திருக்குறள்

09/12/2014

வங்கியில் ஆவணங்களை சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்களுக்கு பி.எப். ஆணையர் வேண்டுகோள்

ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் வங்கிகளில் உரிய ஆவணங்களை செலுத்த வேண்டும் என பிஎப் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை:வருங்கால வைப்பு நிதி நிறுவன சென்னை மற்றும் அம்பத்தூர் மண்டல அலுவலகங்களின் மூலம் தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் 1995ன் கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியத்தை தொடர்ந்து தடையில்லாமல் பெறுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதம் தங்கள் உயிர்வாழ் சான்றிதழையும், குடும்ப ஓய்வூதியதாரர்கள் கூடுதலாக மறுமணம் புரியாமை சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். 

அவ்வாறு இந்த ஆண்டும் நவம்பர் மாதத்தில் மேற்கூறிய சான்றிதழ்களை ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிகளில் தவறாமல் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி சான்றிதழ்களை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சமர்ப்பிப்பதன் மூலம் அவர்கள் பெற்றுவரும் மாதாந்திர ஓய்வூதியம் அடுத்த ஆண்டும் ஜனவரி முதல் நிறுத்தப்படுவதை தவிர்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment