திருக்குறள்
13/07/2014
TNTET:ஆசிரியர் தகுதி தேர்வில் தேறாத ஆசிரியர்களுக்கு 'கெடு!': அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 'பாஸ்' ஆக வேண்டும்.
கடந்த, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற விதிக்கப்பட்ட, 5 ஆண்டு காலக்கெடு, அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது.
தனியார் பள்ளிகளில் பணியாற்றும், 1 லட்சம் ஆசிரியரில், 30 ஆயிரத்திற்கும்மேற்பட்டோர், டி.இ.டி., தேர்வை முடிக்காமல் பணியாற்றுவதால், அவர்களின் வேலை, கேள்விக்குறியாகி உள்ளது.
டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி முந்தைய காங்கிரஸ் அரசு, 2009ல், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. அதில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள், டி.இ.டி.,தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.இது தொடர்பான அறிவிப்பை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், 2010, ஆகஸ்ட், 23ல் வெளியிட்டது. அறிவிப்பு வெளியான தேதியின் அடிப்படையில், யார், யார் டி.இ.டி.,தேர்வை எழுத வேண்டும்; யார் எழுத தேவையில்லை என்ற விளக்கத்தை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), கடந்த, 2012, மே, 28ல் வெளியிட்டது.
*அதன்படி, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், பணி நியமன அறிவிப்பு வெளியாகி, பணியில் சேர்ந்த ஆசிரியர் அனைவரும் (இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்), டி.இ.டி., தேர்வை கட்டாயம் எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என்றும்,இதற்கு, 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
*மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன், அறிவிப்பு வெளியாகி, குறிப்பிட்ட தேதிக்குப்பின், பணி நியமனம் பெற்றவர்களும், மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன், அறிவிப்பு வெளியாகி, பணி நியமனமும் பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.
*புதிய ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்ச்சிக்குப் பிறகே, பணி நியமனம் செய்யப்படவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட, 5 ஆண்டுகள் கால அவகாசம், அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது.
இந்நிலையில், 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர்பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்றுள்ளனரா என்ற விவரம், கல்வித் துறையிடம் இல்லை. எனினும், தனியார் பள்ளிகளில் பணியாற்றும், 1 லட்சம் ஆசிரியரில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், டி.இ.டி., தேர்வில்தேர்ச்சி பெற வேண்டிய நிலையில் இருப்பதாக, கல்வித் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
54,439 அங்கன்வாடி மையங்களில் மின்சாரம், கழிப்பறை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் மின்சாரம், தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை
நிறைவேற்றித்தர உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த சி.ஆனந்தராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவின் விவரம்:
தமிழகத்தில் மொத்தமுள்ள 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களில் 55 சதவீத மையங்கள் கழிப்பறை வசதியின்றியும்,
80 சதவீத மையங்கள் மின் வசதி இல்லாமலும் உள்ளன. அங்கன்வாடி மையங்களில் சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்கப்படுகிறது. இதை குடிக்கும் குழந்தைகள் அடிக்கடி உடல் நலக் குறைவுக்கு ஆளாகின்றனர்.
பெரும்பாலான மையங்களில் விறகை பயன்படுத்தி சமைப்பதால் மையத்துக்குள் புகை பரவி குழந்தைகளுக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அங்கன்வாடியில் ஒவ்வொரு குழந்தைக்கும் நாள் ஒன்றுக்கு காய்கறிக்கு 25 பைசா மட்டுமே ஒதுக்கப்படுகிறது. காய்கறி விலை பல மடங்கு உயர்ந்திருக்கும்போது, 25 பைசாவுக்கு ஊட்டச் சத்தான உணவு வழங்குவது சாத்தியமற்றது. அங்கன்வாடி பணியாளர்கள் வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால் குழந்தைகளை பராமரிக்கும் பணியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.
எனவே, அங்கன்வாடி மையங்களில் உள்ள வசதி குறித்து மாவட்ட அளவில் குழு அமைத்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் தண்ணீர் வசதியுடன் கழிப்பறை, மின்வசதி ஏற்படுத்தவும், குழந்தைகளுக்கு காய்ச்சிய குடிநீர் வழங்கவும், குழந்தைகளுக்கு மதிய உணவுக்கு முன்பும், பின்பும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பானம் வழங்கவும், காய்கறிக்கான 25 பைசாவை ரூ. 2 ஆக உயர்த்தவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.
இம்மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை முதன்மைச் செயலர், தமிழக சமூக நலத்துறை மற்றும் மதிய உணவுத் திட்ட செயலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
10ஆம் வகுப்பு முடித்து நுழைவுத்தேர்வு மூலம் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பெற்ற இளநிலைப் பட்டம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுகளில் பங்கு கொள்ளவும், வேலைவாய்ப்பு பெறவும் தகுதியானது என்று சென்னை உயர்நீதிமன்றம் - JUDGEMENT COPY
10ஆம் வகுப்பு முடித்து நுழைவுத்தேர்வு மூலம் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பெற்ற இளநிலைப் பட்டம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுகளில் பங்கு கொள்ளவும், வேலைவாய்ப்பு பெறவும் தகுதியானது என்று சென்னை உயர்நீதிமன்றம்..
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு வருகிற 18.7.2014 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது
ரட்டைப்பட்டம் வழக்கு எண்.529 சென்னை உயர்நீதிமன்றத்தில் 05.02.2014 அன்று தள்ளுபடி செய்யப்பட்டதால் அவ்வழக்கை நடத்தி வரும் திரு.கலியமூர்த்தி உள்ளிட்ட நபர்கள் உச்சநீதிமன்றத்தில் S.L.P எனப்படும் சிறப்பு விடுவிப்பு மனுவை தாக்கல் செய்தனர். வழக்கை உச்சநீதிமன்ற வழக்குரைஞர் திரு.ஹரீஸ் குமார் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் உடனடியாக பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் யு.ஜி.சியும் இதில் எதிர் உரை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியது.
இதையொட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கில் இணைந்த 217 பேருக்கும் கிட்டதட்ட 250 பக்கங்கள் அடங்கிய வழக்கு விபரம் பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டது. இவர்கள் உச்ச நீதி மன்றத்தில் தொடரும் வழக்கில் தம்மை இணைத்துக்கொள்ள விரும்பினால் உச்சநீதி மன்ற வழக்குரைஞர் மூலம் வக்காலத்து தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் தானகவே அவர்கள் இந்த வழக்கில் இருந்து விலக்கிக்கொள்ளப்படுவார்கள்.
இது குறித்து வழக்கில் முதல் பெட்டிசனரான திரு.கலியமூர்த்தி நம்மிடம் கூறியதாவது: உச்சநீதிமன்ற நடைமுறையின்படி வழக்கில் உள்ள அனைவருக்கும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கில் இணைய இந்த 217பேரும் விரும்பினால் எங்களை தொடர்புகொண்டு உச்சநீதிமன்றத்தில் புதிதாக வக்காலத்து தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தவறினால் அவர்கள் பெயர் உடனடியாக நீதிமன்ற பதிவில் இருந்து நீக்கப்படும். மேலும் வழக்கில் புதிதாக இணைய விரும்பினாலும் எங்களை அவர்கள் தாராளமாக தொடர்பு கொள்ளலாம். வழக்கின் சாதகமான இறுதி தீர்ப்பு மிக விரைவில் வெளிவரும் எனவும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற 18.6.2014 அன்று வர இருப்பதாகவும் அது சம்பந்தமான வேலைகளில் தங்கள் குழு ஈடுபட்டுள்ளதாகவும் நம்மிடம் தெரிவித்தார்.
இது குறித்து மேல் விபரங்களுக்கு கீழ் கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்
1. திரு. கலியமூர்த்தி - 9894718859 (விழுப்புரம்)
2. திரு.ஆரோக்கியராஜ் - 9942575162 (சிவகங்கை)
3.திரு.கருணாலய பாண்டியன் - 9894192500 (திருவள்ளூர்)
4.திரு.கணேஷ் - 9976105153 (சிவகங்கை)
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை
2011, 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை | 2011, 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் தங்களின் பதிவுமூப்பை தக்க வைத்துக் கொள்ளவும், அதன்மூலம் வேலை வாய்ப்பை பெறவும் உதவும் வகையில் முதல்வர் உத்தரவின் படி, 2014-15-ம் ஆண்டில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப் படுகிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ப.மோகன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
கடந்த 3 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் சலுகை வழங்கப் படுகிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ப.மோகன் வெள்ளிக்கிழமை அறிவித்தார். ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசிய ஊரகத் தொழில்துறை அமைச்சர் ப.மோகன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: 2011, 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் தங்களின் பதிவுமூப்பை தக்க வைத்துக் கொள்ளவும், அதன்மூலம் வேலை வாய்ப்பை பெறவும் உதவும் வகையில் முதல்வர் உத்தரவின் படி, 2014-15-ம் ஆண்டில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். இதனால் சுமார் 1 லட்சம் பதிவுதாரர்கள் பயன்பெறுவார்கள்.
பதிவு தவறுகளை ஒரு மாதத்தில் சரி செய்ய வேண்டும்: மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்களில் ஏற்படும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு, வேலைவாய்ப்பு இணையதளத்தில் தனி வசதி
ஏற்படுத்தவும், அதில் தெரிவிக்கப்படும் குறை களை ஒரு மாதத்தில் நிவர்த்தி செய்யவும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தைச் சேர்ந்த எம்.எஸ். அணில்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:
நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. இதனால், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் என் பெயரை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதோர் பட்டியலில் சேர்க்க 1989-ல் விண்ணப்பித்தேன். 2009-ல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் பிரிவில், பலரது பெயர் அரசு வேலைவாய்ப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அந்தப் பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை. எனக்கு பின்னால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர் களின் பெயர்கள் இருந்தன.
இதுகுறித்து விசாரித்தபோது, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எனது பெயர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதோர் பட்டியலில் சேர்ப்பதற்கு பதில், தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் தவறுத லாகச் சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து வேலைவாய்ப்பு அலுவலக ஆவணத்தில் திருத்தம் செய்ய மனு செய்தேன். அதன்படி 2011-ல் திருத்தம் செய்யப்பட்டது.
இதையடுத்து, அரசு வேலைக்கு எனது பெயரை பரிந்துரைக்க மனு கொடுத்தேன். ஆனால், அரசு வேலைக்கான வயது முதிர்ச்சி அடைந்ததாகக் கூறி, என் பெயரை பரிந்துரைக்க மறுத்து மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 2012-ல் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்து, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதோர் கல்வித் தகுதிக்குரிய ஏதாவது ஒரு அரசுப் பணிக்கு எனது பெயரை பரிந்துரைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சி.கிஷோர் வாதிடுகையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு 30-லிருந்து 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வேலை நியமன தடைச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு வழங்கப்பட்ட 5 ஆண்டு வயது சலுகையும் மனுதாரருக்கு பொருந்தும். எனவே அவருக்கு வயது முதிர்ச்சி ஏற்படவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவேட்டில் தவறுதலாக பதிவு செய்யப்பட்டதற்கு மனுதாரர் காரணமாக மாட்டார். எனவே, மனுதாரரின் பெயரை அரசு வேலைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு
மனுதாரர் தன் குறையைத் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளார். ஆனால், அவரது கோரிக்கையை அதிகாரிகள் காது கொடுத்து கேட்காமல் இருந்துள்ளனர். மனுதாரரின் பெயரை அரசு வேலைவாய்ப்புக்கு 6 வாரங்களில் பரிந்துரைக்க வேண்டும்.
இந்தியா போன்ற நாடுகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் என்றைக்காவது ஒருநாள் தங்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வயது, பெயர், கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் தொழில்நுட்ப விவரங்களைக் குறிப்பிடுவதில் தவறு நிகழ்வது பொதுவானது. இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை தடுக்க, வேலைவாய்ப்பு அலுவலகத்தின் tnvelaivaaipu.gov.in என்ற இணையதளத்தில் குறைகளைத் தெரிவிக்க தனி வசதி ஏற்படுத்த வேண்டும்.
அந்த வசதியைப் பயன்படுத்தி, யாராவது குறைகள் தெரிவித்தால், அந்தக் குறைகளை ஒரு மாதத்தில் நிவர்த்தி செய்து குறைகளை தெரிவித்தவருக்கு கணினி அத்தாட்சி வழங்குவதற்கு அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவில் தவறு ஏற்பட்டால், பதிவு செய்த நபர் வேலைக்கு செல்லும்போது பிரச்சினையை சந்திக்க வேண்டியது வரும். இதனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.
பாரதிதாசன் & தஞ்சை தமிழ் பல்கலைகழகம் M.ed அறிவிப்பு
*விண்ணப்ப விநியோகம்
14-7-14
*கட்டணம் 600ரூ,
எஸ்.சி,எஸ்.டி ரூ300
*அஞ்சல் வழியில் பெற ரூ 650,350
*கடைசி தேதி 14-8-14
PH:04362-227782,226720
*No entrance
பாரதிதாசன் பல்கலை. தொலைக் கல்வி மையத்தில் எம்.எட். படிப்புக்கு அனுமதி
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைக் கல்வி மையத்தில்எம்.எட். படிப்பை நடத்துவதற்கு தென் மண்டலத்திற்கான தேசியக்கல்விக் குழுமம் அனுமதி வழங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து 2014-15-ம் ஆண்டிற்கான முதுகலைக் கல்வியியல்(எம்.எட்) படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களைபல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் அண்மையில்தொடக்கி வைத்தார். இம்மாதம் 25-ம் தேதி வரை விண்ணப்பங்கள்வழங்கப்படும் என்றும், இப்பிரிவில் 250 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்கள் வழங்குதல் நிகழ்வில் பதிவாளர் ஏ.ராம்கணேஷ்,தொலைக்கல்வி மைய இயக்குநர் கே. ஆனந்தன் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.
ஜூலை 23-இல் ஏழாவது ஊதியக் குழுக் கூட்டம-dinamani
மத்திய அரசு ஊழியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஏழாவது ஊதியக் குழுவின் முதலாவது கூட்டம் தில்லியில் வரும் ஜூலை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. நீதிபதி அசோக் குமார் தலைமையில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது. குழுவின் உறுப்பினர்கள் விவேக் ரே, ரதின் ராய், மீனா அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், படிகள், சலுகைகள் உள்ளிட்டவற்றை நிர்ணயிப்பது தொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க நீதிபதி அசோக் குமார் தலைமையிலான ஊதியக் குழுவை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நியமித்தது. இக்குழுவின் பரிந்துரை 2016-17 நிதியாண்டில் அமல்படுத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது
. கடந்த பிப்ரவரியில் குழுவின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகும், இக்குழு எப்போது செயல்படத் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், இக் குழுவின் கூட்டத்தை வரும் 23ஆம் தேதி கூட்ட அசோக் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். முதலாவது கூட்டம் என்பதால் அது சம்பிரதாய அளவில் இருக்கும் என்றும் குழுவின் செயல் திட்டம், பணிகள் தொடர்பாக அதில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்கள், அகில இந்திய அரசுப் பணி, யூனியன் பிரதேசங்களில் பணியாற்றுவோர், இந்திய கணக்குத் தணிக்கைத் துறை, பாரத ரிசர்வ் வங்கி நீங்கலாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளின் உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் தொடர்பான ஊதியம், படிகள் போன்றவை குறித்து ஏழாவது ஊதியக் குழு ஆய்வு செய்யவுள்ளது
. தற்போது அமலில் உள்ள சம்பள படிகள், சலுகைகள், பாதுகாப்புத் துறையில் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய காலப் பலன்கள், அரசுப் பணியில் திறமையை ஊக்குவித்தும் பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில், புதிய ஊதிய விகிதத்தை மாற்றியமைப்பது, சமூக-பொருளாதார-தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றவாறு அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை நிர்ணயிப்பது, அவர்களின் ஊதியத்துக்கு ஏற்ப சலுகைத் திட்டங்களை அறிவிப்பது, 1.1.2004 பிறகு ஓய்வு பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய காலத் திட்டத்தின்படி எவ்வளவு ஓய்வூதியத்தை வழங்கலாம் என்பன உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை அளிக்கும் பணி ஏழாவது ஊதியக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனது ஆய்வின் தேவைக்காக பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்கள், தொழிற்துறை, அரசுத் துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற வல்லுநர்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை நியமித்துக் கொள்ள இக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக ஏழாவது ஊதியக் குழுவின் முதலாவது கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்குழு 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தனது பணியை 23-ஆம் தேதி தொடங்கும் ஊதியக் குழு பொதுமக்கள், தொழிற்சங்கத்தினர், அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை நேரில் விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுமக்களின் கருத்துகளை அறியும் வகையில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்த்ன. கருத்துகளை வரவேற்க மே 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊதியக் குழுவிடம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி: செயலர், ஏழாவது ஊதியக் குழு, அஞ்சல் குறீயிட்டு எண் 4599, ஹோஸ் காஸ் அஞ்சலகம், புது தில்லி-110 016.
இன்னும் 15 நாட்களில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் வீரமணி
பெருந்துறையில் இன்று(12/07/2014) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்னும் 15 நாட்களில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் முதல்வரின் அவர்களின் கடந்த 3 ஆண்டுக்கால ஆட்சியில் 50 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.மேலும் கல்வித்துறைக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளார்.எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 3 ஆண்டுகளில் கல்வித்துறைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.... இதன் மூலம் ஆசிரியர் தகுதிதேர்வு மற்றும் TRB மூலம் தேர்தேடுக்கபட்டவர்கள் இன்னும் ஒரு மாதத்தில் பணியமர்த்தபடுவார்கள் என தெரிகிறது
கருணை அடிப்படையில் பணி:திருமணமானபெண்ணுக்கு காலவரையறை நிர்ணயித்து தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து.
கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடர்பாக திருமணமானபெண்ணுக்கு காலவரையறை நிர்ணயித்து தமிழக அரசு பிறப்பித்தஆணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.உஷாராணி உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு விவரம்: எனது தந்தையின்பெயர் எஸ்.பரமசிவம். கடந்த 1980-ஆம்ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி தமிழக அரசின் வருவாய்த் துறையில்பணியில் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து அவர் கிராம உதவியாளராக பதவி உயர்த்தப்பட்டார். அவர்பணியில் இருக்கும் போது ராஜேந்திரன் என்பவருடன் எனக்கு திருமணம்நடந்தது. இந்த நிலையில் பணியில் இருக்கும் போது, நெஞ்சு வலியால்கடந்த 2008-ஆம் ஆண்டு எனது தந்தை இறந்தார். இதையடுத்து அதே ஆண்டுஜூலை மாதம் 7-ஆம்தேதி கருணை அடிப்படையில் வேலை வழங்குமாறு அரியலூர் மாவட்டஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்தேன். எனக்கு திருமணம் ஆனதால் கருணை அடிப்படையில் பணி வழங்க முடியாது என 2013-ஆம்ஆண்டு அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி எனது விண்ணப்பத்தை நிராகரித்தார். 2012-ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த ஆணையின் அடிப்படையில்எனது வேண்டுகோளை நிராகரித்ததாக அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டது.எனவே, அந்த அரசாணையை ரத்து செய்து விட்டு, கருணை அடிப்படையில்எனக்கு வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நடந்தது.விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர்மயிலை சத்யா ஆஜரானார். அப்போது, அரசு தரப்பில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்தாலுகா தாசில்தார் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மனுதாரரின்தந்தை இறப்பதற்கு முன்பு அவர் திருமணம் செய்து கொண்டார்.
மனுதாரர் அவரது கணவர்குறித்து எந்தத் தகவலும் அளிக்கவில்லை. 2001-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் தேதிக்கு முன்பு திருமணம் முடிந்தபெண்கள் கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்கு தகுதி இல்லாதவர்கள்என 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்தஅரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர், எஸ்.ராஜேந்திரன் என்பவரை 2001-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12-ஆம் தேதி அவரது தந்தை இறப்பதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டார். இதனடிப்படையில் மனுதாரர் கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்கு உரிமை வழங்க முடியாது. இந்தகாலவரையறையை நிர்ணயித்ததில் எந்த தவறும் இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஆணுக்கும்பெண்ணுக்கும்எந்தப் பாகுபாடும் இருக்கக் கூடாது. இருவரையும் ஒன்றாகத்தான் கருத வேண்டும். கருணை அடிப்படையில் வேலை வழங்குவது தொடர்பாக பெண்ணுக்கு எந்தக் காலவரையறையும்நிர்ணயிக்க முடியாது. அதனால், 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி பிறப்பித்த அரசாணை சட்டவிரோதமானது. அந்த ஆணை ரத்து செய்யப்படுகிறது. எனவே,மனுதாரரின் வேண்டுகோளை பரிசீலனை செய்து மூன்று மாதங்களுக்குள்கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கல்வுதுறையில் நடந்த முறைகேடு கலந்தாய்வு குறித்து விசாரணை-தினமலர்
:'தமிழக கல்வித் துறையில் நடந்து முடிந்த 'கவுன்சிலிங்' காலியிடங்கள் மறைப்பு, அரசியல் குறுக்கீடு போன்றவற்றால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்,' என்ற தகவலால், மாவட்டம் தோறும் உளவுத் துறை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு ஜூன் 17 முதல் ஜூலை 2 வரையும், ஜூன் 16 முதல் 30 வரை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்தாண்டு 'ஆன்லைன்' மூலம் 'கவுன்சிலிங்' நடந்தது.இதில் பல பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
குறிப்பாக, 'முதல் நாளில் மாவட்டத்திற்குள் நடந்த 'கவுன்சிலிங்'கில் காண்பிக்கப்பட்ட காலியிடங்கள், மறுநாள் மாவட்டங்களுக்கு இடையே நடந்த மாறுதலில் காண்பிக்கப்படவில்லை' என்றும், உயர்நிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதல் நாளில் 'சர்பிளஸ்' மாறுதலில் காட்டப்பட்ட கூடுதல் பணியிடங்கள், மறுநாளில் மாவட்டங்களுக்கு இடையே நடந்த மாறுதலில் காண்பிக்கப்படவில்லை. இதனால், பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் புறக்கணிப்பு மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இரவில் நடந்த கவுன்சிலிங்: 'கடந்தாண்டு, காலை 10 மணிக்கு 'கவுன்சிலிங்' துவங்கியது. ஆனால், இந்தாண்டு பெரும்பாலும் மதியம் 1 மணிக்கு மேல் தான் அனைத்து நாட்களிலும் துவங்கியது. குறிப்பாக, இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான பணிமாறுதல் மாலை துவங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடந்தது. அதேபோல், மாவட்டங்களுக்கு இடையேயான பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் மாறுதலும் இரவு முழுவதும் நடந்தன.
இதுகுறித்து விசாரித்தாலே பல விஷயங்கள் வெளியே வரும்,' என்று ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். டி.இ.ஓ.,க்கள் மாற்றம் விவகாரம்: இதுதவிர, கல்வித் துறையை 'கலங்கடித்த' பல விஷயங்கள் குறித்தும் உளவுத்துறை போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். குறிப்பாக, மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் 'லிஸ்ட்' பணி மூப்பு அடிப்படையில் வெளிப்படையான அறிவிப்பு வெளியாகும். ஆனால் இந்தாண்டு, பதவி உயர்வோ, பணியிட மாற்றமோ ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் தனித்தனியான உத்தரவுகள் வழங்கப்பட்டு 'ரகசியம்' காக்கப்பட்டது.
மேலும், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தொலைதுார மாவட்டங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் மாற்றப்பட்டு, பின் ஒருசில வாரங்களில் மீண்டும் அவர்கள் ஏன் மாற்றப்பட்டனர் என்றும், அவர்களின் பெயர் விவரங்களும் தயாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்தாண்டு நடந்த ஆசிரியர் 'கவுன்சிலிங்'கில் அதிக எண்ணிக்கையில் காலி பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆசிரியர்கள் அதிருப்தி குறித்து சங்கங்கள் சார்பில் அரசு கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் அரசியல் குறுக்கீடு மற்றும் பேரம் ஏதும் நடந்ததா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது," என்றார்.
காத்திருக்கு 60 உத்தரவுகள்!பள்ளிக் கல்வியில் கண்காணிப்பாளர், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர், உதவியாளர் உட்பட நுாற்றுக்கணக்கான அமைச்சுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது, கண்காணிப்பாளர் மாறுதல் மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வுக்கான 60 பேருக்கான உத்தரவுகள் தயாரிக்கப்பட்டு, இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரிக்கு அனுப்பி வைத்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. ஆனால், ஏதோ காரணத்திற்காக அந்த 60 பேரின் உத்தரவுகளும் காத்திருக்கின்றன, என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
மாநில நல்லாசிரியர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு: கல்வித்துறை
தமிழகத்தில், மாநில நல்லாசிரியர் விருது பெற, விரும்பும் ஆசிரியர்கள், ஜூலை 16க்குள் விண்ணப்பிக்குமாறு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 2013--14ம் ஆண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது பெறுவோருக்கான, சிறந்த ஆசிரியர்கள் தேர்வு கல்வித்துறை இயக்குனரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, அறிவித்துள்ளது. அதன்படி, உயர்,மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடமும், தொடக்க, நடுநிலைபள்ளிகளில் பணிபுரிவோர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடமும், மெட்ரிக்.,பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அந்தந்த மெட்ரிக்.,பள்ளி ஆய்வாளர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, பூர்த்தி செய்து, ஜூலை 16க்குள் ஒப்படைக்க வேண்டும்.தகுதி: நல்லாசிரியர் விருது பெற, தலைமை ஆசிரியர்கள் 20 ஆண்டுகளும், ஆசிரியர், சிறப்பு ஆசிரியர்கள் குறைந்தது 15 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கவேண்டும். 30.09.2013 வரை மறுநியமன காலம் இல்லாமல்,பணி புரிந்திருக்கவேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லாசிரியர் விருதுபெற விரும்பும், ஆசிரியர்களிடமிருந்து, விண்ணப்பத்தை பெற்று, கல்வித்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்குமாறு, முதன்மை கல்வி அலுவலகத்திற்கு, உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் 'கவுன்சிலிங் பாக்ஸ்' : முதற்கட்டமாக 480 பள்ளிகளில் அமல்
