சென்னை மாநகராட்சியின் மூலம் பிறப்பு – இறப்பு சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. மாநகராட்சியின் இணைய தளத்தில் இந்த சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரிலும் விண்ணபித்து பெற்றுக் கொள்ளலாம்.இதுவரை பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டன. இனிமேல் தமிழிலும் கிடைக்கும் வகையில் மாநகராட்சி புதிய ஏற்பாட்டினை செய்துள்ளது.பிறப்பு – இறப்பு சான்றிதழ் தமிழில் பதிவிறக்கம் செய்யும் வசதியை ரிப்பன் மளிகையில் இன்று மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.www.chennaicorporation இணையதளத்தில் இன்று முதல் தமிழ் பிறப்பு – இறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். இதில் பிறந்த மற்றும் இறந்த தேதி மற்றும் நேரமும் குறிப்பிடப்பட்டு இருக்கும் எத்தனை மணிக்கு குழந்தை பிறந்தது என்பதை மருத்துவ அறிக்கையின் அடிப்படைப் பதிவு செய்து வழங்கப்படுகிறது.ஏற்கனவே, உள்ள பிறப்பு– இறப்பு சான்றிதழ்களில் தேதி மட்டுமே இடம் பெறும். நேரம் இடம் பெறாது.பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு மேயர் சைதை துரைசாமி கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் விக்ரம்கபூர், துணை கமிஷனர் (சுகாதாரம்) பி.ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment