திருக்குறள்

09/09/2013

ஆசிரியர்கள் செலுத்தும் எல்.ஐ.சி பிரிமியத்துக்கு கமிசன் கேட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

சேலம் மாவட்டம், ஆத்தூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில், ஏ.இ.இ.ஓ.,வாக பணிபுரிந்து வருபவர் சுப்ரமணியன். இந்த அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும் துவக்க, நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியை, ஆசிரியர்கள், கூட்டுறவு கடன் சங்கத்தில் வாங்கிய கடன்தொகை மற்றும் அவர்கள் செல்லுத்த வேண்டிய எல்.ஐ.ஸி., பாலிஸிக்கான தொகையை, ஜூலை மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யவில்லை.

மேலும், ஆசிரியர்கள் சார்பாக செலுத்தப்பட்டு வரும் எல்.ஐ.ஸி., பாலிஸி தொகைக்கு, அந்த நிறுவனத்தில் சென்று கமிஷன் கேட்டதாக கூறப்படுகிறது. அதனால், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கடன் சுமை அதிகரித்தும், எல்.ஐ.ஸி., விபத்துக்கான இழப்பீடு தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டது. தவிர, அலுவல கத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு எதிராக, தன்னிச்சையாக செயல்பட்டு வந்ததாக கூறப் படுகிறது.

இந்நிலையில், உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த ராமச்சந்திரன், கடந்த, 2-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அப்போது, "எனது இறப்புக்கு, ஏ.இ.ஓ., சுப்ரமணியன்தான் காரணம்' என கடிதம் எழுதி வைத்தார்.

இச்சம்பவம் குறித்து, தலைவாசல் போலீஸார், ஏ.இ.இ.ஓ., சுப்ரமணியத்திடம் விசாரணை நடத்தி வருகி ன்றனர். இந்நிலையில், ஏ.இ.இ.ஓ., சுப்ரமணியன் மீது எழுந்த புகார்கள் குறித்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விசாரணை செய்து, அதன் அறிக்கையை, தொடக்கக் கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பினார். அதன்படி, தொடக்க கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், நேற்று முன்தினம், ஏ.இ.இ.ஓ., சுப்ரமணி யத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment