திருக்குறள்
29/11/2014
தேசிய திறனாய்வு தேர்வு: கீ - ஆன்சர் வெளியீடு
சென்னை: அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ள, தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைகள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம் என, தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பு: சமீபத்தில் நடந்த, தேசிய திறனாய்வு தேர்வுக்கான, விடைகள், ஆன் - லைனில், டிச., 12ம் தேதி வரை, அரசு தேர்வுகள் இயக்ககத்தின், www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர், தங்கள் கருத்துகளை, dgedirector@gmail.com என்ற முகவரிக்கு, இ - மெயில் வாயிலாக, அனுப்பலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதார் அட்டையை பணிபதிவேட்டில் பதியப்பட வேண்டும்
Inclusion of Aadhaar (Unique Identification) number in Service Book of Government servants —
No.Z-20025/9/2014-Estt.(AL)
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
Department of Personnel & Training
Block-IV, Old JNU Campus,
New Delhi, November 3rd 2014
OFFICE MEMORANDUM
Subject: Inclusion of Aadhaar (Unique Identification) number in Service Book of Government servants —
The undersigned is directed to invite attention to the provisions of the Supplementary Rules which relate to maintaining records of service of a Government employee. As per provisions of SR 199 every step in a Government servants’ official life must be recorded in his Service Book and each entry attested by the Head Of Office. As per SR 202, Heads of Offices are to obtain the signatures of the Government servants in token of their having inspected their Service Books annually. Further Rule32 of the CCS (Pension) Rules 1972 provides for issuing a communication on completion crf 18 years of service, as part of preparatory work for sanctioning pensionary benefits. The Service Books at present contains details of bio data, posting details, qualifying service, security details, HBA, CGHS, CGEGIS, LTC, etc.
2. It has been decided to include the respective Aadhaar numbers also of all Government servants in their Service Books. The e-Service Book format already provides fields for Aadhaar number of the Government servant.
3. All Ministries/Departments of the Government of India are requested to ensure that the Service Books of all employees have an entry of the employees’ Aadhaar number. The attached and subordinate offices under their control may also be suitably instructed for compliance,
மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள்: கல்வித்துறை ஆய்வு மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள்:
குடும்பம், வாழ்விட சூழல், சினிமா, டிவி தாக்கம், கிரிக்கெட், ஆசிரியர்களின் கவனமின்மை உள்ளிட்ட காரணங்களால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்பு திறன் குறைந்திருப்பது, கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் வாசிப்பு திறன் தொடர்பாக, மாவட்டம் வாரியாக ஆய்வு நடத்துமாறு, கல்வித்துறை அலுவலர்களுக்கு, தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டது. துவக்கப் பள்ளிகள், நடு நிலைப் பள்ளி மாணவர்களில் சிலர், படிப்பில் பின்தங்கியவர்களாக கண்டறியப்பட்ட நிலையில், அவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் திட்டமாக, இந்த ஆய்வு நடத்தப்பட்டது. எளிமையான கேள்விகள் கொண்ட வினாத்தாள் உருவாக்கப்பட்டு, குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்து, மாணவர்களுக்கு முன்சோதனை தேர்வு நடத்தப்பட்டது. கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கிராமப்புறங்களை காட்டிலும், நகரப்புற மாணவர்களிடம் வாசிப்பு திறன் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. பல குழந்தைகளின் பெற்றோர், வெளி மாவட்டங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்களாக இருப்பதால், அடிக்கடி வசிப்பிட மாற்றம் அவர்களின் கல்வியை பாதிக்கிறது. படிப்பில் கவனம் செலுத்தாத மாணவர்களுடன் நட்பு கொள்ளும்போது, படிப்பை விட்டு கவனம் சிதறுகிறது. நெருக்கடியும், போக்குவரத்தும் அதிகமாக உள்ள அமைதியற்ற வாழ்விட சூழலால், வீடுகளில் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் கைவிடுகின்றனர். சினிமா நடிகர்கள் மீதான ஆர்வம், டிவி பார்க்கும் பழக்கம், கிரிக்கெட் போன்றவற்றில் இருக்கும் அபரிமிதமான ஆர்வம், படிப்பில் மாணவர்களின் கவனத்தை குறைத்து விடுகிறது. எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதால், மாணவர்களை கட்டாயப்படுத்தி படிக்கச் சொல்லும் மனநிலை, சில ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை என, ஆய்வில் தெரியவந்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் திருவள்ளுவர் பிறந்ததினக் கொண்டாட்டம்: மத்திய அரசு அறிவிப்பு
திருவள்ளுவர் பிறந்த தினம் அடுத்த ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக உத்தரகாண்ட் மாநில பாரதிய ஜனதா உறுப்பினர் தருண்விஜய் முன்வைத்த கோரிக்கையை ஏற்பதாக மாநிலங்களவையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்தார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய தருண்விஜய், திருவள்ளுவர் பிறந்த தினத்தை நாடுமுழுவதும் சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், நாட்டின் மிகப்பழமையும், சிறப்பும் வாய்ந்த செம்மொழியான தமிழுக்கு, வட மாநிலங்கள் உரிய மதிப்பளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அவரது இந்தக் கருத்தை, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், சமாஜ்வாதி உறுப்பினர் ராம் கோபால் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் அஹமத் ஹசன், திமுக உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் உட்பட அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
உடனடியாக இதற்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ஸ்மிருதிராணி, தருண்விஜயின் கோரிக்கை ஏற்கப்படுவதாக அறிவித்தார். மேலும், அடுத்த ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவதுடன், திருக்குறளைக் கற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்மிருதி ராணி உறுதியளித்தார்.
28/11/2014
தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் உச்ச வரம்பு 50 சதவீதமாக உயர்வு
தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுமனைக் கடன் உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கடன் உச்சவரம்புத் தொகையானது, மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் வீட்டுமனை வாங்குவதற்கான கடன் தொகையின் உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று, கடன் தொகையின் உச்சவரம்பானது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை வீட்டுக் கடன், முன்பணத் தொகை பெறாத அரசு ஊழியர்கள் அவற்றைப் பெற்றிட வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வீட்டுக் கடன் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.12.5 லட்சமாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை (பொறுப்பு) செயலாளர் பணீந்திர ரெட்டி புதன்கிழமை பிறப்பித்தார்.
மூன்று தவணைகள் எப்படி? வீட்டு கடன் பெற தகுதி படைத்தவர்களுக்கு மூன்று தவணைகளாக கடன் தொகைகள் வழங்கப்படும். முதல் தவணையாக, அனுமதிக்கப்பட்ட மொத்த கடன் தொகையில் 50 சதவீதத் தொகை அல்லது வழிகாட்டி மதிப்பின்படி ஒரு நிலத்தின் மதிப்பு அல்லது விண்ணப்பதாரர் கோரிய தொகை ஆகியவற்றில் எது குறைவோ அந்தத் தொகை முதல் தவணையாக அளிக்கப்படும்.
இதன்பின், வீட்டுக் கூரை வரை கட்டுமானத்தை எழுப்புவதற்காக இரண்டாவது தவணைத் தொகை அளிக்கப்படும். அது அனுமதிக்கப்பட்ட மொத்த கடன் தொகையில் பாதியாக இருக்கும். இறுதி மற்றும் மூன்றாவது தவணைத் தொகையானது கட்டுமானம் முழுவதையும் முடிப்பதற்காக அளிக்கப்படும். இந்த மூன்று தவணைத் தொகைகளும் 10 மாதங்களுக்குள் அளிக்கப்பட வேண்டும். அதாவது முதல் தவணைத் தொகை 2 மாதங்களுக்குள், அடுத்தடுத்த தவணைத் தொகைகள் தலா 4 மாத இடைவெளிகளுக்குள்ளும் அளிக்கப்பட வேண்டும்.
முதல் தவணைத் தொகையைப் பெற்ற அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்த நிலத்தில் வீட்டுக்கான கட்டுமானத்தைத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் அதனை அரசு அடமானத்தில் எடுத்துக் கொள்ள விண்ணப்பதாரர் சம்மதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CM CELL PETITION- REG-COMPUTER TRS POSTING
Grievance :கணினி ஆசிரியர் பணியிடம் வேண்டுதல்
• 2012-2013 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை2488. -(Source : Performance Statistical Information of School Education,Page.6) 2013-2014 இல் 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது.
2014-2015 இல் 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகதரம்உயர்த்தப்பட்டது.
மொத்த மேல்நிலைப் பள்ளிகள் – 2688 • 2008-2009 இல் 1878 கணினிஆசிரியர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டது. 2008 இல் 1686 கணினிஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். (1686 இல் 652 பேர் போதிய கல்விதகுதியின்றி உச்ச நீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டு புதிதாககல்வி தகுதியுடைய கணினி ஆசிரியர்கள் 2014 இல் நியமிக்கப்படஉள்ளனர் G.O.Ms.No.130.) . 2010 இல் 192 கணினி ஆசிரியர்கள்நியமிக்கப்பட்டனர். மொத்தம் நியமிக்கப்பட்ட கணினி ஆசிரியர்கள்1686192=1878. • காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்கள் 2688-1878= 810 கோரிக்கைகள் • காலியாக உள்ள 810 கணினி ஆசிரியர்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 01 முதல் 10ஆம் வகுப்புவரை கணினி அறிவியலை பாடமாக அறிமுகபடுத்தி வேலைவாய்ப்பற்ற 20000 கணினி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பைவழங்க வேண்டும்.காலியாக உள்ள 810 கணினி ஆசிரியர்பணியிடங்களை நிரப்ப அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன ?
Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT Petition Status Rejected
Concerned Officer SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN
Reply: நிராகரிக்கப்பட்டது - 2012-13 நிலவரப்படி 1880 கணினிஆசிரியர்கள் நியமனம் ஒப்பளிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் மற்றும்உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 652 கணினி ஆசிரியர்கள்வேலைவாய்ப்பக முன்னுரிமைப்படி நியமனம் செய்யப்படுவார்கள்.பிற கோரிக்கைகள் அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டதுஎன்பதை தெரிவிக்கலாகிறது - ப.க.இ. ந.க.எண்.74274/வி1/14 நாள்20.11.2014
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது
திண்டுக்கல்: கிராஜூவிட்டியை வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர். திண்டுக்கல்லில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து, கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். தனக்கு வர வேண்டிய கிராஜூவிட்டி ரூ.9 லட்சத்தை பெறுவதற்காக உதவி தொடக்க கல்வி அலுவலர் கலைச்செல்வியை அணுகினார். இதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ரூ.20ஆயிரம் லஞ்சம் தர ஒப்புக்கொண்ட சந்திரசேகர், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பஸ் ஸ்டாண்டில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கலைச்செல்வியை லஞ்ச ஒழிப்புபோலீசார் கைது செய்தனர்.
குறைந்த மாணவர்களைக் கொண்ட மாநகராட்சிப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு
மாணவர் சேர்க்கை 25க்கும் குறைவாக உள்ள ஏழு மாநகராட்சிபள்ளிகளை, தனியார் மூலம் நடத்தி, வரும் கல்வியாண்டு முதல்சேர்க்கையை அதிகரிக்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன், ஒருலட்சத்திற்கும் மேல் இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, தற்போது 80ஆயிரமாக குறைந்துள்ளது.
தனியாருக்கு எது?
குறிப்பாக, திருவல்லிக்கேணி, சேத்துபட்டு, தி.நகர் ஆகிய பகுதிகளில்உள்ள மாநகராட்சி பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாககுறைந்துள்ளது. ஒட்டுமொத்த வகுப்பிலும் சேர்த்து 50 மாணவர்கள்மட்டும் உள்ள பள்ளிகள் நகரில் அதிகமாக உள்ளன.
மொத்தம் 25 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கும் ஏழு பள்ளிகள்தற்போது இயங்கி வருகின்றன. அந்த பள்ளிகளை மூட விரும்பாதமாநகராட்சி நிர்வாகம், 25க்கும் குறைவாக மாணவர் சேர்க்கை உள்ளபள்ளிகளை, தனியார் மூலம் நடத்தி, சேர்க்கையை அதிகரிக்கதிட்டமிட்டுள்ளது.
அதற்காக, மும்பை, டில்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ளபெரிய கல்வி நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனை நடத்தியமாநகராட்சி கல்வித்துறை, ஏழு பள்ளிகளை தேர்வு செய்து,அப்பள்ளிகளை வரும் கல்வியாண்டு முதல் தனியார்நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி பள்ளிகட்டடம், உபகரணங்கள், மின் கட்டணம், பராமரிப்பு,மாணவர்களுக்கான சலுகைகள் வழங்குவது ஆகிய பணிகளைமாநகராட்சி மேற்கொள்ளும்.
நிர்வாகம், ஆசிரியர்கள் நியமனம், மாணவர் சேர்க்கை ஆகியபணிகளை, பள்ளியை நடத்தும் தனியார் நிறுவனம் மேற்கொள்ளும்.அதற்காக ஒரு மாணவனுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை ஆண்டிற்குசெலவிட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
எந்தெந்த பணிகள்?
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: தி.நகர்.,திருவல்லிக்கேணி, சேத்துப்பட்டு உள்ளிட்ட தனியார் பள்ளிகள்ஆதிக்கம் அதிகம் உள்ள இடங்களில், மாணவர் சேர்க்கை குறைவாகஉள்ளது. இந்த பகுதிகளில் மட்டும் ஏழு பள்ளிகளை தனியாரிடம்ஒப்படைக்க தேர்வு செய்யப்பட்டது.
கல்வியாண்டு துவங்குவதற்கு முன், இந்த பள்ளிகளை நடத்த உள்ளநிறுவனங்கள் விரும்பும் வகையில், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திதரப்படும். சீருடை மாற்றம் குறித்து முடிவு செய்யப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக்க பகுதிக்கு விடிவு எப்போது?
சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியபள்ளிகள், நகராட்சி பள்ளிகளை, மாநகராட்சி கல்வித்துறைகட்டுப்பாட்டில் எடுத்து பராமரிக்க, தொடர்ந்து பொதுமக்கள்கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து அரசாணைவெளியிட, மாநகராட்சி, அரசுக்கு கோப்பு அனுப்பியுள்ளது. ஆனால்,இதுவரை அனுமதி கிடைக்காததால், விரிவாக்க பகுதி பள்ளிகள்பரிதாப நிலையில் உள்ளன. அரசு கல்வித்துறையை காட்டிலும்,மாநகராட்சி கல்வித்துறை மூலம், மாணவர்களுக்கு அதிகமானசலுகைகள் வழங்கப்படுவதால், விரைவில் விரிவாக்க பகுதிபள்ளிகளை, மாநகராட்சியோடு சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைவலுத்துள்ளது.
27/11/2014
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்
CPS ACCOUNT SLIP - AVAILABLE - JUST TYPE CPS NUMBER AND DATE OF BIRTH
CLICK HERE
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்- கணக்கில் விடுபட்ட தொகை விவரங்களை சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைத்திட தேவையான புதிய படிவம்
CPS MISSING CREDIT - WEBSITE LINK AND LOGIN DETAILS
DETAILS TO ENTER CPS WEBSITE
USER ID ; TREASURY CODE (4 DIGITS) UNDERSCORE DDO CODE (4 DIGITS)
PASSWORD ; TREASURY CODE (4 DIGITS) UNDERSCORE DDO CODE (4 DIGITS) UNDERSCORE 123
EXAMPLE ;
UID : 0000_SB000
PW : 0000_SB000_123
TNPSC DEPARTMENTAL TEST BULLETIN – 2014
DOWNLOAD
DEPARTMENTAL TEST BULLETIN – 2014
Departmental Test Bulletin
Bulletin No. | View/Download |
---|---|
Bulletin No. 18 dated 16th August 2014 | View |
Bulletin No. 17 dated 7th August 2014 - Extraordinary | View |
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள இணை இயக்குனர்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக திரு. எம். பழனிசாமி அவர்களையும்,இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக திரு.கார்மேகம் அவர்களையும்,ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குனராக திரு.பாலமுருகன் அவர்களையும்,மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக திருமதி.ஸ்ரீதேவி அவர்களையும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)