ஜெயங்கொண்டம்:பெருவேந்தன் ராசேந்திரன் சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவையும், அவரது பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டாடுவது என கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் ராசேந்திரன் சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடுவது என கங்கை கொண்டசோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவர் பொறியாளர் கோமகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூடத்தில் அருகில் உள்ள கிராம தலைவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.மாவீரனான ராசேந்திர சோழன் கி.பி.1012–ல் அவர் தந்தை பெருவேந்தன் ராசராசசோழனோடு ஆட்சியேற்றிருந்தாலும், தந்தை இறந்த பிறகு கி.பி.1014–ல் அரியணையேறினார். அவர் ஆட்சியேற்ற பிறகு “அலை கடல் நடுவே பலகலம் செலுத்தி” என அவர் மெய் கீர்த்தி கூறுவது போல வட இந்தியா மட்டுமன்றி கடல் கடந்தும் இன்றைய மலேயா, கம்போடியா, பர்மா, இலங்கை, ஜாவா, நிக்கோபர், தாய்லாந்து முதலான நாடுகளை வென்ற இந்திய அரசன் அவர் ஒருவரே.அவர் பிறந்த நாள் பற்றி வரலாற்று அறிஞரிடையே நிலவிய முரண்பட்ட கருத்தை போக்கும் வண்ணம் அவரின் திருவாரூர் கல்வெட்டு அவர் பிறந்தது ஆடி ஆதிரை என்பதை உறுதி செய்கிறது.இந்நிலையில் கங்கை கொண்ட சோழபுரத்தை ஆண்ட ராசேந்திரசோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவை ஜுலை 24–ந் தேதியும், ராசேந்திர சோழனின் பிறந்தநாளை வரும் ஆடிதிருவாதிரை இவ்வாண்டு 25–ந்தேதியிலும் கொண்டாட முடிவானது. அன்றைய தினம் பெருவுடையாருக்கு மகாபிஷேகம், ஆராதனையும், அன்னதானமும் நடத்த தீர்மானிக்கப்பட்டது.மாலை தஞ்சை பெரிய கோயிலில் இருந்து தொடர் ஓட்டமாக கொண்டு வரப்படும் ஜோதி மூலம் ஆயிரம் ஆண்டை குறிக்கும் விதமாக ஆயிரம் தீபங்கள் ஏற்றப்படுகிறது.மாலை சிறப்பு நாட்டியாஞ்சலி நடக்கிறது. கங்கைகொண்ட சோழபுரத்தை சிறப்பிக்கும் அனைத்து நூல்களை யானையின் மீது அம்பாரி வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்படும். அதை உருவாக்கியவர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களை கவுரவிக்கும் வகையில் அலங்கார ஊர்தியில் அவர்களை அமரவைத்து மாளிகை மேட்டிலிருந்து கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார்கள்.முன்னதாக கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. ராசேந்திர சோழன் காலமான காலமான பிரமதேயம் மற்றும் அவர் வளாப்பு அன்னை பஞ்சவன்மாதேவிக்கு அவர் எழுப்பிய பள்ளிபடையான பஞ்சவன் மாதேஸ்வரம் (பட்டீஸ் வரம்), திருவாரூர், தஞ்சை போன்ற பல இடங்களில் அபிஷே கம், ஆராதணை ஆகியவை நடத் தவும் முடிவெடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment