திருக்குறள்

27/06/2015

அகஇ-2015-16ஆம் கல்வி ஆண்டிற்கான கதை புத்தகங்களுக்கான ஓவியங்கள் வரைதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல்


CLICK HERE-LETTER TO DISTRICT REGARDING DRAWING...

26.06.2015 அன்று -போதைப் பொருள் எதிர்ப்பு தினம் அனுசரித்தல்-தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

CLICK HERE--International Day against Drug Abuse Reg

11.07.2015 அன்று நடைபெறவுள்ள தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான(ENRICHMENT TRAINING ON CCE IN SABL') குறு வளமைய பயிற்சி அட்டவணை

பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்களை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவு

பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்களை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதுதொடர்பாக முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளிகளில் படிக்கும் 60 லட்சம் முதல் 70 லட்சம் மாணவ- மாணவிகளின் விவரங்களை ஆதாரில் இணைக்க வேண்டி யிருப்பதால் பள்ளிகளில் அதற் காக சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மாணவ-மாணவிகளின் விவரங் களை உரிய படிவத்தில் பெற்று பூர்த்தி செய்து ஜூன் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. 

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாய மாக்கியுள்ளது குறிப்பிடத் தக்கது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் விவரங்களை பள்ளி நிர்வாகத்திடம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவில் மாணவர்களுக்கு பால்:மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை


அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 

தமிழ்நாடு, பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் பால் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அந்த கடிதத்தில் மாணவர்களின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்தும் வகையில் மதிய உணவு திட்டத்தின் கீழ் பால் மற்றும் பால் பொருட்களான பாலாடை கட்டி, தயிர் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு வழங்க மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சுட்டி காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டத்தை கர்நாடக அரசு அமல்படுத்தியுள்ளது. எனவே அதே போன்று பிற மாநிலங்களும் அந்த நடைமுறையை பின்பற்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக பால் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து பாலை கொள்முதல் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய கால்நடைத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் எழுதிய அந்த கடிதத்தில், மாநில அரசுகளின் இந்த நடவடிக்கையின் மூலம் நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் ஏராளமானோர் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

P.F சந்தாதாரர்களுக்கு விரைவில் இணையத்தில் கணக்கு அறிக்கை

தமிழக அரசு ஊழியர்களின் 2014-2015 நிதி ஆண்டுக்கான பொது வருங்கால வைப்புநிதி (ஜி.பி.எஃப்.) ஆண்டு கணக்கு அறிக்கை தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயரின் நிர்வாக வலைதளத்தில் ஜூலை முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. சந்தாதாரர்கள் பொது வருங்கால வைப்பு நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்றே இந்த வலைதளத்தில் இருந்து தங்களது 2014-2015-ஆம் ஆண்டு கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சந்தாதாரர்கள் தங்களது செல்லிடப்பேசி எண்ணை இந்த வலைதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த ஆண்டில் இருந்து, ஆண்டு கணக்கு அறிக்கை சீட்டு அலுவலகத்திலிருந்து விநியோகிக்கப்பட மாட்டாது. சந்தாதாரர்களின் கணக்கு அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் ஏதேனும் வேறுபாடுகள் இருந்தாலோ அல்லது விடுபட்ட சந்தா தொகை அல்லது விடுபட்ட கடன் தொகை ஆகியவற்றுக்கு விவரங்கள் இருப்பின் தங்களது அலுவலகத்தின் மூலம் கீழ்க்கண்ட தகவல் முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, மாநில கணக்காயர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

அலுவலக முகவரி, தொலைபேசி எண்கள் விவரம்: துணை மாநில கணக்காயர், தமிழ்நாடு முதன்மை கணக்காயர் அலுவலகம் (கணக்கு, பணி வரவு), 361, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை, 600018 என்ற முகவரியிலும், 044-24314477, 24342812 என்ற தொலைபேசி எண்களிலும், www.agae.tn.nic.in என்ற வலைதளத்திலும், aggpf@tn.nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதிரி பள்ளிகள்

மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளியை, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதிரி பள்ளியாக மாற்றும்படி, அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

நடப்பு கல்வியாண்டில், மாற்றுத்திறனாளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், மாவட்டந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதிரி பள்ளிகளை உருவாக்க, மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு, ஒரு அரசு பள்ளியை தேர்வு செய்து, அதை மாற்றுத்திறன் கொண்டவர்கள், மற்ற மாணவர்களுடன் அமர்ந்து படிக்கும் வகையில், வகுப்பறை சூழலை மாற்றுதல், சிறப்பு ஆசிரியர் நியமனம், சிறப்பு வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள், குடிநீர் வசதி, சாய்தளங்கள் போன்றவற்றை ஏற்படுத்த இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

எளிய படைப்பாற்றல் கல்வி - கற்றல் படி நிலைகளின் தொகுப்பு

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2015-16ஆம் கல்வியாண்டில் 6ம் வகுப்பில் ஆங்கில வழிப்பிரிவு துவங்கிட நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் அறிவுரை

GPF/TPF ACCOUNT STATEMENT FOR THE YEAR 2014-2015 DOWNLOAD....

CPS:பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்ப பெறலாம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்

புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்புஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. 

இதன் மூலம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.மத்திய அரசுப் பணியில் கடந்த 1.1.2004-க்கு பிறகு சேர்ந்த அனைத்துஊழியர்களும் (முப்படையினர் தவிர) புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (Contributory Pension Scheme-CPF) என்று அழைக்கப் படுகிறது. தமிழகத்தில் 1.4.2003-க்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம், தர ஊதியம் (கிரேடு பே), இவற்றுக்கான அகவிலைப்படி ஆகிய கூட்டுத்தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இதற்குச் சமமான தொகையை அரசு தன் பங்காக செலுத்தும்.

இதற்கென ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் பிரத்யேக சிபிஎஃப் எண் கொடுக்கப்பட்டு அந்த கணக்கில் இந்த தொகை வரவு வைக்கப்படும். சிபிஎப் கணக்கில் உள்ள தொகைக்கு ஆண்டுக்கு 8.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இவ்வாறு ஊழியரின் கணக்கில் சேரும் தொகை, அவர் ஓய்வுபெறும்போது 60 சதவீதம் திருப்பிக் கொடுக்கப்படும். எஞ்சிய 40 சதவீத தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும். தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தைப் பொறுத்தவரையில், ஊழியர்கள் தங்களின் பொது வருங்கால வைப்புநிதியில் (ஜிபிஎப்) இருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு கடன்பெறலாம். கடனை திருப்பி செலுத்திய பிறகு மீண்டும் கடன் பெறமுடியும். மேலும் 15 ஆண்டு பணி முடிவடைந்ததும் ஜிபிஎப் நிதியில் இறுதித்தொகையின் ஒரு பகுதியை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஜிபிஎப் போன்று கடன்பெறும் வசதியோ, பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியோ இல்லாமல் இருந்துவந்தது. 


இந்த நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்கள் 10 ஆண்டுகள் பணியைமுடித்திருந்தால் அவர்கள் சிபிஎப் கணக்கில் தாங்கள் செலுத்திய தொகையில் இருந்து 25 சதவீதத்தை திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்று புதிய ஓய்வூதிய திட்டத்தை கவனித்து வரும் அமைப்பான ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. எனினும், இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப் பட்டுள்ளன. அதன்படி, சந்தாதா ரர்கள், தங்கள் பணிக் காலத்தில் 3 முறை சிபிஎப் தொகையை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். பிள்ளைகளின் படிப்பு செலவு, திருமண செலவு, வீடு அல்லதுஅடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு, மருத்துவ செலவினங்களுக்கு (புற்றுநோய், சீறுநீரக குறைபாடு, இதய நோய் போன்றவை) இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு முறைக்கும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். 


இருப்பினும், மருத்துவ செலவினத்துக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள் ளது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். எனினும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சிபிஎப் திட்டத்துக்கு வரவேற்பு இல்லை. இதுகுறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறும்போது, “2003-க்கு முன்பு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களைப் போல சிபிஎப் திட்டத்திலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை கடன்பெறவும், 15 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் இறுதித் தொகையில் ஒரு பகுதியை திரும்ப எடுத்துக்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்றார்.

ஜூன் 29 முதல் பி.எட்., விண்ணப்பம் வினியோகம்:காமராஜ் பல்கலை அறிவிப்பு

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் சார்பில் நடப்பு ஆண்டிற்கான(2015-16) பி.எட்., (இளங்கலை கல்வியியல்) படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜூன் 29 முதல் வினியோகிக்கப்படுகின்றன.

இரண்டாண்டு படிப்பான இதற்கு தொடக்கக் கல்வியில் நேரடி பயிற்சிபெற்று அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் இரண்டு ஆண்டுகள் கற்பித்தல் பணி அனுபவத்துடன் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கும். இதற்கான விண்ணப்பங்கள் பல்கலை மாணவர் சேர்க்கை மையம், மதுரை அழகர்கோவில் ரோடு பல்கலை வளாக மாணவர் சேர்க்கை மையம் ஆகிய இடங்களில் வழங்கப்படும். மேலும் www.mkudde.org என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து உரிய கட்டணத்துடன் அனுப்பி வைக்கவேண்டும். மேலும் விவரங்கள் 0452- 253 5973 என்ற தொலைபேசி எண்ணில் கேட்டுக்கொள்ளலாம் என தொலை நிலைக் கல்வி இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.