திருக்குறள்

09/11/2013

பணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் இறந்தால், அவர்களது வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க உத்தரவு

எம்.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விரம்: திருவண்ணாமலை மாவட்டம் அகரம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சத்துணவு சமையலராக எனது தாய் பணிபுரிந்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி பணியிலிருக்கும் போது அவர் இறந்தார். அரசு பணியின் போது எனது தாய் இறந்ததால், கருணை அடிப்படையில் அந்த வேலையை எனக்கு வழங்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன்.

அதில், சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தேன். மாவட்ட ஆட்சியரும் அந்த மனுவை ஏற்றுக் கொண்டு 2009-ஆம் ஆண்டு அரசுக்கு பரிந்துரைத்தார். ஆனால், சமையலர் அல்லது சமையல் உதவியாளர் பணியில் தான் நியமிக்க முடியும், சத்துணவு அமைப்பாளராக நியமிக்க முடியாது எனக் கூறி சமூக நலத்துறை எனது கோரிக்கையை மறுத்து விட்டது. அதனால், கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் வேலை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நடந்து வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இறந்த அரசு ஊழியர்களின் பதவியைப் பொறுத்து அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்கக் கூடாது. வாரிசுகளின் தகுதி அடிப்படையில் அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அதனால், மனுதாரின் தகுதி அடிப்பைடையில் 8 வாரங்களுக்குள் அவருக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வழங்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

01.01.2006க்கு பிறகு தேர்வுநிலை / சிறப்புநிலை எய்தும் ஆசிரியர்களின் தர ஊதியம் ரூ.2800/- என்பது தொடருமேயானால் அவர்களுக்கு 01.01.2011 முதல் தனி ஊதியம் ரூ.750/- பெற தகுதியுண்டு என பள்ளிக்கல்வி மண்டல கணக்கு அலுவலரின் தெளிவுரை

பள்ளிக்கல்வி- EMIS - பள்ளிக்கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துவகை மேலாண்மையின் கீழ் செயல்படும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புகைப்படும் எடுக்க உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு: இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் வருகிறது மாற்றம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் செய்யும் முறை இந்த ஆண்டு மாறலாம் எனத் தெரிகிறது.

உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், மாநிலப் பதிவு மூப்புக்குப் பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யலாமா என அரசு பரிசீலித்து வருகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.

இதில் உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை மட்டுமே மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இதில் இரண்டு தாள்களையும் சேர்த்து மொத்தம் 4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளில் 14,496 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாளில் 12,596 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களும், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 2 ஆயிரம் காலிப்பணியிடங்களும் உள்ளன.

கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் காலிப்பணியிடங்களை விட குறைவான ஆசிரியர்களே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்ததால் நியமன முறை அதிக முக்கியத்துவம் பெறவில்லை.

என்ன வழக்கு? இடைநிலை ஆசிரியர்களை மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை இடைநிலை ஆசிரியர்களை மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.

அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வு இரண்டிலும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் சில மாதங்களுக்கு முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால், இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

மனுவை ஏற்று இந்த வழக்கை முடித்துவைத்து உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற இடைக்கால உத்தரவு காலாவதியாகியுள்ளது.

எனவே, இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களை பட்டதாரி ஆசிரியர்களைப் போல வெயிட்டேஜ் மதிப்பெண் முறை (அரசாணை எண் 252) மூலம் நியமனம் செய்யலாமா அல்லது மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யலாமா என தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

ஆசிரியர்களின் வருகையை தெரிவிக்கும் திட்டம் விரைவில் மாநிலமெங்கும்!

"கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின் கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம் இம்மாத இறுதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்" என பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை: முதல்வர் உத்தரவுப்படி, பள்ளி கல்வித் துறையில் ஆசிரியர்களின் வருகை பதிவை அதிகாரிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டம் கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தில் (இ.எம்.ஐ.எஸ்.,) ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதலில் திருச்சி மாவட்டத்தில் செப்., 5ல் முதல்வர் துவக்கி வைத்தார்.

இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 56,573 பள்ளிகள், 5.63 லட்சம் ஆசிரியர், 1.35 கோடி மாணவர்களின் விவரம், இணையதளத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இப்பணியை, இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து விவரமும் ஒருங்கிணைக்கப்பட்ட பின், எஸ்.எம்.எஸ்., திட்டம், மாநில அளவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்

06/11/2013

மாணவர் வருகை EMIS - SMARTCARD மூலம் பதிவு செய்தல் எப்படி? (படம்) TN government plans to issue smart cards to school students with the first lot to be issued to students of high schools and higher secondary schools.


Across the state of Tamil Nadu, there are 2,234 govt. high schools, 543 aided high schools, 2,388 govt. higher secondary schools and 1,044 aided higher secondary schools with about 60 lakhs students studying. Details of the students and their family, family income, marks, activities and interest on sports are kept as records in schools. Now, the government of Tamil Nadu plans to keep a track of these minute details through smart cards.
Earlier, students of central board schools were provided smart cards. Every, student of TN state board schools will be provided a smart card with a unique code number. This code number with details of the student (as mentioned above) will be included in an amalgamated computer server at the state.
After obtaining this card, the student should register his/her arrival at the classroom through swiping machine that will be provided.
As a result of this, clear details about every student and teacher can be accessed from any corner of the state. If a student needs to change schools, he/she need not obtain certificates from old school since these smart cards will play its role.
In India, Gujarat is a pioneer of smart card practice in government schools.
Smart Card will not only carry academic details but also medical records of the student. Every student will be subjected to periodical medical check-up and its details to be incorporated in this card.
With help of this card, it will also be possible to identify the 'student dropouts'. At first stage, students of high schools and higher secondary schools will be provided with this card. After reviewing the success, this project will be expanded to middle and elementary level schools of the state also.
Last month, an expert committee from Tamil Nadu went to Gujarat to make a detailed analysis of this project. Within few weeks, an inauguration programme for this project would be held in Tamil Nadu.
Educationists feel, "If this project is implemented, we can resolve various issues, prevailing in education department".

தொலைபேசி கட்டணத்தை மொபைல் மூலம் செலுத்தலாம்.

தொலைபேசி பில் கட்டணம் செலுத்த இனி மக்கள் கியூவில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. மொபைல் அல்லது ஐ_பேட் மூலமாகவே இனி கட்டணத்தைசெலுத்தலாம் என்று பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தொலைபேசி பில் கட்டணம் செலுத்த இனி கம்யூட்டர் உதவியை நாட வேண்டியதில்லை.வரிசையில் நின்று கட்டுவதோ தேவையில்லை. ஸ்மார்ட் மொபைல் அல்லது ஐ-பாட் ஆகியவை பயன்பாட்டில் இருந்தாலே போதுமானது. இவற்றின் மூலமாக தங்களது தொலைபேசி கட்டணத்தை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில்''மை பி.எஸ்.என்.எல். ஆப்'எனும் அப்ளிகேஷன் சாப்ட்வேரை ஸ்மார்ட் மொபைல் கொண்டோ அல்லது ஐ_பாடில் டவுன்லோடு (பதிவிறக்கம்) செய்துகொள்ள வேண்டும். இதனை ''ஆன்ட்ராய்டு அப் ஸ்டோர்ஸ்'' அல்லது ''விண்டோஸ் அப் ஸ்டோர்ஸ்'' எனும்இணைய தளங்களிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்க் மற்றும் பி.எஸ்.என்.எல்._பிராண்ட் ட்ரஸ்ட் கார்டு மூலமாகவும் தங்களது பில் தொகையை செலுத்தலாம். இதில் மொபைல் போன் ரீ-சார்ஜ் செய்யும் வசதி மற்றும் சிறப்பு கட்டண வவுச்சர்களை ஆக்டிவேட் செய்யும் வசதியும் உள்ளன. பணம் செலுத்திய பின்னர் அதற்கான விவரம் எஸ்.எம்.எஸ். மூலம் வாடிக்கையாளர்களின் மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தமிழகத்தில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் புதிதாக 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள்


தமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. இதையடுத்து, அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகளுக்கு உயர்தரமான கல்வி கிடைத்திடும் வகையில் மத்திய மாதிரி பள்ளி (ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா) என்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது. அரசு - தனியார் கூட்டுமுயற்சியுடன் இது நிறைவேற்றப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் வட்டாரத்துக்கு ஒரு பள்ளி வீதம் 2,500 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படும்.




இதற்காக தனியார் புதிய பள்ளிகளை தொடங்கலாம். அல்லது தற்போதைய பள்ளிகளையே மாதிரி பள்ளிகளாக மாற்றிக்கொள்ளலாம். பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிக்காக மொத்த செலவில் 25 சதவீத தொகையை மத்திய அரசு மானியமாக ஆண்டுதோறும் வழங்கும்.
அரசு ஒதுக்கீடு
பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களில் 40% பேர் அரசால் ஸ்பான்சர் செய்யப்படுவர். எஞ்சிய 60% பேர் பள்ளி நிர்வாகத்தால் சேர்க்கப்படுவார்கள். அரசு ஸ்பான்சர் செய்யும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே பள்ளிக்கு செலுத்திவிடும். நிர்வாகப் பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகமே நிர்ணயித்துக்கொள்ளலாம். ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம்தான் சம்பளம் வழங்க வேண்டும்.
நுழைவுத்தேர்வு
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்ட இந்த மாதிரிப் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைப் போல் செயல்படும். இப்பள்ளிகளில் நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அரசு ஸ்பான்சர் செய்யும் மாணவர்களுக்கும் இது பொருந்தும். மாதிரிப் பள்ளிகளுக்கு மத்திய அரசின் 25 சதவீத மானிய உதவி 10 ஆண்டுகளுக்கு கிடைக்கும். அதன்பிறகு அந்தந்த மாநில அரசுகள் உதவிசெய்ய வேண்டும்.
356 பள்ளிகள்
நாடு முழுவதும் தொடங்கப்படவுள்ள 2,500 மாதிரிப் பள்ளிகளில் தமிழ்நாட்டுக்கு 356 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன. இதற்காக கல்வியில் பின்தங்கிய பகுதி அல்லாத இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. சென்னையில் எழும்பூர், அடையாறு, மயிலாப்பூர், புரசைவாக்கம், பெரியமேடு, ராயபுரம், திருவல்லிக்கேணி, தி.நகர், பெரம்பூர் ஆகிய 9 இடங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.
மாதிரிப் பள்ளிகள் தொடங்க விரும்பும் அறக்கட்டளைகள், சங்கங்கள், தனியார் நிர்வாகங்கள் போன்றோரிடம் இருந்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கெனவே விண்ணப்பங்களை பெற்றுவிட்டது. மாதிரிப் பள்ளிகள் தொடங்குவதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தகவல் அனுப்பியிருக்கிறது. இதுவரை தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. மாதிரிப் பள்ளிகள் தொடங்க நிச்சயம் அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் என்று கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
அரசு பள்ளிகள் பாதிக்கும்
சாதாரணமாகவே தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களின் பெற்றோர் படையெடுப்பது வழக்கம். ஆங்கில மோகம்தான் அதற்கு காரணம். தற்போது சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பக்கமும் பல பெற்றோரின் பார்வை திரும்பியிருக்கிறது. இந்த நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான வசதியுடன் இலவசமாக படிக்கக்கூடிய வாய்ப்புடன் மாதிரி பள்ளிகள் வரும்பட்சத்தில் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கூட தங்கள் குழந்தைகளை இதுபோன்ற பள்ளிகளில் சேர்க்கவே ஆசைப்படுவார்கள். இதனால். அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கல்வியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
வேண்டுகோள்
மத்திய அரசின் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படுவது குறித்து பொதுப் பள்ளிமுறைக்கான மாநில மேடை அமைப்பின் தலைவர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, “மத்திய அரசு-தனியார் கூட்டுமுயற்சியில் உருவாகும் மாதிரிப் பள்ளிகள் திட்டத்துக்கு தமிழக அரசு உடனடியாக தனது ஆட்சேபணையை தெரிவிக்க வேண்டும். இந்த திட்டத்திற்காக தனியாருக்கு மத்திய அரசு வழங்கும் 25 சதவீத மானியத்தொகையை தமிழக அரசு கேட்டுப்பெறவேண்டும். அதை இங்குள்ள அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்திக ்கொள்ளலாம். மாதிரி பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால், கல்வி முற்றிலும் வணிகமயமாகிவிடும்” என்று குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தில், தமிழ்நாட்டுக்கு 356 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வருங்கால வைப்பு நிதி முறைகேடு: கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர், "சஸ்பெண்ட்'

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதியில் முறைகேடு செய்தது தொடர்பாக, கூடுதல் உதவி தொடக்கல்வி அலுவலர் உட்பட, மூன்று பேர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

சில மாதங்களுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூரில், தலைமை ஆசிரியை ஒருவர், தன் மகள் திருமணத்திற்காக , தன் வருங்கால வைப்பு நிதியிலிருந்து, 4.35 லட்சம் ரூபாயை எடுக்க விண்ணப்பித்தார். பணம் கிடைப்பது தாமதமானது. 

விசாரித்ததில், அவரது பணம், கருவூலத்திலிருந்து வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை. விசாரணையில், வேறு நபரின் பெயரில் அப்பணம் வரவு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தார்.

துறை ரீதியான விசாரணையில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி பணம், முறைகேடாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் கணக்கில் வரவு வைக்கப்படாமல், வேறு நபரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, மீண்டும் கடன் கேட்ட ஆசிரியரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இம்மோசடி தொடர்பாக, நேற்று முன்தினம், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் சுகுமார், அலுவலக கண்காணிப்பாளர் சத்யவாணிமுத்து, எழுத்தர் ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: 6½ லட்சம் பேரில் வெறும் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி!


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில், தமிழகத்தில் தேர்வு எழுதிய 6½ லட்சம் பேரில் வெறும் 27 ஆயிரம் பேர் மட்டுமே 60 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இது தேர்வு எழுதியவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் நடத்தப்பட்டன. முதல் தாள் தேர்வை 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேர் எழுதினர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 311 பேர் எழுதினர். அந்த வகையில் தமிழகத்தில் இரண்டு தாள்களையும் 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேர் எழுதினர்.

முதல் தாள் எழுதிய 2,62,187 பேரில் ஆண்கள் 63,717 பேர், பெண்கள் 1,98,470 பேர். இவர்களில் 12,596 பேர், 60 சதவீதம் மதிப்பெண்க்கு மேல் (தேர்ச்சிக்கான மதிப்பெண்) பெற்றுள்ளனர்.

முதல் தாள் தேர்வு எழுதியவர்களில் 4.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் 2,908 பேர் (4.56 சதவீதம்) ஆண்கள்; 9,688 பேர் (4.88 சதவீதம்) பெண்கள்.

முதல் தாளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது, கன்னடம் ஆகிய மொழிக்கான தேர்வு நடத்தப்பட்டன. தமிழ் தேர்வில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 990 பேர் (ஆண்கள் 62,190, பெண்கள் 1,96,800) பங்கு பெற்றனர். அவர்களில் 12,433 பேர் (ஆண்கள் 2,823, பெண்கள் 9,610) 60 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டாம் தாளை எழுதிய 4 லட்சத்து 311 பேரில், 1,15,954 பேர் ஆண்கள், 2,84,357 பேர் பெண்கள். இவர்களில் 14,496 பேர் 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி அடைந்துள்ள 14,496 பேரில், 4,835 பேர் ஆண்கள், 9,661 பேர் பெண்கள். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் 3.62 ஆகும். ஆண்கள் 4.16 சதவீதம், பெண்கள் 3.39 சதவீதம் பேர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டு தாள்களையும் எழுதிய 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேரில், 27 ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் சதவீதம் 4.21 ஆகும்.

புதுச்சேரிக்கான முதல் மற்றும் இரண்டாம் தாள்களை 7 ஆயிரத்து 991 பேர் எழுதினர். முதல் தாளை 3,857 பேரும் (642 ஆண்கள், 3,215 பெண்கள்), இரண்டாம் தாளை 4,134 பேரும் (875 ஆண்கள், 3,259 பெண்கள்) எழுதினர்.

முதல் தாளை எழுதிய 3,857 பேரில் 181 பேர், 60 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி அடைந்த 181 பேரில் 28 பேர் ஆண்கள் (4.36 சதவீதம்), 153 பேர் பெண்கள் (4.75 சதவீதம்). அந்த வகையில் முதல் தாளை எழுதியவர்களில் மொத்தம் 4.69 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இரண்டாம் தாளை எழுதிய 4,134 பேரில், 58 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 7 பேர் ஆண்கள் (0.08 சதவீதம்), 51 பேர் பெண்கள் (1.56 சதவீதம்). இரண்டாம் தாளை எழுதியவர்களில் 1.40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பி.எப். : விண்ணப்பம் கிடைத்த 10 நாட்களில் தீர்வு!'



வருங்கால வைப்பு நிதி கேட்டு விண்ணப்பித்த 10 நாட்களில் தீர்வு காணப்படும் என்று சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில், உறுப்பினர்களின் வருங்கால வைப்பு நிதி உரிமை கோரும் படிவங்கள் முழுமையான வடிவில் பெறப்பட்ட நாளில் இருந்து 5 நாட்களுக்குள் பெரும்பாலும் தீர்வு செய்யப்படுகிறது. மீதம் உள்ள படிவங்களுக்கான கணக்கு தொகைகளும் 10 நாட்களில் தீர்வு செய்யப்படுகிறது.

முழுமையான வடிவில் பெறப்பட்ட எந்த ஒரு படிவங்களும் 20 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படாமல் இருப்பதில்லை. 20 நாட்களுக்கும் மேலாக தீர்வு செய்யப்படாத படிவங்கள் இருக்குமானால், உறுப்பினர்கள் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியை அணுகி விவரத்தை பெற்றுக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், வருங்கால வைப்பு நிதி ஆணையர் மூ.மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அனைத்து ஓய்வூதியதாரர்களும் உயிர்வாழ் சான்றிதழையும், விதவை ஓய்வூதியதாரர்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்ற சான்றிதழையும் நவம்பர் மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்கும் சான்றிதழ்களில் தங்கள் ஓய்வூதிய ஆணை எண் மற்றும் செல்போன் எண்களை குறிப்பிட வேண்டும். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்காதவர்களுக்கு ஜனவரி மாதத்தில் இருந்து ஓய்வூதியம் வழங்குதல் நிறுத்தி வைக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

9 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய செஸ் சாம்பியன் போட்ட


சென்னை: சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் வரும் 6 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 9 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய செஸ் சாம்பியன் போட்டி நடைபெறவுள்ளது.

உலக செஸ் சாம்பியன் பட்டம் வெல்ல, இந்திய வீரர் ஆனந்துக்கும், நார்வே வீரர் கார்ல்சனுக்கும் இடையே சென்னையில் செஸ் போட்டி நடைபெற உள்ளது. இதனைக்கொண்டாடும் வகையில் அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் சார்பில் தமிழ்நாடு செஸ் கழகம் 9 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய செஸ் சாம்பியன் போட்டிகளை நடத்த உள்ளது.

சென்னை, ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கில் வரும் 6 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 350 சிறுவர், சிறுமியர் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியில் வெற்றிபெறும் முதல் இருவர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பர்.

சிறுவர் மற்றும் சிறுமியர் பிரிவில் முதல் 12 இடங்களை வெல்லும் வீரர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 20 ஆயிரமும், மொத்த பரிசுத் தொகையாக ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஆனந்த், கார்ல்சன் ஆகியோரின் உலக சாம்பியன்ஷிப் போட்டியைக் காண வசதியாக போட்டிகளின் நேரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


05/11/2013

EMIS & SMART CARD திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் பயன்கள் / EMIS - Offline இல் உள்ளீடு செய்வது எப்படி

1.மாணவர்களின் விவரத்தை கல்வித்துறை அதிகாரிகள் எங்கிருந்தாலும் உடனடியாக அறியலாம்.

