திருக்குறள்

05/09/2013

EMIS பதிவு - மாவட்ட வாரியாக அட்டவணை வெளியீடு ,எந்த மாவட்டத்திற்கு எப்போது?

தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகளில் படிக்கின்ற சுமார் 1.33 கோடி மாணவ, மாணவியரின் விபரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் ஒரே நேரத்தில் தங்களது மாணவர்கள் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர். 

ஒரே நேரத்தில் அதிக அளவில் பதிவேற்றம் செய்ய முயன்றதால் கம்ப்யூட்டர் சர்வர் முடங்கியது.இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களையும் 4 மண்டலமாக பிரித்து இப்பணிகளை மேற்கொள்ள கால அட்டவணை வகுத்து தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காலக்கெடுவும் அக்டோபர் 1ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

ஒரே நேரத்தில் அதிக அளவிலான பள்ளிகள் இந்த இணையதளத்தில் உள்ளீடுகள் செய்ய முயல்வதை கட்டுப்படுத்தும் வகையில் மாணவர்கள் விபரங்களை உள் ளீடு செய்ய வேண்டியவர்களின் பணிகள் பாதிக்காத வகையிலும், கணினி முறையாக அனைவருக்கும் பயன்படும் விதத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அனைத்து மாவட்டங்களுக்கும் கால அட்டவணை வகுக்கப்பட்டு மாணவர் விபரங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலில் 8 மாவட்டங்களின் விபரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் போது பிற மாவட்டங்களின் விபரங்களை பதிவு செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பதிவுகளை முழுமையாக முடிக்க வேண்டும்.

மாவட்ட வாரியாக அட்டவணை வெளியீடு EMIS பதிவு எந்த மாவட்டத்திற்குஎப்போது?

அரியலூர், சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் செப்டம்பர் 4 முதல் 10ம் தேதி.

கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்கள் செப். 11 முதல் 17.

புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருவாரூர் மாவட்டங்கள் செப்.18 முதல் 24.

தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள்செப்.25 முதல் அக்.1 வரைஒதுக்கீடு செய்து உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment