தொலைபேசி பில் கட்டணம் செலுத்த இனி மக்கள் கியூவில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. மொபைல் அல்லது ஐ_பேட் மூலமாகவே இனி கட்டணத்தைசெலுத்தலாம் என்று பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தொலைபேசி பில் கட்டணம் செலுத்த இனி கம்யூட்டர் உதவியை நாட வேண்டியதில்லை.வரிசையில் நின்று கட்டுவதோ தேவையில்லை. ஸ்மார்ட் மொபைல் அல்லது ஐ-பாட் ஆகியவை பயன்பாட்டில் இருந்தாலே போதுமானது. இவற்றின் மூலமாக தங்களது தொலைபேசி கட்டணத்தை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில்''மை பி.எஸ்.என்.எல். ஆப்'எனும் அப்ளிகேஷன் சாப்ட்வேரை ஸ்மார்ட் மொபைல் கொண்டோ அல்லது ஐ_பாடில் டவுன்லோடு (பதிவிறக்கம்) செய்துகொள்ள வேண்டும். இதனை ''ஆன்ட்ராய்டு அப் ஸ்டோர்ஸ்'' அல்லது ''விண்டோஸ் அப் ஸ்டோர்ஸ்'' எனும்இணைய தளங்களிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்க் மற்றும் பி.எஸ்.என்.எல்._பிராண்ட் ட்ரஸ்ட் கார்டு மூலமாகவும் தங்களது பில் தொகையை செலுத்தலாம். இதில் மொபைல் போன் ரீ-சார்ஜ் செய்யும் வசதி மற்றும் சிறப்பு கட்டண வவுச்சர்களை ஆக்டிவேட் செய்யும் வசதியும் உள்ளன. பணம் செலுத்திய பின்னர் அதற்கான விவரம் எஸ்.எம்.எஸ். மூலம் வாடிக்கையாளர்களின் மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
No comments:
Post a Comment