திருக்குறள்
14/07/2015
ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள் 13-7-2015 வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகளே இடம் பெற்றுள்ளது. ஆனால் அலகு விட்டு அலகு மாறுவது முற்றிலும் தடை
செய்யப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வார காலத்திற்குள் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது. 26, 27 தேதிகளில் மாறுதல் கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது.
CLICK HERE
தொடக்கக் கல்வி -பள்ளிகல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர் -BRT-AEEO பொது மாறுதல் விண்ணப்பம்
CLICK HERE
தொடக்கக் கல்வி -பள்ளிகல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர் -BRT-AEEO பொது மாறுதல் விண்ணப்பம்
11/07/2015
திருத்திய ஊதியம் - தமிழ்நாடு திருத்திய ஊதிம் 2009 - திருத்திய ஊதிய மாற்றியமைப்பு சார்பான கோரிகைகள் பெற இயலாது என அரசு அறிவிப்பு
G.O. 200 நாள்:10.07.15 -ன் விளக்கம்.
சுருக்கம்: Associations / Individual employees - யிடமிருந்து பெறப்பட்ட ஊதிய திருத்தம் சார்பான கோரிக்கைகள் General Pay Revision - க்காக Commission அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுகிறது. ( Deferred)
விளக்கம்: அரசாணை 234 - ன்படி. ஊதியம் வழங்கப்பட்டதாம். பின்னர் ஒருநபர் குழுவானது ஊதிய முரண்பாடுகள் களையவும் குறிப்பாக ஆசிரியர் சங்கங்கள் மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கிட கோரியவைகளை ஆய்வு செய்ய ( to examine ) அமைக்கப்பட்டதாம். பின்னர் நீதிமன்ற ஆணையின்படி ஊதிய குறை தீர்க்கும் பிரிவு (PGRC) அமைக்கப்பட்டு 4376 Representations பெறப்பட்டு 89 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு 2 இலட்சம் ஊழியர்கள் பயனடைந்தார்களாம்.
இருந்தாலும் Individual Employees / Associations - ஆல் ஊதிய திருத்தம் கோரி வழக்குகள் தொடரப்பட்டதாம். மேலும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தனிநபர்/சங்கங்களால் பல்வேறு தகவல்கள் கோரப்பட்டதாம். இதனால் நிதித்துறைக்கு அதிகமான வேலைப்பழு ஏற்பட்டதாம்.
தொடர்ந்து திருத்திய ஊதியம் வழங்கி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால், ஊதிய திருத்தம் சார்பான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதாம். (Cannot be entertained)
With retrospective effect என்பது முந்தைய தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட என பொருள் கொள்ளலாம்.)
எனவே General Pay Revision ( அதாவது அடுத்த ஊதியகுழு) - ன் போது ஊதிய முரண்பாடுகள் குறித்தும், ஊதிய திருத்தம் சார்பான கோரிக்கைகள் குறித்தும் அரசு கவனத்தில் கொள்ள (to examine) முடிவு செய்துள்ளதாம்.
எனவே Associations / Individual Employees - யிடமிருந்து பெறப்பட்ட ஊதிய திருத்தம் சார்பான கோரிக்கைகள் General Pay Revision - க்காக Commission அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்மடுகிறது (Deferred ) என இந்த அரசாணை மூலம் அரசு தெருவிக்கிறது.
( அதாவது இனி சங்கமோ தனிநபரோ ஊதிய திருத்தம் சார்பாக அடுத்த ஊதியகுழு வரை வரவேண்டாம் என்கிறார்கள்.)
அரசு பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்புஇனி உள்ளாட்சி நிர்வாகமே கவனிக்கும்
மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு பணியை உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதி மேற்கொள்ள வேண்டும் என்பது முக்கிய நோக்கம்.
இதன்படி மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), நிர்மல் பாரத் மற்றும் சி.எஸ்.ஆர்., (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி) முறையில் ஏர்போர்ட் மற்றும் என்.எல்.சி., நிர்வாகங்கள் பங்களிப்பிலும் அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு புதிய கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன.இந்நிலையில் அரசு பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாததால் கழிப்பறை பராமரிப்பு கேள்விக்குறியானது. இது அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதனால் அவற்றின் பராமரிப்பு பணிகளை உள்ளாட்சி நிர்வாகங்களிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்காக முதல் கட்டமாக ரூ.163 கோடி அத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் 100 சதவீதம் இப்பணி முடிந்துள்ளது. அரசு பள்ளிகளில் பதவி உயர்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் இடங்கள் ஆயிரக்கணக்கில் காலியாக உள்ளன. இதனால் இவற்றின் பராமரிப்பு பணி உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாளர்களை நியமித்து பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்றார்.
எஸ்.எஸ்.ஏ., பராமரிப்பு நிதி
எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7500 வரை பள்ளி பராமரிப்பு நிதி வழங்கப்படும். இது கட்டடம், புதிய நாற்காலி வாங்குவது உள்ளிட்ட செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும். ஆனால் இந்தாண்டு ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் கழிப்பறை பராமரிப்புக்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
09/07/2015
அரசு ஊழியர்களுக்கு அறிமுகமாகிறது இணையதள கல்வி
அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டத்தை அரசு தயார் செய்துள்ளது. கணினி தொடர்பான, அடிப்படை பயிற்சி மற்றும் அரசு அலுவலகங்களை கணினி மயமாக்கல் குறித்த பயிற்சி, அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிகளை அன்றாட அலுவலக பணியில், பயன்படுத்த வேண்டும்.
இதற்கு, போதியளவு வாய்ப்பு இல்லாததால், கணினி தொடர்பான பயிற்சிகள் முழுமையான பயன் தருவதில்லை என, அரசு நடத்தியுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, பயிற்சி தொடர்பான பாடங்களை, ஆன்-லைனில் சேர்த்து விட்டால், எப்போது வேண்டுமானாலும், அந்த விவரங்களை ஊழியர்கள் தெரிந்து கொள்ள முடியும். மென்பொருள் சூத்திரங்களை, ஆன்லைனில் வைத்திருந்தால், எளிதாக அறிந்து கொள்ளமுடியும். மேலும், பாடத் திட்டத்தை ஆன்-லைன் மூலம், எவர் வேண்டுமானாலும் பார்க்க முடியும் என்பதால், பயிற்சி ஒரே நேரத்தில் பரவலாக்கப்படும் போன்ற காரணங்களுக்காக, கணினி பயிற்சி தொடர்பான, ஆன்-லைன் பாடத் திட்டத்தை அரசு தயார் செய்கிறது.
பாடத் திட்டங்களை வாசிக்கவும், வீடியோ மற்றும் ஆடியோவில் பார்த்து கேட்கும் படியான வசதிகளும் செய்யப்படுகின்றன. ஊழியர்களின் வசதிக்கு ஏற்ப, அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்தே, பாட வகுப்புகளில் பங்கேற்று தேர்வுகளை எழுத முடியும். ஆன்-லைனிலேயே, கணினி தொடர்பான வகுப்புகள் நடத்தி, அதற்கான தேர்வுகளை அறிவித்து, சான்றிதழ்கள் வழங்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, இதற்கான, பாடத் திட்டங்களை வகுத்து ஆன்-லைனில் வெளியிடுதல், வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்தும் பணியை செய்கிறது.
ஆன்-லைன் கணினி படிப்புக்காக, 11 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பாடத் திட்டங்களை வகுக்கவும், அதற்கான, ஆன்-லைன் வசதிகளை மேம்படுத்தவும், தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து, ஆறு மாதங்களில், அரசு ஊழியர்களுக்கான ஆன்-லைன் கணினி வகுப்புகள் தொடங்கும் என, தகவல் தொழில்நுட்பத் துறையினர் கூறுகின்றனர்.
தொடக்கக் கல்வி -பள்ளிகல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர் -BRT-AEEO பொது மாறுதல் விண்ணப்பம்
தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்
தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் விண்ணப்பம்
தொடக்கக்கல்வித் துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் (Mutual Transfer Application Model)
AEEO TRANSFER APPLICATION
பள்ளிகல்வி துறை-ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்
அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுநர் விருப்ப மாறுதல்-விண்ணப்பம்
அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறஅடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெறவேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்குமுன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசுதெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு பெற விதிகளில் தளர்வு
இதுகுறித்து, அனைத்துத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள்உள்ளிட்டோருக்கு பணியாளர்- நிர்வாகச் சீர்திருத்தத் துறைசெயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் அனுப்பியுள்ள கடிதம்:
அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள்,பொதுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் கடவுச்சீட்டுகளைப் பெற சிலகடினமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்தநடைமுறைகளை எளிதாக்க வெளியுறவுத் துறை அமைச்சகம்முன்வந்துள்ளது.
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அரசுத் துறைகளின்அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களதுபணி, தாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கும் அடையாளச் சான்றுஅல்லது அரசுத் துறைகளில் இருந்து ஆட்சேபணையின்மைச்சான்றினைச் சமர்பிக்க வேண்டும் என்று ஏற்கெனவேதெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சான்றிதழ்களைப் பெறுவது கடினமாக இருப்பதால் இந்தநடைமுறை இப்போது எளிதாக்கப்பட்டுள்ளது. அதன்படி,கடவுச்சீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக,அதுகுறித்த முன்னறிவிப்புக் கடிதத்தை சம்பந்தப்பட்ட அரசுத் துறைஉயரதிகாரிக்குத் தெரிவித்தால் போதும்.
ஆட்சேபணை ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்ட அந்த உயரதிகாரிமண்டல கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு அதைத் தெரிவித்து,கடவுச்சீட்டு விண்ணப்பத்தை திரும்பப் பெற்று விடலாம் என்று தனதுகடிதத்தில் டேவிதார் தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகளில் 'டிஜிட்டல் இந்தியா' திட்டம்
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதில், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் சார்பில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை, பிரதமர் மோடி, ஜூலை 1ல், டில்லியில் துவக்கி வைத்தார். நாடு முழுவதும், 4.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஏற்படுத்தவும், 18 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, 'பாரத் நெட், டிஜிட்டல் லாக்கர், நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டல்' ஆகிய தொழில்நுட்ப வசதிகள் துவங்கப்பட்டன. இந்தத் திட்டத்துக்கு, விளம்பரத் துாதராக ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி கிருதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென, பள்ளி மற்றும் கல்லுாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை, இன வாரியான கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சிப் படிப்புக்கான உதவித்தொகை போன்ற வற்றுக்கு, டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக, புதிய தேசிய ஸ்காலர்ஷிப் இணையதளத்தில், பள்ளி, கல்லுாரிகளை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளதாக, கல்வித் துறையினர் தெரிவித்தனர்.
பி.எப் தொகை திரும்பப்பெறும் அளவை 75%ஆக குறைக்கத்திட்டம்
பி.எப் தொகையின் திரும்பப்பெறும் அளவை 75%ஆக குறைக்கத் திட்டம்!
மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் பிராவிடென்ட் பண்ட் தொகைக்கான திரும்பப் பெறும் அளவை 75 சதவீதமாகக் குறைக்க, ஊழியர் சேமலாப நிதி அமைப்பு (EPFO) திட்டமிட்டு வருதிறது. தற்போது இதன் அளவு 100 சவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பி.எஃ பணத்தை மக்கள் சரியான காரணத்திற்காகப் பயன்படுத்த தவறுவதால் திரும்பப் பெறும் அளவை 75 சதவீதமாகக் குறைத்து மீதமுள்ள தொகையைப் பணியாளரின் ஒய்விற்குப் பின் பென்ஷன் முறையில் அளிக்க முடிவு செய்துள்ளது EPFO அமைப்பு.
100% திரும்பப் பெறுதல்
தற்போது உள்ள முறையின் படி ஊழியர்களுக்கு வேலை பறிபோனால் இரண்டு மாதத்திற்குப் பிறகு முழுத் தொகையும் பெற்றுக்கொள்ளலாம் திருமணச் செலவுகள் போன்ற காரணங்களுக்காகப் பி.எஃ பணத்தில் 100% எடுத்துக்கொள்ளலாம்.
