பள்ளிக்கல்வித் துறையின் ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்னை செயலர் சபீதா, அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்ணி, தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் மகேஸ்வரன், பள்ளி கல்வி இயக்குனர் உள்ளிட்ட அனைத்து இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
2013&2014ம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறை மான்ய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாகவும், தரமான கல்வி வழங்குவது குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அனைத்து பள்ளிகளுக்கும் தரமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், பள்ளிகளை அடிக்கடி ஆய்வு நடத்த இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment