திருக்குறள்

07/12/2014

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் : தனித்தேர்வராக எழுத கட்டாயப்படுத்தப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை - கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

பொதுத்தேர்வு தேதி அறிவித்துள்ள நிலையில், தனித்தேர்வராக எழுத கட்டாயப்படுத்தக் கூடாது!
'தேர்ச்சி விகிதத்தை மட்டும், நோக்கமாக கொண்டு செயல்படும் சில பள்ளிகள், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பின்தங்கிய மாணவர்களை, தனித்தேர்வர்களாக எழுத கட்டாயப்படுத்துவதாக புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பள்ளிகள் மீது பெற்றோர், மாணவர்கள், நேரடியாக மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் முதன்மை கல்வி அலுவலகத்தை அணுகி, புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு, பெறப்படும் புகார்கள் உண்மை என்று உறுதி செய்யப்பட்டால், துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

"நீதிமன்ற வழக்குகள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை" - இயக்குநரின் தலைமையில் 12.12.2014 அன்று அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் கூட்டம்

2013 - 14 ம் ஆண்டிற்கான சிறந்த பொது நிர்வாகத்திற்கான "பிரதமர் விருது" - தகுதியுடைய அரசு ஊழியர்களிடமிருந்து விண்ணப்பம் கோரி இயக்குநர் கடிதம்.

Junior - Senior Pay: Controversy RTI Letters

அகஇ - பள்ளிமேலான்மைக் குழு உறுப்பினர்களுக்கான பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் மூன்று நாட்கள் பயிற்சி வழங்குதல் - சார்பு (தலைமை ஆசிரியர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தல் )

பாரதியாரின் பாடல்களை வரும் 11ம் தேதியில் இருந்து, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில், மொழி பெயர்த்து வினியோகிக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பாரதியாரின் பாடல்களை வரும் 11ம் தேதியில் இருந்து, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில், மொழி பெயர்த்து வினியோகிக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று கூறியதாவது:

பாரதியாரின் பாடல்களை, நாடு முழுவதும் இருக்கிற, அனைத்து பள்ளிகளிலும் கொண்டு செல்ல வேண்டும் என்று, நான் கோரிக்கை வைத்தேன். அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை சந்தித்து, இதுகுறித்து, பேசினேன். உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

நேற்று, மீண்டும் அவரை சந்தித்து பேசியபோது, மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்தார். வரும் 11ம் தேதியில் இருந்து, நாடு முழுவதும் உள்ள, அனைத்து பள்ளி, கல்லூரிகளில், பாரதியார் பாடல்கள் எடுத்துச் செல்லப்படும். அதுமட்டுமல்ல; பாரதியார் பாடல் ஒப்பித்தல் போட்டிகள், கட்டுரை போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இவ்வாறு, பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

05/12/2014

அகஇ - அரசானை எண் 201 படி 42 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசு உத்தரவு

அகஇ - அரசானை எண் : 200 படி- 128 புதிய துவக்கப்பள்ளிகள் துவங்க அரசு உத்தரவு

DEC -16, 2014 அன்று தகுதிகாண் பருவம்(PROBATION PERIOD) முடிக்கும் ஆசிரியர்கள் சமர்பிக்கப்பட வேண்டிய படிவங்கள்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை பொதுச்செயலாளர் திரு.ரெங்கராஜன் அவர்கள் தொடக்கப்பள்ளி இயக்குநர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து குறுவளமைய(CRC)அளவில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்க இருதினங்களில் ஆணை பிறப்பிப்பதாக இயக்குநர் கூறியுள்ளார்.அடுத்தவார இறுதிக்குள் தரம் உயர்த்தப்படும் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளியின் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தொடக்க,நடுநிலை&பட்டதாரி காலிப்பணியிடம் பதவிஉயர்வு மூலம் இம்மாத இறுதிக்குள் மீண்டும் நிரப்பப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

அகஇ - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு ஈடுசெய்யும் விடுப்புகளாக அனுமதித்து அரசு ஆணை 


NMMS ON LINE ENTRY

பொருள் வாங்காத குடும்ப அட்டை: இணையதளம் மூலம் புதுப்பிக்கலாம் Government Of Tamilnadu : Civil Supplies and Consumer Protection Department - Online Renewal Of "N" Family Ration Card


எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டை வைத்திருப்போர், தங்களது அட்டையை இணைய தளம் மூலம் புதுப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
www.consumer.tn.gov.in என்ற உணவுப் பொருள் வழங்கல் துறை- நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணையதளத்துக்குச் சென்று அதன் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ள

குடும்ப அட்டை ("என் கார்டு') புதுப்பித்தல் அறிவிப்பை "கிளிக்' செய்து 2015-ஆம் ஆண்டுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை உள்தாள் ஒட்டி புதுப்பிக்கும் பணிகள் ஓரிரு வாரங்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், எந்தப் பொருளும் வேண்டாதவர்களும் தங்களது குடும்ப அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அட்டையை சுமார் 10 லட்சம் பேர் வைத்துள்ளனர்.

அவர்கள் இணையதளம் மூலமாக பதிவு செய்த பிறகு, கிடைக்கும் பதிவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து அட்டையில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான முறையில் அலுவலக நடவடிக்கைகள் அமைய தொடக்கக்கல்வித்துறை உத்தரவு

அனைத்து அலுவல்களுக்கும் மாதிரி படிவங்கள் மற்றும் அலுவலக குறிப்புறைகள் வழங்கி கடைபிடிக்க உத்திரவு தொடக்கக்கல்வித்துறையில் உள்ள லட்சக்கணக்காண ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு, உயர்கல்வி,

முன்அனுமதி, மருத்துவவிடுப்பு, ஈட்டியவிடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, வைப்புநிதி முன்பணம் கோரல், பகுதி இறுதிப்பணம் கோரல்,சேமநலநிதி கணக்கீடு,ஊக்கஊதியம் அனுமதித்தல், பதவிஉயர்வுக்குண்டான ஊதிய நிர்ணயம்,பண்டிகை முன்பணம்,மருத்துவ விடுப்பு அனுமதித்தல்,ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்தல்,பொன்ற நடைமுறைகள் அந்தந்த உதவித்தொடக்கக்கல்வி அலுவலகப் பணியாளர்களால் அவர்கள் ஏற்கனவே கையாண்ட நடைமுறைகளின்படி அலுவலககுறிப்புகளும்,ஆணைகளும் வழங்கப்பட்டு வந்தன ஆனால் தமிழகம் முழுவதும் உள்ளஅனைத்து உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களிலும் ஒரே மாதிரியான வழிமுறையிணை பின்பற்ற தொடக்கக்கல்வித்துறை இயக்குனரகம் மூலம் ”மாதிரிப்படிவங்கள்,அலுவலகநடைமுறைக்கடிதம்,அலுவலகசெயல்முறை ஆணைகள் மற்றும்,பணிப்பதிவேட்டில் பதிய மாதிரி சீல்கள்” ஆகியன நிர்வாகப்பயிற்சியின் போது வழங்கப்ப்ட்டுள்ளது. .அதனை கடைபிடிக்க கோரப்பட்டு அனைத்து உதவிதொடக்கக்கல்விஅலுவலகங்களுக்கும் உரிய மாவட்டக்கல்வி அதிகரிகள் வாயிலாக அனுப்பப்படுள்ளதாக அறியப்படுகிறது.

அகஇ - 06.12.2014 அன்று நடைபெறவுள்ள குறுவள மைய பயிற்சியில் எவ்வித மாற்றமில்லை; பயிற்சி வழக்கம் போல் நடைபெறும்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 06.12.2014 அன்று "குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கார்த்திகை தீப திருவிழா வருவதால், அன்றைய தினத்தில் நடைபெறவுள்ள குறுவளமைய பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.ஆனால் பயிற்சி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்தந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு மட்டும் ஒத்திபோக வாய்ப்புள்ளது.

முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிர்யர்களின் விவரங்களை சேகரித்து 10.12.2014 அன்று தனிநபர் மூலம் இயக்குநர் அலுவலக்த்திற்கு அனுப்பவும், ஒழுங்கு நடவடிக்கை விவரங்கள் பிறகு தெரிவிகப்படும் எனவும் இயக்குநர் அறிவுரை