திருக்குறள்

02/07/2014

வாக்காளர்களுக்கு 'பிளாஸ்டிக்' அட்டை: கலரில் மிளிரப்போகுது உங்கள் முகம்

வாக்காளர்களுக்கு வண்ண 'பிளாஸ்டிக்' அடையாள அட்டை வழங்கும் பணியை, அடுத்த மாதத்தில் துவங்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படம் தெளிவாக இருப்பதில்லை; 'இது யார் நானா?' என நம்மை நாமே கேட்கும் வகையில் 'கோணல் மாணலாக' இருக்கும். மேலும், எளிதில் சேதமடைந்து விடும். இதையடுத்து வண்ண புகைப்பட 'பிளாஸ்டிக்' அட்டை வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்து, அதற்கான 'டெண்டர்' விடப்பட்டது. லோக்சபா தேர்தல் வந்ததால் இதற்கான பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், ஆகஸ்ட்டில் 'பிளாஸ்டிக்' அட்டை வழங்கும் பணியை துவங்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கு முன்பே, புது வாக்காளர்களுக்கு இந்த அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டது. போதிய அவகாசம் இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த மார்ச்சில் நடந்த சிறப்பு முகாம்களில், பெயர் சேர்த்தோருக்கு 'பிளாஸ்டிக்' அட்டைகள் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து, பழைய அட்டைகள் வைத்துள்ள அனைவருக்கும் படிப்படியாக மாற்றி வழங்கப்படும். இதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை.

வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தப்பணி தற்போது நடக்கிறது. பெயர் சேர்ப்பு (படிவம் 6), நீக்கல் (படிவம் 7), திருத்தம் (படிவம் 8), ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் (படிவம் 8ஏ) ஆகியவற்றில், 'ஆன்லைன்' அல்லது தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் வரை விண்ணப்பம் பெறப்பட்டு, அக்.,1ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அக்., 1 முதல் 31 வரை வாக்காளர் சுருக்கத்திருத்தப்பட்டியல் பணி நடைபெறும். பெயர் சேர்ப்பிற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்; பின், இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment