாய்வு, செப்., 4ம் தேதியும் நடக்கிறது. இதில்,சென்னை, திண்டுக்கல்,கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியில்லை.
எனவே, செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்ல வேண்டாம்.இந்த மாவட்டங்களில், இரண்டாம் நாள் நடக்கும் கலந்தாய்விற்கு செல்லலாம். இவ்வாறு, இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

90 சதவீதம் : இதற்கிடையே, முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு, மாநிலம் முழுவதும், நேற்று நடந்தது. இதில், 1,000 பேர், தங்களது சொந்த மாவட்டங்களில், பணி நியமனம் பெற்றதாக, பள்ளிக்கல்வி வட்டாரம் தெரிவித்தது. மொத்தம் உள்ள, 14,700 இடங்களில், 90 சதவீதத்திற்கும் அதிகமான காலியிடங்கள், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி உள்ளிட்ட, வட மாவட்டங்களில் தான் உள்ளன. இதனால், அதிகளவில் தேர்வு பெற்ற தென் மாவட்ட தேர்வர்கள், வேறு வழியில்லாமல், வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.

குரு உத்சவ்' என மாறுகிறது ஆசிரியர் தினம்

ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படும், ஆசிரியர் தினம் இனிமேல், 'குரு உத்சவ்' என்ற பெயரில் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

செப்டம்பர் 5ல், முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின், 126வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை, இனிமேல், 'குரு உத்சவ் 2014' என்ற பெயரில் அழைக்க வேண்டும் என்றும், விழாவையொட்டி, மாணவர்களிடையே, 23 மொழிகளில் கட்டுரை எழுதும் போட்டியை நடத்த வேண்டும் என்றும், அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தக்கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் சுற்றறிக்கை

மாணவர்களுக்கு தண்டனை பள்ளிக்கூடங்களுக்கு காலதாமதமாக வரும் மாணவர்கள், வீட்டுப்பாடத்தை எழுதிவராத மாணவர்கள், நன்றாக படிக்காத மாணவர்கள், வகுப்பில் பேசிக்கொண்டிருக்கும் மாணவர்கள் இப்படி ஏதாவது தவறு இழைக்கும் மாணவர்களை வெயிலில் மணிக்கணக்கில் நிற்கவைத்தல், பிரம்பால் அடித்தல், ஸ்கேல் கொண்டு தாக்குதல், குனிய வைத்து முதுகு மீது செங்கற்களை வைத்தல் இப்படி பல வகையான தண்டனைகளை ஆசிரியர்கள் கொடுத்து வந்தனர்.

அப்படிப்பட்ட நேரங்களில் சில மாணவர்கள் உயிரிழக்கக்கூடும். சில நேரங்களில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவது உண்டு. பள்ளிக்கல்வித்துறை அக்கறை இப்படி எந்த துன்பமும் மாணவ-மாணவிகளுக்கு நேரக்கூடாது என்பதில் பள்ளிக்கல்வித்துறை அதிக அக்கறை கொண்டுள்ளது. இதற்காக மாணவர்களை கம்பு கொண்டு தண்டிக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன் காரணமாக மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கும் பிரச்சினை பெரும்பாலும் ஓய்ந்துவிட்டது. இருப்பினும் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது நீடிக்கிறது. மாணவர்களை ஸ்கேல் கொண்டு

தாக்கக்கூடாது சமீபத்தில் ஸ்கேல் கொண்டு ஆசிரியர் தாக்கியதில் ஒரு மாணவர் கண்பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் மாணவ-மாணவிகளை எந்த காரணம் கொண்டும் மன ரீதியாகவோ, உடல்ரீதியாகவோ பாதிக்கும்படி ஆசிரியர்கள் நடந்து கொள்ளக்கூடாது. அதாவது மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்தைக்கொண்டும் திட்டக்கூடாது. ஸ்கேல், கம்பு, கை உள்ளிட்ட எதைக்கொண்டும் அடிக்கக்கூடாது. அவ்வாறு மாணவர்களை ஆசிரியர்கள் அடித்ததாக உறுதி செய்யப்பட்டால் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

'குறை தீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிகள் பதில் அளிப்பதில்லை' : தொடக்க கல்வி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

'தொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூட்டம், வெறும் சடங்காக நடக்கிறது. மனுக்களை வாங்கும் அதிகாரிகள், பதில் அளிப்பது இல்லை' என, தொடக்க கல்வி ஆசிரியர்கள், குற்றம் சாட்டுகின்றனர். தொடக்க கல்வித் துறையில், 1.5 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு, விடுமுறை நாட்களுக்கு பணம் பெறுதல் உள்ளிட்ட, பல கோரிக்கைகள் தொடர்பாக, அவ்வப்போது, சென்னையில் உள்ள தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்தபடி உள்ளனர்.

இதனால், ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதித்து வருகிறது. கோரிக்கையை, அதிகாரிகள் கண்டு கொள்ளாதபோது, துறைக்கு எதிராக, ஆசிரியர், வழக்கு தொடரும் போக்கும் அதிகரித்து வருகிறது. மாதத்தின் முதல் சனிக்கிழமை ஆசிரியர் பிரச்னையை, உடனுக்குடன் தீர்க்கும் வகையில், குறை தீர்ப்பு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, மாதத்தின் முதல் சனிக்கிழமை, பள்ளி முடிந்தபின், மாலை வேளையில், உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடம், ஆசிரியர், கோரிக்கை மனு அளிக்க வேண்டும்.

இதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரி, உடனடியாக பதில் அளிக்க வேண்டும். தீர்க்க முடியாத பிரச்னை எனில், மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியை சந்தித்து, மனு அளிக்க வேண்டும். இதிலும், பிரச்னை தீரவில்லை எனில், மூன்றாவது சனிக்கிழமை, சென்னையில் உள்ள தொடக்க கல்வி இயக்குனரை, நேரில் சந்தித்து பிரச்னையை கூறலாம். ஒரு ஆண்டு முன் வரை, உருப்படியாக நடந்து வந்த இந்த குறை தீர்ப்பு கூட்டம், தற்போது, வெறும் சடங்குக்கு நடந்து வருவதாக, தொடக்க கல்வி ஆசிரியர் குற்றம் சாட்டுகின்றனர். 

மற்ற அரசு துறைகளை விட, கல்வித் துறையில் தான், வழக்குகள் அதிகளவில் உள்ளன. இது, அதிகாரிகளுக்கும் தெரியும். கோரிக்கைகள் : ஆசிரியர்களின், சிறிய கோரிக்கை, பிரச்னைகளை கூட, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் தீர்ப்பதில்லை. இதனால், நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. குறை தீர்ப்பு கூட்டங்களில், மனு அளித்தால், என்ன பதில் என்பதை, எழுத்து பூர்வமாக அதிகாரிகள் தர வேண்டும். ஆனால், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், எழுத்துப் பூர்வமாக பதில் அளிப்பது இல்லை. கண்துடைப்புக்காக, குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. 'துறையின் பதிலை அறியாமல், வழக்கு போடக் கூடாது' என, தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட வேண்டும். இதன்மூலம், ஆசிரியர், துறை அதிகாரிகளின் பதில் பெறுவதை, உறுதி செய்ய முடியும்.

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தனது ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படியை உயர்த்தி வழங்குகிறது.

இந்த ஆண்டு தற்போது 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் பரிந்துரை செய்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. எனவே விரைவில் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும்.
இதன் மூலம் தற்போது 100 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி இனி 107 சதவீதமாக இருக்கும். இதன் மூலம் மத்திய அரசில் பணியாற்றும் 30 லட்சம் ஊழியர்களும், 50 லட்சம் பென்சன்தாரர்களும் பயன் அடைவார்கள்.
ஜூலை 1-ந்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 90 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 100 சதவீதமாக 10 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. தற்போது 7 சதவீதம் உயர்கிறது.
விரைவில் அமைச்சரவை கூடி ஒப்புதல் வழங்கியதும் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும்.

மாநில அரசு ஊழியர்களுக்கும் விரைவில் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும்போது, மாநில அரசும் அதேபோல செய்யும். எனவே தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவில் அகவிலைப்படி உயர்வு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2000 முதல் 2010 வரை தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் விபரம் - அரசு தேர்வு வாரியம் அறிவிப்பு ...






1675 புதிய நியமனம் செய்யப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்கள் 08.09.2014 அன்று பணியில் சேர இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்று 1675 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு செப்டம்பர் 1 முதல் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அக்கலந்தாய்விற்கான கால அட்டவணை கீழ்காணும் விவரப்படி நடக்கவுள்ளது.

>01.09.2014 - இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடைபெறும்

>02.09.2014 - இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும்.

ஆசிரியர்களுக்கு மேற்படி கலந்தாய்வு தேதியன்று பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

>04.09.2014 முதல் 06.09.2014 வரை - சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை பெற்றுக்கொள்ள வேண்டும்.

>08.09.2014 - புதிய இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேர வேண்டும்

தொடக்கக் கல்வி - சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் இந்த மாவட்டங்களை சார்ந்த பணிநாடுநர்கள் 02.09.2014 அன்றைய கலந்தாய்வில் கொள்ள உத்தரவு