எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டை வைத்திருப்போர், தங்களது அட்டையை இணைய தளம் மூலம் புதுப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
www.consumer.tn.gov.in என்ற உணவுப் பொருள் வழங்கல் துறை- நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணையதளத்துக்குச் சென்று அதன் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ள
குடும்ப அட்டை ("என் கார்டு') புதுப்பித்தல் அறிவிப்பை "கிளிக்' செய்து 2015-ஆம் ஆண்டுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை உள்தாள் ஒட்டி புதுப்பிக்கும் பணிகள் ஓரிரு வாரங்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், எந்தப் பொருளும் வேண்டாதவர்களும் தங்களது குடும்ப அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அட்டையை சுமார் 10 லட்சம் பேர் வைத்துள்ளனர்.
அவர்கள் இணையதளம் மூலமாக பதிவு செய்த பிறகு, கிடைக்கும் பதிவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து அட்டையில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment