திருக்குறள்
31/03/2014
வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கட்டகம் (POWER POINT வடிவில்)
வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கட்டகம் (POWER POINT வடிவில்) பட விளக்கத்துடன் அருமையாக விளக்கப் பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் (முக்கியமாக வாக்கு சாவடி தலைமை அலுவலர்கள்) பதிவிறக்கம் செய்து கொள்வது நல்லது.
Pls Click Here
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உயிர் இழப்பு ஏற்பட்டால் ரூ.10 லட்சம் நிவாரண தொகை: தேர்தல் ஆணையம்
லோக்சபா தேர்தல் வாக்குபதிவின் போது ஏற்படும் அசம்பாவித சம்பவங்களில் அரசு ஊழியர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் 9 கட்டமாக நடத்தப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு பணியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓடிசா, சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் நக்சல் தொல்லை உள்ளது. அங்கு தேர்தல் நடத்துவது பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. தமிழகத்திலும் இதற்கு சவால் விடும் வகையில் அரசியல் கட்சி தொண்டர்களின் வாக்கு பதிவு இயந்திரம் உடைப்பு, வாக்கு பதிவு இயந்திரத்தை தூக்கி செல்வது உள்ளிட்ட செயல்களில் திடீரென ஈடுபடுவது உண்டு. அந்த சமயங்களில் தடுக்க முயலும் அரசு ஊழியர்களை அவர்கள் தாக்குவதும் உண்டு. இந்த மாதிரி சம்பவங்களில் அரசு ஊழியர்கள் ஊனமானாலோ, இறந்தாலோ தேர்தல் கமிஷன் என்ன நிவாரணம் வழங்கியது என்று தெரியவில்லை. ஆனால் தற்போது அப்படி இறக்க நேரிட்டால் அவர்களுக்கு இரட்டை நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் சுனித் முகர்ஜி அனுப்பியுள்ள சுற்றரிக்கையில், கூறியுள்ளதாவது: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிர்பாராதவிதமாக உயிர் இழப்பு ஏற்பட்டால் அவரது குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். அதே நேரத்தில் தேர்தல் சமயத்தில் சமூக விரோதிகள், தீவிரவாதிகள் மூலம் குண்டு வெடிப்பு, ஆயுத தாக்குதல் போன்றவற்றால் ஊழியர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும் உறுப்பு பாதிப்பு, பார்வை இழப்பு போன்றவை ஏற்பட்டால் ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தஞ்சை பல்கலையில் தொலைநிலை கல்வி தேர்வு அறிவிப்பு.
தஞ்சை தமிழ் பல்கலை.,யின் தொலைநிலை தேர்வுகள்மே மாதம் 21 முதல் 30 வரை நடக்கின்றன. தேர்வர்கள், பல்கலையின் இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
தஞ்சை தமிழ் பல்கலை, தொலைநிலை கல்வியில், இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ்படிப்புகளுக்கான தேர்வு மற்றும் அடிப்படை கல்வித் தேர்வு, மே மாதம் 21 முதல்30 வரை, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள 37 மையங்களில் நடக்கிறது. அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை, www.tamiluniversity.ac.in ,www.tamiluniversitydde.org ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.அடுத்த மாதம் இறுதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் விண்ணப்பிக்காதவர்கள், மே மாதம், 5க்குள், 100 ரூபாய் தாமதக் கட்டணத்துடன், விண்ணப்பிக்க வேண்டும். அந்த தேதியிலும் விண்ணப்பிக்காதவர்கள், 500 ரூபாய் அபராதத்துடன் மே 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
29/03/2014
வீட்டிலேயே கொண்டு வந்து கொடுப்போம் ஓய்வூதியத்தை : எஸ்பிஐ புதிய திட்டம்
75 வயதுக்கு மேல் ஆகும் ஓய்வூதியதாரர்களுக்கு, அவர்களது மாதாந்திர ஓய்வூதியத்தை, அவர்களது வீட்டுக்கே கொண்டு சென்று அளிக்கும் திட்டத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிமுகம்செய்துள்ளது.
இந்த திட்டத்தை முதல் முறையாக கொல்கத்தாவில் எஸ்பிஐ வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து செயல்படுத்திட முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில், நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளும் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த முயலலாம் என்று கூறப்படுகிறது.
75 வயதுக்கு மேல் ஆகும் ஓய்வூதியதாரர்கள், தங்களது முதுமை காரணமாக வங்கிகளுக்கு மாதந்தோறும் வந்து தங்களது ஓய்வூதியத்தை பெறுவதில் கடும் சிரமங்கள் உள்ளன. அவற்றை களையவே இந்த திட்டத்தை எஸ்பியை கொண்டு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், நாட்டில் ஏராளமான ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
துறை தேர்வுகள் கடைசி தேதி 15.04.2014 வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது
2014-ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது.
அறிவிக்கை நாள் : 01.03.2014
விண்ணபிக்க கடைசி தேதி : 15.04.2014 5,45 பி.ப.
தேர்வு தேதிகள் : 24.05.2014 முதல் 31.05.2014 வரை.
வாக்கச்சாவடி அலுவலர்கள் தேர்வு எப்படி?
வாக்குச்சாவடி முதன்மை
அலுவலர்-தரஊதியம் ரூ4600க்கு மேல்
வாக்குச்சாவடி அலுவலர் 1- தரஊதியம் ரூ 2800முதல்ரூ 4800
வாக்குச்சாவடி அலுவலர் 2 &3- தரஊதியம் ரூ 1800முதல் 2800 வரை
26/03/2014
25/03/2014
ஓய்வூதிய பலன்கள் பெற்று தருவதில் கால தாமதத்தை ஏற்படுத்தும் பணியாளர் மீது நடவடிக்கை -பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை
தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர் பணி அவர்கள் ,ஓய்வு வருங்கால வைப்புநிதி இறுதி பணம் பெறுதல், ஓய்வூதியம் மற்றும் இறுதி பணம் பெறுவதற்கான விண்ணப்பம் சென்னை மாநில கணக்காயருக்கு தாமதமின்றி அனுப்புதல் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
CLICK HERE...
Subscribe to:
Posts (Atom)


.jpg)