திருக்குறள்

11/09/2013

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி பெறப்பட்ட அரசு அறிவிப்பு :- முஸ்லிம் மாணவர்களுக்கு தாடி, தொப்பி, ஹிஜாப்க்கு தமிழ்நாடு அரசு கல்வித்துறை கல்வி நிலையங்களில் தடை இல்லை..!

பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி அலுவலகங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை" ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்தி தமிழக அரசு உத்தரவு

தொடக்கக் கல்வி - EMIS - மாணவர்களின் விவரங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய குறைகளை உடனுக் -குடன் நிவர்த்தி செய்ய மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மாநில ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ள இயக்குநர் உத்தரவு

தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் 54 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்க, பள்ளிகளின் பெயர் பட்டியல் முன்னுரிமை அடிப்படையில் அனுப்ப இயக்குநர் உத்தரவு.

தொடக்கப்பள்ளிகளில் ஆய்வு, இயக்குனர் உத்தரவு

09/09/2013

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என சென்னையில் 25 முதல் தொடர் மறியல்

மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் சார்பில் சென்னையில் செப்டம்பர் 25 முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் கோ.காமராஜ், பொதுச்செயலாளர் ந.ரங்கராஜன் ஆகியோர் தெரிவித்தனர். பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு முழுமையான ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது. இப்போது, சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி, சென்னை மன்றோ சிலையில் இருந்து கோட்டையை நோக்கி தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பேரணியாகச் செல்ல உள்ளனர்.

ஆசிரியர்கள் செலுத்தும் எல்.ஐ.சி பிரிமியத்துக்கு கமிசன் கேட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

சேலம் மாவட்டம், ஆத்தூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில், ஏ.இ.இ.ஓ.,வாக பணிபுரிந்து வருபவர் சுப்ரமணியன். இந்த அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும் துவக்க, நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியை, ஆசிரியர்கள், கூட்டுறவு கடன் சங்கத்தில் வாங்கிய கடன்தொகை மற்றும் அவர்கள் செல்லுத்த வேண்டிய எல்.ஐ.ஸி., பாலிஸிக்கான தொகையை, ஜூலை மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யவில்லை.

மேலும், ஆசிரியர்கள் சார்பாக செலுத்தப்பட்டு வரும் எல்.ஐ.ஸி., பாலிஸி தொகைக்கு, அந்த நிறுவனத்தில் சென்று கமிஷன் கேட்டதாக கூறப்படுகிறது. அதனால், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கடன் சுமை அதிகரித்தும், எல்.ஐ.ஸி., விபத்துக்கான இழப்பீடு தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டது. தவிர, அலுவல கத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு எதிராக, தன்னிச்சையாக செயல்பட்டு வந்ததாக கூறப் படுகிறது.

இந்நிலையில், உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த ராமச்சந்திரன், கடந்த, 2-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அப்போது, "எனது இறப்புக்கு, ஏ.இ.ஓ., சுப்ரமணியன்தான் காரணம்' என கடிதம் எழுதி வைத்தார்.

இச்சம்பவம் குறித்து, தலைவாசல் போலீஸார், ஏ.இ.இ.ஓ., சுப்ரமணியத்திடம் விசாரணை நடத்தி வருகி ன்றனர். இந்நிலையில், ஏ.இ.இ.ஓ., சுப்ரமணியன் மீது எழுந்த புகார்கள் குறித்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விசாரணை செய்து, அதன் அறிக்கையை, தொடக்கக் கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பினார். அதன்படி, தொடக்க கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், நேற்று முன்தினம், ஏ.இ.இ.ஓ., சுப்ரமணி யத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

PUBLIC SERVICES - THE SPECIAL RULES FOR THE TAMILNADU ELEMENTARY EDUCATIONAL SUBORDINATE SERVICE

"கண்டனம்" (CENSURE) போன்ற சிறிய தண்டனைகளுக்காக, அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கக்கூடாது மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

‘கண்டனம்’ என்பது போன்ற சிறிய தண்டனைகளுக்காக, அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பதவி உயர்வு
விருதுநகர் மாவட்ட கருவூல அலுவலகத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருபவர் வன்னியராஜ். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனு வருமாறு:

நான், கடந்த 1988–ம் ஆண்டு கருவூலத்துறையில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். 2009–ம் ஆண்டு கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றேன். 2012–2013–ம் ஆண்டு உதவி கருவூல அலுவலர் பதவி உயர்வுக்கான பட்டியலில் எனது பெயர் சேர்க்கப்படவில்லை.
காரணம் கேட்டபோது, எனக்கு ஏற்கனவே ‘கண்டனம்’ என்ற தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் எனது பெயர் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிய தண்டனைகளுக்கு பதவி உயர்வு மறுப்பது சரியல்ல. எனவே, எனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மறுப்பது சரியல்ல

இந்த மனு நீதிபதி என்.பால்வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.விசுவலிங்கம் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:
‘‘கண்டனம் என்பது போன்ற சிறிய தண்டனைக்காக பதவி உயர்வு வழங்க மறுப்பது சரியல்ல என்று 2011–ம் ஆண்டு தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அந்த அப்பீல் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதுபோன்ற சூழ்நிலையில் மனுதாரர், கண்டனம் என்ற தண்டனையை பெற்றுள்ளதாக கூறி பதவி உயர்வு வழங்க மறுப்பது சரியல்ல. எனவே, மனுதாரரின் பெயரை 2012–2013–ம் ஆண்டுக்கான உதவி கருவூல அலுவலர் பதவி உயர்வு பட்டியலில் 4 வாரத்துக்குள் சேர்க்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி?


இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி,மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால்,அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்யமுடியும்.

அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம். ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?
1.ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள்
( http://uidai.gov.in/update-your-aadhaar-data.html)சென்று லாகின் செய்ய வேண்டும்.
2.மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3.டாக்குமென்டுகளைஅப்லோட் செய்ய வேண்டும்.ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர்,முகவரி,பாலினம்,பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்
1.ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.
2.ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது,அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால்,அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால்,உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
3.ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
4.எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ,அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5.தேர்ந்தெடுத்த குறிப்புகளை,ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால்,அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்யவேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால்,பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
6.முகவரியை அப்டேட் செய்யும் போது,புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
7.தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

Photo:ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி??...

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி,மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால்,அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் சார்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியீடு

தமிழ்நாட்டில் 2009 பிறகு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட கலந்தாய்வு மூலம் மாறுதல் பெற தடை விதிக்கப்பட்டிருந்தது. அண்மையில் இந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தது. தற்பொழுது இந்த தீர்ப்பின் நகல் கிடைக்கப்பெற்றுள்ளது.

07/09/2013

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: 2013-15ம் பி.எட்., சேர்க்கை

தமிழ்நாடு திறந்தநிலை பல்லைக்கழகத்தில் பி.எட் சிறப்பு கல்வி 2013-15ம் கல்வி ஆண்டிற்கான படிப்பில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இப்படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பி.எட் சிறப்புக் கல்வி தமிழக அரசு, ஆர்சிஐ அங்கீகாரம் பெற்றது. பி.எட் சிறப்புக்கல்வி படிப்பிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் கையேடு பல்கலைக்கழக அலுவலகத்தில் ரூ.500 செலுத்தி நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

தபால் மூலம் பெற தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் என்ற பெயரில், சென்னையில் மாற்றத்தக்க வகையில் ரூ.550க்கான வங்கி வரைவோலையை பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்.,3ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சேர்க்கைக்கான தகுதி குறித்த விவரங்களுக்கு www.tnou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

இரண்டு லட்சம் அரசு ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்குகள் வெளியீடு CPS கணக்கு விவரங்களை அறிய இனைய தள முகவரி வெளியீடு



பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள 2 லட்சம் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்கு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திலுள்ள ஊழியர்கள் தங்களது 2011-12- ஆம் ஆண்டுக்கான வருடாந்திர கணக்கு அறிக்கையை கருவூலங்களில் சம்பளம் பெற்று வழங்கும் அதிகாரிகளிடம் (டி.டி.ஓ.) பெற்றுக்கொள்ளலாம் என சென்னையிலுள்ள முதன்மை கணக்குத் தணிக்கை அலுவலகம் அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் 29.02.12 ஆம் தேதி எந்த அலுவலகத்தில் பணியாற்றினார்களோ அந்த அலுவலகத்துக்கான டி.டி.ஓ.விடம் இந்த அறிக்கையைப் பெற்றுக்கொள்ளலாம். கருவூலங்களுக்கு இந்த கணக்கு அறிக்கைகள் சி.டி.க்களில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கணக்கு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. 2003 ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் உள்ள 6 லட்சம் ஊழியர்களில் 2 லட்சம் பேர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருகின்றனர். இந்தத் திட்டத்தின் படி, அரசு ஊழியர்கள் தங்களது அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஓய்வூதிய திட்டத்துக்குச் செலுத்தலாம். அதற்கு நிகரான தொகையை ஓய்வூதியத் திட்டத்துக்கு மாநில அரசு வழங்கும்.

இதுவரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மொத்த தொகையை ஊழியர்கள் அறிந்துகொள்ள முடியாமல் இருந்தனர். இப்போது நாடாளுமன்றத்தில் புதிய ஓய்வூதியச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து கணக்கு விவரங்களும் கருவூலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த கணக்கு அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் ஏதேனும் மாறுபாடுகள் இருந்தாலோ அல்லது மேலும் தகவல் தேவைப்பட்டலோ கீழ்க்கண்ட முகவரியிலோ, தொலைபேசியிலோ தகவல் தெரிவிக்கலாம்.

வர்ஷினி அருண், துணை மாநில கணக்காயர் (நிதி), மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் (கணக்கு மற்றும் பணி வரவு), அண்ணாசாலை, சென்னை - 18. தொலைபேசி: 044-24314477. மேலும் விவரங்களுக்கு http:www.agae.tn.nic.in