2. மாணவன் பள்ளியில் பயிலும் விவரம் மற்றும் இடைநிற்றல் விவரம் 100% தெளிவாக அறியலாம்.
3. ஒரு மாணவனுக்கு இரண்டு பள்ளிகளில் பெயர் இருக்க முடியாது. அப்படி இருப்பின் உடனே கண்டு பிடித்து விடலாம். ஆகவே தலைமை ஆசிரியர்கள் 100% சரியான விவரங்களை மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டும்.
4. மாணவன் மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் தமிழ்நாட்டின் எந்த பள்ளியிலும் சேர்ந்து பயிலலாம்.
5. அரசின் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு சேருகிறதா என்பதை 100% உறுதி செய்ய முடியும்.
6. மாணவர்களின் கல்வி முன்னேற்ற நிலை, உடல் நிலை, தனித்திறன் முதலியவற்றை எளிதாக கண்டறியலாம்.
7. ஆசிரியர்கள் அடிக்கடி புள்ளிவிவரங்கள் அளிக்க வேண்டியதில்லை. ஆனால் தங்கள் பள்ளியில் ஏற்படும் மாணவர் சேர்க்கை மற்றும் நீக்கல் விவரங்களை உடனடியாக தங்கள் பள்ளி EMIS இல் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் மாநில அதிகாரிகள் மாணவர்களுக்கான விலையில்லா திட்டங்களுக்கு தேவையான தகவல்களை பெற முடியும். தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி EMIS Passwordஐ இரகசியமாக வைத்திருப்பது நல்லது. 
8. EMIS உள்ளீடு முடிந்தவுடன் மாணவர்களுக்கு SMART CARD வழங்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் மாணவர்களின் வருகை, பதிவு செய்யப்படலாம். குஜராத்தில் SMARTCARD மூலம் தான் மாணவர்களின் வருகை கண்காணிக்க படுவதாக சொல்லப்படுகிறது.
9. SMARTCARD மாணவர்களின் அடையாள அட்டையாக செயல்படும் இதில் மாணவரின் அடையாள எண் பதிவு செய்யப் பட்டிருக்கும். இந்த எண்ணை கணினியில் உள்ளீடு செய்வதன் மூலம் மாணவரின் கல்வி முன்னேற்ற நிலை உட்பட அனைத்து விவரங்களையும் பெறமுடியும்.
10. EMIS இல், மாணவர் தொலைபேசி எண் பதிவு செய்யப் பட்டுள்ளதால் எந்த கல்வி அதிகாரியும் மாணவருடன் அல்லது மாணவரின் பெற்றோருடன் தொடர்பு கொள்ள முடியும்.

EMIS - Offline இல் உள்ளீடு செய்வது எப்படி என்பதை காண

எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் "இ-வித்யா" திட்டம் அறிமுகம்

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் "இ-வித்யா" திட்டம் மாநிலத்தில் முதன்முறையாக ஏனாமில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
மாணவர்கள் "ஆப்சென்ட்" ஆனாலோ, தாமதமாக வந்தாலோ, பெற்றோர்களின் மொபைல் போனுக்குபள்ளியில் இருந்து தகவல் பறக்கும்.மேலும், ரேங்க் கார்டு வழங்குவது, பெற்றோர் சந்திப்பு கூட்டம், விடுமுறை போன்ற விபரங்களும் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.சில பள்ளிகளில் மாணவர்கள் செய்ய வேண்டிய வீட்டு பாடங்கள், தினசரி தேர்வில் எடுத்த மார்க் போன்ற தகவல்களும் எஸ்.எம். எஸ்., மூலம் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.இதன்மூலம், மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் "கட்" அடித்தால் உடனடியாக தகவல் தெரிந்து கண்டிக்க முடியும் என்பதால், இத்திட்டம், பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் திட்டத்தை அரசு பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து, "இ-வித்யா" என்றபெயரில் இந்த திட்டம் முதன் முறையாக ஏனாம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.முதற்கட்டமாக ஏனாம் நகரப் பகுதியில் அமைந்துள்ள ராஜிவ்காந்தி அரசு ஆங்கில உயர்நிலைப்பள்ளி, கிரையம்பேட்டாவில் உள்ள காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில், "இ-வித்யா" செயல்பாட்டுக்கு வருகிறது.மத்திய அரசு திட்டமான சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வித் திட்டம்) உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள, "இ-வித்யா" திட்டப் பணிகளில் ஏனாமில் உள்ள தேசிய தகவல் மைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இரு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் மொபைல் போன் உள்ளிட்ட விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இரு பள்ளிகளை தொடர்ந்து ஏனாமில் உள்ள மற்ற பள்ளிகளில் இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.இதைதொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், "இ-வித்யா" திட்டத்தை அமல்படுத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.

அகஇ - 2013-14ம் ஆண்டில் மாணவர்களின் கல்வி தர மேம்பாட்டை அளவிடும் பொருட்டு அரசு / நகராட்சி / நலத்துறை / உதவி பெறும் தொ / ந.நி / உ.நி / மே.நி பள்ளிகளில் 3, 5 மற்றும் 8ம் பயிலும் மாணவர்களிடம் அடைவுத் தேர்வு மேற்கொள்ள முடிவு