- சாதி சான்றிதழ்
- வருமான சான்றிதழ்
- பிறப்பிடச் சான்றிதழ்
- இருப்பிடச் சான்றிதழ்
- வேளாண் சேவை இணைப்பு படிவம்
- விற்பகர் சான்றிதழ் - உரங்கள் (படிவம் அ)
- புதுப்பித்தல் சான்றிதழ் - உரங்கள் (படிவம்)
- பூச்சிக்கொல்லி பதிவு செய்வதற்கான சான்றிதழ்
- பூச்சிக் கொல்லி தயாரிப்புக்கான உரிமத்தை புதிப்பிக்கும் சான்றிதழ்
- பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல் உரிமம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
- பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல் புதுப்பித்தல்கான விண்ணப்படிவம்
- தமிழ்நாட்டில் குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
- சமூக நலம்
திருக்குறள்
23/11/2014
தமிழ்நாட்டில் சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்
RTI - சேலம் விநாயகா பல்கலைக்கழக எம்.பில் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியில்லை.
சேலம் விநாயகா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பெறப்படும் உயர்கல்வியான எம்.பில் பட்டத்திற்கு ஊக்க ஊதியம் பெற தகுதியுடையதா?
அடுத்த கல்வியாண்டு முதல், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், யோகாவை ஒரு பாடமாக சேர்க்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ துறைக்கான அமைச்சர், ஸ்ரீபத் நாயக் கூறியதாவது:
கடிதம்:
யோகா கலையை கற்பதன் மூலம் இளம் தலைமுறையினர், எதிர்காலத்தில் நல்ல பண்பு மற்றும் உடல் நலம் உள்ளவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக, அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளிகளில் யோகாவை ஒரு பாடமாக சேர்க்கும்படி, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு, சாதகமான பதில் கிடைத்தால், வரும் ஜூன் மாதத்திற்குள், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
ஆலோசனை:
பிரதமர் நரேந்திர மோடியும், இந்த திட்டத்துக்கு சம்மதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரிடம் ஆலோசனை கேட்கப்படும். நம்முடைய பாரம்பரிய கலைகளையும், மருத்துவ முறைகளையும் மறந்து விட்டோம். ஆனால், மேற்கத்திய நாடுகள் நம்முடைய கலைகளையும், மருத்துவ முறைகளையும் பின்பற்றி, வளர்ச்சி அடைந்து விட்டன. அடுத்தகட்டமாக, அனைத்து கிராமங்களிலும் ஆயுர்வேத மையங்களையும் துவக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
சர்வதேச யோகா தினம்:
* சமீபத்தில், ஐ.நா., பொதுச் சபையில் பேசிய பிரதமர் மோடி, 'சர்வதேச யோகா தினத்தை அறிவிக்க வேண்டும்' என்றார்.
* மத்திய பிரதேச மாநில பா.ஜ., அரசு, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, அனைத்து பள்ளிகளிலும் யோகாவை ஒரு பாடமாக சேர்த்து, ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
* மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழிப் பாடமாக சேர்க்க, சமீபத்தில் உத்தரவிடப்பட்டது.
*இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது யோகா குறித்த தகவல் வெளியாகியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
21/11/2014
அரசு பள்ளிகளில் பணிபுரிய உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர்கள் 1,028 பேர் நியமனம் ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத்தேர்வு நடத்தி பணிக்கு எடுக்கிறது
அரசு பள்ளிகளில் பணிபுரிய 1,028 சிறப்பு ஆசிரியர்களாக உடற்கல்வி,இசை, ஓவியம், தையல் ஆகிய ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வுவாரியம்மூலம் எழுத்துத்தேர்வு நடத்தி தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.
1,028 ஆசிரியர்கள் நியமனம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள்,தையல் ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் எனமொத்தம் 1,028 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.
இந்த ஆசிரியர்களை நியமிக்கும் பணியை தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறையிடம் ஒப்படைத்தது. பள்ளிக் கல்வித்துறை முதன்மைசெயலாளர் த.சபீதா உத்தரவுப்படி ஆசிரியர்தேர்வு வாரிய தலைவர்விபுநய்யர் தலைமையில் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்செயலாளர் தண்.வசுந்தராதேவி, உறுப்பினர் க.அறிவொளி ஆகியோர்எழுத்துத்தேர்வு நடத்த உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில்வெளிவரும்.
எழுத்துத்தேர்வு
மொத்தம் 100 மதிப்பெண்கள் ஆகும். தேர்வு 95 மதிப்பெண்ணுக்கு 3மணிநேரம் நடைபெறும். ஆப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள்கேட்கப்பட்டிருக்கும். 190 கேள்விகள் இருக்கும். ஒவ்வொருகேள்விக்கும் சரியாக பதில் அளித்தால் ½ மதிப்பெண் உண்டு. மீதம்உள்ள 5 மதிப்பெண்ணுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும்.
இதற்கான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
சம்பளம் உயர்வு
ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவ்ர்களையும், அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்ட இயக்குனராக திரு.அறிவொளி அவர்களையும் நியமித்து அரசு உத்தரவு
ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவ்ர்களையும், அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்ட இயக்குனராகதிரு.அறிவொளி அவர்களையும் நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு
தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2003-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே இருந்த ஓய்வூதிய திட்டம் மாற்றப்பட்டு 01-04-2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இதற்கு நிகரான தொகையை அரசும் தனது பங்களிப்பாக வழங்கும்.
இந்தத் தொகையானது மத்திய அரசின், ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் டெபாசிட் செய்யப்படும். ஆணையம் அந்த நிதியை பங்குச்சந்தை உள்ளிட்டவைகளில் முதலீடு செய்யும். சம்பந்தப்பட்ட பணியாளர்கள் ஓய்வுபெறும்போது இந்த சேமிப்பு நிதியிலிருந்து 40 சதவீதம் உடனடி ஓய்வூதியமாக வழங்கப்படும். எஞ்சிய 60 சதவீதம் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும்.இது இல்லாமல், விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு 20 சதவீத தொகையானது உடனடியாக வழங்கப்படும். எஞ்சிய 80 சதவீதம் அந்த ஊழியரின் 58 வயது பூர்த்திக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும். இவை அனைத்தும் திட்டம் சார்ந்த அரசின் அறிவிப்புகள். இந்தத் திட்டமானது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இதுவரை தமிழகத்தில் இந்தத் திட்டத்தில் சேர்ந்து ஓய்வுபெற்ற யாருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்பதுதான் திகைக்க வைக்கும் செய்தி.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் பேசிய அரசு ஊழியர்கள் சிலர் கூறுகையில், “திருத்தப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தில் சொல்லப்பட்ட விதிகள் எதையும் தமிழக அரசு பின்பற்றவில்லை. இந்தத் திட்டத்தில் தேசிய அளவில் சுமார் 39 லட்சத்து 55 ஆயிரம் பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்திருக் கிறார்கள். இவர்களிடமிருந்து 49 ஆயிரத்து 474 கோடி ரூபாய் பிடித் தம் செய்யப்பட்டு ஆணையத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக அரசு ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட சுமார் 2000 கோடி ரூபாய் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி நிலவரப்படி, ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்தப்படவில்லை.
2006-க்கு பிறகு தொகுப்பூதியத்தில் இருந்து ரெகுலர் பணியில் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து ஓய்வும் பெற்றுவிட்டார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள். இவர்கள் யாருக்கும் இதுவரை ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லை’’ என்று தெரிவித்தனர். இதுகுறித்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் துரைப் பாண்டியனிடம் கேட்டபோது, “தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு எந்தவித ஓய்வூதிய பலன்களையும் இதுவரை வழங்காமல் வைத்திருக்கிறது. இதனால் பணிக் காலத்தில் இறந்துபோன ஆசிரியர்கள், போலீஸார், அரசு ஊழியர்கள் என சுமார் 440 பேரின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. புதிய ஓய்வூதிய திட்டத்துக்கான நிதி மேலாளரை தமிழக அரசு உடனடியாக அறிவித்திருக்க வேண்டும். அந்த நிதி மேலாளர்தான் ஓய்வூதிய நிதியை உரிய இடத்தில் முதலீடு செய்யமுடியும். அப்படி நியமிக்காததால் சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியப் பணத்தை அரசு டேட்டா சென்டரிலேயே வைத்திருக்கிறார்கள். மொத்தத்தில், புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு சட்டம் போட்டார்களே தவிர அதை முறையாக நடைமுறைப்படுத்த வில்லை’’ என்றார்.
Subscribe to:
Posts (Atom)









