திருக்குறள்

11/11/2013

எஸ்.எம்.எஸ்., மூலம் மின் கட்டண விவரம்: மொபைல் எண் வாங்கும் பணி துவக்கம்.

மின் கட்டண விவரங்களை, நுகர்வோருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க, அவர்களிடம் இருந்து, மொபைல் எண் வாங்கும் பணியை, மின்சார வாரியம் துவக்கிஉள்ளது.தமிழகத்தில், குடியிருப்பு, தொழிற்சாலை, விவசாயம் என, மொத்தம், 2.44 கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.

20 நாட்களுக்குள்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம், மின் பயன்பாடு குறித்த விவரம், கணக்கு எடுக்கப்பட்டதில் இருந்து, 20 நாட்களுக்குள் 
கட்டணத் தொகையை செலுத்த வேண்டும். மின் வாரிய கணக்கீட்டு பிரிவு ஊழியர்கள், மின் கட்டண தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளுக்கு செல்லும் போது, நுகர்வோர் இல்லை என்றால், தகவல்பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. இதனால், குறிப்பிட்ட காலத்திற்குள் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் போவதால், அபராதத்துடன் செலுத்த வேண்டிய நிலைஏற்படுகிறது. இதையடுத்து, எஸ்.எம்.எஸ்., மூலம் மின் கட்டண விவரத்தை, நுகர்வோருக்கு தெரியப்படுத்த மின்சார வாரியம் முடிவு செய்தது.

விரைவில் அறிமுகம்:

இத்திட்டத்திற்கான பணிகள், தற்போது, இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, மின் நுகர்வோரிடம் இருந்து, மொபைல் எண் வாங்கும் பணியை, மின்சார வாரியம் துவக்கியுள்ளது. இது குறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'அரசிடம் அனுமதி பெற்ற பின், எஸ்.எம்.எஸ், சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும்' என்றார்.

சுற்றறிக்கை தயார்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், தங்களின் மொபைல் போன் எண்ணை பதிவு செய்யும் மின் நுகர்வோருக்கு, மதிப்பு கூட்டு சேவையாக, எஸ்.எம்.எஸ்., மூலம், மின் கட்டணம் மற்றும் கட்டணம் செலுத்த கடைசி நாள் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படும். ஆகையால், மின் நுகர்வோர் இவ்வசதியை பெற தங்களின் மொபைல் போன் எண்ணை பிரிவு அலுவலகங்களில், பதிவு செய்து பயன்அடையலாம்' என்ற சுற்றறிக்கை, நுகர்வோருக்கு தெரியப்படுத்தும் வகையில், மின் வாரியம் மூலம், அனைத்து பிரிவு அலுவலகங்களும் அனுப்பும் பணி துவங்கியுள்ளது.

No comments:

Post a Comment