விசைத்தறியாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்விஉதவித்தொகையில் லட்சக்கணக்கில் மோசடி நடந்துள்ளதாககுற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் 44 விசைத்தறிசேவை மையங்கள் செயல்படுகிறது. மத்திய ஜவுளித்துறைஅமைச்சகத்தின் கீழ் விசைத்தறி தொழிலாளர்களுக்கான குரூப்இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஒரு விசைத்தறியாளருக்கு நிர்ணயித்துள்ளபிரிமியம் தொகை 470 ரூபாயில் விசைத்தறி தொழிலாளர்கள் 80ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். எஞ்சிய தொகையை மத்தியஅரசு, எல்.ஐ.சி. நிறுவனங்கள் செலுத்துகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் ஜெகநாதபுரம் காலனியில் இயங்கி வரும்விசைத்தறி சேவை மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்பதாம்வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் விசைத்தறிதொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் 1,200 ரூபாய்கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
உதவித்தொகை வழங்குவதில் புரோக்கர்களின் தலையீட்டால்பயனாளிகளிடம் இருந்து 400 ரூபாய் லஞ்சம் பெறப்படுவதாககுற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய விசைத்தறி வாரிய உறுப்பினர் ராஜேஷ்கூறியதாவது: ஈரோடு விசைத்தறி மையத்தில் கடந்தாண்டு 6,919விசைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கபட்டுள்ளனர்.ஈரோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு,சென்னிமலை, பெருந்துறை போன்ற பகுதிகளில் தான்தமிழகத்திலேயே அதிகளவில் விசைத்தறி தொழிலாளர்கள்உள்ளனர்.
ஆனால் அந்த பகுதிகளில் வெறும் 1,000 தொழிலாளர்களின்குடும்பங்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகைஅளிக்கப்பட்டுள்ளது. நெசவுத்தொழிலுக்கு சம்பந்தம் இல்லாத வடஆற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5,000 பேர்பயனடைந்து வருகின்றனர்.
பல்வேறு பகுதிகளில் இடைத்தரகர்கள் மூலம் விசைத்தறிதொழிலில் இல்லாதவர்களும் பயனாளிகளாக தேர்வுசெய்யப்படுகின்றனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 27லட்சத்துக்கு ஊழல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 44 சேவை மையங்களிலும் இதுகுறித்துஅதிகாரிகள் ஆய்வு செய்தால் பல கோடி ரூபாய் அளவில் ஊழல்நடந்ததை கண்டறியலாம். இதுகுறித்து விசாரணை கமிஷன்அமைக்குமாறு பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறுஅவர் கூறினார்.
No comments:
Post a Comment