திருக்குறள்

13/07/2014

மாநில நல்லாசிரியர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு: கல்வித்துறை

தமிழகத்தில், மாநில நல்லாசிரியர் விருது பெற, விரும்பும் ஆசிரியர்கள், ஜூலை 16க்குள் விண்ணப்பிக்குமாறு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 2013--14ம் ஆண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது பெறுவோருக்கான, சிறந்த ஆசிரியர்கள் தேர்வு கல்வித்துறை இயக்குனரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, அறிவித்துள்ளது. அதன்படி, உயர்,மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடமும், தொடக்க, நடுநிலைபள்ளிகளில் பணிபுரிவோர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடமும், மெட்ரிக்.,பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அந்தந்த மெட்ரிக்.,பள்ளி ஆய்வாளர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, பூர்த்தி செய்து, ஜூலை 16க்குள் ஒப்படைக்க வேண்டும்.தகுதி: நல்லாசிரியர் விருது பெற, தலைமை ஆசிரியர்கள் 20 ஆண்டுகளும், ஆசிரியர், சிறப்பு ஆசிரியர்கள் குறைந்தது 15 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கவேண்டும். 30.09.2013 வரை மறுநியமன காலம் இல்லாமல்,பணி புரிந்திருக்கவேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லாசிரியர் விருதுபெற விரும்பும், ஆசிரியர்களிடமிருந்து, விண்ணப்பத்தை பெற்று, கல்வித்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்குமாறு, முதன்மை கல்வி அலுவலகத்திற்கு, உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment