திருக்குறள்

09/06/2015

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்.பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் 12-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளதை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சிறப்பு ஆய்வு நடவடிக்கைகளை தொழிலாளர் துறை மேற்கொண்டு வருகிறது. கல்வி உரிமைச் சட்டம் (குழந்தைகளின் சுதந்திரமான கட்டாய கல்வி உரிமைச் சட்டம்) 2009-இன் படி, 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி, குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதைத் தடுத்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பும் பணியை தொழிலாளர் நலத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அரசின் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்.), 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து குழந்தைத் தொழிலாளர்கள் விவரங்களைச் சேகரித்து புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவில் 44 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாகவும், அந்தப் பட்டியலில் 2.75 லட்சம் குழந்தைத் தொழிலாளர்களுடன் தமிழகம் 10-ஆவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புள்ளி விவரம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தீவிர மறு ஆய்வு தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வருகிற 12-ஆம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான தினமாக அனுசரிக்கப்படுவதால், 8-ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, திங்கள்கிழமையன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 9-ஆம் தேதி கையெழுத்து இயக்கமும், 10,11 தேதிகளில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. 12-ஆம் தேதி நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

அகஇ - 20/06/2015 மற்றும் 27/06/2015 ஆகிய நாட்களில் ஜூன் மாத CRC குறுவள மைய பயிற்சி - பயிற்சி ஏடு (MODULE)

07/06/2015

பிறந்த தேதியை மாற்ற பணியில் சேர்ந்த 5 ஆண்டுக்குள் மனு செய்ய வேண்டும் அரசு ஊழியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு



மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஆண்டறிக்கை தாக்கல் செய்யாத, 615 சங்கங்களை அதற்கான பதிவு பட்டியலில் இருந்து நீக்குவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது

தமிழகத்தில், கல்வி, கலை, சமூக மேம்பாடு போன்ற காரணங்களுக்காக துவங்கப்படும் சங்கங் கள் மற்றும் மன்றங்கள் அனைத்தும், 1975ம் ஆண்டு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட வேண்டும்.இதன்படி, தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 1.52 லட்சம் சங்கங்கள் உள்ளன. இதில், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட சங்கங்கள், உரிய கால இடைவெளியில் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யாமல் உள்ளன.

இது போன்று, நிதி நிர்வாகம் குறித்த ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யாத சங்கங்கள் மீது பதிவுத்துறை உரியநடவடிக்கை எடுப்பதில்லை என்று புகார் கூறப்படுகிறது.இந்நிலையில், பதிவு மாவட்டம் வாரியாக, ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யாத சங்கங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் தெரிய வரும் சங்கங்களின் பெயர்களை பதிவேட்டில் இருந்து நீக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

1988 - 94 வரை பதிவு செய்யப்பட்ட சங்கங்க ளின் நிலவரம் ஆய்வு செய்யப்பட்டது. இதில், ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யாதது குறித்து நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் அறிக்கை தாக்கல் செய்யாத, 615 சங்கங்களின் பெயர்களை பதிவு ஏட்டில் இருந்து நீக்க பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இது குறித்த அறிவிப்பு, அரசிதழில் வெளியாகி உள்ளது.

06/06/2015

மாணவர்களுக்கு பஸ் பாஸ்.பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிய மாணவர்களுக்கு அடுத்த மாதமும் பழைய மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதலும் 'பஸ் பாஸ்' வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் துவங்கி உள்ளன. ஆனால் மாணவ மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் அட்டை இன்னும் வழங்கவில்லை. இதனால் பஸ்களில் மாணவ மாணவியர் கட்டணம் இல்லாமல் பயணிப்பது சவாலாக உள்ளது. 'பல பஸ்களில் நடத்துனர்கள் பாஸ் காட்ட வேண்டும்;

இல்லையென்றால் டிக்கெட் எடுக்க வேண்டும்' என வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்து உள்ளன.ஆனால் மாணவர்களின் விவரங்களை சேகரித்து பஸ் பாஸ் பெறுவதற்கான பணிகளில் கல்வித் துறையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.'மாணவர் விவரங்களை அளித்தால் மட்டுமே பஸ் பாஸ் அட்டை தயாரித்துத் தர முடியும்' என போக்கு வரத்துத் துறையினர் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளி இயக்குனரகத்தில் இருந்து நேற்று புதிய உத்தரவு வந்துள்ளது. இதன்படி ஏற்கனவே பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பழைய மாணவர்கள் பஸ் பாஸ் வைத்திருந்தால் அந்த பட்டியலில் பள்ளியில் இருந்து சென்ற மாணவர்கள் முகவரி மாற்றம் மற்றும் பஸ் தடம் எண் மாற்றம் குறித்து தகவல்களை புதுப்பிக்க வேண்டும். 

இந்த பட்டியலை வரும் 9ம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.பின் இந்த விவரங்களை தாமதிக்காமல் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் கொடுத்து ஒரு வாரத்திற்குள் பாஸ் அட்டை வாங்கி மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதே போல் புதிதாக பல்வேறு வகுப்புகளில் சேர்ந்த மாணவர்களின் பட்டியலை தனியாகத் தயாரித்து இம்மாத இறுதிக்குள் போக்குவரத்துத் துறையில் கொடுக்க வேண்டும்.அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் அவர்களுக்கும் பஸ் பாஸ் அட்டை வாங்கித் தர வேண்டும் என முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்

இதன்மூலம் புதிய மாணவர்களுக்கு அடுத்த மாதமும் பழைய மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதலும் பஸ் பாஸ் கிடைக்கும் என தெரியவந்து உள்ளது.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியர்களுக்கு அரசு காலக்கெடு:2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு உத்தரவு

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள், 
அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.மத்திய அரசு இச்சட்டத்தை கடந்த 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி நடைமுறைப்படுத்தியது. தமிழகத்தில் இதுதொடர்பான அரசாணை கடந்த 2011 நவம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. முதலாவது தகுதித் தேர்வு 2012-ல் தான் நடத்தப்பட்டது.

சட்டம் அமல்படுத்தப்பட்ட 5 ஆண்டுகளில்தமிழகத்தில் 3 முறை இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.மேற்கண்ட சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. பல ஆசிரியர்கள் இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனாலும், பள்ளிக்கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வருவதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 ஆண்டு அவகாசம் என்பது மத்திய அரசின் இலவச கல்விச் சட்டம் அமலுக்கு வந்த 2010 ஆகஸ்ட் முதல் கணக்கிடப்படுமா, தமிழக அரசாணை வெளியிடப்பட்ட 2011 நவம்பர் முதல் கணக்கிடப்படுமா என்ற குழப்பம், ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது.தமிழக அரசாணை வெளியிடப்பட்ட 2011 முதல்தான் அந்த 5 ஆண்டு அவகாசம் கணக்கிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா தற்போது விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பான உத்தரவு பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக் கக் கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி, அரசு அளித்துள்ள 5 ஆண்டு அவகாசம் 2016 நவம்பர் 15-ம் தேதியுடன் முடிந்துவிடும். அதற்குள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடவேண்டும். அதுவரையிலும் தேர்ச்சி பெறாவிட்டால் கூடுதல் அவகாசம் அளிக்கப்படுமா, ஆசிரியராகப் பணியாற்றும் தகுதியை அவர்கள் இழப்பார்களா என்பது குறித்து அந்த உத்தரவில் எதுவும் கூறப்படவில்லை.

05/06/2015

உலக சுற்றுச்சூழல் தினம்



ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக (World Environment Day) கொண்டாடப்படுகிறது. 'உங்கள் குரலை உயர்த்துங்கள் கடல் மட்டதுக்கு அல்ல' என்ற வாசகத்தை இந்த ஆண்டு(2014) ஐக்கிய நாடுகள் சூழல் திட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் உலக சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் சுற்றாடல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும், சுற்றுச் சூழல்லைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும். 1972இல் சுவீடனின் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றாடலும் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச் சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பிரயோகம் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது. 

முடிவில் ஜுன் 5ஆம் திகதியை உலக சுற்றுச் சூழல் (World Environment Day) தினமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது. சுற்றுச் சூழலை மனிதன் பாதூக்கவே கடமைப்பட்டவன். நினைத்தவாறு அவற்றை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டவனல்ல. 

சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வரட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன. மேற்குலகில் சூழலியல் அரசியலின் முக்கியமானதொரு அம்சமாகியுள்ள காரணத்தினால் பசுமைக்கட்சிகள் தோற்றம் பெற்று பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றி மனிதருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புப் பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு உருவாகுவதற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன. 

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன்.

சுற்றாடலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றன. புவி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்பட்ட பாரிய விளைவுகளாகும். மேலும் சுற்றுச் சூழல் தொடர்பாக காலநிலை மாற்றம், புவிக்கோளம் உஸ்ணமடைதல், ஓசோன் படை பாதிப்பு, நன்னீர் வளம், சமுத்திரம், கடற்கரைப் பிரதேசங்கள், காடழிப்பு, வனாந்திரமாக்கல், உயிரியல் மாறுபாடு , உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம், இரசாயன பாதுகாப்பு போன்றவை கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறை என்பது சில நிபுணர்கள் மாத்திரம் நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்குகளை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் என்று இன்னும் கூட பலர் நினைக்கிறார்களோ என்று வியக்கவேண்டியிருக்கிறது. சுற்றுச் சூழலியலாளர்களின் பணிகள் காரணமாக அண்மைய சில ஆண்டுகளாக பிறந்த சுற்றுச் சூழலைப்பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு உணர்வு காணப்படுகின்ற போதிலும், அரசியல் தலைமைத்துவங்கள் இதுவிடயத்தில் போதியளவு அக்கறை காண்பிக்காததால் கணிசமான முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை.

சுற்றுசூழல் முக்கியத்துவத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது மனிதன் உணர்ந்து கருமத்தை ஆற்ற வேண்டியதும் முக்கியமானதாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.. அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச் சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

- See more at: http://m.dinakaran.com/Detail.asp?Nid=95153#sthash.z0cXzGa8.dpuf

04/06/2015

இணையவழி சம்பளப் பட்டியல் தயார்செய்தல் - இணைய வசதி இல்லாத உதவிதொடக்கக் கல்வி அலுவலகங்கள் அருகில் உள்ள இணைய வசதி உள்ள வட்டார வள மையத்தில் இணையவழி சம்பளப் பட்டியல் தயார்செய்ய இயக்குனர் உத்தரவு

அகஇ - குழந்தைகள் சாதனைகள் மற்றும் 2015-16 திட்ட வடிவுகள் சார்பான கலந்துரையாடல் என்ற தலைப்பில் ஒரு நாள் குறுவளமைய அளவில் பயிற்சி நடத்த இயக்குனர் உத்தரவு



CRC LEVEL TRAINING:

CRC Training Dist level 16.06.15 & 17.06.15
CRC Training primary 20.06.15
Upper Primary 27.06.15



பள்ளிக்கல்வி - விலையில்லா பேருந்து பயண அட்டைகள் 2015-16ஆம் கல்வியாண்டிற்கு மாணவ / மாணவிகளுக்கு பெற்று வழங்குவதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

பள்ளிக்கல்வி - மாணவர்கள் சேர்க்கை மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் போது நன்கொடை வசூல் செய்யக்கூடாது என இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வி - விலையில்லா பேருந்து அட்டையில் விவரங்களை பதிவு செய்தல் சார்பாக ஆசிரியர்களுக்கு 10.06.2015 பயிற்சி இயக்குனர் உத்தரவு