தமிழகத்தில் பள்ளி, அங்கன்வாடிகளில் இயங்கும் சத்துணவு கூடங்களுக்கு தினமும் சுமார் 60 லட்சம் முட்டை வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனத்தின் மூலமாக முட்டை டெண்டர் முறையில் பெறப்படுகிறது. சில மாவட்டங்களில் முட்டைகளின் எடை குறைவாக இருப்பதாக புகார் பெறப்பட்டுள்ளது. ஒரு முட்டை 49 கிராம்
எடையில் இருக்கவேண்டும். இதை விட எடை அளவு குறைவாக இருந்தால் அவற்றை புல்லட் முட்டை என அழைக்கின்றனர். இந்த முட்டைகளை சத்துணவு கூடங்களுக்கு வினியோகம் செய்யக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து முட்டைகளும் ஒரே அளவு எடையில் இருக்கவேண்டும். முட்டைகளை முழுமையாக மாணவ மாணவிகளுக்கு வழங்கவேண்டும். பாதி முட்டை வழங்கினால் சம்பந்தப்பட்ட சத்துணவு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சத்துணவு கூடங்களில் உணவுகளின் அளவு குறைவாக இருக்ககூடாது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கள ஆய்வு செய்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்துணவு ஊழியர்கள் கூறுகையில், ‘‘ தரமற்ற கெட்டு போன முட்டைகளை தனியாக எடுத்து வைத்து விடுவோம். முட்டை வினியோகம் செய்பவர்கள் வாரம் ஒரு முறை அவற்றை சேகரித்து எடுத்து சென்று விடுவார்கள். முட்டைகளின் எடையை அளக்க எடை மெஷின் உள்ளது. 25 முதல் 35 கிராம் வரையுள்ள புல்லட் முட்டைகளை பெறுவதில்லை, ‘‘
No comments:
Post a Comment