திருக்குறள்

05/12/2014

ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா

தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசு உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பில் இருந்து தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித் துறை செயலாளர் சபீதா கூறினார்.தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சியும், அதற்கான கையேடு வெளியிடுதல், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில் ஆங்கில உச்சரிப்பு குறுந்தகடு வெளியிடுதல் நிகழ்ச்சி டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்தது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:பள்ளியின் தரம், கற்பிக்கும் தரம் உயர வேண்டும் என்பதற்காக தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் கட்டாயம் என்று கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அரசுப் பள்ளிகளுடன் மற்ற பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பில் தமிழ் கட்டாயமாகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில் ‘பொனிடிக்ஸ்‘ உடன் கூடிய ஆங்கில உச்சரிப்புக்கான குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த குறுந்தகடு அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலம் திரையிடப்பட்டு ஒவ்வொரு ஆங்கில சொல்லையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான குறுந்தகடுகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும். ஆசிரியர்களை பொருத்தவரை பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்தார்.

பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்து விட்டாலோ பாதிக்கப்படுகின்ற ஒவ்வொரு மாணவருக்கும் தற்போது வழங்கப்படும் நிதி ரூ.50000/- - இல் இருந்து ரூ.75000/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை

சமையல் காஸ் சிலிண்டருக்கு புதிய வெப்சைட்

நுகர்வோரின் சிரமத்தை குறைக்க நடவடிக்கை 
மானியத்திற்கும் விண்ணப்பிக்கலாம் 
திருப்தி இல்லாத ஏஜென்சியை மாற்றும் வசதி

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்த மறுசீராய்வு மனுவை ஏற்று 8 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வேலூர் மாவட்டம், திமிரி ஒன்றியத்தை சேர்ந்த தொடக்கக்கல்வித்துறையின் கீழுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 34 இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசின் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய கோரி வழக்கு(W.P.2470/2013) தொடர்ந்தனர்.
அவ்வழக்கு நீதியரசர் சந்துரு அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து 34 ஆசிரியர்கள் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மறுசீராய்வு மனுவை தாக்கல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அவ்வழக்கு (REV.APPLW.300/2014) இன்று நீதிமன்ற எண்.10 நீதியரசர்.சுந்தரேஷ் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்று கொண்ட நீதிமன்றம் 8 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

03/12/2014

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்புக்கான சி.டி. வெளியீடு

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆங்கில வார்த்தைகளைச் சரியாக உச்சரிப்பதற்காக தயாரிக்கப்பட்ட குறுந்தகட்டை (சி.டி.) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான நிர்வாகப் பயிற்சி தொடக்க விழாவில் இந்த குறுந்தகட்டை அவர் வெளியிட்டார். ஆங்கில உச்சரிப்பு தொடர்பாக 42 யூனிட்டுகளில் மாணவர்களுக்கு விரிவாக விளக்கும் வகையில் குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் 836 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பயிற்சி வழங்க அரசு ஆணையிட்டது. முதல்கட்டமாக, சென்னை மண்டலத்துக்குட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 73 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி "எளிய உடற்பயிற்சி / உள்ளரங்கு மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள்" என்ற தலைப்பில் 13.12.2014 நடைபெறவுள்ளது.

வீரதீர செயலுக்கான நடுவண் அரசின் "அசோக சக்ரா விருது - 2014" - மாணவர்/ஆசிரியர் பெயர் பரிந்துரைகளை கோரி இயக்குனர் செயல்முறைகள்

KNOW YOUR "GPF" STATUS JUST IN ONE CLICK

01/12/2014

Aiptf mr.Eshwaranjii photo release occasion at new delhi





அகஇ - தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் குறுவள மைய பயிற்சி முறையே 06.12.2014 மற்றும் 13.12.2014 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் விண்ணப்பிக்க தேதி நீடிப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் 2014-15 கல்வி ஆண்டில் சேர்ந்து பயில மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்க டிச.15-ம் தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேவையை கருதி 1979-ல் தொலைதூரக்கல்வி இயக்ககம் தொடங்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக்கல்வி மையத்தில் புதுதில்லி தொலைதூரக்கல்வி கவுன்சில் (Distance Education Council, New Delhi) அனுமதி பெற்ற மொத்தம் 259 படிப்புகள் நடத்தப்படுகின்றன. மருத்துவம் படிப்புகள் 12-ம், மருந்தியல் படிப்புகள் 2-ம். வேளாண் படிப்புகள்- 9-ம், பொறியியல் படிப்புகள் 53-ம் மற்றும் கலை, அறிவியல், தமிழ், இசை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த பல்வேறு இளங்கலை, முதுகலை, டிப்ளமா, முதுநிலை டிப்ளமா படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயில டிச.15-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தின் தமிழகத்தில் 88 படிப்பு மையங்களும், 79 தகவல் மையங்களும் செயல்படுகின்றன. மேற்கண்ட மையங்களில் விண்ணப்பம் பெற்று, அங்கேயே அனுமதி சேர்க்கை செய்யலாம் என தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் ஆர்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் - அரசானை






மாற்றுத்திறனாளிகள் தினம்: ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசின் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள் முதல்–அமைச்சர் வாழ்த்து

ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் அரசின் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று இன்று (புதன்கிழமை) மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

மாற்றுத்திறனாளிகள் தினம்
உலகம் முழுவதும் டிசம்பர் மாதம் 3–ந் தேதி மாற்றுத்திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் சமவாய்ப்புகள் பெற்று வாழ்வில் ஏற்றம் பெற்றிட, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை 1,000 ரூபாயாக உயர்த்தியது; ஆரம்ப நிலை பயிற்சி மையத்திற்கு வரும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சத்துணவு; சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, வாசிப்பாளர் உதவித்தொகை ஆகியவை இரு மடங்காக உயர்வு;

அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை; மாற்றுத்திறனாளிகளின் சுயவேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தேசிய திரைப்படக் கழகத்தின் மூலம் பல்லூடக பயிற்சி மற்றும் இலக்கமுறை புகைப்படப் பயிற்சி என பல்வேறு நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


அரசின் திட்டங்கள்
மேலும், இந்தியாவிலேயே முதன் முறையாக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் வழங்கப்படுவது; சென்னையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் குறைபாட்டினை கண்டறிந்து தேவையான உபகரணங்கள், சான்றிதழ்கள், உதவித்தொகை, சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்குதல்; பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத வீடுகள் ஒதுக்கீடு; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தேர்வு; ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு; ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச வயது வரம்பு 45–லிருந்து 18 ஆக குறைப்பு;

இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள்; செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கு நவீன காதொலிக் கருவிகள்; பார்வைத்திறன் குறையுடைய மாணவ, மாணவிகளுக்கு எழுத்துகளைப் பெரிதாக்கி படிப்பதற்கான ‘மேக்னிபயர்’ கருவிகள்; பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்குச் குச்சிகள்; மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்துப் பயணச் சலுகை; குடும்பத்தில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அக்குடும்பத்திலுள்ள அனைவருக்கும் வருமான உச்சவரம்பின்றி முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் பயன் போன்ற எண்ணற்ற சீர்மிகு திட்டங்களை ஜெயலலிதா தொடங்கினார். ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு அவற்றை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

வாழ்த்து
மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடவும், அவர்கள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக வாழ்ந்திடவும், ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டு, மீண்டும் அனைவருக்கும் மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துகளை 

டிசம்பர் மாத நாட்காட்டி