திருக்குறள்

20/09/2013

பள்ளிகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

பள்ளிக்கல்வித் துறையின் ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்னை செயலர் சபீதா, அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்ணி, தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் மகேஸ்வரன், பள்ளி கல்வி இயக்குனர் உள்ளிட்ட அனைத்து இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
2013&2014ம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறை மான்ய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாகவும், தரமான கல்வி வழங்குவது குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அனைத்து பள்ளிகளுக்கும் தரமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், பள்ளிகளை அடிக்கடி ஆய்வு நடத்த இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

அரியலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.34லட்சம் ஊக்கத்தொகை கலெக்டர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.33.85 லட்சம் மதிப்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அரியலூர் கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்தார். அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியல் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. அரியலூர் எம்எல்ஏ துரை.மணிவேல் முன்னிலை வகித்தார். கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமை வகித்து பேசியதாவது: அரியலூர் மாவட்டத்தில் 2012-13 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முப்பருவத்திற்கும் நோட்டுப்புத்தகம் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 32 பேருக்கும், 1 முதல் 12 வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச புத்தகப்பை இதுவரை 84 ஆயிரத்து 637 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8 வரை படிக்கும் ஏழை எளிய சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு 4 செட் சீருடைகள் வழங்கப்பட்டது. மேலும் 1 லட்சத்து 28 ஆயிரத்து 887 பேருக்கு இலவச காலணிகள் வழங்கப்பட்டுள்ளது. இலவச பஸ்பாஸ் கேட்டு விண்ணப்பித்த1 முதல் 12 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 14 ஆயிரத்து 719 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 6 ஆயி ரத்து 488 பேருக்கு தேவை பட்டியலின்படி இலவச சைக்கிள் பெறப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 58 ஆயிரத்து 414 பேருக்கு இலவச உபகரணப்பெட்டியும், சாதி, வருமான, இருப்பிட சான்று பெறுவதற்கு படிக்கிற பள்ளிகளிலேயே விண்ணப்பித்த 10 ஆயிரத்து 492 மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை பெற தகுதியான 5 ஆயிரத்து 97 பேருக்கு கல்வி ஊக்கத்தொகையாக ரூ.33.85 லட்சத்தில் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு கலெக் டர் பேசினார். டிஆர்ஓ கருப்பசாமி, ஆர்டிஓ கண பதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதி வாணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வைத்தியநாதன், மாவட்ட கல்வி அலுவலர் அருள்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளான அக்டோபர் 3-ந்தேதி மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடபுத்தகம் வழங்க இயக்குநர் உத்தரவு

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் அக்டோபர் மாதம் 3ந் தேதி திறக்கப்படுகின்றன. அன்று மாணவர்கள் அனைவருக்கும் 2ம் பருவத்திற்கான பாட புத்தகங்கள், நோட்டுகள் அனைத்தும் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

காலாண்டு தேர்வுகள்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகம் வழங்கப்பட்டு வருகின்றன. அதுபோல விலை இல்லா நோட்டு புத்தகங்களும் கொடுக்கப்படுகின்றன.
தற்போது அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் காலாண்டுதேர்வு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொது வினாத்தாள் வழங்கப்பட்டு வருகிறது. தேர்வுகள் அனைத்தும் வருகிற 21-ந்தேதிக்குள் முடிக்கப்பட்டு விடுமுறை விடப்படுகிறது.
அக்டோபர் 2-ந்தேதி
விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் அனைத்தும் அக்டோபர் மாதம் 3-ந்தேதி திறக்கப்படுகின்றன.
தற்போது மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க பாடப்புத்தகங்கள் காலாண்டுவரை ஒரு பருவமாகவும், அரையாண்டுவரை 2-வது பருவமாகவும் முழு ஆண்டுக்கு 3-வது பருவமாகவும் வழங்கப்படுகிறது. இது 9-ம் வகுப்புவரை இந்த பருவமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி முதல் பருவம் முடிந்து அக்டோபர் 3-ந்தேதி 2-வது பருவம் தொடங்குகிறது. அன்று அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் விலை இல்லா பாடப்புத்தகம், நோட்டு புத்தகம் வழங்கப்பட உள்ளது. அதற்காக ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு விட்டன.
எனவே தலைமை ஆசிரியர் கண்காணிப்பில் அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உரிய பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்களை வழங்குவார்கள்.
இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். இளங்கோவன் தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் கூறுகையில் அனைத்து தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளிலும் விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது. பள்ளிக்கூடம் திறந்த அன்று எல்லா மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்றார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்விற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்,தமிழக அரசும் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலையில் அறிவிக்கப்படும். இந்நிலையில் தற்போது 80 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி இனி 90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியம் பெறும் 30 லட்சம் பேரும் பலனடைவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் ஆண்டுதோறும் கூடுதலாக 10 ஆயிரத்து 879 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும். இதையடுத்து அடுத்த வாரத்தில் தமிழக அரசும் அகவிலைப்படி உயர்விற்கான அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

19/09/2013

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க ஆசிரியர்களுக்கு. பயிற்சி

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் பள்ளிகளிலும், பள்ளிகளுக்கு வெளியிலும் அதிகரித்து வருகின்றன.இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த குழந்தைகள் மீதான உரிமை மீறல் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த விழிப்புணர்வுப் பயிற்சி, குழந்தைகளும் ஆசிரியர்களும் அதிக விழிப்போடு இருக்க உதவும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.முதற்கட்டமாக, தமிழகம் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.இதில் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 60 பேருக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.17) பயிற்சி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பயிற்றுநர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.இவர்கள் கருத்தாளர்களாக இருந்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பிற ஆசிரியர்களுக்குப் பயிற்சியை வழங்குவார்கள். ஆசிரியர்களுக்கான பயிற்சி அக்டோபர் மாதம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.துளிர் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயிற்சியை வழங்குகின்றனர்.

என்ன பயிற்சி?எது பாலியல் வன்கொடுமை, பாலியல் கொடுமைக்கான அறிகுறிகள், சாதாரணமாக தொடுவதற்கும், தவறான நோக்கத்தில் தொடுவதற்கும் உள்ள வேறுபாடு, பாதிக்கப்படும் குழந்தைகளின் அச்சத்தைப் போக்குதல், தவறிழைத்தவர்களுக்கு தண்டனைப் பெற்றுத் தருதல் போன்றவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.குறிப்பாக பள்ளிகளிலோ, வெளியிலோ தனியான இடத்துக்கு யாரேனும் அழைத்தால் போகக் கூடாது உள்ளிட்ட பொதுவான ஆலோசனைகளும் ஆசிரியர்களின் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை மண்டலத்துக்கான பயிற்சியில் பெண் குழந்தைகளுக்கு நிகராக ஆண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது என பயிற்சியாளர் கூறியது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆசிரியர்களுக்கே இது குறித்து பேசுவதில் தயக்கம் இருக்கிறது. இந்தத் தயக்கத்தைப் போக்கி அவர்களை குழு விவாதத்துக்கு தயார் செய்யவே ஒருநாள் தேவைப்படுகிறது.இந்தப் பயிற்சியின் முடிவில் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமை குறித்த விழிப்புணர்வு பெற்றுச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளியில் பயிலும் சத்துணவு உண்ணும் மாணவர் விவ‌ரம் கேட்பு ப‌டிவம்

SSA,' நிதி, 1,500 கோடி ரூபாயாக குறைப்பு: நிதி நெருக்கடியால், மத்திய அரசு நடவடிக்கை

நாடு முழுவதும், 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் அனைவரும், கட்டாயம், எட்டாம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு, அனைவருக்கும் கல்வி திட்டத்தை கொண்டு வந்தது. பின், இத்திட்டத்தின் கீழ், எட்டாம் வகுப்பு வரை படிப்பவர்கள், தொடர்ந்து, 10ம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்பதற்காக, மத்திய இடைநிலைக் கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) கொண்டு வரப்பட்டது. இரு திட்டங்களுக்கும், தனித்தனியே, மத்திய அரசு, நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதில், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியில், 70 சதவீதம், தொடக்க கல்வித்துறை கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, சம்பளமாக வழங்கப்படுகிறது

. 30 சதவீத நிதி, ஆரம்ப கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், திட்ட அறிக்கைகளை தயாரித்து, அதற்கு தேவைப்படும் நிதியை அளிக்கக் கோரி, தமிழக அரசு, மத்திய அரசுக்கு, அறிக்கை அளிக்கும். அதை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு செய்து, நிதியை ஒதுக்கீடு செய்யும். ஒவ்வொரு ஆண்டும், 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, நிதி ஒதுக்கீடு செய்துவந்த மத்திய அரசு, நடப்பு ஆண்டிற்கு அதை, 1,500 கோடி ரூபாயாக குறைத்து விட்டது என, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: கடந்த ஆண்டு (2012 - 13), 2,000 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த ஆண்டு (2013 - 14), 3,000 கோடி ரூபாய்க்கு, திட்ட அறிக்கையை சமர்ப்பித்தோம். ஆனால், இதில், 50 சதவீத நிதி மட்டுமே கிடைத்துள்ளது. தமிழகத்திற்கு மட்டுமில்லாமல், அனைத்து மாநிலங்களுக்கும், அவர்கள் கேட்ட நிதியில், 50 சதவீத நிதியைத் தான், மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கடும் நிதி நெருக்கடி காரணமாக, நிதி குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார். ஆனால், ஆர்.எம்.எஸ்.ஏ., நிதி, சிறிது கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, 460 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், இந்த ஆண்டு, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என, தெரிகிறது. மத்திய அரசு நிதியில், புதிய பள்ளி கட்டடங்கள், ஏற்கனவே இயங்கி வரும் பள்ளிகளில், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. தற்போது, இந்த நிதியை குறைத்திருப்பதால், பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில், தேக்க நிலை ஏற்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதாக டெல்லிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 1ந் தேதி தேதியிட்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இதற்கான அறிவிப்பை வரும் வெள்ளி அன்று வெளியிடும் எனத் தெரிகிறது.


நடப்பு நிதியாண்டில் 2வது முறையாக அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்துகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 80%ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தற்போது 90%ஆக உயர்கிறது. கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரட்டை இலக்கத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பிறகு தற்போதும் 10% உயர்த்தப்படுகிறது.

இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்கள் 30 லட்சம் ஒய்வு ஊதியத் தாரர்கள் பலன் பெறுவார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் அகவிலைப்படியிலிருந்து குறிபிட்ட தொகை அடிப்படை ஊதியத்தில் இணைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் "வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பேசும் திட்டம் துவக்கம்

பள்ளிக்கல்வி இயக்குனர், "வீடியோ கான்பரன்ஸ்' முறையில், முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பேசுவதற்கான திட்டம், நேற்று முன்தினம் துவங்கியது. துறை செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து மாதத்திற்கு ஓரிரு முறை, முதன்மைக் கல்வி அலுவலர்களை சென்னைக்கு அழைத்து கூட்டம் நடத்துவது வழக்கம்.

இதற்காக அவ்வப்போது, முதன்மைக் கல்வி அலுவலர்கள், சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, "வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், நேரடியாக இயக்குனர் பேசும் வகையிலான திட்டம் நேற்று முன்தினம் துவங்கியது. அரியலூர், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, விழுப்புரம் உள்ளிட்ட, 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், இயக்குனர் ராமேஸ்வர முருகன், திட்ட செயல்பாடு குறித்து பேசினார். இது போன்று, வாரத்திற்கு ஒரு முறை, வாரத்திற்கு, ஐந்து மாவட்டம் என்ற முறையில், திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இயக்குனர் தெரிவித்தார்.

ஆன்-லைன் கலந்தாய்வு : பள்ளி கல்வித் துறையில், இருக்கை கண்காணிப்பாளர்களாக உள்ள, 50 பேருக்கு கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, ஆன்-லைன் வழியாக நேற்று நடந்தது. பணி மூப்பு தகுதி வாய்ந்த, 50 பேர் பதவி உயர்வு பெற்றனர். இதுபோன்று, 112 உதவியாளர்கள், இருக்கை கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வும், ஆன்-லைன் வழியாக நேற்று நடந்தது

பள்ளிக்கல்வித்துறை - சுகாதார நடவடிக்கைகள் - டெங்கு மற்றும் பிற வைரஸ் காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

EDUCATION - INCENTIVE INCREMENT FOR TEACHERS DURING 1968-69

பள்ளிக்கல்வி - எம்.பில்., உயர்கல்வித் தகுதி பெற்றமைக்கு மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் குறித்த அரசாணை மற்றும் உயர்நீதிமன்ற ஆணை நகல்

மூன்றாவது ஊக்க ஊதிய (3rd Incentive) உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் -15.
GO.15 SCHOOL EDUCATION (J) DEPT DATED.28.03.2013 & HIGH COURT JUDGEMENT ORDER CLICK HERE  TO DOWNLOAD...

M.Phil stay Order available 

தொடக்கக் கல்வி - அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ / மாணவிகள் 02.10.2013 முதல் 08.10.2013 முடிய JOY OF GIVING WEEK கொண்டாட இயக்குநர் உத்தரவு

தொடக்க கல்வித் துறையில் 2004-ம் ஆண்டு முதல் பணி நியமனம் செய்யப்பட்டு பதவி உயர்வின்றி தவிக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்

தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறையில் பணி நியமனம் பெற்றுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தொடக்க கல்வித் துறையில் பதவி உயர்வின்றி தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறையில் பணி நியமனம் பெற்றுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறையில் பணி நியமனம் பெற்றுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயரத்தும் வகையில், பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2004-ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 2006, ஜூன் மாதம் முதல் காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது.

சம கல்வித் தகுதி, பணி, ஊதியம் மற்றும் தேர்வு முறை இருந்த போதும் ஆசிரியர் தேர்வு வாரிய தர எண்ணை கருத்தில் கொள்ளாமல், பள்ளிக் கல்வித் துறையில் வழங்குவது போல, தொடக்க கல்வித் துறையில் பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஓரே பதவி உயர்வான நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வும், தற்போது ஒவ்வொரு ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால் பதவி உயர்வு என்பது கனவாகி விட்டதாக பட்டதாரி ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தரம் உயர்த்தப்படுóம் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித் துறையில் இளையவராக கருதப்படுவதால் பதவி உயர்வு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் செயலர் கூறும் போது, கடந்த 1981-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை எண் 720-ல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறலாம் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அப்போது 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறை மூலம் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் அரசாணையில் திருத்தம் செய்யப்படவில்லை.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஆசிரியர் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு சிறப்பு அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிரியர் போட்டித் தேர்வில் 2-ஆம் பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட 2,500-க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் பயிற்றுநராக நியமிக்கப்பட்டு பதவி உயர்வுக்கான வாய்ப்பை பெற்றுள்ளனர். இதே தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் பட்டியலில் தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கக் கல்வித் துறையில் பணி நியமனம் செய்யப்பட்டதால் பதவி உயர்வுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.

தொடக்க கல்வித் துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களின் நலன் கருதி அரசாணை 720-ல் திருத்தம் செய்யவும், தொடக்க கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை என்ற வேறுபாடின்றி, ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.