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, கற்றல் குறைபாடு உள்ளிட்ட, பல்வேறு பிரச்னைகளை தீர்க்க, பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு, 'கவுன்சிலிங்' அளிக்கப்பட உள்ளது. இதற்காக, முதற்கட்டமாக, மாவட்டந்தோறும், 15 பள்ளிகள் வீதம், 480 பள்ளிகளில், 'கவுன்சிலிங் பாக்ஸ்' அமைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு, பல்வேறு மனநல பிரச்னைகள், கற்றலில் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றை தீர்க்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, நடமாடும் உளவியல் ஆலோசகர்களும், பள்ளி ஆசிரியர்களும், கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை சந்தித்து, 'கவுன்சிலிங்' நடத்த உள்ளனர்.இதற்காக, மாவட்ட வாரியாக, குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், நிபுணர் குழு மூலம், பயிற்சி அளித்து வருகிறது. மாணவர்களின் பிரச்னையை அறிவது எப்படி, அதை எப்படி தீர்ப்பது என்பது குறித்து, பல கட்டமாக, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இதையடுத்து, அடுத்த மாதம், மாவட்டத்திற்கு, 15 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் வீதம், 32 மாவட்டங்களிலும், 480 பள்ளிகளில், 'கவுன்சிலிங் பாக்ஸ்' நிறுவப்படும். இதுகுறித்து, ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கும் டாக்டர், விருத்தகிரிநாதன் கூறியதாவது
: *ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு சென்றதும், நான்கு, ஐந்து வகுப்பு களை இணைத்து, மாணவர் மத்தியில், கற்றல் குறைபாடு குறித்து, பொதுவான கருத்துகளை கூறி, அவர்கள் மத்தியில், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
*ஒரு மாதம் இடைவெளி விட்டு, மீண்டும் ஒரு முறை மாணவர்களை அழைத்து, 'கவுன்சிலிங்' குறித்து, பேச வேண்டும். அப்போது, அன்பான முறையில் அவர்களை அணுகி, 'மாணவர்கள், தங்களுக்குள்ள கற்றல் பிரச்னைகள் குறித்து, கவுன்சிலிங் பெட்டியில், எழுதிப்போடலாம். அது, மிகவும் ரகசியமானது' என, தெரிவிக்க வேண்டும
*கண்டிப்பாக, இரு மாணவர்களாவது, தங்கள் பிரச்னையை எழுதிப்போடுவர். அந்த மாணவர்களை அழைத்துப்பேசி, பள்ளி முடிந்தபின், முறையாக பயிற்சி அளிக்க வேண்டும். இரு மாணவர்களின் பிரச்னைகளை சரிசெய்துவிட்டால், மற்ற மாணவர்களும், சகஜமாக, தங்களின் பிரச்னைகளை வெளிப்படுத்த முன்வருவர். இவ்வாறு, விருத்தகிரிநாதன் கூறினார். -
11/07/2014
09/07/2014
அரசாணை எண். 107 இன் படி பதவி உயர்வு...
உதவி தொடக்கக்கல்வி அலுவலர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு 12ம் வகுப்பு கல்வித்தகுதியினை வலியுறுத்தி வெளியிடப்பட்ட அரசாணை எண். 107 எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கியது.
ஆனால் தொடக்கக்கல்வித்துறை இதனை அமல்படுத்த தொடர்ந்து மறுத்து வந்த சூழ்நிலையில் தொடக்கக்கல்வி துறையின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து உடனடியாக அமல்படுத்தவேண்டுமென நீதிமன்றம் எச்சரித்ததைத் தொடர்ந்து பலர் இவ்வருடம் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
1. விருதுநகர் மாவட்டம் - சிவகாசி ஒன்றியம் - நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. முத்து திருவள்ளுர் மாவட்டத்தில் உதவி தொடக்கக்கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
2. அரியலூர் மாவட்டம் - ஆண்டிமடம் ஒன்றியம் - திரு. முருகேசன்
3. செயங்கொண்டம் ஒன்றியம் - திருமதி. முனியம்மாள்
4. கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூர் - திருமதி. சுகுணா
5. புதுக்கோட்டை மாவட்டம் - திருமதி. கலைச்செல்வி
6. திருப்பூர் மாவட்டம் - காங்கேயம் ஒன்றியம் - ரெஜினா தங்கம்
ஆகியோர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)