திருக்குறள்

03/12/2014

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்புக்கான சி.டி. வெளியீடு

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆங்கில வார்த்தைகளைச் சரியாக உச்சரிப்பதற்காக தயாரிக்கப்பட்ட குறுந்தகட்டை (சி.டி.) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான நிர்வாகப் பயிற்சி தொடக்க விழாவில் இந்த குறுந்தகட்டை அவர் வெளியிட்டார். ஆங்கில உச்சரிப்பு தொடர்பாக 42 யூனிட்டுகளில் மாணவர்களுக்கு விரிவாக விளக்கும் வகையில் குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் 836 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பயிற்சி வழங்க அரசு ஆணையிட்டது. முதல்கட்டமாக, சென்னை மண்டலத்துக்குட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 73 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment