திருக்குறள்

26/01/2016

பத்தே பதிவில் பக்காவாக 2015-16-ஆண்டிற்கான Income Tax படிவம் ரெடி

26.01.2016 update  பதிவில்

பத்தே பதிவில் பக்காவாக IT படிவம் ரெடி


2015-16 ஆண்டிற்கான INCOME TAX படிவம் எளிய வடிவில் அனைவரும் பயன்படுத்தும் படியாக 10-நொடியில் 10-பதிவில் படிவம்-16 உடன் Excel-லில் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது.
CLICK HERE- TO DOWNLOAD

21/01/2016

பத்தே பதிவில் பக்காவாக 2015-16-ஆண்டிற்கான Income Tax படிவம் ரெடி


பத்தே பதிவில் பக்காவாக IT படிவம் ரெடி


2015-16 ஆண்டிற்கான INCOME TAX படிவம் எளிய வடிவில் அனைவரும் பயன்படுத்தும் படியாக 10-நொடியில் 10-பதிவில் படிவம்-16 உடன் Excel-லில் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது.

www.testf-ariyalur.blogspot.com என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்யும் படி வெளியிடப்பட்டுள்ளது.


அனைவரும் பயன்படுத்தி பயனடைய கேட்டுக்கொள்கிறேன்.


CLICK HERE- TO DOWNLOAD
2015-16 ஆண்டிற்கான INCOME TAX படிவம்

14/07/2015

அகஇ - 2015/16 ஆம் ஆண்டிற்கான "பள்ளி பராமரிப்பு மானியம்" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்




ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள் 13-7-2015 வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகளே இடம் பெற்றுள்ளது. ஆனால் அலகு விட்டு அலகு மாறுவது முற்றிலும் தடை
செய்யப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வார காலத்திற்குள் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது. 26, 27 தேதிகளில் மாறுதல் கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது.

CLICK HERE
தொடக்கக் கல்வி -பள்ளிகல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர் -BRT-AEEO பொது மாறுதல் விண்ணப்பம்










தொடக்கக்கல்வி - சார்நிலைபணி - உதவி/கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மீண்டும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக மீளவும் மாறுதல் கலந்தாய்வு -இயக்குனர் செயல்முறைகள்

2015/16 கல்வி ஆண்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பொது மாறுதல் செயல்முறைகள்.


11/07/2015

திருத்திய ஊதியம் - தமிழ்நாடு திருத்திய ஊதிம் 2009 - திருத்திய ஊதிய மாற்றியமைப்பு சார்பான கோரிகைகள் பெற இயலாது என அரசு அறிவிப்பு









G.O. 200 நாள்:10.07.15 -ன் விளக்கம்.


சுருக்கம்: Associations / Individual employees - யிடமிருந்து பெறப்பட்ட ஊதிய திருத்தம் சார்பான கோரிக்கைகள் General Pay Revision - க்காக Commission அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுகிறது. ( Deferred) 

விளக்கம்: அரசாணை 234 - ன்படி. ஊதியம் வழங்கப்பட்டதாம். பின்னர் ஒருநபர் குழுவானது ஊதிய முரண்பாடுகள் களையவும் குறிப்பாக ஆசிரியர் சங்கங்கள் மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கிட கோரியவைகளை ஆய்வு செய்ய ( to examine ) அமைக்கப்பட்டதாம். பின்னர் நீதிமன்ற ஆணையின்படி ஊதிய குறை தீர்க்கும் பிரிவு (PGRC) அமைக்கப்பட்டு 4376 Representations பெறப்பட்டு 89 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு 2 இலட்சம் ஊழியர்கள் பயனடைந்தார்களாம். 

இருந்தாலும் Individual Employees / Associations - ஆல் ஊதிய திருத்தம் கோரி வழக்குகள் தொடரப்பட்டதாம். மேலும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தனிநபர்/சங்கங்களால் பல்வேறு தகவல்கள் கோரப்பட்டதாம். இதனால் நிதித்துறைக்கு அதிகமான வேலைப்பழு ஏற்பட்டதாம். 

தொடர்ந்து திருத்திய ஊதியம் வழங்கி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால், ஊதிய திருத்தம் சார்பான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதாம். (Cannot be entertained) 

With retrospective effect என்பது முந்தைய தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட என பொருள் கொள்ளலாம்.)

எனவே General Pay Revision ( அதாவது அடுத்த ஊதியகுழு) - ன் போது ஊதிய முரண்பாடுகள் குறித்தும், ஊதிய திருத்தம் சார்பான கோரிக்கைகள் குறித்தும் அரசு கவனத்தில் கொள்ள (to examine) முடிவு செய்துள்ளதாம். 

எனவே Associations / Individual Employees - யிடமிருந்து பெறப்பட்ட ஊதிய திருத்தம் சார்பான கோரிக்கைகள் General Pay Revision - க்காக Commission அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்மடுகிறது (Deferred ) என இந்த அரசாணை மூலம் அரசு தெருவிக்கிறது. 
( அதாவது இனி சங்கமோ தனிநபரோ ஊதிய திருத்தம் சார்பாக அடுத்த ஊதியகுழு வரை வரவேண்டாம் என்கிறார்கள்.)

அரசு பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்புஇனி உள்ளாட்சி நிர்வாகமே கவனிக்கும்

மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு பணியை உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதி மேற்கொள்ள வேண்டும் என்பது முக்கிய நோக்கம்.

இதன்படி மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), நிர்மல் பாரத் மற்றும் சி.எஸ்.ஆர்., (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி) முறையில் ஏர்போர்ட் மற்றும் என்.எல்.சி., நிர்வாகங்கள் பங்களிப்பிலும் அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு புதிய கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன.இந்நிலையில் அரசு பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாததால் கழிப்பறை பராமரிப்பு கேள்விக்குறியானது. இது அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதனால் அவற்றின் பராமரிப்பு பணிகளை உள்ளாட்சி நிர்வாகங்களிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்காக முதல் கட்டமாக ரூ.163 கோடி அத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் 100 சதவீதம் இப்பணி முடிந்துள்ளது. அரசு பள்ளிகளில் பதவி உயர்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் இடங்கள் ஆயிரக்கணக்கில் காலியாக உள்ளன. இதனால் இவற்றின் பராமரிப்பு பணி உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாளர்களை நியமித்து பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்றார்.

எஸ்.எஸ்.ஏ., பராமரிப்பு நிதி

எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7500 வரை பள்ளி பராமரிப்பு நிதி வழங்கப்படும். இது கட்டடம், புதிய நாற்காலி வாங்குவது உள்ளிட்ட செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும். ஆனால் இந்தாண்டு ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் கழிப்பறை பராமரிப்புக்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SABL-பாட முறையில் பாடகுறிப்பு பதிவேடு பராமரிக்க வேண்டுமென்று எந்த அரசாணையும் செயல்முறைகளும் இல்லை-SSA -இணை இயக்குநர் -RTI



09/07/2015

CPS திட்டத்தில் பயனாளிகள் விடுபட்ட பதிவுகள் இருப்பின் முன் பணம் பெறமுடியாது ! PFRDA


அரசு ஊழியர்களுக்கு அறிமுகமாகிறது இணையதள கல்வி

அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டத்தை அரசு தயார் செய்துள்ளது. கணினி தொடர்பான, அடிப்படை பயிற்சி மற்றும் அரசு அலுவலகங்களை கணினி மயமாக்கல் குறித்த பயிற்சி, அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிகளை அன்றாட அலுவலக பணியில், பயன்படுத்த வேண்டும்.

இதற்கு, போதியளவு வாய்ப்பு இல்லாததால், கணினி தொடர்பான பயிற்சிகள் முழுமையான பயன் தருவதில்லை என, அரசு நடத்தியுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, பயிற்சி தொடர்பான பாடங்களை, ஆன்-லைனில் சேர்த்து விட்டால், எப்போது வேண்டுமானாலும், அந்த விவரங்களை ஊழியர்கள் தெரிந்து கொள்ள முடியும். மென்பொருள் சூத்திரங்களை, ஆன்லைனில் வைத்திருந்தால், எளிதாக அறிந்து கொள்ளமுடியும். மேலும், பாடத் திட்டத்தை ஆன்-லைன் மூலம், எவர் வேண்டுமானாலும் பார்க்க முடியும் என்பதால், பயிற்சி ஒரே நேரத்தில் பரவலாக்கப்படும் போன்ற காரணங்களுக்காக, கணினி பயிற்சி தொடர்பான, ஆன்-லைன் பாடத் திட்டத்தை அரசு தயார் செய்கிறது.

பாடத் திட்டங்களை வாசிக்கவும், வீடியோ மற்றும் ஆடியோவில் பார்த்து கேட்கும் படியான வசதிகளும் செய்யப்படுகின்றன. ஊழியர்களின் வசதிக்கு ஏற்ப, அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்தே, பாட வகுப்புகளில் பங்கேற்று தேர்வுகளை எழுத முடியும். ஆன்-லைனிலேயே, கணினி தொடர்பான வகுப்புகள் நடத்தி, அதற்கான தேர்வுகளை அறிவித்து, சான்றிதழ்கள் வழங்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, இதற்கான, பாடத் திட்டங்களை வகுத்து ஆன்-லைனில் வெளியிடுதல், வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்தும் பணியை செய்கிறது.

ஆன்-லைன் கணினி படிப்புக்காக, 11 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பாடத் திட்டங்களை வகுக்கவும், அதற்கான, ஆன்-லைன் வசதிகளை மேம்படுத்தவும், தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து, ஆறு மாதங்களில், அரசு ஊழியர்களுக்கான ஆன்-லைன் கணினி வகுப்புகள் தொடங்கும் என, தகவல் தொழில்நுட்பத் துறையினர் கூறுகின்றனர்.

தொடக்கக் கல்வி -பள்ளிகல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர் -BRT-AEEO பொது மாறுதல் விண்ணப்பம்



தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்





தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் விண்ணப்பம்





தொடக்கக்கல்வித் துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் (Mutual Transfer Application Model)





AEEO TRANSFER APPLICATION






பள்ளிகல்வி துறை-ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்





அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுநர் விருப்ப மாறுதல்-விண்ணப்பம்