75% மட்டுமே
ஆனால் ஊழியர் சேமலாப நிதி அமைப்பின் ஆய்வுகளின் படி ஊழியர்கள் மேற்கொண்ட காரணங்களுக்காகப் பணத்தைச் செலவு செய்யாமல் பிறவற்றிக்குச் செலவு செய்வதாகத் தெரிகிறது. இதனைத் தடுக்கவே இத்தகை முடிவுகளுக்கு மத்திய அரசிடம் இவ்வமைப்பு பரிந்துரை செய்துள்ளது. காலப்போக்கில் இதன் அளவு 50 சதவீதம் வரையும் குறைய வாய்ப்புள்ளதாகக் கருத்து நிலவுகிறது.
1.30 கோடி
ஒவ்வொரு வருடமும் EPFO அமைப்பு சுமார் 1.30 கோடி ரூபாய் அளவிலான தொகையை ஊழியர்களுக்குத் திரும்ப அளிக்கிறது (Withdrwal). இதல் 65 லட்சம் ரூபாய் 100 சதவீதம் முழுமையாகத் திரும்பப் பெறுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து EPFO அமைப்பின் தலைவர் கேகே ஜலன் கூறுகையில், ஊழியர்கள் பி.எப் கணக்கை ஒரு சேமிப்பு கணக்காக மட்டுமே நினைக்கின்றனர். இதனைக் களைந்து 25 சதவீத பி.எப் தொகை அவர்களின் ஒய்வுதிய காலத்தில் பயன்படும் வகையில் அமைக்கவே இப்புதிய மாற்றத்தைச் செயல்படுத்தத் திட்டமிடுகிறோம் என அவர் தெரிவித்தார்.
அறிவிப்பு
பிராவிடென்ட் பண்ட் தொகைக்கான திரும்பப் பெறும் அளவை 75 சதவீதமாகக் குறைக்கும் பரிந்துரையை மத்திய அரசிடம் உள்ளது, கூடிய விரைவில் இதற்கான முடிவுகள் வெளியாகும் எனத் தெரிகிறது.
பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்: முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்.அதிகாரி உத்தரவு
பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்: முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்.அதிகாரி உத்தரவு பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனரும் ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான பூஜா குல்கர்னி உத்தரவிட்டார். முதல்வர் ஜெயலலிதா அக்கறை தமிழ்நாட்டில் உளள அனைத்து பள்ளிகளும் சுத்தமாக இருக்கவேண்டும், மாணவ-மாணவிகள் அனைவரும் ஆரோக்கியத்துடன் கல்வி கற்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அக்கறை கொண்டுள்ளார். இதையொட்டி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்திருக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களின் கழிவறைகள் பழுதடைந்து இருந்தால் அவற்றை சரிசெய்து கொடுக்கவேண்டும் அல்லது கழிவறை இல்லாதிருந்தால் அவற்றை கட்டிக்கொடுக்கவேண்டும் என்று அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கழிவறை வசதி செய்யப்பட்டு வருகின்றது. பெரும்பாலான பள்ளிகளில் இந்த பணி முடிவடைந்துவிட்டது. கருத்தரங்கு மேலும் பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்ற தலைப்பில் சென்னை யில் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம் மற்றும் யூனிசெப் நிறுவனம் சார்பில் 2 நாள் கருத்தரங்கு தொடங்கியது. கருத்தரங்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்திருப்பதை கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அனைவருக் கும் கல்வி திட்ட தமிழ்நாடு மாநில இயக்குனர் பூஜா குல்கர்னி பேசுகையில் கூறியதாவது:- குடிநீர் வசதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் பள்ளிக்கூடத்திற்கு தண்ணீர்போதிய அளவுக்கு வரவில்லை. இருப்பினும் மாணவ- மாணவிகள் அனைவரும் சாப்பிடும்போது கண்டிப்பாக சோப் போட்டு கைகளை கழுவி விட்டு சாப்பிடவேண்டும். மாணவ-மாணவிகள் இந்த பணியை சரியாக செய்கிறார்களா? என்று தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கண்காணிக்கவேண்டும். மேலும் பள்ளிக்கூடங்களை முதன்மை கல்வி அதிகாரிகள் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். அதாவது அவர்கள் பள்ளிக்கூடங்களை அடிக்கடி ஆய்வு செய்து உறுதிப்படுத்தவேண்டும். பள்ளிக்கூடத்தை சுத்தப்படுத்த மாணவர்களை மொத்தமாக பயன்படுத்தலாம். ஆனால் தனிப்பட்ட மாணவரையோ அல்லது மாணவியையோ பயன்படுத்தக்கூடாது. ஒரு மாணவர் கழிப்பிடத்தை பயன்படுத்தினால் அவர் அந்த கழிப்பிடத்தை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்பதை ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கவேண்டும். இவ்வாறு பூஜா குல்கர்னி கூறினார். தமிழ்நாடு, கேரளா மற்றும் யூனிசெப் முதன்மை அதிகாரி ஜாப் சச்சாரியா பேசுகையில் கூறியதாவது:- விழிப்புணர்வு தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் பல முன்னோடி திட்டங்களை கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் பள்ளிக்கூட மாணவர்கள் கைகழுவி விட்டு சாப்பிடுகிறார்கள். ஆனால் சோப் போட்டு கையை கழுவி விட்டு சாப்பிடவேண்டும். இந்த நடைமுறையின்படி 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அனைத்து மாணவர்களும் சோப் போட்டு கை கழுவி விட்டு சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்தவேண்டும். இந்த காரியத்தில் அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி ராஜேந்திர தத்னு, யூனிசெப் தமிழ்நாடு, கேரளா மாணவர்கள் கைகழுவுவதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்பு அதிகாரி அருண் டோபால், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் க.அறிவொளி, ரெ.இளங்கோவன், எஸ்.கண்ணப்பன், இணை இயக்குனர்கள் கார்மேகம், பழனிச்சாமி, உஷாராணி, நரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். தொடக்கத்தில் அனைவருக்கும் கல்விதிட்ட இணை இயக்குனர் எஸ்.நாகராஜ முருகன் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் என்.காயத்திரி நன்றி கூறினார்.
தொகுப்பூதிய காலத்தைக் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
தொகுப்பூதிய காலத்தைக் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுமாறு, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது. பதவி உயர்வு இல்லாமல் தவித்து வரும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை தர ஊதியமாக ரூ. 5,400 வழங்க வேண்டும். தமிழகத்தில் அனைத்துவகை ஆசிரியர்களுக்கும் உயர் கல்வி பெற்றிருந்தால் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது போல, தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். தொழிற்கல்விப் பாடத்தை அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டாயமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (தொழிற்கல்வி) பாஸ்கர சேதுபதியை நேரில் சந்தித்து சங்க நிர்வாகிகள் த.ராமசந்திரன், செ.நா.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பள்ளிகள் சுத்தம் 'யுனிசெப்' பயிற்சி
பள்ளிகள் சுத்தம் 'யுனிசெப்' பயிற்சி மாணவ, மாணவியர் சுத்தமாக இருக்கும் முறை குறித்து, 'யுனிசெப்' உடன் இணைந்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி தரப்பட்டது.மத்திய அரசின், 'ஸ்வச் பாரத்' என்ற துாய்மை இந்தியா திட்டத்தில், துாய்மையான இந்தியா, துாய்மையான பள்ளி என்ற திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிகளில் மாணவ, மாணவியர் கழிப்பறையை பயன்படுத்தி பின், உணவருந்தச் செல்லும் முன், கை கழுவுவது குறித்தும் கற்றுத் தரப்படுகிறது. இது தொடர்பாக, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கல்வித்துறை அதிகாரிகளுக்கு, இரண்டு நாள் பயிலரங்கம் சென்னையில் நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, 'பவர் பாயின்ட் பிரசன்டேஷன்' மற்றும் வீடியோ படங்கள் மூலம், விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
06/07/2015
05/07/2015
நல்லாசிரியர் விருது பெற இனி யோகா பயிற்சி அவசியம்
அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, ஆசிரியர்களின் யோகா பயிற்சி மதிப்பெண்ணும் கணக்கிடப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் உட்பட தகுதியான ஆசிரியர்கள், ஆகஸ்ட், 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
கடந்த, 2014 - 15க்கான நல்லாசிரியர் விருதுக்கு, ஆசிரியர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களும், தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும், ஆகஸ்ட், 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, இடைநிலை கல்வி இணை இயக்குனர் கார்மேகம் அறிவித்துள்ளார். நல்லாசிரியராக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்:
* 15 ஆண்டுகள் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும்.
* கடந்த ஆண்டு செப்டம்பர், 30ம் தேதிக்கு முன் ஓய்வு பெற்றவராக இருக்கக்கூடாது.
* பள்ளிக்கு காலந் தவறாமல் வந்திருக்க வேண்டும்.
* தொடர்ந்து, மூன்று ஆண்டுகள் தன் வகுப்பு அல்லது பாடத்தில், 'சென்டம்' அல்லது அதிக தேர்ச்சி அளித்திருக்க வேண்டும்.
* தலைமை ஆசிரியராக இருந்தால், தன் பதவிக்காலத்தில் தேர்ச்சி அதிகரித்திருக்க வேண்டும்.
* என்.சி.சி.,யான தேசிய மாணவர் படை, என்.எஸ்.எஸ்., என்ற நாட்டு நலப்பணித்திட்டம், 'சாரண, சாரணியர் இயக்கம் போன்றவற்றிலும், யோகா பயிற்சி அளிப்பதிலும் பங்கெடுத்திருந்தால், அதற்கு தனி மதிப்பெண் வழங்கப்படும்.
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு தயாராகிறது புது படிவம்
வருமான வரி தாக்கல் செய்ய, புது படிவம் தயாராகி வருகிறது. பாஸ்போர்ட் உள்ளவர்கள், அது தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும். ஆண்டுதோறும், மார்ச், 31ம் தேதிக்குள் வருமான வரியை செலுத்த வேண்டும். ஜூலை, 31ம் தேதிக்குள், அதற்குரிய விரிவான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த நிதி ஆண்டான, 2014 - 15 க்கான, விரிவான கணக்கை தாக்கல் செய்யும் காலம், ஆகஸ்ட், 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏற்கனவே இருந்த படிவம், தற்போது எளிமையாக்கப்பட்டு உள்ளது. தேவையற்ற தகவல்கள் என, சில நீக்கப்பட்டு, படிவத்தின் அளவு சுருக்கப்பட்டு உள்ளது. புதிய தகவல்கள் சில சேர்க்கப்பட்டும், படிவம் தயார் செய்யப்பட்டது. ஆனால், புதிய தகவல்கள் சிலவற்றுக்கு, கணக்கு கொடுப்பது கடினம் என, கருத்து பெறப்பட்டது. இதனால், புதிய படிவத்தில் மாற்றங்கள்செய்து, மீண்டும் படிவம் தயார் செய்யப்படுகிறது.
படிவம் முழுமையாகத் தயார் செய்து வருவதற்கு, இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதனால், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, ஆகஸ்ட் வரை, நீட்டிப்பு அளிக்கப்பட்டுஉள்ளது. ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள், 'ஆன் - லைன்' மூலம் கணக்கை தாக்கல் செய்யவது கட்டாயம். அதற்கு கீழ் உள்ளவர்களே, படிவம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, புதிய படிவம் உருவாக்குவதன் மூலம், கணக்கை தாக்கல் செய்வதில் சிக்கல் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆகஸ்டு வரை கால நீட்டிப்பு
மத்திய அரசின் புதிய கொள்கைப்படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் படிவங்களை எளிமைப்படுத்தியும், புதிய தகவல்களை சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.
புதிய தகவல் சேர்ப்பின் கீழ், வருமான வரி செலுத்துவோர், ஆண்டுதோறும், அவர்கள் சென்ற வெளிநாட்டு விவரம், அதற்கான செலவுகளை, வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் தெரிவிக்க வேண்டும். 'இப்புதிய அணுகுமுறை தேவையற்றது. வெளிநாட்டில் எவ்வளவு செலவு செய்தோம்; எதற்கு செலவு செய்தோம் என்ற விவரங்களை தெரிவிப்பது கடினம்' என, பொதுமக்கள் தரப்பில் கருத்து கூறப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்டு, 'பாஸ்போர்ட் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும்' என, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதனால், புதிய படிவம் உருவாக்குவதற்கும், அதை வினியோகித்து, கணக்குகளைப் பெறவும், ஆகஸ்ட் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் 10 நாள் பயிற்சி
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இதுவரை ஆண்டுக்கு 5 நாள்களாக இருந்த பணியிடைப் பயிற்சி இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 10 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பணியிடைப் பயிற்சி ஆசிரியர்களுக்கு எந்த வகையில் உதவியாக இருந்தது என அவர்களிடம் ஆய்வும் நடத்தப்பட உள்ளது. அதோடு, இந்தப் பயிற்சியில் அவர்கள் என்ன தெரிந்துகொண்டார்கள் என்பதைப் பதிவு செய்வதற்காக பயிற்சி அட்டைகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு பயிற்சியின்போது, கடந்த சில ஆண்டுகளில் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு பொதுத் தேர்வுகளுக்காக தயாரிக்கப்பட்ட சி.டி.க்களின் பிரதிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அதோடு, அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களது அனுபவத்தை ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . மேலும், பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களில் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதில்லை. எனவே, இந்தப் பாடங்களில் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்காக ஆசிரியர்களுக்கு தனியான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
ஆங்கில உச்சரிப்பை கற்பிக்க 'சிடி' பள்ளிகளில் ஆய்வு செய்ய உத்தரவு.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் நோக்கில் வினியோகிக்கப்பட்ட பிரத்யேக 'சிடி' கற்பித்தலில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்களை கொண்டு ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்த பிரத்யேக 'சிடி'க்கள் தயாரிக்கப்பட்டன. மொத்தம், 43 வகையான 'சிடி'க்கள் தயாரித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்டது. இந்த, 'சிடி'க்களை எல்.சி.டி., புரஜக்டர் மற்றும் லேப்டாப், கம்ப்யூட்டர் பயன்படுத்தி ஆங்கில ஆசிரியர்கள் கற்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதற்கான, கையேடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளிகள் திறந்து ஒரு மாத காலம் முடிவடைந்துள்ள நிலையில், மாணவர்களின் உச்சரிப்பில் உள்ள மாற்றம், 'சிடி' முறையாக ஆசிரியர்களால் பயன்படுத்தபடுகிறதா என்பதை ஆய்வு செய்யவும். அதற்கான, பதிவுகளை அனுப்பிவைக்கவும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்களால் ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இம்முறையை செயல்படுத்தாத பள்ளிகள், ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தரப்பபில் கூறப்பட்டுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்களை கொண்டு ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்த பிரத்யேக 'சிடி'க்கள் தயாரிக்கப்பட்டன. மொத்தம், 43 வகையான 'சிடி'க்கள் தயாரித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்டது. இந்த, 'சிடி'க்களை எல்.சி.டி., புரஜக்டர் மற்றும் லேப்டாப், கம்ப்யூட்டர் பயன்படுத்தி ஆங்கில ஆசிரியர்கள் கற்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதற்கான, கையேடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளிகள் திறந்து ஒரு மாத காலம் முடிவடைந்துள்ள நிலையில், மாணவர்களின் உச்சரிப்பில் உள்ள மாற்றம், 'சிடி' முறையாக ஆசிரியர்களால் பயன்படுத்தபடுகிறதா என்பதை ஆய்வு செய்யவும். அதற்கான, பதிவுகளை அனுப்பிவைக்கவும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்களால் ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இம்முறையை செயல்படுத்தாத பள்ளிகள், ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தரப்பபில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)